நான் கவனித்திருக்கிறேன்
காலணிகள் அணியும் முன்பே
சிலருக்கான பாதைகள்
சுருண்டு கொள்வதை
தலையை நிமிர்த்தும் முன்பே
அவர்களுக்கான ஏணிகள்
மறைக்கப் படுவதை கண்டிருக்கிறேன்
திரையரங்குகளில் அவர்களுக்கு
முந்திய நபரோடு
சீட்டுகள் முடிந்து விடுவதை
ரேசன் கடைகளில்
அவர்கள் முறைக்கு முன்பே
அரிசியோ சர்க்கரையோ தீர்ந்து விடுவதை
பேருந்துகள் எதிலும்
அவர்களுக்கான இருக்கைகள் இல்லாததை
அல்லது அவர்களுக்கு கிடைக்கும்
இருக்கைகள் மீது மட்டும்
சரியாக ஒழுகுவதை
அவர்கள் வங்கிக் கணக்குகளில் மட்டுமே
அதிகப் பற்று
செய்யப் பட்டு விடுவதை
அவர்கள் சான்றிதழ்களில் மட்டுமே
எழுத்துப் பிழைகள்
வந்து விடுவதை
அவர்கள் விரும்பும்
பெண்களெல்லாம்
உடனே திருமணம் ஆகி சென்று விடுவதை
அவர்களுக்குப்
பொருத்தமில்லாதபெண்களுடன்
உடனே திருமணம் ஆகிவிடுவதை
அவர்கள் குழந்தைகளுக்கு மட்டும்
வினோத நோய்கள் வந்து விடுவதை
அவர்கள் வீட்டு முற்றங்களில் மட்டும்
வீதி நாய்கள் மலம் கழித்து விடுவதை
அவர்கள் வீடுகளுக்கு மட்டும்
அடிக்கடி தனியே
மின்சாரம் போய் விடுவதை
அவர்களது கணினிகளில் மட்டும்
அதி வீர்ய வைரஸ்கள் புகுந்து விடுவதை
அவர்களது இசைநாடாக்கள் மட்டும் அறுந்துவிடுவதை
அவர்களது புத்தகங்களில் மட்டும்
சில பக்கங்கள் தவறி இருப்பதை
அவர்கள் கவிதை எழுத உட்காரும் போதெல்லாம்
உறவினர்கள் வந்துவிடுவதை
அவர்களுக்கு காமம் எழும்பும் போது மட்டும்
சரியாக குழந்தைகள் விழித்துக் கொள்வதை
அவர்கள் தாமதிக்கும் நாளில் மட்டும்
கோபக்கார உயர் அதிகாரி
சீக்கிரமே வந்துவிடுவதை
அவன் கேட்கும் கோப்பு மட்டும்
தொலைந்து போய் விடுவதை
அவன் குடிக்கும் குளிர் பானத்தில்
மட்டுமே கரப்பான் பூச்சி கிடப்பதை
அவனுக்கு வரும் கத்தரிக்காய் மட்டும்
அழுகி இருப்பதை
அவன் வாங்கும் பொருட்கள் மட்டுமே
புத்திசாலிப் போலிகளாக இருப்பதை
அவன் போகும் சாமியார்கள் மட்டும்
கண்காணிப்புக் கேமிராவில் சிக்கிக் கொள்வதை
அவன் போகும் கோயில்கள் மட்டும்
சீக்கிரமே
நடை சாத்திக் கொள்வதை
தல யாத்திரைக்காக தொலைவண்டிக்கு
காத்திருக்கையில்
அத்தனைக் கும்பலிலும்
அவர்களை மட்டும்
தீவிரவாதிகளின்
குண்டுகள் தேடிக் கொல்வதை
நான் கண்டிருக்கிறேன்
எத்தனை வதை அவர்களுக்கு மட்டும்!!!!
ReplyDeleteநல்லாயிருக்குங்க போகன் வரிகள் அனைத்தும்
luv it..!
ReplyDeleteஅவனா இவன்?
ReplyDeleteஹ்ம்ம் எனக்கு கூட, முன்னால் இலையோடு
அல்வா தீர்ந்துவிடும் :((
இதுக்குப் பெயர் sucker law!
ReplyDelete