Thursday, September 30, 2010

கண்ணி 1

வயது வந்தவர் மட்டும்!

எண்பதுகளில் நாங்கள் இருபதுகளில் இருந்தபோது நிகழ்ந்தது அது.அப்போது சந்திப் பிள்ளையார் முக்கில் ஒரு சிறிய புத்தகக் கடை வைத்திருந்தேன்.உண்மையில் அப்பாவின் பேப்பர் ஏஜென்சியை சற்று விரிவு படுத்தி அமர்ந்திருந்தேன்.கீழே கடை.மேலே கொடவுனாகவும் நான் தூங்கும் ,புகைக்கும்,மது அருந்தும்,நீலப் படங்கள் பார்த்தபடியே கர போகம் செய்யும் இடமாகவும் அது இருந்தது.பெரும்பாலும் பத்து வட்டி பால்வண்ணம் பிள்ளை மகன் சண்முகம்தான் அதற்கெல்லாம் கூட்டு.

அப்பாதான் டவுன் முழுக்க ஏஜென்சி எடுத்திருந்தார்.தினத் தந்தி,மலர்,எக்ஸ்பிரஸ்,ஹிந்து எல்லாம் .பின்னர் நான் வற்புறுத்தி குமுதம்,ஆவி,சாவி,குங்குமம்,பொம்மை,சினிமா எக்ஸ்பிரஸ் கூட எடுத்தார்.ஞான பூமி,ராமகிருஷ்ண விஜயம்...எனது ரகசியக் கணக்காக டெபோனிர்,பருவகாலம்.அந்தரங்கம் போன்றவையும் உண்டு.அவற்றை இப்போது போல வெளிப்படையாய்த் தொங்கவிட முடியாது.கஞ்சா வாங்குவது போல ராத்திரிகளில்  பதுங்கி வந்து அதிக விலை கொடுத்து வாங்கிப் போவார்கள்.

சற்றே காலம் போன பத்திரிகைகளை சுழலும் நூலகம் என்று வீடு வீடாய் சைக்கிளில் கொண்டு சாயங்காலம் கொடுப்பேன்.இவற்றைப் பெரும்பாலும் பெண்களே வாங்குவார்கள்.ராணிமுத்து,மாலைமதி போன்ற நாவல்களுக்கு கடும் கிராக்கி இருக்கும்.எனக்குப் பிடித்தப் பெண்களுக்கு மட்டும் அவை சீக்கிரம் கிடைக்கும்.கட்டுப் பெட்டியான திருநெல்வேலிப் பெண்களின் கலாச்சாரப் படுதா விலகும் அரிதான தருணங்களில் இவை ஒன்று.ராஜேஷ்குமார் ரமணி சந்திரன் எல்லாம் இன்னும் மேலே வரவில்லை.சுஜாதா அவர்கள் தலைக்கு மேலே எழுதுவார்.அய்யர் வீட்டுப் பெண்கள் மட்டுமே வாங்குவார்கள்.லக்ஷ்மி,சிவசங்கரி,மகரிஷி,பி.வி.ஆர் போன்றவர்கள்தான் டாப்.புஷ்பா தங்கதுரை சற்று அதிரடியாக எழுதுவார்.ஜெ அதற்கு அதைவிட அதிரடியாய்ப் படம் போடுவார்.பெண்கள் 'என்ன இப்படில்லாம் எழுதுறாங்க'என்று திட்டுவார்கள்.ஆனால் வாங்குவதை நிறுத்த மாட்டார்கள்.

எனக்கு நன்றாக நினைவு உண்டு.சவீதா என்று ஒரு எழுத்தாளர் குங்குமத்தில் ஒரு தொடர் ஆரம்பித்தார்.கதை தொடங்கும்போதே ஒரு பெண் ஆடையில்ல்லாமல் பாத்ரூம் நடந்து போய் தான் கர்ப்பமாகி இருக்கிறோமோ என்று சிறுநீர் இருந்து பரிசோதனை பண்ணிப் பார்ப்பாள்.அதற்கு [சம்பந்தமில்ல்லாமல்]அதை விட அதிரடியாய் ஜெ படம் போட்டிருந்தார்.ஒரு அழகிய நீண்ட கால்கள் உடைய குட்டைப் பாவாடை அணிந்த பெண்ணின் காலடியில் ஒரு சிறுவன்.பாவாடையைத் தூக்கி 'வாவ்'என்பது போல...அது கொஞ்சம் சர்ச்சைக்கு உள்ளானது.ஒரு பெண் குங்குமத்தைத் தூக்கி எறிந்து'இனி நான் குங்குமமே படிக்க மாட்டேன்'எனறாள்.ஆனால் அச்செய்தி எப்படியோ ஒரு நுண் அலை போல பெண்கள் மத்தியில் பரவி அந்த வார குங்குமத்துக்கு அடிதடியே நிகழ்ந்து மேலும் மூன்று காப்பி வாங்கினேன்.

ஆண்களுக்குதங்கள் வீடுகளுக்குள்ளேயே நிகழும்  இந்த கலாச்சார நகவு பற்றி எல்லாம் ஒரு எழவும் தெரியவில்லை.அவர்கள் அதெல்லாம் மாடத்தெருவில் சில வீடுகளில் மட்டுமே நிகழ்வதான பிரமையில் இருந்தார்கள்.அவர்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் தங்கள் காம உறுப்புகளை இரவுகளில் ஆண்களுக்கு விறைககும் போது மட்டும் அணிந்துகொண்டு மற்ற நேரங்களில் கழற்றிவைத்து விட்டு பத்துப் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தார்கள்.அல்லது அப்படி எதிர்பார்த்தார்கள்.அது கிடக்கட்டும்.இது அவர்கள் பற்றியது அல்ல.

பெரும்பாலும் நான் கடை மாடியிலேயே படுத்துவிடுவேன்.காலை நான்கு மணிக்கு பேப்பர் லாரி வரும்.இறக்கி தெருவாரியாக அடுக்கி சைக்கிளில் சென்று வீசிவிட்டு ஆறு மணிக்குள் வீடு போய் விடுவேன்.பிறகு குளித்து திருஞான சம்பந்தர் போல பட்டை அடித்துக் கொண்டு பதினோரு மணி வாக்கில்தான் கடைக்கு வருவேன்.

அன்று ஒரு மாறுதல்.அது சாரல் சீசன்.நானும் சண்முகமும் காலை பேப்பர் போட்டு முடித்த உடனே குற்றாலத்துக்கு வண்டி ஏறி விட்டோம்.தென்காசியில் ஒரு நண்பர் அறையில் தங்கி நன்றாகத் தண்ணி அடித்தோம்.பிறகு அட்டகாசமான குளியல் முடித்து பிராணூர் பார்டர் போய் புகழ்பெற்ற பிரியாணியும் இறைச்சியும் சாப்பிட்டோம்.[இதை எல்லாம் நான் உள்ளூரில் செய்ய முடியாது.'ஏய் குப்பாத்தா உன் மவனை ஜன்னத் ஓட்டல் பக்கம் பார்த்தேன் என்று சொன்னதற்கே அம்மா மூன்று நாள் அன்ன தண்ணீர் இல்லாது கட்டிலோடு ஒடுங்கிக் கிடந்தாள்]பிறகு மீண்டும் தென்காசிக்கு அருவி மணக்க வந்து அறையில் கருப்பு வெள்ளை டிவியில் டெக் போட்டு ஒரு நீலப் படம்.

...யா என்ற எனக்குப் பிடித்த நடிகை என்ற போது முதலில் நம்பவில்லை.ஆனால்...அவளேதான்.!உடன் ஒரு சின்னப் பையன்!கொஞ்ச நாட்களாய் அவளைக் காதலித்துக்  கொண்டிருந்தேன்.அவளுக்கு மொக்கையாய் சில கவிதைகள் சேர்த்து கடிதங்கள் கூட எழுதி இருந்தேன்.எனக்குப் பிடித்த முதல் கறுப்புப் பெண்.

எனக்கு கறுப்புப் பெண்களைப் பிடிக்காததற்கு காரணம் இருந்தது.எனது முதல் யோனி தரிசனம் ஒரு உடல் பெண் மூலம் நிகழ்ந்தது.மாடத் தெருவில் ரொம்ப இணக்கமாய் இருப்பாள் என்று சண்முகம்தான் அழைத்துப் போனான்.அவள் கருப்பாக இருந்தாள்.அவளைவிட அவள் சாமான் செட்டுகள் தீயினால் வாட்டினார் போல் இன்னும் கருப்பாய் இருந்தது.அவ்விட மயிர்களைச் சிரைக்காமல் காடு மாதிரி வளர்த்து திரி திரியாய் தொங்கிக் கொண்டிருக்க கிட்ட போகும் முன்பே முடை நாற்றம் அடித்தது.தாங்காமல் ஓடி வந்துவிட்டேன்.

ஆனால் எனது கனவுக் கன்னி ...யா இப்படி நடிக்கத் துணிந்துவிட்டது என்னால் தாங்கவே முடியவில்லை.அது ஒரே சமயம் ஒரு ஏமாற்றத்தையும் கிளர்ச்சியையும் என்னுள் ஏற்படுத்தி இருந்தது.'எப்படிடே'என்று பஸ்ஸில் புலம்பிக் கொண்டே வந்தேன்.'எல்லாம் காசுலே''என்றான் சண்முகம்.அவனுக்கு இதெல்லாம் அதிர்ச்சியாக இருக்கவில்லை.
'அவ அடரசைக் கண்டுபிடுச்சி வக்காளி எங்க அப்பன் சொத்தே போனாலும் ஒரு தடவை போயிட்டு வந்திடும்டே 'என்றேன் நான்.

டவுனில் இறங்கிய போது மணி பனிரெண்டு.பகலில் எள் இட இடமில்லாத இடம்.இப்போது காக்கை கூட காணோம்.லட்சுமி தியேட்டர் வரை போய் ஒரு பாக்கட் சிகரட் மட்டும் வாங்கிக் கொண்டோம்.அங்கு மட்டும் இரவுக் காட்சி முடிகிறவரை சில கடைகள் இருக்கும்.பிள்ளையார் கோயிலில் ஊழி இருட்டில் இருக்க பக்கத்தில் குதிரை லாயத்தில் அவை கால் மாற்றி மாற்றி தூங்கிக் கொண்டிருந்தன.கடைக்கு வந்து சரியாக பூட்டி இருக்கிறதா என்று இழுத்துப் பார்த்துவிட்டு [ஒருதடவை யாரோ பூட்டு உடைத்து டெபோனிர் வகைகளை மட்டும் திருடிப் போய் விட்டார்கள்]மேலே ஏறும் போதுதான் அவளைப் பார்த்தோம்.மாடிப் படியின் நிழலில் பதுங்கிக் கொண்டு..
''யாரு'' என்றான் சண்முகம்.அவள் இன்னும் பதுங்க ''யாருன்னு கேட்கறேன்''
அவள் தயங்கி வெளிவந்தாள்.தெருவிளக்கு வெளிச்சம் அவள் மேல் மஞ்சளாய் வரி போட்டது.
''ய்ர்ரும்மா நீ.இங்கே இருக்கே''
பிச்சைக்காரி போலோ வேசி போலோ பைத்தியம் போலவோ இல்லை.
''சொல்லும்மா.என் இங்கே உட்கார்ந்திருக்க.நான் இங்கனக்குள்ள உன்ன பார்த்ததில்லையே''
அவள் உடைந்த குரலில் ''எனக்கு மதுரைண்ணே''''செரி?இங்க யார் வீட்டுக்கு வந்தே..''
''என் சினேகிதி வீட்டுக்கு வந்தேன்.அவ வீட்டுல யாரும் இல்லீங்க..''
''அது யாரு சினேகிதி?''
''சொர்ணம் னு அவக அக்காவை எங்க ஊர்ல கட்டிக் கொடுத்திருக்கு.அவுக அப்பாரு கூட மார்க்கட்ட்ல வாழைக்கா மண்டி வச்சிருக்காரு''
''செரி.அவுக இல்லையா''
''காசிக்குப் போயிட்டாகளாம்''
''அடடா.சரி.ஊருக்குப் போயிட வேண்டியதுதானே''
அவள் கண் கலங்கி''காசு இல்லே.பஸ் ஸ்டாண்ட்ல ஒரு கிழவி பேச்சு கொடுத்து பிடுங்கிடுச்சு''
''அடப் பாவமே..''என்றான் சண்முகம்.அவன் முகம் வெகு தீவிரமாய் இருந்ததைக் கவனித்தேன்.
அவன் என் பக்கம் திரும்பிக் கண் சிமிட்டிச் சிரித்தான். எனக்கு மட்டும் கேட்கும் குரலில் ''ஏலே .கோளுதான் உனக்கு.மெட்ராசுக்குப் போகவும் வேணாம்.அப்பன் சொத்தை அழிக்கவும் வேணாம்''என்றான்.''பொண்ண நல்லாப் பாரு.அவ கண்ணும் காயும் அப்படியே ..யா மாதிரியே இல்லே?''என்றான்.
நான் திரும்பி அவளைப் பார்த்தேன்.ஆம்.அப்படித்தான்  இருந்தாள்.

Wednesday, September 29, 2010

உடல் ஊற்று

எனக்கு அது
மலநாற்றப் புனல்குழி
உனக்கு அது
வாச மலர்ப் பாண்டம்
அமிர்தம் கசியும் ஊற்று

எனக்கு அது
நஞ்சு ஊறும் நிலம் 
வெறும் நிணம்
மூடும் திரை
உனக்கு அது
உயிர் ஓவியத்தின் உடை

உடல் என்பது
உன்னை 
காற்றில் ஏற்றும் சிறகு
எனக்கு அது
கயத்தில் ஆழ்த்தும் கல்

உடல் திரவங்களின்
வெறியாட்டம் மட்டுமே
அது எனக்கு
உனக்கு அது
உணர்வுகளின் நடனம்

நான் என்றும்
மரங்களைப் பார்ப்பதே இல்லை
மரமென்றால் எனக்கு காடே
காடு மேவிய வானே
வான் தாண்டிய வெளியே
வெளி அடங்கும் சுழியே ..

உனக்கு
காடென்றால்
மரங்களின் கூட்டமல்ல
அது
உன் பெயர்  மட்டும் அறிந்த
ஒற்றை மரம்
அது வளர்க்கும் பூ
அது மறைக்கும் சூல்
அதில்
 உனக்கே உனக்காய்த் துடிக்கும்
ஓர் உயிர்

இவ்விதம் நாமிருக்க
செம்புலப் பெயல் நீர் போல்
இருவரும்
கலப்பது எவ்விதம்..

Saturday, September 25, 2010

உடல் தத்துவம் 9

வயது  வந்தவர்க்கு மட்டும்!
இந்த இடத்தில் என் மனநல மருத்துவ நண்பர் எனது டைரியை மூடி வைத்தார்
''இவையெல்லாம் உண்மையிலேயே நடந்ததா?இல்லை புனைவா?''
''ஏன்''என்று கேட்டேன்.''சித்தரிப்பில் ஒரு தீம் தெளிவாகத் தெரிகிறது.வாழ்க்கை இத்தனை நேராக கோடு போட்டாற்போல் போவதில்லை''என்றார்.''உதாரணமாக இந்த மேகி அத்தை.இவளைப் பற்றி என்னால் யூகிக்க முடிகிறது.அடுத்து என்ன வரப் போகிறது என்பதற்கான க்ளூக்களை ஒரு தேர்ந்த மர்மநாவல் ஆசிரியன் போல நீங்கள் விட்டுச் சென்றபடியேதான் இருக்கிறீர்கள்.சற்றே உள்ளுணர்வு கொண்டவர்களால் அவற்றைக் கண்டுகொள்ள முடியும்.''
நான் புன்னகைத்தேன்.''எல்லார் வாழ்விலும் ஒரு தீம் அடிநாதமாய் ஓடிக் கொண்டேதான் இருக்கிறது டாக்டர்''
''அதாவது சில கதைகள் சிற்சில அற்ப மாற்றங்களுடன் திரும்பத் திரும்ப காலத்தில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.இல்லையா.பெயர்கள் மாறலாம்.இடங்களும் சூழலும் மாறலாம்.மற்றபடி ஆதார சரடு ஒன்றேதான்.ஆனால் உங்கள் விசயத்தில் பெயர் கூட மாறவில்லை.இப்படி ஒரு ஒத்திசைவு புனைவில் மட்டுமே சாத்தியம்.மேக்தலீன்!இந்த பேரே இந்தக் கதை போகும் போக்கைச் சொல்கிறது அல்லவா.'என்றார்.பிறகு யோசனையாய் ''ஜேம்ஸ் பிரேசர் என்று ஒருவர்'..''
நான் ''Golden Bough!''என்றேன்.
அவர் ஆச்சர்யமுற்று ''படித்திருக்கிறீர்களா''என்றார்.
நான் லீலா தோமஸ் பற்றி சொன்னேன்.அவள்தான் அந்தப் புத்தகத்தை எனக்கு அறிமுகப் படுத்தியவள்.எவற்றின் நடமாடும் நிழல்கள்  நாம் என்ற பிரமிளின் கவிதையை அறிமுகப் படுத்தியதும் அவளே...
''யார் அந்த லீலா தோமஸ்?''
''நீங்கள் மேகி அத்தையை ஏறக்குறைய சரியாகவே யூகித்து விட்டீர்கள்.ஆனால் லீலாவை உங்களால் யூகிக்கவே முடியாது.சரித்திரத்தில் இதுவரை அவள் போல வரவே இல்லை.''என்றேன்.
அவர் ''அப்படியா சுவராஸ்யம்''.முதலில் அவள் வரும் இடங்களைப் படிக்கிறேன்''என்றார்..




லீலா தோமஸ் !
அவளை ஒரு மான்சூன் புயலுக்கு முந்திய கணங்களில் சந்தித்தேன்.
அப்போது பம்பாயில் இருந்தேன்.
நிரந்தரத் தொழில் என்று ஒன்றும் இல்லாமல் மாதுங்காவில் ஒற்றை அறையில் தங்கி  சின்ன சின்ன குற்றங்கள் செய்து கொண்டிருந்தேன்.பெரும்பாலும் ஏமாற்றும் பனியாக்களை லேசாக தலையில் தட்டுவதாக இருக்கும்.அப்போது என்னுடன் ராபர்ட் என்கிற மலையாளி இருந்தான்,திடீரென்று ஒருநாள் அவன் திருந்த முடிவு செய்து யாரையோ பிடித்து அரபு நாட்டில் ஒரு விசாவுக்கும் வேலைக்கும் ஏற்பாடு செய்துவிட்டான்.ஆனால் போவதற்கு ஒரு மாதம் முன்னால் என்னை அழைத்து''எனக்கு ஒரு பிரச்சினை.உன்னால்தான் தீர்த்து வைக்கமுடியும் எனத் தோன்றுகிறது.''என்றான்.
நான் பணம் ஏதாவது கேட்டால் என்ன சொல்லி  சமாளிப்பது என்ற யோசனையுடன் ''என்ன''என்றேன்.
அவன் புரிந்து கொண்டு ''இல்லை வேறு''என்றான்.முகமெல்லாம் வேர்த்திருந்தது.அவன் எனது வீக் என்ட் தோழன்.அதாவது வார இறுதிகளில் பம்பாய் சிகப்பு விளக்கு வீதிகளில் பெண் வேட்டை ஆடும் சகா.[அந்தக் காலத்தில் எய்ட்ஸ் இல்லை]
''என்னடா.வேறு எதுவும் அந்தரங்கப் பிரச்சினையா''என்றேன்.[ஆனால் வி டி இருந்தது]
''மெடிக்கல் சர்டிபிகேட் தரமாட்டேன்கிரானா..ஒன்னும் பயப் படாதே..கண்டாலா பக்கம் தெரிஞ்ச டாக்டர் இருக்கான்.மூனே நாள் பெனிசிலின் போட்டு குணப் படுத்திடுவான்''
''அதெல்லாம் ஒன்னும் இல்லை.நான் ஒவ்வொரு தடைவையும் வந்து நல்லா டெட்டால் சோப்பு போட்டு கழுவிடுவேன் தெரியுமா''என்றான் சற்று கோபத்துடன்.
பினாயில் கூட போட்டிருப்பான் பயல்!என்று நினைத்துக் கொண்டேன்.
'பின்னே''
''இல்லி..நான் போறது சவுதிக்கு.அங்கெ விபச்சாரம் கிடையாது.பண்ணினால் சாட்டை அடி.கல்லால் அடி என்று பயமுறுத்துகிறார்கள்.அங்கெ பொம்பளைங்க எல்லாம் சர்க்கஸ் கூடாரம் மாதிரி மறைத்துக் கொண்டு சேக்குகளின் அந்தப் புரத்தில்தான் இருப்பார்களாம்.அதே சமயம் தனியா ஒரு பயல் கிடைத்த பிழிஞ்சு எடுத்திடுவாங்கன்னு சொல்றாங்க''
''அதனால் என்னடே நமக்கு சவுகர்யம்தானவே''
''இல்லைப்பா.மாட்டினா சேக்கு மாருங்க நம்ம தோலை உரிச்சுருவாங்க''
''இந்தக் கதையெல்லா யாருடே உனக்கு சொல்லுறா'.அவ்வளவு  பயமா இருந்தா ஏன் போறே''
''என்ன சொல்றே.ரெண்டு கொல்லத்தில சேச்சிக்கு கல்யாணம் பண்ணனும்பா.சக்கரம் வேணும்''
'சரி.அதுக்கென்னைஎன்ன பண்ண சொல்றே'.உனக்கோ வாரத்துக்கு ஒரு முறையாவது யோனிதரிசனம் பண்ணலைன்னா கை கால் நடுங்கி ஜன்னி வந்தா பன்னி கணக்கா ஆயிடுவே.அங்கேயோ வெட்டிடுவான்னு சொல்றே''
''அதுக்குதான் ஏதாவது சொல்லேன்''
''என்ன சொல்றது.கன்ட்ரோல்தான்.தியானம் பண்ணு தினமும்''
அவன் முறைத்து''நான் கிரிச்டியன்னு உனக்குத் தெரியாதா''
''அட.தியானம் ஹிந்துக்களின் பழக்கம்னு யார் சொன்னது''
''வேறே சொல்லுப்பா''
விபச்சரம் மட்டும் கிறித்துவப் பழக்கமா என்று சொல்லவிரும்பி விட்டுவிட்டேன்.
'ரெண்டு வருஷம் அங்கெ இருக்கற வரைக்கும் எனக்கு செக்ஸ் உணர்வே வரக் கூடாது.அதுக்கு ஏதும் மருந்து இருக்கா''
நான் சற்று ஸ்தம்பித்து விட்டேன்.என்னிடம் ஆண்மைக் குறைவுக்கு நிறைய பேர் வழி கேட்டிருகிறார்கள்.கொஞ்சநாள் நான் பண்ணிய தொழில்களில் லாட்ஜ் வைத்தியமும் உண்டு.ஆயுவேத மூலிகைகள் செய்வது எளிது.அஸ்வகந்தா [குதிரை மாதிரி புணர்ச்சிக்கு.குதிரை மாதிரி என்றால் வீர்யத்தை சொல்கிறேன் .பொசிசனைச்சொல்லவில்லை!]பூனைக்காலி போன்ற மூலிகைகளுடன் கொஞ்சம் கஞ்சா சேர்த்தால் போதும்.யுனானி சற்று சிரமம்.எருதின் விதைக் கொட்டை எல்லாம் தேவைப்படும்.செடி கொடிகளில் உயிர் வராவிட்டால் பாதரசம் சேர்த்த மருந்துகள்.மகரத்த்வஜம் என்று ஒரு மருந்து வாழைப் பழத்தில் உள்ளே வைத்து சாப்பிடவேண்டும்.பல் படக் கூடாது.பட்டால்  பல் போய்விடும்.நன்கு வேலை செய்யும்.முதலை மாதிரி பெண்டோடு இரவு முழுக்கப் பிணைந்தே கிடக்கலாம்.ஆனால் கிட்னி என்றைக்கு போகும் என்று சொல்ல இயலாது.யுனானி மருந்துகளை அல்வா என்போம்.தஸ் கபீர் என்ற மருந்து பிரசித்தம்.முகல் ராஜாக்கள் அந்தப்புரங்களில் ஆயிரம் பெண்களைப் புணர்வதற்கு என்றே கண்டுபிடித்தார்கள்.[ஹூம்.அப்போதும் எய்ட்ஸ் கிடையாது]

ஆனால் இவன் ஆண்மையைக் குறைப்பது கூட இல்லை.சட்டசபை போல் இரண்டுவருடம் சஸ்பென்ட் செய்து வைக்க அல்லவா கேட்கிறான்!
'உன் உறுப்புகளில் ஒன்று இடறல் அடைந்தால்'என்று குதர்க்கமாய் தோன்றிற்று.பாவம் வெட்டி எறிய மனம் இல்லாது தானே  கேட்கிறான்.

என்னிடம் இருந்த எல்லா புத்தகத்தையும் புரட்டினேன்.மருத்துவ நண்பர்களிடம் விசாரித்தேன்.'காமம்  என்பது கபம்.கபம் என்றால் கொழுப்பு.கொழுப்பு நிறைந்த சாப்ப்பாடு எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு மூன்று வேளையும் தயிர்சாதம் சாப்பிட்டால் அப்சரசே எதிரே அம்மணக் கட்டையாய் வந்தாக்கூட ஒன்னும் எந்திருக்காது ஓய்'என்றா ஒரு வைத்தியர்.
சவுதியில் மூன்று வேளை தயிர்சாதத்திற்கு எங்கு போவான்..மேலும் போவது ப்ளம்பர் வேலைக்கு.மந்திரம் ஓத அல்லவே.தவிர இரட்டைத் தண்டனை ஆகிவிடும்.ஒரே நேரத்தில் நாக்கையும் குஞ்சையும் பொத்த வேண்டும் என்றால் பயலுக்கு தலை தெறித்துவிடாதா
எனக்கு ஒன்றும் புலப்படவில்லை.மூன்றாம்நாள் அவனே வந்து ''இதற்கு ஹோமியோவில் மருந்து உண்டாம்''என்றான்.
ஆனால் எங்கள் பகுதியில் ஹோமியோ டாக்டர் ஒருவர் கூட இல்லை என்பது ஆச்சர்யமாக  இருந்தது.ஒரு பழைய லேம்பி ஸ்கூட்டரில் தேடினோம்.கடைசியில் தொம்பி வில்லியில் ஒரு டாக்டர் இருப்பதாக கேள்விப் பட்டுப் போனோம்.சற்று ஒதுக்குப் புறமான பகுதியில் இருந்தது ஒரு வீடு.ஆனால் தகவல் சொன்னப் பாழாய்ப் போனவன் அந்த டாக்டர் ஒரு பெண் எனச் சொல்லவில்லை.வீட்டின் முன்னால் இருந்த பலகை பார்த்ததும் ராபர்ட் கல்லைப் பார்த்த சுவானம் மாதிரி நின்றுவிட்டான்.'ஐயோ ஒரு பொண்ணானு''என்றான்.அதுவும் லீலா தோமஸ் என்று மலையாள வாடை வேறு அடித்தது.நாட்டில் உறவுப்  பெண்ணாய்க் கூட இருக்கலாம் என்று சொன்னான்.அவன் குடும்பத்தில் நிறைய லீலைகள் உண்டாம்.நான் வெகுவாய்க் களைத்திருந்தேன்.மழை வேறு வருவது போல் இருந்தது.இனி தேட முடியாது என்று முடிவு  செய்துவிட்டேன்.பெண்ணாய் இருந்தால் என்ன என்றதற்கு ராபர்ட் வெட்கப் பட்டது புதிதாய் இருந்தது.எங்களுக்குத் தெரிந்த பெண்கள் எல்லாம் 'அந்த வெட்கம் கெட்ட மலையாளி''என்றுதான் அவனை விசாரிப்பார்கள்.
நான் போய் பார்க்கிறேன் என்று உள்ளே போனேன்.

அது பெரிய காம்பவுண்ட் போட்ட வீடு வீடு அத்தனை பெரிதில்லை.ஆனால் சுற்றி நிறைய இடம் இருந்தது.பெரிய மார்புக்கு சிறிய முலை போல.எனக்கு அஸ்ஸாமில் ஒரு கோயிலில் பார்த்த சக்கரம் ஒன்றை நினைவு படுத்தியது.கீழ் காணும் படத்தைப் போல..


தந்திர சாஸ்திரத்தில் நடுவில் உள்ள புள்ளியை பிந்து என்பார்கள்.இந்த பிந்து உடைந்துதான் உலகம் பிறக்கிறது.இந்த பிந்து உடைந்துதான் மாதா மாதம் ரத்தப் போக்கு வருகிறது.ச்சே.என்ன சொல்கிறேன்..மறுபடியும் கதை சொல்லலில் இருந்து விலகிவிட்டேனோ..நான் எப்போதும் இப்படிதான்.நேராக எதையும் சொல்ல வராது.பிடிக்காது.You are little crooked என்று நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள்.அதில் நிறைய பேர் பெண்கள்.Crooked mind இருக்கலாம்.CROOKED PENIS இருப்பின் சிரமம்.டிங்கரிங் செய்து நிமிர்த்த முடியாது.கொனேரியாவில் சில சமயம் வரும்.
பாய்ண்டுக்கு வா என்கிறீர்களா..இலக்கியத்தில் இந்த மாதிரி சுற்றி சுற்றி  பேசுவதன் பெயர்தான் நனவோடை உத்தியாம்.லீலைதான் பின்னால் சொன்னாள்.ஜேம்ஸ் ஜாய்சின் உலிச்செஸ் அவள் சொன்னாள் என்று படித்து மண்டை வற்றினேன்.ஒரு எழவும் புரியவில்லை.யாரோ ஒரு ஐரிஸ் எழுத்தாளன் அவன் வீட்டில் ஆய் போவது மட்டுமே புரிந்தது.மற்றதெல்லாம் வார்த்தைக் காலரா.


சரி. பிந்துவுக்கு ...புள்ளிக்கு வருகிறேன்.வீட்டில் வெளியில் யாருமே இல்லை.வழக்கமாய் கட்டாயம் காக்கி டவுசருடன் ஒரு தோட்டக் காரன் இருப்பான் என எதிர் பார்த்தேன்.. ஒரு தோட்டம் வேறு இருந்தது.ஆனால் அப்படி யாரும் இல்லை.இல்லாவிடில்,ஒரு பெரிய கன்றுக்குட்டி அளவு நாய் ஒன்று எங்கிருந்தோ பாயப் போகிறது என்று எதிர் பார்த்தேன்.அதுவும் இல்லை.போர்டிகோவில் ஒரு டீப்பாய்.சுற்றி நான்கு மர நாற்காலிகள்.பத்திரிகைகள்.டைம்ஸ் ஆப் இந்தியா,Illustrated weekly.அதன் அட்டையில் THE SEX SWAMI!என்று கொட்டை எழுத்துகளோடு ரஜனீஸ்  படம்.ரீடர்ஸ் டைஜஸ்ட்.பெங்கால் தினசரி ஒன்று.இரண்டு தேநீர்க் கோப்பைகள்.சாம்பலக் கிண்ணத்தில் புகையும் சிகரட் துண்டங்கள்.ஒரு பிரம்பு ஊஞ்சல்.


நான் காலிங்  பெல்லைத் தேடினேன்.ஆனால் வீடு திறந்தே கிடந்தது.''சாப் ''என்று கத்தினேன்.பதில் இல்லை.முன் அறையிலும் யாரும் இல்லை.பெரிய சோபா செட்.உள்ளேயும் மேஜை நிறைய இன்னும் புத்தகங்கள்.அலமாரியில் ராட்சச பானசோனிக் டேப் ரிக்கார்டர்.நிறைய பாட்டில்கள்.ஹோமியோ மருந்தாக இருக்கவேண்டும்.சுவற்றில் ஒரு வெள்ளை காரரின் ஓவியம்.[ஹோமியோவின் தந்தை  ஹானிமன்]உள்ளே வலது பக்கம் திரும்பிய மேலும் அறைகளை மறைத்த திரைச் சீலை.
''மேம் சாப்?''என்று கத்தினேன்.
வீடு அப்படியே காலத்தில் உறைந்து விட்டது போல் இருந்தது.ஒரு ரிஷியின் தவத்தைக் கலைக்க வந்தா அசுரன் போல் உணர்ந்தேன்.
அரவமே இல்லை.என்ன ஆயிற்று.நான் பார்த்த திகில் படங்கள் எல்லாம் நினைவு வந்தது.அவற்றில் எல்லாம் இது போல் நிசப்தமான வீடுகளில் எல்லாம் ஏதோ குற்றம் நிகழ்ந்திருக்கிறது.
என் மனதில் ஒரு காட்சி கனவு போல் விரிந்தது.கதாநாயகன் ஒரு பெரிய வீட்டுக்குள் நுழைகிறான்.தனியாக.வீடு முழுதும் நிசப்தம்.திரைச் சீலை கூட அசையவில்லை.தூரத்தில் பறவைகளின் சத்தம் கூட இல்லை.ஏன் எனில் விலங்குகள்  அபாயத்தை மிக எளிதில் உணர்ந்துவிடுகின்றன.
நான் ஏன் அவ்விதம் சிந்தித்தேன் எனப் புரியவில்லை.நான் வழக்கமாய் பகல் கனவு காண்பவன் அல்ல. ஆனால் என் காட்டுவாசிமானம் முழுக்க மேலெழும்பி வந்திருந்ததை  உணர்ந்தேன்.உள்ளே காட்சி மேலும்  விரிந்தது.
லீலா தோமஸ் குளிக்கிறாள்.அல்லது குளித்துக் கொன்டிருந்தாள்.நிர்வாணமாக..அல்லது ஒற்றை வெள்ளை டவல் மட்டும்  சுற்றிக் கொண்டு..அப்போது பின்னாலிருந்து ஒரு மர்ம மனிதன் பெரிய கத்தியுடன் திரை மறைவிலிருந்து வெளிப் பட்டு ஓங்கி...வர..அவள் கடைசிக் கணத்தில் திரும்பி கண்கள் விரிய வீல் என்று அலறினாள்...
நான் கற்பனையை நிறுத்தினேன்.ச்சே..என்ன இது என்று நினைத்தேன்.இருதயம் முழுக்க என் காதுகளில் துடித்துக் கொண்டிருந்தது.வியர்த்திருந்தது.நான் சட்டென்று முடிவு செய்து திரைச் சீலையை விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தேன்.நீரோடும் ஓசை கேட்டது.பாத்ரூம்தான்.அதன் கதவு லேசாக திறந்து உள்ளிருந்து தண்ணீர் அறைக்குள் வந்து கொண்டிருந்தது.அது சிவப்பாய் இருந்தது...

Thursday, September 23, 2010

சிதைவு

உடல் முற்றிய கருவாய்
திரண்டு  கொண்டிருந்தது ..
கொடி அறுத்து
ஜனிக்கத்
துடித்துக் கொண்டிருந்தது ..
உதடு
உடைத்து
கசியக் காத்திருந்தது..
இதழ் பிரித்து
மலர  சிவந்திருந்தது ...
ஒரு
பெரு மழைநாளில்
சுருதி சிதறிய
வார்த்தைகளில்
குறைபட்டு
காலிடையே
ரத்தமாய்
வழிகின்றது ..

Tuesday, September 21, 2010

பெண் ஞானம்

பெண்களை அறிதல்
அத்தனை எளிதல்ல

பெண்களை சரியாகப்
புரிந்து கொள்ள
நாம்
இருட்டில் மட்டும் ஒளிரும்
சில நிறங்களைப் பற்றி
அறிந்து கொள்ளவேண்டும்
பார்க்காத பொழுதில்
தசைகளை இழுத்துண்ணும்
சில உடைகளைப் பற்றியும்
கொஞ்சம்  அறிவு வேண்டும்
உதிரம் குடிக்கும்
சில மலர்களுடனாவது
அறிமுகம் வேண்டும்
ஒரே நாளில் உயிர்த்து உதிரும்
பட்டாம் பூச்சிகளைப் பற்றியும்
தெரிந்திருக்கவேண்டும்
மலை உச்சியில்
ஒளித்து உறையும்
சில பறவைகள்,
புதைகுழிகளில் கண் ஒளிரும் 
சில விலங்குகள்  பற்றியும்
தெரிந்திருப்பது நலம்
சருகுகளில் இருந்து
நாவில்
முதிர்ந்த நஞ்சுடன்
சட்டென்று
சீறி எழும்
சர்ப்ப வகைகள் பற்றியும் கூட
அறிய வேண்டும்தான்..
ஆனால்
இவையெல்லாம்
நம்மால் ஆகாது
என்றஞ்சி
விட்டுவிடக் கூடாது 
ஏனெனில்
பெண்ணை அறிதலே
ஞானத்தின் ஆரம்பம்
என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்..

Monday, September 20, 2010

உடல் தத்துவம் 8

என் மனநிலை பெரிதும் பாதிக்கப் பட்டது.அடுத்த ஒருவாரம் முழுக்க கடுமையான காய்ச்சலில் விழுந்து கிடந்தேன்.தூக்கத்திலும் விடாது பேசிக் கொண்டே இருந்ததாக சொன்னார்கள்.சில சமயம் நான் கட்டுப்பாடின்றி பிதற்றுவதை நானே உணர்ந்தேன்.பெரும்பாலும் சங்குவை ஓடாதே ஓடாதே என்று எச்சரித்துக் கொண்டிருந்தேன்.சில தருணங்களில் பின்னால் சிரி என்று எழுதிய அந்த மஞ்சள் ராட்சசன் திரும்பி எங்களை நோக்கி வரும்போது ஓடு ஓடு என்று கத்தினேன்.க்வார்ட்டர்சில் உள்ள சிறுவர்கள் என்னை வந்து பார்த்தவண்ணம் இருந்தார்கள்.சங்குவைப் பற்றி என்னுடன் பேசக் கூடாது என்று ஆச்சி சொல்லியிருந்தாலும் சிறுவர்களுக்கே உரிய குரூரத்துடன் அவர்கள் அவனைப் பற்றிதான் பேசினர்.விநாயகம் மட்டுமே சங்குவின் உடலை அவன் வயது காரணமாக பார்க்க அனுமதிக்கப் பட்டிருந்தான்.உண்மையில் அங்கு உடலே இல்லை என்பது போல் சொன்னான்.அவனுடைய கால்களில் ஒன்றை நாய் ஒன்று தூக்கிக் கொண்டு ஓடினதை தானே பார்த்ததாய் சொன்னான்.நான் அபத்தமாய் ''சடையா'' என்றேன்.நாங்கள் பொன்வண்டுகளை தீப்பெட்டியில் அடைத்துவைத்திருந்த பாவம்தான் சங்குவைப் பழிவாங்கிவிட்டது என்றார்கள்.நான் நினைவு வந்து தள்ளாடி எழுந்து என் தீப்பெட்டியைத் திறந்து பார்த்தேன்.அது எப்போதோ இறந்து உலர்ந்திருந்தது.

மெல்ல சங்கு அவர்கள் வாழ்வில் இல்லாமல்  ஆனான்.ஆனால் எனது பின் மண்டையில் அவன் இருந்துகொண்டேதான் இருந்தான்.ஒருவாரம் கழித்து சித்தப்பாவின் சைக்கிளில் பள்ளி போக ஆரம்பித்தேன்.இப்போது அது அவமானமாக இருக்கவில்லை.சங்குவின் டீக்க்கடை வெறிச்சோடிக் கிடந்தது.அதன் ஓலைக் கூரை புழுதிக் காற்றில் ஊளையிட்டுக் கொண்டிருக்க கோணலாய்க் கிடந்த பெஞ்சில் டீக்காக யாரும் காத்திருக்கவில்லை.எங்கோ போய்விட்டார்கள் என்று சித்தப்பா சொன்னார்.உண்மையில் அது எனக்கு சிறிது ஆசுவாசத்தை அளித்தது.சங்குவின் அம்மாவை எதிர்கொள்ளும் சங்கடத்திலிருந்து என்னை அது விடுவித்தது.இப்போது என் நினைவில் அவள் மார்புகள் நினைவில் உள்ள அளவு அவள் முகம் தெளிவாய் நினைவு இல்லை.வழியெங்கும் என் கண்கள் அனிச்சையாய் எதையோ தேடிக் கொண்டே இருந்தன.''என்னடா தேடறே''என்றார் சித்தப்பா.எனக்கு சொல்ல்லத் தெரியவில்லை.இப்போது  புரிகிறது .நான் தேடியது சங்குவின் காணாமல் போன காலை.

சடையைக் கொஞ்ச நாட்கள் தேடிக் கொண்டிருந்தேன்.அதுவும் அவர்களுடன் போய் விட்டதா என்ன..கண்டுபிடிக்கவே முடியவில்லை.பல மாதங்கள் கழித்து ஒருநாள் ரோட்டில்ஆக்ரோசமாய்  சண்டை இட்டுக் கொண்டிருந்த நாய்க் கும்பலில் ஒரு நாயாய் அதைப் பார்த்தேன்.வளர்ந்திருந்தது.ஆனால் உடம்பெல்லாம் அழுக்குடன்  கருப்பு சொறி படர்ந்து வேறு மாதிரி இருந்தது.நான் தள்ளி நின்று ''சடை''என்று மெல்லிய குரலில் அழைத்தேன்.அது ஒரு நொடி திரும்பிப் பார்த்தது.ஒரே ஒரு முறை அதன் கண்களில் என்னைக் கண்டு கொண்டது போல் ஒரு பார்வை வந்தது.அவ்வளவுதான்.மீண்டும் தன் சண்டைக்குத் திரும்பி விட்டது.

சங்குவை நான் மேலோட்டமாய் மறந்துவிட்டேன் என்றாலும் அந்த விபத்து என் ஆழ்மனதில் எங்கோ ஒரு புழுபோல குடைந்து கொண்டேதான் இருந்திருக்கவேண்டும்.அதன்பிறகு எனக்கு அடிக்கடி உடல்நலம் குறைய ஆரம்பித்தது.சில உணவு வகைகள் சாப்பிடவே முடியவில்லை.முக்கியமாக பால் சம்பத்தப் பட்ட எந்த பொருளைப் பார்த்தாலே குமட்டி வாந்தி எடுத்தேன்.இரவுகள் கெட்ட கனவுகள் நிரம்பியவையாய் மாறின.நள்ளிரவில் என்னைத் துரத்தும் பல்வேறு விசயங்களிலிருந்து மயிர் இழையில் தப்பி உடம்பெல்லாம் வியர்வையுடன் தொப்பலாய்  நனைந்து நெஞ்சு அதிர விட்டத்தைப் பார்த்துக் கொண்டே கிடந்தேன்.ஆச்சி திருநெல்வேலி அழைத்துப் போய் புட்டாரத்தி அம்மன்  கோயிலில் பூசாரியிடம் மந்திரித்து நீர்வாங்கி முகத்தில் எறிந்தாள் .அம்மா வந்து சேர்மாதேவி கூட்டிப் போய் தர்க்காவில் ஓதி திருநீறு வாங்கி பூசினாள்.[அந்த ஊர் தர்காவில் திருநீறு கொடுப்பார்கள்]ஆனாலும் அது முழுதாக குணமாக வில்லை.மேகி அத்தை வந்து தான் அதை மாற்றினாள்

இதற்கு நடுவில்தான் மேகி அத்தை வந்தாள்.அவள் வந்த அன்று யாருமே அவளைக் கண்டுகொள்ளவில்லை.ஏன் எனில் அன்றுதான் சுதா பெரிய பெண் ஆகிவிட்டாள்.க்வர்ட்டர்சே அமளிப் பட்டது.சுதாவின் அம்மா வந்து ஆச்சியிடம் 'அத்தே உங்க பேத்தி சமஞ்சுட்டா''என்றாள்.'நாளைக்கு மறுநாள் சடங்கு.''எனறாள்.ஆனால் வா என்று கூப்பிடவில்லை.ஆச்சியிடம் கேட்டதற்கு ''தாலி அறுத்தா கூப்பிட மாட்டா. போகக் கூடாதுலே''என்றாள்.சடங்குன்னா என்ன அதுல என்ன பண்ணுவாங்க என்று கேட்டதற்கு குத்தவைச்சு மஞ்சத்தண்ணீ ஊத்துவாங்க.என்று இரண்டாம் கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாள்.மறுநாள் காலையில் சித்தப்பாவைப் போகச் சொன்னதற்கு மறுத்துவிட்டார்.''ச்சீ அந்த கும்பல்ல ...''என்றார்.''உன் பேரனை அனுப்பு''என்றார்.நான் போகத் தயாராக இருந்தும் ஆச்சி போலே லூசுப்பையலே எனறாள்.கடைசியில் சித்தப்பாதான் ஒரு சீப்பு செவ்வாழைத் தாரும் தென்காசியில் மணி அய்யர் கடை மிட்டாயுமாய்ப் போய்வந்தார்.போய் வந்து முகம்சிவக்க ''இனிமே இந்த இழவுக்கெலாம் நான் போகவே மாட்டேன்''என்று கத்திக் கொண்டிருந்தார்.யாரோ கிண்டல் செய்திருக்க வேண்டும்..

எங்களை உள்ளே அனுமதிக்கவில்லையே தவிர வெளியே பந்தலில் விளையாடிக் கொண்டிருந்தோம்.ஊரிலிருந்து அவர்கள் உறவினர்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.சுதாவைக் காணவே இல்லை.உள்ளேயே இருந்தாள்.'இனிமே உங்க கூட எல்லாம் விளையாட வரமாட்டா''எனறார்கள்.சுஜாவோ எதற்கோ யாருடனோ கோபித்துக் கொண்டு உம்மென்று வெளியிலேயே ஒரு உடைந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள்.நாங்கள் பேச முயற்சித்ததற்கும் முகம் கொடாமல் போடா பன்னி எனறாள்.ஏன் என்று புரியவில்லை.வழக்கமாய் வினாயகத்திடம் தான் இதற்கெல்லாம் பதில்கள் இருக்கும்.''அது ஒன்னுமில்லேடே.அவளுக்கு முன்னால சுதா பெரிய மனுசி ஆயிட்டா இல்லே.'ஆனால் அவனுக்கும் பெரிய மனுசியாவது என்றாள் அரை குறையாகத்தான் தெரிந்திருந்தது.எங்களுக்கு அவ்வப்போது யாராவது வந்து ஏதாவது தின்னக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.திருச்செந்தூர் சுக்குக் கருப்பட்டி,மனோகரம் எல்லாம் அன்றுதான் சாப்பிட்டேன்.


திடீரென்று எங்களுக்கு சுதாவைப் பார்த்தே ஆகவேண்டும் என்று தோன்றிவிட்டது.பெரிய மனுசி ஆதல் பற்றி பெரிய மனுசி ஆன சுதாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்வது என்று முடிவு செய்துவிட்டோம்.''விட மாட்டாங்கடே' என்று விநாயகம் சொல்லிப் பார்த்தான்.''பின்வாசல்ல உக்கார வைச்சிருக்காங்க'' என்று ஒரு பையன் தகவல் சொன்னான்.பின்னால் பாத்ரூம், துவைகல், தாழ்வாரம் அதை ஒட்டி  ஒரு உயரமான  சுற்றுச்  சுவரும் இருந்தது.சுவற்றை ஒட்டியே ஒரு கொடுக்காப்புளி மரம் இருந்தது.அதில் ஏறினால் அவளைப் பார்க்கலாம்.ஆனால் அந்த மரம் அத்தனை வலுவான மரம் அல்ல.'நாம ஏறினா மரம் ஓடிஞ்சுடும்''என்றான் விநாயகம்.உண்மைதான்.அவன் ஏறினால் மரம் மூட்டோடு பிடுங்கிக் கொண்டு வந்தாலும் வந்துவிடும்.ஆகவே இருப்பதிலேயே நோஞ்சானான நான் ஏறி சுதாவுக்கு தகவல் தெரிவிப்பது என்று முடிவு செய்யப் பட்டது.

சுதாவின் வீடு க்வார்ட்டர்சின் கடைசி வீடு.அவள் வீட்டுக்குப் பின்னால் ஒரு க்வார்ட்டர்ஸ் இருந்தது.ஆனால் நெடுநாளாய் அதில் ஆள் இல்லை.அங்கு ஐந்து தலை பாம்பு இருப்பதாக விநாயகம் சொல்லிய கதையில் பயந்து நாங்கள் அங்கு போவதே இல்லை.இதில் வேடிக்கை என்னவெனில் இந்தக் கதையை உற்பத்தி செய்த விநாயகமே கடைசியில் தன் கதையை நம்ப ஆரம்பித்துவிட்டதுதான்..அந்த பாம்பு தினமும் இரவில் வந்து சுதா வீட்டில் வளர்த்த கோழி இடும் முட்டைகளைக் குடித்து விடுவதாக ஒரு பேச்சு உண்டு.நாங்கள் பின்னால் போகும் போது அந்த தகவலை அறிந்திராத அப்பாவிக் கோழிகள் உற்சாகமாக மேய்ந்து கொண்டிருந்தன.எங்களைப் பார்த்ததும் கொக் கொக் என்று கதறிய படியே சிதறி ஓடின.''சத்தம்  போடாதீங்கடா''என்று விநாயகம் கடிந்து கொண்டான்.''பிறகு பாம்பு வந்திடும்''என்று திரும்பி அச்சத்துடன் பார்த்துக் கொண்டான்.''நாங்க இல்லே.கோழில்லா சத்தம் போடுது''என்று ஒருவன் விளக்கம் அளித்தான்.விநாயகம் தூக்கிவிட நான் மரத்தில் ஏறினேன்.

பின் வராண்டாவில் சுதா தனியாய் முழங்காலைக் கட்டியபடி  உட்கார்ந்திருந்தாள்.அவள் முன்னால் ஒரு தண்ணீர் சொம்பும் தட்டும் இருந்தது.அதில் வாழைப் பழங்கள் இருந்தன.கூடவே வெற்றிலை பாக்கு.. அவள் கன்னத்தில் மஞ்சள் பூசியிருந்தது.அவ்வளவுதான்.வேறு வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை.எனக்கு சப்பென்று ஆகிவிட்டது.இவ்வளவுதானா..

''ஸ்ஸ்ஸ் ''என்று அவளை அழைத்தேன்.அவள் கண்களைச் சுருக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.
''ஏய்ய் .விழுந்திராத.''
நான் ''இங்கே என்ன பண்றே''என்றேன் ரகசியமாய்.
அவள் சிரித்து ''புல்லு புடுங்கறேன்.போடா.இங்கே எதுக்கு வந்தே''
''நீ பெரிய மனுசி ஆயிட்டியாமே .என்னன்னு பார்க்க வந்தேன்''
அவள் முகம் சிவந்து''போடா''எனறாள்.
நான் இன்னும் கிசுகிசுப்பாய் ''எப்ப விளாட வருவே''
அவள் உதடு பிதுக்கி ''தெரில.இனிமே பாய்ஸ் கூட விளாடக் கூடாதாம்''எனறாள் .''போய்டு.யாரும் வரப் போறாங்க''
''அதெல்லாம் யாரும் வரமாட்டாங்க.''என்று சொல்லிக்  கொண்டிருக்கும் போதே ''சுதா ....''என்று அழைத்துக் கொண்டே யாரோ உள்ளிருந்து வர நான் பதறி கீழ் இறங்கையில் கொப்பு முறிந்து தடேல் என்று கீழே விழுந்தேன்.பசங்கள் எல்லாம் சிதறி ஓடி விட யாரோ ஒருவர் ''ஐயோ''என்று ஓடி வந்து என்னைத் தூக்கி விட்டார்கள்.அதுதான் மேகி என்ற மேக்தலின் அத்தையை நான் முதல் முதலாய்ப் பார்த்தது.

Saturday, September 18, 2010

உடல் தத்துவம் 7

வயது வந்தவர்க்கு மட்டும் !
மேகி அத்தையைப் பற்றிச் சொல்லும் முன்பு சங்குவைப் பற்றி சொல்லவேண்டும்.ஏன் எனில் இரண்டுக்கும் தொடர்புண்டு.சங்கு என்று அழைக்கப் பட்ட சங்கு கிருஷ்ணன் .க்வார்ட்டசுக்கு வெளியே இருந்த ஒற்றை டீக் கடையை நடத்திக் கொண்டிருந்த பெண்மணியின் ஒரே மகன்.சங்குவின்  அப்பாவை நான் அதிகம் பார்த்ததில்லை.அவர் ஒரு மலையாளி என்பது மட்டும் தெரியும்.அவருக்கு கேரளாவில் வேறு குடும்பம் இருந்தது.அடிக்கடி வருவதில்லை.திடீர் என்று ஒரு நாள் காலையில் ஆலங்குச்சியால் பல்விளக்கிக் கொண்டு அமர்ந்திருப்பார்.அன்று முழுக்க சங்குவின்  அம்மா சிரித்துக் கொண்டே இருப்பாள்.அவளுக்கு பெரிய மார்பகங்கள் இருந்தது.சிரிக்கும் போதெல்லாம் அவை குலுங்குவதை ஆச்சர்யத்துடன் பார்ப்பேன்.

சித்தப்பாவுக்கு அதி காலையிலேயே எழும் பழக்கம் இருந்தது.காலைக் கடன்கள் எல்லாம் சற்று தொலைவில் இருந்த கண்மாய்க் கரையில்தான்.பள்ளி இல்லா நாட்களில் நானும் அவருடன் போவேன்.ஹோவென்று கிடக்கும் கண்மாயிலிருந்து வரும் அதிகாலைக் குளிர்காற்றை உணர்ந்தபடி நாயுருவிகள் பின்பக்கம் உரச குந்தியிருந்து முன்தினம் உள்ளே போனது எல்லாம் வெளிவரக் காத்திருந்தது நினைவு வருகிறது.சற்று தொலைவில் பன்றிகளும் க்ர்ர்க் க்ர்ர்க் என்று உறுமிக் கொண்டு நாங்கள் விலக காத்திருக்கும்.கண்மாயில் கழுவிக் கொண்டு மெதுவாய் நடந்து சங்குவின் டீக்கடைக்கு வந்தால்  பால் கொதித்துக் கொண்டிருக்கும்.பக்கத்திலேயே புஸ் என்ற ஒலியுடன் ஒரு பெட்ரோமேக்ஸ் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும்.அந்த பிராயத்தில் அந்த விளக்கு பெரிய கலைப் பொருள் மாதிரி தெரிந்தது.அதன் ஒளியில் அத்தனையும் வேறுவிதமாய் இன்னுமொரு உலகத்திற்குள் போய் விட்டது போல் இருக்கும்.உண்மையில் அந்த பெட்ரோமேக்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் உலகைப் பார்க்கும் அனுபவத்திற்காகவே அந்த காலைநேரத்தில் எழுந்து அவருடன் செல்வேன்.அன்றைய தினத்தின் முதல் காப்பி சித்தப்பாவுக்கும் இரண்டாவது எனக்கும் கிடைக்கும்.எனக்கு சற்று சர்க்கரை கூடுதலாக.நன்கு ஆற்றப் பட்டு..சங்கு அப்போது தூங்கிக் கொண்டுதானிருப்பான்.கடைக்கு உள்ளேயே ஓரமாக சுருண்டு கிடப்பான்.அவனுடனே அவர்கள் வளர்த்த சடை என்ற நாயும் காலைப் பரப்பிக் கொண்டு கிடக்கும்.பெரும்பாலும் இருவரும் கட்டிக் கொண்டுதான் கிடப்பார்கள்.

சங்கு எனது பள்ளியில்தான் நான்காம்  படித்தான்.ஆனால் போஷாக்கு இல்லாமால் ஒன்றாம் வகுப்பு பையன் போலதான் இருப்பான்.பள்ளிக்கு என்னுடன்தான் வருவான்.பள்ளி சற்று தள்ளி பஸ் ஸ்டாண்ட் பக்கம் இருந்தது.க்வார்ட்டர்சின் மற்ற பசங்கள் எல்லாம் சைக்கிள் வைத்திருந்தார்கள்.சுஜா சுதா கூட.எனக்கும் சைக்கிள் வேண்டும் எனக் கேட்டு மறுக்கப் பட்டது.சித்தப்பாவுடன் சைக்கிளில் போவது எனக்கு  அவமானமாகப் பட்டது.பெண்கள் கூட சைக்கிளில் போகிறார்கள்!.எனவே நான் எனது எதிர்ப்பைக் காண்பிக்கும் பொருட்டு பள்ளிக்கு நடந்தே செல்வதென முடிவு செய்தேன்.பால்யத்துக்கே உரிய தர்க்கம் அது.அதைப் பார்த்த சங்குவின் அம்மா அவனையும் என்னுடன் அனுப்பிவைத்தாள்.அவளுக்கு அந்த சமயம்தான் கூட்டம் இருக்கும்.

சங்கு வினோதமான கேரக்டர்.சிறிய உடம்பில் பெரிய தலை.அதைவிட பெரிய கண்கள்.அவனது சட்டை எப்போதுமே பாதியில் நின்றுவிடும்.டவுசர் நிறைய ஊக்குகள் இருக்கும்.ஒரு சிறிய துணிப்பையில் சிலேட்டு மட்டும் இருக்கும்.அதை ஒரு பொக்கிஷம் போல அக்குளில் இடுக்கி வைத்திருப்பான்..புத்தகமெல்லாம் கிடையாது.எப்போதும் மூக்கு ஒழுகிக் கொண்டே இருக்கும்.கர்ச்சீப் என்றால் என்னவென்றே தெரியாது,அவனது அம்மாவின் பழைய சேலையைத் துண்டுகளாக வெட்டி கையில் வைத்திருப்ப்பான்.அதை வைத்துதான் மூக்கு துடைப்பது முகம் துடைப்பது ஸ்லேட்டை துடைப்பது எல்லாம்.நான் ஒருதடவை எனது கர்ச்சீப் ஒன்றைக் கொடுத்தேன்.அன்றிலிருந்து அது அவனுக்கு கர்ணனின் கவசகுண்டலம் போல் ஆகிவிட்டது.
எங்களுடன் அவன் நாய் சடையும் வரும்.சடை குட்டிநாயும் அல்ல.பெரியநாயும் அல்ல.அதன் மூடுக்குத் தகுந்தது போல் இரண்டுவிதமாகவும்  தோற்றம் கொள்ளும்.சங்குவை யாரேனும் தொந்திரவு கொடுத்தால் அதன் உடலே விறைப்பாகி வேட்டைநாய் மாதிரி ஆகிவிடும்.யாராவது சாப்பிட கொடுத்தால் அதன் சிறியவாலை விசிறி போல சுழற்றோ சுழற்றோ என்று ரொம்பநேரம் சுற்றிக் கொண்டிருக்கும்.

சங்குண்ணி எங்களுடன் சேர்ந்துகொள்ள  மிக விரும்பினான்.ஆனால் க்வார்ட்டர்ஸ் பசங்கள் அவனைச் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை.நான் சிலசமயம் பரிந்துரை செய்து பார்த்தேன்.அவனை சேர்க்க வற்புறுத்தினால் என்னையும் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்றுவிட்டார்கள்.விநாயகம் ''அவங்கல்லாம் வேற''என்றது எனக்கு புரியவில்லை.க்வார்ட்டர்சில் அஞ்சுவும் நானும் மட்டுமே அவனுடன் பேசுவோம்.குழந்தைகள் சிலநேரங்களில் மிக கொடூரமாக நடந்து கொள்வார்கள்.சிரித்துப் பேசிக் கொண்டிருப்பவர்கள் அவன் வந்தால் சட்டென்று அமைதியாகிவிடுவார்கள்.அல்லது அந்த இடத்தை விட்டு அகன்று விடுவார்கள்.பெரியவர்கள் கூட அப்படிதான்.விநாயகத்தின் அம்மா ஒருநாள் என்னிடம் ''அவனெல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வராதே''என்று சொல்லிவிட்டாள்.

நான் மட்டும் அவனுடன் பேசிக் கொண்டிருந்ததன் காரணம் சிறுவயதிலிருந்தே எனக்கு மார்க்சிய சித்தாந்தத்தில் பரிச்சயம் இருந்தது என்று சொல்ல மிக விரும்பினாலும் உண்மை என்னவெனில் அவன் நான் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டான் என்பதே.அவனுக்கும் சடை என்ற அவனது நாய்க்கும் இருந்த உறவு விநோதமானது.இருவரும் பேசிக்கொண்டு நான் பார்த்ததே இல்லை.நாயும் மனிதனும் பேச முடியுமா என்று அபத்தமாய்க் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.ஆனாலும் இருவரும் ஒரே உடலின் இரு உறுப்புகள் போலவே நடந்து கொள்வார்கள்.அவன் விழிக்கும் அதே நேரம்தான் அதுவும் விழிக்கும்.அவன் ட்ரவுசரைக் கழற்றி சிறுநீர் கழித்தால் அதுவும் காலைத் தூக்கி ஒன்றுக்கு இருந்துவிட்டு 'அடுத்து?' என்பது போல் பார்க்கும்.அவன் கையிலிருந்து அவன் சாப்பிடுவதையே சாப்பிட்டு பள்ளி வாசல் வரை அவனுடனே வரும்.பள்ளி அனுமதித்திருந்தால் அவன் கூட மூன்றாம்வகுப்பு படித்திருக்க கூட செய்திருக்கும்.பள்ளிமுடியும் போது சரியாக வெளியே நிற்கும்.

சங்கு ஏறக்குறைய அதே போலதான் என்னுடன் நடந்து கொண்டான்.எப்போதும் என்னுடனே நான் நடந்தால் நடந்து அமர்ந்தால் அமர்ந்து சில நேரங்களில் எனக்கு தர்மசங்கடமாகக் கூட இருந்தது.நான் விளையாடும் நேரங்களில் ஓரத்தில் அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்க சடை அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.க்வார்ட்டர்ஸ் பசங்களின் வட்டத்தில் அவனையும் இழுத்துக்  கொள்ள நான் எவ்வளவோ முயற்சித்தேன்.அவன் அம்மாவும் ''சங்குவையும் விளாட்டுக்கு சேத்துக்குங்க தம்பி''எனறாள் ஒருநாள்.நான் ரொம்ப யோசித்து ''நீ இப்படி கிழிஞ்ச டவுசர் போட்டுட்டு வந்தா பசங்க சேர்த்துக்க மாட்டாங்க''என்று ஒரு தீர்வு சொன்னேன்.அவன் அதை அவன் அம்மாவிடம் சொல்லியிருக்கவேண்டும்.இரண்டு நாள் கழித்து பளீரிடும் சிவப்பு நிறத்தில் சட்டையும் கிளிப் பச்சை டவுசருமாய்  வந்தான்.அந்த மாதிரி நிறத்தை எல்லாம் இப்போது தடை செய்துவிட்டார்கள் போல...அவன் முகத்தில் சட்டையின் நிறம் தெரிந்தது.ஆனால் அத்திட்டம் பரிதாபகரமாக தோல்வியுற்றது.அவன் உடைகளின் நிறம் மிகுந்த கேலிக்கு  ஆளாகியது.

ஆனால் அவனை அவ்வுலகத்தில் அனுமதிக்கும் சாவியை அவனே ஒருநாள் கண்டுபிடித்தான்.கிரிக்கெட் அப்போது பிரபலம் ஆகி இருக்கவில்லை.என்ஜினீயர் மட்டுமே அவ்வப்போது கரகர வானொலியில் காதுடன் திரிவார்.திடீரென்று ''விநாயகம்.கவாஸ்கர் அவுட்''என்று வலிப்பு வந்தது போல் கத்துவார்.அந்த கும்பலில் அவனுக்கு மட்டுமே கிரிக்கெட் என்பது ஒரு தின்பண்டம் அல்ல என்று தெரிந்திருந்தது.எனவே நாங்கள் விளையாடுவதெல்லாம் கோ கோ ,கபடி ,கிட்டிப்புள் ,பம்பரம் பெண்களும் வந்தால் கள்ளன் போலிஸ் போன்ற விளையாட்டுகளே.செஸ் போல அல்லாமல் அவன் விளையாடினால் உடனே முடிந்து விடுவதால் வினாயகத்தை எப்போதுமே கபடியில் சேர்த்துக் கொள்ளமாட்டோம்.ஒருதடவை கபடியில் அஞ்சுவின் பாவாடை கழன்று மல்லாந்து  விழுந்ததில் இருந்து அவளையும் சேர்ப்பதில்லை.ஆண்களுக்கு அந்த காட்சி ரொம்பப் பிடித்திருந்து எனினும் வேண்டுமென்றே அவளை அடிக்கடி மல்லாக்க தள்ள முயற்சித்தது பெண்களுக்குப் புரிந்துவிட்டது.

அதுபோல ஒரு கபடி நாளில் வழக்கம்போல சங்குண்ணி வந்து ஓரத்தில் அமர்ந்தான்.வந்தவன் ட்ரவுசர் பையிலிருந்து எதுவோ எடுத்தான்.ஒரு இரட்டைக்கிளி தீப்பெட்டி.இது ஏன் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது என்றால் தீப்பட்டிகளின் மேல் ஓட்டும் படங்களைச் சேர்க்கும் ஹாபி அப்போது நிறைய பேருக்கு இருந்தது.அரிதான சில ஓட்டுப் படங்களை காசுகொடுத்து வாங்கவும் சிலர் தயாராக இருப்பார்கள்.

ஆனால் தீப்பெட்டிக்குள்ளே இருந்தது விஷயம்.சட்டென்று பக்கத்தில் இருந்த பையன் அவனிடம் நெருங்கி பார்த்தான்.இன்னும் சற்றுநேரத்தில் எல்லோருமே அவன் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அவன் தீப்பெட்டிக்குள் வைத்திருந்த பொருளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.பொருள் அல்ல.உயிர்.உயிர் அல்ல .வண்டு.பொன்வண்டு.

இன்று கண்ணாடித் தொட்டிகளில் கலர் கலராய் சிறுவர்கள் மீன் வளர்ப்பதை காணும்போது நாங்கள் தீப்பெட்டிகளில் பொன்வண்டு வளர்த்ததின் நீட்சிதானோ என்று தோன்றுகிறது.குறுகிய காலத்திலேயே நாங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு பொன்வண்டு வளர்க்க ஆரம்பித்தோம்.பொன்வண்டு வளர்ப்பில் கற்றுக் கொள்ள நிறைய விசயங்கள் இருந்தன.முதலில் அது பறந்துவிடாமல் இருக்க அதன் சிறகை வெட்டுவது ,தீப்பெட்டிக்குள் காற்று போக துளை இடுவது.அதற்கு உணவு என்று ஒரு குழந்தை வளர்ப்புக்கு இணையான கவலைகள்.

சங்கு இப்போது பொன்வண்டு நிபுனணன் ஆகிவிட்டான்.பொன்வண்டுவைப் பிடித்து தருவதில் இருந்து எல்லாமே அவன்தான்.சிலசமயம் பள்ளிக் கூடத்தில் இருந்தும் அவனுக்கு பொன்வண்டு 'ஆர்டர் 'வந்தது.''எப்போதும் உடன் காட்டுல வண்டு புடிக்கறேன்னு கை கால்ல கீறிட்டு வராம்பா''என்று அவன் அம்மா புகார் செய்தாள்.அவன் கேட்பதாய் இல்லை.பொன்வண்டின் காரணமாக தானே அவன் எங்கள் விளையாட்டுகளில் அனுமதிக்கப் பட்டான்.ஆனால் உண்மையில் பொன்வண்டுகளின் வருகைக்குப் பிறகு எங்கள் விளையாட்டுகள் குறைந்துவிட்டன என்று நான் விநாயகம் போன்றவர்கள் வருந்தினோம்.ஆனால் பெண்களுக்கு வண்டுவளர்ப்பு ரொம்ப பிடித்திருந்தது.அவர்கள் அதற்கு பெயர்கள் கூட வைத்திருந்தார்கள்.நான் ஆரம்ப சில தினங்களிலேயே பொன்வண்டு ஒரு முட்டாள் பிராணி என்று கண்டு கொண்டேன்.அது எப்போது தீப்பெட்டியைத் திறந்து பார்த்தாலும் ஒரே மாதிரி பொன் வண்டுத்தனத்தோடு இருந்தது.அதன் கடுகுக் கண்களில் என்னை அங்கீகரிக்கும் எந்த அறிகுறியையும் அது காண்பிக்கவில்லை.ஆனால் பெண்களுக்கு அப்படித் தோன்றவில்லை.அஞ்சுவின் பொன்வண்டு பெயர் சொல்லிக் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கிறது என்று சொல்லிக் கொண்டார்கள்.இப்போது அவர்கள் எங்களுடன் பேசுவதைவிட சந்குவிடமே அதிகம் பேசினார்கள்.சுதாவின் பொன்வண்டை சாவின் விளிம்பிலிருந்து அவன் என்னவோ செய்து காப்பாற்றியதில் இருந்து அவன் மதிப்பு அதிகரித்திருந்தது.அவன் சந்தோசமாய் இருந்தான்.

அன்று ஒரு வெள்ளிக் கிழமை .என்று நினைவு.வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு அவன் டீக்கடை வாசலில் நின்றேன்.டீக்கடை பெஞ்சில் அவனது மலையாள அப்பா குந்தியிருந்தார்.என்னைப் பார்த்ததும் ''வரு''என்று சிரித்தார்.''மோனே''என்று உள்ளே கூப்பிட்டார்.சங்கு உள்ளிருந்து புதுச் சட்டை கால் சராயுடன் வந்தான்.சிகப்பு பச்சை இல்லாமல் எங்களைப் போல நல்ல சட்டை.கூடவே சடையும் ஓடி வந்தது.தோளில் புதுப் பை இருந்தது.அவன் அப்பா ''எடி ..மதுரம்  கொடு ஈ கொச்சுனுக்கு''''என்றார்.அவன் அம்மா உள்ளிருந்து ஒரு தாளில் சுற்றிய ஜிலேபியுடன் வந்து ''தம்பி சாப்பிடுங்க''என்றாள்.நான் அதை வாங்கலாமா என்று யோசித்தேன்.சங்குவின் அவன் அப்பாவின் முகத்தில் இருந்த ஒளி அவள் முகத்தில் இல்லை.அவள் முகம் வீங்கியிருந்தது.அவர் ''வாங்கிக்கோ''என்றார்.

நாங்கள் இருவரும் நடக்க ஆரம்பித்தோம்.சடை முன்னால் ஓடியது.''எனக்கு தம்பிப் பாப்பா பொறந்துருக்கு''என்றான் சங்கு.இதற்குள் குழந்தை பிறக்க கர்ப்பமாகவேண்டும் என அரை குறையாய்  எனக்கு தெரிந்திருந்தது.ஆகவே எனக்கு குழப்பமாய் இருந்தது.''பெரிம்ம்மா வீட்டில இருக்கு''என்றான் சங்கு விளக்கமாய்..''அதான் புது ட்ரெஸ்.''என்றான்.பிறகு ''என் வண்டு முட்டை போட்டிருக்கு''என்றான்.நான் ''போடா'' என்றேன்.கோழிதான் முட்டை போடும் என்பதையே நான் சமீபத்தில் தான் அறிந்திருந்தேன்.ஒரு வண்டு எப்படி முட்டை போட முடியும்?''நிஜமாண்ணே''என்றான் அவன்.''பார்க்கறியா''என்று கால்சட்டைப் பையில் இருந்து தீப்பெட்டியை எடுத்தான்.திறந்தான்....

அடுத்த கணங்கள் தெளிவற்றவை.அல்லது அந்த சமயத்தில் அவ்விதம் தோன்றிற்று.ஆனால் பின்னால் கனவுகளில் திரும்பத் திரும்ப அபாரத் தெளிவுடன் கூர்மை பெற்று எழுந்துவந்து என்னை நெடுநாட்கள் விரட்டிக் கொண்டே இருந்தது.வழக்கமாய் அந்த சாலையில் போக்குவரத்து அதிகம் இருக்காது.சாலையும் திருப்பங்கள் அற்ற நெடியசாலைதான் என்பதால் வெகுதொலைவில் வண்டி வரும்போதே கேட்டுவிடும்.சங்கு தீப்பெட்டியை ஒரு ரகசிய அறையை திறப்பவன் போல மிக கவனமாய்த் திறந்தான்.''முட்டை பார்க்கறீயா''என்ற அவன் சிரித்த அந்த வினாடியில் உள்ளிருந்த பொன்வண்டு சட்டென்று எதிர்பாராது வெளியே பாய்ந்தது.சங்கு அதைத் துரத்திக் கொண்டு பாய்ந்ததைப் பார்த்தேன்.ஒரு பெரிய சத்தம் தட்டென்று கேட்டது.சங்குவைக் காணவில்லை .சடை தூரத்தில் போகும் ஒரு லாரியைக் குரைத்துக்கொண்டே துரத்துவதைப் பார்த்தேன்.தொலைவில்  இருந்து சிலர் கத்திக் கொண்டே ஓடிவருவது பார்த்தேன்.''அய்யா ராசா''என்ற குரல் கேட்டேன்.என்னவென்று புரியாமல் குழம்பி எங்கோ ஓட எத்தனித்தேன்.கீழே கிடந்த எதன் மீதோ இடறிவிழ இருந்து கீழே பார்த்தேன்.

 அது ஒரு கை.
ஒரு கை மட்டும்
கையில் தீப்பெட்டியுடன் .
சங்குவின் கை .

Thursday, September 16, 2010

சப்பாத்திக் கள்ளிகளின் காதல்

உன் மேல்
ஒரு கவிதை
உடனே வா
என்று போன் செய்தேன்
ஆணியடித்தாற்போல்
தலையில் இறங்கும் வெயிலில்
பேருந்தின் பிதுக்கத்தில் இருந்து
உதிர்ந்து வந்தாள் அவள்..
ரவிக்கை முழுதும்
வியர்வை வட்டங்களோடு
வேறொருவள் போலிருந்தாள்


ஒரே கூட்டம் எனறாள் இறைஞ்சலாய்
பின்னால் ஒருவன்
புட்டத்தை உரசிக்கொண்டே இருந்தான்
எனறாள் எரிச்சலாய் ..
எங்கே
உன் கவிதையைச் சொல் எனறாள்
அவசரமாய் 

எழுதிவைத்திருந்த
கவிதைகள் யாவும்
மூளையில் கசகசத்தன
எங்காவது ஹோட்டலுக்கு போகலாமா
என்றதற்கு மறுத்தாள்
ரிசார்ட் போவதற்கோ
கடற்கரை போவதற்கோ
காசோ காலமோ இல்லை

நிர்வாண சிற்பங்கள்
நிறைந்த கோயில்களிலோ
ஆயிரம் கண்ணுடன்
அடிக்குரலில் வன்முறையுடன்...
எல்லார் யோனிகளிலும்
அனுமதியின்றி  நுழையும்
கலாச்சார லத்திகள்..


நேரமாகிவிடும்
யாராவது பார்த்துவிடுவார்கள்..
இங்கேயே சொல்
தற்செயலாய் பார்த்த
அலுவலக சிநேகம் போல நடி எனறாள்


நடுவீதியில்
சந்தையின் சந்தடியில்
புணர்வதற்கு
நாமென்ன நாய்களா என்றேன்.
ஒரு
மத்திய வர்க்கனின்
மொண்ணை  கோபத்துடன்..

வெடித்தழுது விலகிப் போனாள் ..
என் ஒரே காதலி..
காதலிக்க
மனம் மட்டும் போதாது
என்பது
மீண்டும் ஒருமுறை
உணர்த்தப் பட
கவிதைத் தாள்களை
வீசிஎறிந்துவிட்டு
எதிர்த்திசையில் நடக்க ஆரம்பித்தேன்.

Monday, September 13, 2010

உடல் தத்துவம் 6

வயது முதிர்ந்தவர்க்கு மட்டும்!

அப்பாவிடம் இருந்து எனக்குப பற்றிக் கொண்ட வியாதிகளில் இந்த புத்தக வியாதி முக்கியமானது.ஒவ்வொரு மனிதனும் அவனது சிறு வயதில்  தனது தந்தையைப் போல இல்லாமல் இருக்க மிகுந்த முயற்சி செய்கிறான்.ஆனால் மெல்ல மெல்ல அவன் தன் தந்தையைப்  போலவே ஆகிறான் என்று எங்கோ படித்தேன்.நம் ரத்தத்தில் இருந்து நமது மூதாதையர்களைத் தொலைத்துவிடுவது அவ்வளவு எளிதல்ல.உண்மையில் ஹிந்துக்கள் இறந்தவர்க்கு கொடுக்கும் திதிச் சடங்கின் மூல நோக்கம் இதுவே என்று காசிச் சாமியார் ஒருதடவை சொன்னார்.உன் அப்பனின் கோபம், தாத்தனின் காமம், பாட்டியின் அச்சம்,அவள் அம்மையின் கஞ்சத்தனம்,குரூரம் எல்லாம் அவர்களோடு  மண்ணுக்குள் போய்விடவில்லை.உன்னுள் துடித்துக் கொண்டிருக்கிறது என்றார்.

 உண்மை என்று சில நேரம் தோன்றியிருக்கிறது.எல்லா நேரங்களிலும் நான் செய்வது என் கட்டுப்  பாட்டில் இல்லை என்று உணர்ந்திருக்கிறேன்.என்னை மீறி எதுவோ என்னைச் செலுத்துகிறது.என்னிலும் பெரிய சக்திகள்.என் சூழலில் நிறைய புத்தகங்கள் இருந்தன.ஆகவே எனக்கும் அந்த கிருமித் தொற்றிக் கொண்டதில் வியப்பு இல்லை.ஆனால் என் புத்தகங்கள் அப்பாவின் புத்தகங்கள் இல்லை.அப்பாவுக்கு புனைவென்பதே பிடிக்காது.கதைப் புத்தகங்கள்  வெள்ளைச் சீனி போல என்பார்..சாப்பிட இனிப்பாக இருக்கும்.ஆனால் உன் புத்தியை அரித்துவிடும் என்பார்.வானத்தில் கட்டிய வீட்டுக்கு வாடகைக்கு வருபவர் யார் என்று கேலியாக சிரிப்பார்.ஒருநாள் நான் அவரது தடித்த விபூதி வாசம் அடிக்கும் கம்பராமாயணத்தை எடுத்து இதையே சிலர் புனைவுதான் என்கிறார்களே என்றதற்கு சிலகாலம் என்னுடன் பேசாது இருந்தார்.
உண்மையில் புத்தகங்களுடன் எனது பரிச்சயம் நாஞ்சிலில்  அவருடன் இருக்கையில் நிகழவில்லை.சில குடும்பக் காரணங்களுக்காக நான் மட்டும் நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம் என்ற ஊரில் அப்பாவழிப் பாட்டியுடன்  சிலவருடங்கள் இருக்கநேர்ந்தது.உடன் சித்தப்பாவும் இருந்தார்.சித்தப்பாவுக்கு மணம் ஆயிருக்கவில்லை.பஞ்சாயத்து ஆபிசில் வேலை பார்த்தார்.எனவே க்வார்ட்டர்ஸ் கொடுத்திருந்தார்கள்.
அந்தக் காலத்தில் அரசுக் க்வார்ட்டர்ஸ் எல்லாம் ஒரே மாதிரி மஞ்சள் சாயத்துடன் ஒட்டுக் கூரையுடன் இருக்கும்.எல்லா அரசு அலுவலகங்கலுமே மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும்.இப்போது கலர் கோட் மாறிவிட்டது போல.எல்லா ஆபிஸ்களிலும் மூன்று பேர் படுக்கக் கூடிய மேசைகள் பழுப்பேறிய கோப்புகள் பிள்ளைத்தாச்சிப் பெண் வயிறு போன்ற தலையுடன் மிகத் தயக்கமாய் சுற்றும் மின்விசிறி,தடித்த மரப் பேனாக்கள்,நீல மைக் கூடுகள்,தலையைச் சொரியும் பியூன்கள்,அவர்களது துருப்பிடித்த ஹெர்குலிஸ் சைக்கிள்கள்,மேல் அதிகாரிகளுக்கு அவன் காப்பி வாங்கும் துர்நாற்றம் அடிக்கும் சரியாக கழுவாத ப்ளாஸ்க்குகள் எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கும்.இன்று இவை அத்தனையும்  கால வெள்ளத்தில் யாரோ செட்டைக் கழற்றிப் போய்விட்டது போல் மாறிவிட்டன.

சித்தப்பா இளையவர்,திருமணம் ஆகாதவர் என்பதால் இருப்பதிலேயே மோசமான க்வார்ட்டர்ஸ் கொடுக்கப் பட்டிருந்தது.வீட்டின் முன் வாசலில் ஒரு பெரிய நாவல்மரம் நின்றிருந்தது.சிறுபிள்ளைகள் நாவல் பழத்துக்கு ஏங்கி விட்டெறிந்த கற்கள் எல்லாம் வீட்டுக் கூரை  ஓடுகளைப் பதம் பார்த்திருந்தன.வெயில் காலத்தில் பெரிய பிரச்சினை இல்லை.இடைவெளிகள் வழியே வீட்டுக்குள்ளேயே நுழையும் சூரியன் பல்வேறு கற்பனைகளைக் கொடுத்தது.ஆனால் மழை என்று வந்து விட்டால் வீடே வெள்ளத்தில் மிதந்தது.முழங்கால் அளவு வீட்டுக்குள் ஏறிய தண்ணீரில் மேலிருந்தும்  சலசலவென்ற சத்தத்துடன் ஒழுகும் நீருக்கு தப்பிய ஒரே ஒரு இடத்தில் அந்தக் கால கேம்ப் கட்டிலில் குளிரில் நடுங்கியபடி சித்தப்பாவுடன் ஓட்டிப் படுத்துக் கிடந்தது நினைவிருக்கிறது.

க்வார்ட்டர்சில் என் வயதொத்த சிறுவர் சிறுமியர் நிறைய பேர் இருந்தனர்.எதிர்வீட்டில் சற்று மன வளர்ச்சி குறைந்த அஞ்சு என்ற ஒரு பெண் இருந்தாள்.பதினாலு வயசிலும் என் கூட அஞ்சாங்  கிளாசுக்கு வந்து கொன்டிருந்தாள்.அவள் மனம்தான் வளரவில்லையே தவிர உடல் அந்த வயதுக்கு தக்கவே இருந்தது.ஒருநாள் எட்டாங்கிளாஸ் பசங்கள் அவளைப் பள்ளிக் கழிவறைக்குக் கூட்டிப் போய் பாவாடையைத் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஆசிரியை ஒருவர் பார்த்து வீட்டுக்கு சொல்லி அனுப்பி பிரச்சினையாகி அன்றோடு அவள் பள்ளி வாழ்க்கை முடிந்தது.அஞ்சுவுக்கு அம்மா இல்லை.கல்யாணம் ஆன அக்காவுடன் இருந்தாள்.அக்காவின் கணவரை எஞ்சினீயர் என்று சொல்வார்கள்.அந்த க்வார்ட்டர்சின் மன்மதன்.எப்போது ஏற்றிக் கட்டிய கைலியுடன் கரடி மாதிரி மயிர் பொங்கும் மார்பைக் காட்டியபடி தான் வெளியே நிற்பார்.'மாமா'வுக்கு அஞ்சு ரொம்பப் பயப் படுவாள்.'மாமா ரொம்ப மோசம்'என்று அடிக்கடி  சொன்னதின் அர்த்தம் இப்போது புரிகிறது.அவளுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.எனக்கும் அவளைப் பிடிக்கும் என்றாலும் அவள் கொஞ்சுகிறேன் பேர்வழி என்று அடிக்கடி என் தலையைப் பிடித்து அவள் தொடைகளுக்குள் அழுத்திக் கொள்வது பிடிக்காது.''மூச்சு முட்டுதுடி''என்று சத்தம் போட்டால் அழுவாள்.

வலது பக்க வீட்டில் விநாயகம் என்று சற்று பெரிய பையன் இருந்தான்.பேருக்கு ஏற்றவாறு பெரிய்ய பையனே.ஒரு இடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு நகரும் போது யானை ஒன்று போவது போலவே நகர்வான்.எனக்கு சதுரங்கம்,கேரம்போர்ட் எல்லாம் கற்றுக் கொடுத்தான்.ஆனால் நடப்பது போலவே எல்லாவற்றிலும் பயங்கர ஸ்லோ.நானோ எல்லாவற்றிலும் மிகு வேகம்.அவனுடன் செஸ் விளையாடுவது ஒரு துன்பியல் அனுபவம்.முதல் மூவுக்கே அரை மணிநேரம் யோசிப்பவனுடன் எப்படி விளையாடுவது..நான் ''அண்ணே..விளையாடு அண்ணே''என்று கெஞ்சிக் கொண்டே இருப்பேன்.அவன் ''இருடா..''என்று கொண்டே இருப்பான்.பெரும்பாலும் எங்கள் விளையாட்டுகள் முடிவுக்கு வந்ததே இல்லை.சுமார் ஐந்து மூவ் அவன் யோசிப்பதற்குள் அவன் அப்பா வந்துவிடுவார்.''ஏலே படிக்கலியா''என்றவுடன் 'நாளைக்கு விளையாடுவோம்''என்று போய் விடுவான்.நாளைக்கும் அதே கதைதான்.அவன் வீட்டில்தான் எனது புதின வாசிப்பு தொடங்கியது.இரத்தினபாலா என்ற புத்தகம் அவர்கள் வீட்டில் மாதாமாதம் வாங்குவார்கள்.மாதத்தில் முதல் தேதி வரும் அது.ஆனால் முந்தினமாதம் பத்தாம் தேதியில் இருந்தே வந்துடுச்சா வந்திடுச்சா என்று நச்சரித்து அவர்கள் என்னைக் கண்டாலே பீதி கொள்ள ஆரம்பித்தார்கள்.

இடது பக்க்கவீட்டில் சுஜா சுதா என்று சற்று பெரிய பெண்கள் இருந்தார்கள்.இவர்களே  முதன் முதலாக என்னை நூலகம் அழைத்துச் சென்றவர்கள்.சற்று தொலைவில் இருந்த நூலகத்திற்குப் போவதற்கு நான் ஒரு ஆண்பிள்ளை என்று என்னை துணைக்கு அழைத்துப் போவார்கள்.சுஜாவுக்கும் சுதாவுக்கும் அடிக்கடி சண்டை வரும்.என்னை யார் அழைத்துச் செல்வதென்று தகராறு வரும்.இருவரும் ஒன்று சேர்ந்து எங்கும் போக மாட்டார்கள்.சுஜாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.அவள் எப்போதும் கிசுகிசுப்பாகவே பேசுவாள்.அவளுக்கு நிறைய ரசிகர்கள் இருந்தார்கள்.நாங்கள் எப்போது வெளியே போனாலும் நடுவழியில் சேர்ந்து கொண்டு என்னுடன் பேசுவது போல சுஜாவுடன் பேசிக் கொண்டே வருவார்கள்.சுஜா பேசவே மாட்டாள்.ஆனால்  அப்போது அவள் முகத்தில் தெரியும் அந்த சிகப்பை கண்களின் ஜொலிப்பை வேறெப்போதும் காணவே முடியாது.இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லக் கூடாது என்று ஒவ்வொரு தடவையும் சொல்வாள்.சுதாவை எனக்குப் பிடிக்காது.ஏன் எனில் அவள் பாவாடையில்  எப்போதும் லேசாக ஒரு மூத்திரவாடை வீசிக் கொண்டே இருக்கும்.ஆனால் வெளிக் காட்டிக் கொள்ளமாட்டேன்.காரணம் அவள் ஏதாவது எனக்கு சாப்பிடத் தந்துகொண்டே இருப்பாள்.என் வாழ்க்கையில் முட்டையை அறிமுகப் படுத்தியவள் அவள்தான்.என் ஆச்சி தீவிர சைவமானதால் அதை கத்திரிப் பழம் என்று சொல்லிவிட்டாள் .எனக்கு அந்தப் பழத்தின் ருசி ரொம்ப பிடித்துப் போய் ஆச்சியிடம் வாங்கித்தர சொல்லி அடிக்கடி அடம் பிடித்தேன்.

இவர்கள் வீட்டுக்கு எதிர் வீட்டுக்குத்தான் மேகி அத்தை குடி  வந்தார்.நான் பார்த்த முதல் பெண் உடல்.ஒரு வேளை என் முதல் காதலாக கூட இருக்கலாம்.

Sunday, September 12, 2010

அரவப் படம்

வேண்டுமென்றே
கொல்லவில்லை அதை
புதியவீடு கட்டும்பொருட்டு
பழைய கற்களைப் புரட்டுகையில்
சட்டென்று வெளிவந்து
சீறியது அது
அனிச்சையாய்
கையிலிருந்த தடியால்
அடித்துக் கொன்றேன்
கற்களின் கீழ்
மேலும் சில இருந்தன
அதன் குழந்தைகள் போலும்
தமிழ் சினிமா போல
வளர்ந்தெழுந்து
பழிவாங்க வரும் என்று சொன்னதால்
தீயூற்றி எல்லாம் அழித்தோம்
பின்
பாலூற்றிப் புதைத்தோம்
பின்பு
புதுமனை கட்டிப்
புகுநாள்  வரை
அதைப் பார்க்க்கவில்லை .
ஆனால் அன்றிரவே
ஜன்னல் கம்பிகளில்
முறுகிக் கொண்டிருந்த
அதைப் பார்த்தேன்
 அதிர்ந்து விளக்கேற்றியதும்
அது துணிகட்டும் கயிறாய்
மாறி மாயம் கட்டியது
அதன் பிறகு
ஒவ்வொரு கணமும்
வீட்டின்  ஒவ்வொரு மூலையிலும்
அதன் மூச்சொலி கேட்டேன்
இரவுகளில்
அது சுவர்களிலிருந்து
யாரும் அறியாமல் 
இறங்கி வந்து
என்னிடம் பேசிக் கொண்டே இருந்தது
எரிந்து போன
அதன் குழந்தைகளைப் பற்றி ...
அதன் வீட்டில் உறங்கும்
என் குழந்தைகள் பற்றி...
மெல்ல மெல்ல
அது பேசிப் பேசியே
என்னுள் புகுந்தது
கண் மூடி
தெய்வத்தை தியானித்தாலும்
அங்கும்
ஆயிரம் தலைகளுடன் வந்து
ஆயிரம் நாவுகளில் கதைத்தது
முதுகந்தண்டுக்கும்
மூளைக்கும்
நடுவே இங்குமங்கும்
அமைதியற்று
ஓடிக் கொண்டே இருந்தது
சில சமயம்
துக்கத்தில்
வெளுத்துக் கிடந்தது
மற்ற நேரம் ரவுத்திரத்தில்
சிவந்துபாய்ந்தது
எங்கு போனாலு
அது என் பின்னால் வந்தது
மருத்துவரிடம் பேசும் போது கூட
பக்கத்து நாற்காலியில்
சுருண்டு காத்திருந்தது
குளிகைகள் தந்த
உறக்கத்திலும் பாதியில் ஊடுருவி
பேச அழைத்தது
அலறி எழுந்த
என்னை  இடுப்போடு இறுக்கி அணைத்த
துணையின்
தசைச் சுருள்களில் இருந்தும்
படம்  எடுத்து வந்தது
நான் முழுதாய்க் கொல்ல மறந்த அரவம்...

Saturday, September 11, 2010

எழுதிச் செல்லும்....

ஒரு
அஜாக்கிரதையான கணத்தில்
அது என்னைப் பீடித்தது
காலை நடையின் போது 
பின்னாலேயே வந்துவிடும்
நாய்க்குட்டி போல பின்தொடர்ந்தது
நள்ளிரவில் நாற்சந்தியில்
பிடித்துக்  கொண்ட பிசாசு போல்
என்னைத் துன்புறுத்திக் கொண்டே இருந்தது
அதன் இருப்பைப்
புறக்கணிக்க
நான் என்னென்னவோ செய்தேன்
எனக்குப்
பழககமில்லாதவற்றைக் கூட..

விடிகாலைப் பனியில் எழுந்து
மூச்சிரைக்க ஓடினேன்
குழந்தைகளுடன் விளையாடினேன்
நீள வரிசையில் நின்று
மூளை வேண்டா திரைப்படங்கள்
நிறைய பார்த்தேன்
தெருவோரம்
டீக்கடை பெஞ்சில் அமர்ந்து
அந்நியர்களோடு
வெகுநேரம் அர்த்தமற்று
பேசிக் கொண்டிருந்தேன்
வெயில் வளர்ந்து தேய்வதை
வேடிக்கை பார்த்தேன்..

ஆனாலும் அது
பின் மண்டையில்
ஒரு புழு போல
நெளிந்து கொண்டே  இருப்பதை உணர்ந்தேன்
அல்லது மன வயிற்றிலிருந்து
வெளியேறத் துடிக்கும்
நிறை சிசுவாக..
ரத்தத்தில் ஊறி  விட்ட விஷமாக
எலும்பு வரை
ஏறி விட்ட தொற்றாக
அது
என்னைத் துரத்திக் கொண்டேதான்  இருந்தது

மருத்துவரிடம் கேட்டதற்கு
எழுதித்தான் துரத்தவேண்டும்
உன் தலைக்குள் கேட்கும் குரல்களை என்றார்.
ஏனெனில் அவை யாவும்
நீ படித்த புத்தகங்களில் இருந்து
புறப்பட்டு வந்தவை..
அவை சொற்களில் பிறந்து
சொற்களை உண்டு வாழ்பவை
சொற்களுக்கே வசப்படும்  நோய் இது என்றார் ..

ஆகவே  தான்
நான் எழுதுகிறேன்..
ஒரு விடுதலையாக..
ஒரு சிகிச்சையாக ....
 வேறொன்றும் அல்ல .

Friday, September 10, 2010

மழையின் முகங்கள்

வானிலிருந்து வழியும் மது போல
இரவு முழுதும்
அடித்து
ஊற்றிக் கொண்டிருந்தது மழை.
அவசரமாய்
 உள்ளே வரவிரும்பும்
 பொறுமையற்ற சிறுவன்போல
கூரையை ஆவேசமாய்த்
தட்டிக் கொண்டே இருந்தது.

சமயங்களில்
ஒரு காமம் முற்றிய ஆண் போல
பூமிப் பெண்ணின்
அத்தனை மறைவிடங்களையும்
 தன் விரல்களால்
தேடிக் கண்டுகொண்டே இருந்தது
கணத்த கம்பளிக்குள்
புதைந்திருந்தாலும்
அறைகளின்
எல்லா மூலைகளிலும் இருந்து
ஈரமாய் இருட்டாய்
கைகளை
நீட்டிக்கொண்டே வந்தது.
தூக்கத்தின் திரை விலக்கி
கனவு வரையும் வந்து
எச்சில் செய்தது
மூளையின் இடுக்குகளில்
உறைந்து கிடந்த
பழைய மழைகளின்
முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்த்து
வெளிக் கொண்டுவந்தது

வேறெங்கும் விலகாது
தன்னை மட்டுமே
யோசிக்கக் கோரும்
சிறுபெண் போலவும்
சில சமயம் அடம் பிடித்தது..

விடிகாலை வெயில்வந்து
விரட்டிய பிறகும்
வெகுநேரம்
உள்ளுக்குள்
சடசடத்துக் கொண்டேதான்
இருந்தது
மழை

Wednesday, September 8, 2010

பெண் அடையாளம்

இவையெல்லாம்
உன் அடையாளங்கள்
எனறார்கள் அவர்கள்.
இவையெல்லாம்
என் உறுப்புகள்
அடையாளங்கள் அல்ல
என்று எத்தனை முறை
சொல்லியும்
அவர்கள் கேட்கவில்லை.
என் அத்தனை தகுதிகளையும்
அழித்துவிட்டு
நண்பர்களின் கண்களில் கூட
எப்போதும்
என் அடையாளமாய்
நடித்துக் கொண்டிருக்கும்
இந்த முலைகளையும்
யோனியையும்
மறைத்துவைக்கும்
வித்தைக்காய் ஏங்குகிறேன்.
அவ்வை போல.

Tuesday, September 7, 2010

தசை வணிகம்

எச்சிலைப் பரிமாறி முடித்ததும்
இருவரும்
உதடுகளை
சுத்தமாய்த்
துடைத்துக் கொண்டனர்.

அவன்
ஆணுறை அணிந்திருந்தானா
என அவள்
நிச்சயப் படுத்திக் கொண்டாள்
முன் திறப்பு இரவுடை பார்த்து
அவன்
அவள் பாலூட்டியா
என வினவினான் ஆசையுடன்.
அவள்
அதிக காசு ஆகும் எனறாள்.
பிறகு
அவன்
கம்மலைப் பார்த்துவிட்டு
நீ
பின் நவீனத்துவனா எனறாள்
சந்தேகமாய்.
அதற்கும் அதிக காசு ஆகும் எனறாள்
அவன்
ஆனாலில்
துணை  எழுத்து இல்லாதவன்
என்பதை
அப்புறம் சொல்லிக் கொள்ளலாம்
என நினைத்தான்,
ஏனெனில்
அவன் கையில்
அரைக் காமத்துக்கே
காசு இருந்தது
அவளுக்கோ
சீக்கு  குழந்தையை
டாக்டரிடம்
காண்பிக்க வேண்டியிருந்தது.
பேசி முடிந்ததும்
இருவரும்
மூட்டைப் பூச்சி மெத்தையில்
மூத்திர நெடி அறையில்
புணர்ந்தபோது
எந்த பூவும்
பூக்கவில்லை.
குழல் விளக்கிலிருந்து
சில
பூச்சிகள் உதிர்ந்திருந்தன
அவ்வளவே.

Sunday, September 5, 2010

மதுரை புத்தகத் திருவிழா

இந்த தடவையும் மதுரை புத்தக விழாவுக்கு செல்வதற்கு  எப்படியோ நேரத்தையும் காசையும் கண்டுபிடித்து சென்றுவந்துவிட்டேன்.ஏறக்குறைய ஆறு மணிநேர பயணம்.நான் இருக்கும் இடத்தில் இருந்து திருவனந்தபுரம் ஒரு மணி நேரம்தான்.குறைந்தது முப்பது சதவீதம் தமிழர்களே.ஆனால் இதுவரை ஒரு தமிழ்ப் புத்தகக் கண்காட்சி கூட நடந்ததாக நினைவில்லை.பாவம்.அவர்களது  கலாச்சார சக்தியெல்லாம் விஜய் படத்துக்கு கட் அவுட் வைப்பதிலேயே செலவழிந்து விடுகிறது.என்ன செய்வது.நாகர்கோயிலில் காலச்சுவடு கடையில் கொஞ்சம் கிடைக்கும்.நெல்லை பரவாயில்லை.சென்னை ரொம்பதூரம்.ஏறக்குறைய அடுத்த மாநிலம்.ஆகவே என்னைப் போன்றவர்க்கு மதுரைப் புத்தகக் கண்காட்சி ஒரு வரம்தான்.

ஆனால் இந்த தடவை விளம்பரம் சரியில்லை என்று தோன்றுகிறது.நுழைவுக் கட்டணம் கிடையாது.ஆனாலும் நான் போன சனிக் கிழமை மாலையில் கூட்டம் குறைவே.கடைகளின் எண்ணிக்கையும் போனதடவையை விட குறைவு எனறார்கள்.ஆங்கிலப் பதிப்பாளர்கள் நிறைய பேரைக் காணோம்.ஏனோ?

ஆனாலும் இந்த புத்தக விழாவில் நான் நெடுநாட்களாக நினைத்துக் கொண்டிருந்த புத்தகங்கள் சிலவற்றை வாங்க முடிந்தது.இன்னொன்று எதிர்பாராது நிகழ்ந்தது.நான் பெரும்பாலும் புத்தகம் படிப்பதோடு சரி.அதை எழுதுபவர்களைத் தேடிப் போகும் அபாயகரமான  காரியத்தை பண்ணுவதில்லை. நண்பர்கள் சிலரின் அனுபவங்கள் அத்தனை உவப்பானதாய் இல்லை.நேரில் பார்த்தால் கூட விலகி வந்துவிடுவேன்.இந்த தடவை அ மார்க்சை இசகு பிசகாய் சந்திக்க நேர்ந்தது.தமிழினியில் வாசலில் அமர்ந்திருந்தார்.நான் அவரை முதலிலேயே பார்த்துவிட்டேன்.ஆயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகங்களை அங்கு மட்டும் வாங்கியிருந்தேன்.மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அரசியல் என்ற அவரது புத்தகமும் ஒன்று,என்னுடைய பட்ஜெட் ஏறக்குறைய  காலியாகி விட்டிருந்தது.பில் போடும் போது அங்கிருந்த பணியாளர் மார்க்சின் புதிய புத்தகம் ஒன்றைக் காண்பித்தார்.கையில் காசில்லை.ஆகவே ஏற்கனவே படித்துவிட்டேன் என்று சமாளித்து பார்த்தேன்.இன்றுதான் வெளியிடுகிறோம் சார் என்றார் அவர் விடாக் கண்டனாக.நான் கொஞ்ச நேரம் அசட்டுத் தனமாக நின்று கொண்டிருந்தேன்.ஒரு எழுத்தாளனின் முன்னாலேயே அவர் புத்தகத்தை மறுப்பது என்னும் தர்மசங்கடத்துக்கு ஆளானேன்.பிறகு நானே அத் தருணத்தை உடைத்தேன்.அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.அவரது புத்தகத்தில் கையெழுத்தும் போட்டுத் தந்தார்.

இந்த கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்
தாந்தேயின் சிறுத்தை -சாரு நிவேதிதா -உயிர்மை -ரூ 230

 கொஞ்சம் புரட்டியதில் தெரிந்தது.பாதி உலக இலக்கியம் .மீதி ஜெயமோக[னைத் திட்டும் ]இலக்கியம் .பின்னது இல்லாமல் இருந்தால் நல்லாய் இருந்திருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள்.இலக்கிய பூசல்களோடு சேர்த்துதான் இலக்கியம் வருகிறது.It comes with the package.

சாந்தாமணியும் இன்ன  பிற காதல் காதல் கதைகளும்-வா.மு.கோமு-உயிர்மை-ரூ 220
 கச்சு அற்ற மன்னிக்கவும் கட்டு அற்ற பாலியல் இலக்கியம் எனறார்கள்.என்ன அற்றது என்று பார்க்கலாமே என்று வாங்கினேன் .[இந்த இடத்தில் ஒரு ஹி ஹி போடவேண்டுமோ]
உறங்கா நகரம் .சென்னையின் இரவு வாழ்க்கை -வே.நீலகண்டன்-சந்தியா-ரூ 80
 சற்று சந்தேகத்துடன்தான் இந்த புத்தகத்தை வாங்கினேன்.ஆனால்..என்னைக் கலங்கடித்து விட்டது இந்த புத்தகம்.நூலின் பல பகுதிகளில் இயல்பாக கண்ணீர் பொங்குவதை தவிர்க்க முடியவில்லை.ஊரெல்லாம்உறங்கும் நேரத்தில் நமது பகல்கள் சிக்கலின்றி  அமைவதற்காக தங்கள் இரவுகளைத்  தொலைத்து விட்டவர்களை பற்றிய நேரடி  கள ஆய்வின் அனுபவத் தொகுப்பு இது.கள ஆய்வு என்றவுடன் அலறி ஓட வேண்டாம்.குங்குமத்தில் தொடராக வந்ததாம்.மிகுந்த முதிர்ச்சியான கவித்துவத்துடன் ஒரு சொல் கூட மிகாமல் எழுதி இருக்கிறார் நீலகண்டன்.அதிரடியாக ஒரு  ஆண் பாலியல் தொழிலாளியின் பேட்டியுடன் ஆரம்பிக்கிறது புத்தகம்.கானா பாடகர்கள்,மருத்துவமனை ஊழியர்கள்,கோயம்பேடு மார்க்கட் கூலித் தொழிலாளிகள்,துப்புரவாளார்கள்,மீனவர்கள்,போஸ்டர் ஓட்டுபவர்கள் துறைமுக ஊழியர்கள்,போக்குவரத்து தொழிலாளர்கள்,காவலர்கள்,என்று பல்வேறு இரவுத் தொழிலாளர்களின்  வாழ்வியல் அனுபவங்களே இந்நூல்.குழந்தையை தனியாக வீட்டில் உறங்கப் பண்ணிவிட்டு இரவு சாலைவேலைக்கு வந்த தாய் சொல்கிறாள்.''இரண்டு வயசில ஒரு பொண்ணு இருக்கா.வழக்கமா  அஞ்சு மணிக்கு எழுந்த்திருச்சு அம்மா அம்மான்னு அழுவா .அவ முழிக்கறதுக்குள்ள வீட்டுக்கு போகணும்'.தயக்கமே இல்லாது இந்நூலை பரிந்துரை செய்வேன்.'

தென்னிந்திய கிராம தெய்வங்கள்-ஹென்றி ஒயிட் ஹெட் -சந்தியா-ரூ 100
 நாட்டார் இயலில் ரொம்ப நாள் தேடிக் கொண்டிருந்த புத்தகம் .இப்போது தமிழில்.
ஆழி சூழ் உலகு-ஜோ டி க்ரூஸ் -தமிழினி-ரூ 320
 நிறைய மதிப்புரைகள் இந்நூல் பற்றி வந்துவிட்டன.இது போல் மீனவர் வாழ்வைப் பேசும் நூல் இதுவரை வந்ததில்லை என்கிறார்கள்.எனது இன்றைய பணி சூழலில் நிறைய மீனவர்களைச் சந்திக்க நேரிடுகிறது.பொதுப் புத்தியில் அவர்களைப் பற்றி உள்ள நிறைய எதிர்மறைப் பிம்பங்கள் உள்ளன.அவர்களது வாழ்வியல் சிரமங்களை அறியாமல் அவற்றை அழிக்க இயலாது.அவ்வகையில் இந்நூல் உதவும்.இந்நூலில் திருச்சபை பற்றி வரும் சில சித்தரிப்புகளுக்காக க்ரூஸின் குடும்பம் ஊரிலிருந்து விலக்கிவைக்கப் பட்டது என்கிறார்கள்.ஒவ்வொரு நூலும் அதை எழுதுபவனை ஏதோ ஒருவகையில் பலிகொண்டே எழுகிறது என்று தோன்றுகிறது.

ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்-அ .கா.பெருமாள்-தமிழினி-ரூ 120
 சரித்திர ஆய்வுகளை புனைவின் ருசியோடு இவரால்தான் தரமுடியும் எனத் தோன்றுகிறது.ஏற்கனவே இவரது தென் குமரியின் கதை,தாணுமாலயன் ஆலய வரலாறு ஆகிய புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.நான் தற்போது குமரி மாவட்டத்தில் இருப்பதால் இந்நூலுடன் தனி அணுக்கம் வந்துவிட்டிருக்கிறது.இப்புத்தகத்தை ஆதிகேசவப் பெருமாள் கோயிலிலேயே கொண்டு சென்று வாசிப்பது என ஒரு மெலிய கனவு வைத்திருக்கிறேன்.
அறிவுநிலைகள் பத்து-இரா.குப்புசாமி-தமிழினி-ரூ 100
தமிழில் எளிமையான தத்துவ நூல்கள் குறைவு.தாடையை உடைக்கும் சைவ சித்தாந்த நூல்களை விட்டால் வேறு வழியே இல்லை.பிரேமா பிரசுரத்தில் மலர்மன்னன் எழுதி சில எளிய அறிமுகநூல்கள் மலிவு விலையில் வந்துள்ளன.ஆனால் அவை யாவும் மேற்கத்திய சிந்தனையாளர்களைப் பற்றியவை.அவ்வகையில் மிக முக்கியமான நூல்களே அவை. இந்நூல் இந்திய தத்துவத்தைப் பேசுகிறது.ஜெயமோகனின் சிபாரிசு வேறு இந்நூலுக்கு உண்டு.
முறிந்த பனை-பயணி-ராஜனி திராணகம-பயணி-ரூ 450
 தமிழ் விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான ஒரு ஆவணம் இது.எழுதியவர் ஒரு மருத்துவர்.பெண்.இப்புத்தகம் எழுதியதற்காக கொல்லப்பட்டவர் .
மக்கள் தொகைஎடுப்பின் அரசியல்-பயணி-அ.மார்க்ஸ்-ரூ 25
 இந்த புத்தகத்தை மதுரையிலிருந்து திரும்புகையில் பேருந்திலேயே படித்து முடித்து விட்டேன்.சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி மார்க்ஸ் எழுப்பும் கேள்விகள் அவரின் கோணம் விவாதத்துக்கு உரியது.அவர் இந்தியாவில் மதத்தை விட சாதியே முக்கிய இயங்கு சக்தி என்கிறார்.இந்தியாவில் முழுமையாக கிறித்துவமும் ஓரளவு இஸ்லாமும் சாதியத்திலிருந்து தப்பவில்லை என்கிறார்.ஆகவே அம்மதத்தைச் சேர்ந்தவருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்.இப்புத்தகத்தை நான் படித்து முடித்ததும் பக்கத்தில் உள்ளவர் 'சார் படிச்சுட்டு தரேன் சார்''என்றார்.நான''கதைப்புத்தகம்இல்லீங்க.''என்றேன்''இல்லீங்க.படிப்பேன்''என்று வாங்கிப் படித்தார்.படித்து முடித்ததும் கோவில் பட்டியிலிருந்து நெல்லை வரை என்னைக் கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டார்.அவர் கேட்டதின் முக்கிய சாராம்சம் ஒரு இந்து தலித்தும்  அதே சாதியைச் சேர்ந்த கிறித்துவ தலித்தும் சமூகத்தில் ஒரே தளத்தில்தான் இருக்கிறார்களா என்பதே.எனக்கு சரியாக பதில் சொல்லமுடிய வில்லை.இது சம்பந்தமாக இன்னும் நிறைய படிக்கவேண்டும் எனத் தெரிகிறது.
கொடுங்கோளூர் கண்ணகி-வி.ஆர்.சந்திரன்-தமிழில் ஜெயமோகன்-united writers-ரூ 50
 ஜெயமோகனின் கொற்றவையைப் படிக்கும் முன்பு இதைப் படிப்பது நல்லது.கண்ணகி என்ற தொன்மம் நம் ஆழ்மனதில் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பு மிகப் பெரியது.மேலும் தமிழகத்தின் பண்பாட்டு வேர்களை முழுவதுமாக புரிந்து கொள்ள கேரள வரலாற்றைப் புரிந்து கொள்வதும் அவசியம்.சங்க இலக்கியத்தின் பல கூறுகள் இன்றும் கேரளத்தில் உயிருடன் உள்ளன .துரதிஷ்டவசமாக நாம் இன்று வேறு வேறு திசைகளில் பேசி கொண்டிருக்கிறோம்.இந்நூல் நமக்கு சரியான பார்வையை அளிக்கும்.
சங்கர்லால் துப்பறியும் நாவல்கள்-பாகம் ஒன்று-தமிழ்வாணன்-மணிமேகலை-ரூ 250
 தமிழ்வாணனிடம் இருந்தே எனது வாசிப்பு பழக்கம் தொடங்கியது.நல்ல தமிழில் துப்பறியும் கதைகளை விறுவிறுப்புடன் எழுத முடியும் என நிரூபித்தவர்.ஒரு காலத்தில் இவர் புத்தகங்களுக்கு நூலகங்களில் கடும் கிராக்கி இருக்கும்.இன்று வாசிக்கையிலும் வியப்பை அளிக்கும் நடை.
ஸ்ரீரங்கம் to  சிவாஜி -ரஞ்சன்-குமுதம்-ரூ 80
 சுஜாதாவைப் பற்றி சில சுவையான நினைவுகள்.சில அரிதான புகைப்படங்கள் உண்டு.அவற்றில் ரொம்ப ஸ்டைலான ஒரு சுஜாதாவைப் பார்க்க முடிந்தது.மனைவியின் விருப்பம்.
வாங்க விரும்பி முடியாமல் போன சில நூல்கள் 
கொற்றவை -ஜெயமோகன் 
புயலிலே ஒரு தோணி-ப.சிங்காரம் 
ஆரோக்கிய நிகேதன்
பொழுதுபோக்கு பௌதீகம் [சுஜாதாவின் அறிவியல் நூல்களை விட நல்ல  புத்தகம் என்று ஜெயமோகன் மெச்சியது.ஆனால் விலை சற்று அதிகம் எனத் தோன்றிற்று.நியூ செஞ்சுரியின் புத்தகங்கள் முன்பெல்லாம் மலிவாக இருக்கும்]
கருநாகம்,பேய் பேய்தான் -தமிழ்வாணன் [ஹாலிவுட் படங்களுக்கு இணையான த்ரில்லர் கதைகள் இவை.மணிமேகலையிலேயே கிடைக்க வில்லை]
தெய்வங்கள் முளைக்கும் நிலம்-அ.கா.பெருமாள்  
எழுத்தாளர் மகரிஷியின் கதைகள் [தமிழில் அதிகம் படமாக்கப் பட்ட  கதைகள் இவருடையதாக தான் இருக்கும்.புவனா ஒரு கேள்விக்குறி,நண்டு முதலியவை குறிப்பிடத் தக்கவை]
இந்த புத்தகங்களில் சிலவற்றை விரிவாக பேச விருப்பம்.பார்க்கலாம்.
நான் வழக்கமாக புத்தக காட்சிகளுக்கு செல்கையில் பெண்கள் என்ன புத்தகங்கள் வாங்குகிறார்கள் என்று கவனிப்பேன்.அல்லது புத்தகங்கள் வாங்கும் பெண்களைக் கவனிப்பேன்.இந்த முறை நான் அவ்விதம் செய்யவில்லை என்பதை பின்பே மெலிய அதிர்ச்சியுடன் உணர்ந்தேன்.எனக்கு வயதாகி விட்டதா என்ன?

LinkWithin

Related Posts with Thumbnails