Thursday, October 28, 2010

சூலி

உச்சியில் ஆந்தைகள் தூங்கும்
இந்த மரத்தில்தான்
வெகு காலமாய் இருக்கிறேன்
உத்திரத்தில் கால் உதறித் துடித்தபோது
என்னோடு உள்ளே துடித்த
மூன்று மாத சிசுவோடு,.
பட்டுப் போன இந்த வாகை மரத்தில் ...

அன்பென மயங்கி
அகன்ற பூவில்
பெயரற்ற சூல் இட்டவன்
இந்த ஊரில்தான் இருக்கிறான்
எனை அறியேன் என்று  அவன்
ஊர்  நடுவில் மறுதலித்த கணமே இறந்தேன்
மலத் தொட்டியாய் உலகில்
தொடர விரும்பாது
இன்னொருமுறை இறந்தேன் 
ஆயினும் முற்றிலும்
பெருவெளியில் கரைந்துவிடாது
பிடித்திழுத்தது உடனிறந்த  முதிராச் சிசு
அதைச் சூல் கொண்ட
இந்த மரத்தின் உச்சியிலேயே
இரவுண்டு நிலவுண்டு
இருவரும் காத்திருந்தோம்
அவன் மண ஊர்வலம் போவதை
மனைவியுடன் சிரிப்பதை
மகனுடன் கொஞ்சுவதை
எல்லாம் கொதிப்புடன்
பார்த்துக் கொண்டிருந்தோம்
மெல்ல அவர்கள் என்னை மறந்து போனார்கள்
ஆனால் நான் மறக்கவில்லை
நானும்  என் சிசுவும் ..
விரிந்த வான் உதிர்க்கும்
விண்மீன்களை  எண்ணியபடியே
காத்திருந்தோம்
இலைகள் பழுப்பதை 
பூக்கள் இறப்பதை
திசைகள் தொலைவதை 
நதிகள் உலர்வதை
வழிகள் உறைவதை
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு..
அரை விழிப்பில் ..
அரை உயிர்ப்பில் ..

ஒரு இருள் இரவு
மெலிதாய் ஒரு உதிரவீச்சம் 
முகர்ந்து விழித்தோம்
மரத்தடியில் 
ஒரு பெண்ணை யாரோ
முகர்ந்துகொண்டிருந்தான்
ஆடையற்ற அவள் உடல் மீது
அசைந்துகொண்டிருந்த  அந்த முதுகை
நான் எங்கோ அறிந்திருக்கிறேன்
நான் 
அது அவனென உணர்ந்தேன்
அவனல்ல அவன் ரத்தம்
எனினும் அவன் ரத்தம்!
நான் நெடுநாட்கள் கழித்துப்  புன்னகைத்தேன்


முதிரும் முன்பே உதிர்ந்துவிட்ட
என் கருவைக் கையில் இடுக்கிக் கொண்டு
உலர்ந்த நாவில் உதிரத்தின் சுவையோடு 
தலைகீழாய்
நான் அவனை நோக்கி இறங்கினேன்...
என் காத்திருப்பு முடிந்துவிட்டது...

Wednesday, October 27, 2010

கூடு

நெஞ்சு வெந்துவிட்டதா
என்று அவன்
குத்திப் பார்க்கையில்
நான் அவன் அருகில்தான்
அமர்ந்திருந்தேன்..
அவன் குடிக்கிற
காட்டமான பீடி
ஒன்றைப் புகைத்துப் பார்க்க
மிக விரும்பினேன்
எனக்கு புகைக்கும் பழக்கம்
அதுவரை இல்லை எனினும்...
எரிதழல் தாங்காது
நானில்லாத என்கூடு
தானே எழுந்து அமர்வதை
ஆச்சர்யமாய்ப் பார்த்தேன்
கடைசிநேரத்திலும் பேரம் பேசிய
என் மகனைத் திட்டிக் கொண்டே
அவன் அதை அடித்து
அமர்த்திக் கொண்டிருந்தான்

மகனைச் சொல்லிக் குற்றமில்லை
கருமச் செலவுகளில் யாரும்
பங்கு கொள்ள வராதது பற்றி
அவன் ஏற்கனவே வருத்தத்தில் இருந்தான்
என்னுடைய காப்பீடுதாள்கள் எதுவும்
சகோதரிகள் கையில் சிக்கும் முன்பு
அவன் சென்றாகவேண்டும்
வாரிசுச் சான்றிதழ்கள் வங்கிக் கணக்குகள் என்று
 முக்கியமான கவலைகள் இருக்கின்றன..
அம்மா யாருடன் இருப்பாள்
என்று வேறு தீர்மானிக்க வேண்டும்
அவள் பேரில் தான் வீடு இருக்கிறது..
நான் என் மனைவியை நினைத்துக் கொண்டேன்
கடைசியாக அவளைப் பார்க்கையில்
அவள் என் கடன் அட்டையைத்
தேடிக் கொன்டிருந்தாள்
நேற்று நெஞ்சில் ஆடிய பேரன்
என்னைக் கண்டு பயப்பட ஆரம்பித்திருந்தான்
அழுதுகொண்டிருந்த மகள்கள்
மாப்பிள்ளைகள் வந்ததும்
எழுந்து தனியறைக்குள் சென்று  கிசுகிசுத்தனர்

இனி அங்கு நான்
திரும்ப முடியாது என உணர்ந்தேன்
முதல் முறையாக செய்வதற்கு
ஒன்றுமில்லாது
தெரியாது
அந்த அந்தியில்
சடசடத்து எரியும்
தங்கத் தீச்சுடர்கள் நடுவே
கருகும் என் அடையாளத்தை
வெறித்தவாறே
அவன் அருகே அமர்ந்திருந்தேன்
என் கூடு மீண்டும் ஒருமுறை எழுந்தது
அவன் மீண்டும் ஒரு முறை
கம்பியால் ஓங்கி அடித்தான்
நான் 'மெல்ல''என்றது
அவனுக்குக் கேட்கவில்லை...

Friday, October 22, 2010

கவிதையின் வழிகள்...

சில கவிதைகளை எழுதியவுடன் 
ஒரு மௌனம் சூழ்ந்து விடுகிறது
ரயிலில் நட்பை ஏற்றிவிட்டு
தனித்து நடக்கும் மனிதன் போல
காதலியின் திருமணத்துக்கு
வாழ்த்துச் சொல்லி
கீழ் இறங்குபவன் போல
மகளை மணம் கொடுத்துக்
கையசைத்து வழியனுப்புகையில்
சுரக்கும் விழிநீர் மறைக்கும் தகப்பன் போல் 
ஒரு சோகம் வந்து விடுகிறது


சில கவிதைகளை
மீள வாசிக்கையில்
எப்படி இவற்றை எழுதினோம்
எனத் திகைப்பு தோன்றுகிறது
வானிலிருந்து என் வழி
இறங்கிவந்த கவிதையோ
என்று கூட மயக்குகிறது..

சிலவற்றை
இன்னும் சில காலம்
கர்ப்பத்திலேயே 
உறை கலையாமல்
வைத்திருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது

சில கவிதைகள்
சூல் கொள்ளாமலே
இருந்திருக்கலாம்

ஆனாலும்
என்னைப் பூர்த்தி செய்யும்
கவிதை ஒன்று
என்னுள்தான் எங்கோ
உறங்கிக் கிடக்கிறது
என் இருப்பின் சாரமெல்லாம்
இறுகிச் சொட்டும்
ஒரு கவிதை...
இங்குதான் எங்கோ...

அதைத் கண்டுகொள்வதே
இங்கு இலக்கு .
அதன் பிறகு
என்னிடம் சொல்வதற்கு
ஒன்றுமிருக்காது
அதற்கான தேவையும்...

Tuesday, October 19, 2010

பறவைக்கொரு சிறகு..

வர்ணங்களற்ற
ஒற்றைச் சொல்லுடன்தான்
நம் நட்பும் ஆரம்பித்தது
நெடுநாட்கள் நகராது
அச்சொல்லிலேயே நின்றிருந்தது
ஆனால்
எந்தத் தருணத்தில்
அச்சொல் விதையானது ..?
என்று
பழுப்பு இலைகள் தளிர்த்தன...
கருப்பு வெளுப்பு பார்வைகள்
வர்ணங்கள் பூசிக் கொண்டன...
நம் உரையாடல்களின் நடுவே
இடைவெளிகள் விழுந்தன?
அந்த இடைவெளிகளில்
நிறைய பெருமூச்சுகள் கலந்தன?

மெல்ல நமக்கிடையே
நம் உடல்கள் முளைத்து நின்றன..
சவரம் செய்யாத
என் முகத்தை
ஒருநாள்
நீ பார்க்க நேர்ந்ததற்காய்
நான் மிகுந்த பதற்றமடைந்தேன்
 மீண்டும்
கவிதை எழுதவும்
புகைக்கவும் ஆரம்பித்தேன்
உன் உடைகளின்
நிறச் சேர்க்கை பற்றி
நீ மிகுந்த கவனம்
கொள்ள ஆரம்பித்தாய்
தினமும் 
புதிது புதிதாய்
வேறு வேறு
வாசனைகள் தரும் பூ போல
தோன்றினாய்
அனிச்சையான தொடுகைகளுக்கு கூட
என் கவனத்தை உறுதிப் படுத்திக் கொண்டு
கன்னம் சிவந்து விரைந்து விலகினாய்


கொஞ்சம் கொஞ்சமாய்
நம்மிடையே
ஒரு பனித்   திரைபோல
மழைச் சுவர் போல
புகை மூட்டம்போல
காமம் வளர்வது
எனக்கே  ஆச்சர்யமாக  இருக்கிறது
இருத்தலின் சுழலில்
உதிர்ந்த சிறகை
மறுபடி ஒட்டிக் கொண்டு
பறக்க நினைக்கும்
பறவை போலதான்
இன்னும் இருக்கிறதா இந்த  மனது ..?

Monday, October 18, 2010

அப்பாலிருந்து ஒரு அழைப்பு

கடைசியாய்
அவள் எழுதிய கடிதத்தில்
தற்கொலை பற்றி
எதுவும் குறிப்பிடவில்லை
அவள் உயிர் உறைந்த
கிணற்றின்
சுவரில் அமர்ந்து
ஏன் ஏன்  என்று
திரும்பத் திரும்பக்
கேட்டுக் கொண்டிருந்தேன்
பாசி நீரில்
தெள்ளுப் பூச்சிகள்
துள்ளும் ஓசை தவிர
எல்லா சத்தங்களும்
களைத்து நின்றிருந்தன
மறுநாளும்
அவளுக்காய்
நான் எழுதிவைத்திருந்த
கவிதைகளோடு போனேன்
ஆனால்
தவளைகள் கூட 
அவற்றைக் கேட்க மறுத்தன
மெல்ல அவள் முகம்
என் நினைவிலிருந்து தொலைவதை
நான் பதற்றத்துடன் உணர்ந்தேன்
என் கனவுகளுக்கு
முகம் கொடுத்த முகம் ....
என் முதல் முத்தம்
பூத்த முகம்..
கண் பிரிந்து உருக
கசந்து அழுதேன்

அழுகை நின்றதும்
அவளை உணர்ந்தேன்
முல்லை மொக்கு
உடையும் வாசனையாய்
பூமியின் ஆழத்திலிருந்து
வெடித்த விசும்பலாய்
அலை மோதிப் புரண்ட
கொலுசு மணியாய்
மீன்கள் மோதி உடைத்த
கண்ணாடி வளையல்களாய்
அவள் மெல்ல உயர்ந்து  வந்தாள்
அசையும் நீர்விளிம்பில்
மிதக்கும் கூந்தல்
அசைக்கும்  அவள் முகம்
தெளிந்து வருவதைப் பார்த்தேன்
அவள் புன்னகைத்து
''அழாதே
இங்கு எல்லாமே
அமைதியாகவும்
குளிர்ச்சியாகவும் இருக்கிறது''எனறாள்
பிறகு கண் சிமிட்டி
'' நீயும் வா''எனறாள் ஆதூரமாய்..
என் தயக்கம் கண்டு  
மீண்டுமொருமுறை கைநீட்டி 
''வா''எனறாள்

அனேகமாக
இந்த வரியை
நீங்கள் படிக்கும்போது
நான் போயிருக்கக் கூடும்..

Sunday, October 17, 2010

பின்தொடரும் நிழலின் குரல்...

எல்லா கண்களும்
உறங்கிவிட்டன
என்ற நம்பிக்கையோடுதான்
அந்த அறமும் மீறப்பட்டது
ஆனாலும் அறியாது
விழித்திருந்தது
வானத்தில் ஒரு கண்...
மீறிய
மறு கணத்திலிருந்து
ஒரு நிழல் போல்
அவனைத் தொடர்ந்தது
அவன் கோயில் போனால்
அவனுக்கு முந்தி
அது கடவுளிடம்
தன் வருகையைப்
பதிவு செய்திருந்தது
குடிக்கப் போனால்
அவனது போதையை
அது ஏற்கனவே குடித்திருந்தது
அவனுக்கான மலர்களை
அவை பூக்கும் முன்பே
அது முகர்ந்து பார்த்திருந்தது

சிலசமயம்
அவனது கை உறைகளில்
அதன் விரல்கள் கிடந்தன
அவன் போக விரும்பாத
சில இடங்களுக்கு
அவன் காலணிகளுடன்
அது 
போய் வந்திருந்தது
பலநேரங்களில்
அவனது கடிதங்களில்
அதன் வார்த்தைகள்
சிலவும் கலந்திருந்தன
நெருக்கடியான தருணங்களில்
அவன் உதடுகள்
அவனை மீறி
அதன் சொற்களைப்
பேசுவது
அதிகரித்துக் கொண்டே இருந்தது
அவனை அது
மெல்ல
மரணம் நோக்கி
இழுத்துச் செல்வதை
அவன் உணர்ந்தான்
இறுதி நாள்வரை
தன்னைத் துரத்திய
அதன் முகத்தைக் காண
அவன்
முயன்றுகொண்டே இருந்தான்
சிதையில் கூடாய் எரிகையில் தான்
அதன் முகம்
தன் முகமே
என்று கண்டுகொண்டான்
ஆனால் அதற்குள்
காலம் கடந்துவிட்டிருந்தது ..

Friday, October 15, 2010

மயங்கும் காலம்

கடைசிச் சில்லுவரை
என்னை உடைத்து
உன் கிண்ணத்தில்
ஊற்றிக் கொள் ...
கடைசிச்  சொட்டுவரை
என் உயிரை
உனக்குள் நிரப்பிக் கொள் .
உன் செல்களின்
அத்தனை முடுக்குகளிலும்
என் நினைவுகளின் 
போதை ஏற்றித் திரி ..
அமுதென்றும் விஷம் என்றும்
அனைவரிடமும் பிதற்று
தெளிந்ததும்
சொர்க்கத்தில்
நீ இருந்த நாட்கள் பற்றி
பின்வரும் நபர்களுக்காய்
ஒரு சிறிய குறிப்பேனும் எழுதி வை...

Wednesday, October 13, 2010

உடல் தத்துவம் 11

எச்சரிக்கை!வயது முதிர்ந்தவர்க்கு மட்டும்!
டாக்டர் பூஜை அறையில் மணி அடித்து பூஜை பண்ணுவதும் மெலிதான குரலில் பாடுவதும் கேட்டது.
'கிளியே கிளைஞர் மனத்து கிளரும் ஒளியே'
அவர் சந்தனம் மணக்க வெளியே வந்து ''அபிராமி அந்தாதி''என்றார்.நான் தெரியும் என்றேன்.அது எப்படி தெரியும் என்று அவர் கேட்கவில்லை.கேட்டுவிடுவாரோ என்று நான் பயந்தேன்.''அது இப்போது இல்லை.இப்போது  இல்லை''என்று என் பின் மண்டையில் ஒரு குரல் பதறியது.இப்போதைக்கு மேகி.மேகி மட்டுமே என்று அலறியது.அவ்வளவுதான் இப்போதைக்கு என்னால் தாங்க  முடியும் என்று எச்சரித்தது.
''உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அல்லவா''என்றார் டாக்டர்.''ஆனால் தெரியுமா..உங்கள் கதை முழுக்க கடவுள் ஒரு மறைமுகப் பாத்திரம்  போல வந்து கொண்டே இருக்கிறார்''
நான் பேசாதிருந்தேன்.இரவெல்லாம் தூங்காத  கண்கள் எரிந்தன.
''அது அப்படித்தான் ஆகும்.நாம் எப்போதும் நமது எதிர்நிலைகளை எப்போதும் நம் கூடவே வைத்திருக்கிறோம்.கடவுளை சாத்தான் சோதித்துப் பார்ப்பது போல கடவுளும் சாத்தானின் நினைவாகவே எப்போதும் இருக்கிறார்..ராமன் பிறக்கும் போதே ராவணனும் பிறந்துவிடுகிறான்.உண்மையில் ஒரு ராவணன் இல்லாமல் ராமனோ ராமன் இல்லாமல் ராவணனோ முழுமை அடைவதில்லை.இருவரும் சந்தித்துக் கொள்வது தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது.நடுவில் சீதை என்ற விஷயம் ஒரு சாக்குதான்.''என்றபடி சேரில் சாய்ந்து கொண்டார் .அவர் கண்கள் சிந்தனையில் தேய்ந்து மங்கியது.''சிலப்பதிகாரம் கூட அப்படித்தான்.உண்மையில் அது கண்ணகிக்கும் மாதவிக்கும் நிகழும் போராட்டமே.கோவலன்,பாண்டியன் போன்றவர்கள் எல்லாம் அங்கு நிழல் பாத்திரங்களே.''

நான் அவர் பேசுவது மேற்கத்திய அல்லது செமிடிக் சித்தாந்தம் மட்டுமே என்று சொல்ல மிக விரும்பினேன்.எல்லாவற்றையும் இரட்டை நிலைகளாக காண்பது.இந்திய சிந்தனையில் அதற்கு மேல் சாத்தானையும் கடவுளையும் ஒரே நபராக காணும் தரிசனம் உள்ளது என்பது அவருக்குத் தெரிந்திருக்கலாம்.தெரியாவிட்டால் என் கதையின் முடிவில் அவரே தெரிந்து  கொள்ளலாம்.ஆனால் அன்று நான் அதைஎல்ல்லாம் அவருடன் விவாதிக்கும் நிலையில் இல்லை.எனக்கு நன்றாய்த் தெரியும்.அவராலோ அவரது பிராய்டிய உளவியலாலோ என்னை குணப்படுத்த முடியாது எனக்கு  அப்போதைக்கு சற்று தீவிரம் கூடிய தூக்க மருந்து தேவைப் பட்டது.அது அவரின் சீட்டு இல்லாமல் தரமாட்டார்கள்

மேகி அத்தையின் கணவர் பற்றி எங்களுக்கு கடைசிவரை ஒன்றுமே சொல்லப் படவில்லை.கேட்டாலும் அவள் சரியாக பதில் சொல்லுவதில்லை.அவர் உயிரோடுதான் எங்கோ இருக்கிறார் என்பது யூகமாகத்  தெரிந்தது.அவர் வெளிநாட்டுல இருக்கார் என்றான் விநாயகம்.அங்கிருந்துதான் அவள் தரும் சாக்லேட்டுகள் முதல் அவள் உடுத்தும் சேலைகள் வரை வருவதாக அவன் கண்டுபிடித்தான்.'இல்லே.அவங்க இரண்டு பேருக்கும் சண்டை''எனறாள் சுதா.


அத்தைக்கு ரூபி  என்று பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் ஒருத்தி இருந்தாள்..பள்ளி விடுமுறை தினங்களில் அத்தை ஊருக்குப்  போய் அவளைக் கூட்டி வருவாள்.அத்துணை சிகப்பான ஒரு பெண்ணை நான் அதுவரை நாங்கள் பார்த்ததில்லை.ஒருவேளை அவள் அப்பா சாயலாக இருக்கலாம்.வட்டக் கன்னத்தில் எறும்பு கடித்தது போல எழும்பி  இருக்கும் பருக்கள் அவளை மேலும் சிகப்பாய்க் காட்டும்.அவளுக்கு தன் அம்ம்மாவை சுத்தமாய்ப் பிடிக்காது என்று முதலிலேயே தெரிந்துவிட்டது.அவளுக்கு எங்களையும் பிடிக்கவில்லை.வந்த இரண்டாம்  நாளே என்னைஅழைத்து ''எங்க அம்மாகிட்டே ஜாக்கிரதையா இரு.என்ன.அவ ஒரு மோகினி.''எனறாள்.
நான் 'மோகினின்னா என்ன?''
''மோகினின்னா என்னன்னே தெரியாதா'.உன்கூட பேசறதே வேஸ்ட்''என்று போய்விட்டாள்
நான் சில காலம் மோகினி என்றால் என்னவென்று எல்லோரையும் கேட்டுக் கொண்டு திரிந்தேன்.கடைசியில் வினாயகத்திடம் கேட்க அவன்தான்  மேலும் சில பேரிடம் விசாரித்து ஒரு திடுக்கிடும் தகவலுடன் வந்தான்.மோகினி என்பது ஒரு பெண் பேய் என்பதே அது.அதுவும் நடுரத்திரிகளில் தனியாக வரும் ஆண்களைப் பிடித்துக் கொன்று உதிரம் குடித்து தின்று அவர்கள் நகங்கள் முடி இவற்றை மட்டும் போட்டுவிட்டுப் போய்விடும் ஒரு பேய்.'
' நான் அப்படியே உறைந்து போய்விட்டேன்.என்றாவது ஒருநாள் காலையில் என் படுக்கையில் வெறும் நகங்கள் மட்டுமே நானாய்க் கிடக்கும் ஒரு காட்சி எனக்குள் வந்தது.அன்று நான் அத்தை வீட்டுக்குப் போக மறுத்துவிட்டேன்.ஏன் என்று அவள் திரும்பத் திரும்பக் கேட்டும் நான் சொல்லவில்லை.ஆனால் மறுநாள் விநாயகம் சொல்லிவிட்டான் போலிருக்கிறது.ரூபியை அவள் ரொம்பக் கடிந்து கொண்டதாகவும் ஆனால் பதிலுக்கு அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்ததாகவும் விநாயகம் வந்து சொன்னான்.அன்று மாலையே  ரூபி என்னை வழி மறித்து ''சார்.அன்னைக்கு சொன்னதெல்லாம் ரொம்பத் தப்பு.அதனாலே தயவு செஞ்சு இன்னைக்கு எங்க அம்மாவோட படுக்கறதுக்கு வந்துடுங்க.இல்லேன்னா அவ உத்திரத்துல தொங்கிடுவா போலிருக்கே''என்று சிரித்தாள்.


எனக்கு அவளைப் பிடிக்கவே இல்லை.புரியவும் இல்லை.உடலில் மட்டுமல்ல குணத்திலும் அவள் அத்தைக்கு எதிராகவே இருந்தாள்.அவளிடமும் அவள் அப்பாவைப் பற்றிக் கேட்டால் சரியான பதில் சொல்வதே இல்லை.ஒவ்வொரு நாளும் ஒரு கதை சொல்வாள்.அவள் அப்பா பைலட் ஆக  இருப்பதாக ஒருநாள் சொன்னாள்.ஒரு நாள் மாலுமி.இன்னொரு நாள் சிவாஜி கணேசன்தான் தனது அப்பா என்று கூட சொன்னாள்.


அவளுக்கு என்னையும் என் குழுவையும் பிடிக்கவில்லை தவிர சுஜாவையும் சுதாவையும் ரொம்பப் பிடித்திருந்தது.அவர்களுக்கும் அத்தையைப் பிடிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.அவர்கள் எப்போதும் ஒருமித்து அலைந்தார்கள்.எங்களுக்குத் தெரியாத விசயங்களைக் கிசுகிசுவென்று பேசிச் சிரித்தார்கள்.


அவளை எனக்குப் பிடிக்காமால் போவதற்கு இன்னொரு சம்பவமும் காரணமாக அமைந்தது.பத்தாம் வகுப்பு படித்தாலும் அவள் தாவணி போடுவதில்லை,சற்று அளவுக்கு மீறிய வளர்ச்சி வேறு அவள்.தினமும் தாவணி போடும்படி அத்தை வற்புறுத்திக் கொண்டே இருந்தாள்.ஆனால் அவள் அத்தனை வற்புறுத்தாமல் இருந்தால் அவள் அதைச் செய்திருக்கக் கூடும்.எப்போதும் சட்டையும் ஸ்கர்ட் மட்டுமே அணிந்து திரிந்தாள்.அது எப்போதுமே காற்றில் பறக்கத் தயாராக இருந்தது.ஒரு நாள் மதியம் விநாயகமும் அஞ்சுவும் வந்து என்னை அவசரமாக அழைத்தார்கள்.க்வார்ட்டர்சின் பின்னால் ஒரு பெரிய ஆழ்துளைக் கிணறு இருந்தது.அங்கு ரூபியும் அவள் கூட்டமும் என்னவோ செய்கிறது என்று சொல்லப் பட்டது.நாங்கள் மூவரும் அவசரமாய் ரகசியமாய் அங்கு போய் மறைந்திருந்து கவனித்தோம்.பம்புசெட்டின் மறுபுறம் நின்று என்னவென்று பார்த்தோம்..


அங்கு பெரிய விவாதமே நடந்து கொண்டிருந்தது.உன்னால் முடியாது என்று சுதா எதுவோ சொல்ல ரூபி என்ன பெட் என்ன பெட் என்று கேட்டுக் கொன்டிருந்தாள்.முடிவில் அவள் அப்படி செய்தால் சுதா மொட்டை அடித்துக் கொள்வேன் என்று சொல்ல ரூபி அதைச் செய்யத் தயார் ஆனாள்.அவள் என்ன செய்யப் போகிறாள் என்று நாங்கள் எங்களுக்குள்ளேயே யூகித்து சண்டை போட்டுக் கொண்டோம்.ஆனாள் அவள் செய்தது நாங்கள் யாரும் எதிர் பார்க்காததாக இருந்தது.


அந்தக் கிணறு குறைந்தது அறுபதடி ஆழம் உள்ள கிணறு.அதைச் சுற்றிக் கட்டப் பட்டிருந்த வளையச் சுவரில் ரூபி ஏறி நின்றாள்.அவளது ஆரஞ்சு ஸ்கர்ட் ஒரு சிறகு போல் காற்றில் எழுந்து பறந்து எழுந்து பறந்து அடங்கியது.சுஜா மெலிய குரலில் ''டீ.வேண்டாமடி''என சுதா ''சும்மா இரு.அவ சும்மா படம் காட்றா''என்றாள்.ரூபி ஒரு சிரிப்புடன் தன் வளையல்களைக் கழற்றி சுஜாவின் கையில் கொடுத்தாள்.பிறகு காதணிகள்.
''கிணத்தில குதிக்கப் போறா''என்றான் விநாயகம் கிசுகிசுப்பாய்.அஞ்சு லேசாய் நடுங்க ஆரம்பித்தாள்.ஆனாள் அந்த விஷயம் எங்கள் புத்தியில் தைப்பதற்குள் அவள் அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தாள்.தன் சட்டையைக் கழற்றி விட்டாள்!பின்னர் அதன் கீழ் மெலிதாய் இருந்த வெள்ளை பாடிசையும் கழற்ற மாலை மஞ்சள் வெயிலில் அவளது மார்புக் குமிழ்கள் இரண்டும் தங்கக் கலசங்கள் போல மினுங்கின.இப்போது சுஜா சுதா இருவருமே பைத்தியம் பிடித்தது போல சிரிக்க ஆரம்பிக்க ரூபி ஒரு அலட்சியச் சிரிப்புடன் தனது ஸ்கர்ட்டையும் கழற்றிவிட்டு நீல பேண்டிசுடன் நின்றாள்.இப்போது சுஜாவுக்கு கூட கொஞ்சம் பயம் வந்துவிட ''போதுமடி''என்று கெஞ்ச  ஆரம்பிக்க சுதா மட்டுமே மவுனமாய் இருந்தாள்.''நீ மொட்டை அடிச்சுப்பியா''என்று ரூபி கேட்டதற்கு 'அதெப்படி.நாம பேசினது என்ன''என்று முனக ''அவ்வளவுதானே''என்று ரூபி அவளது மிச்ச ஆடையும் கழற்றி விட்டு முழுதாய் நின்றாள்.எங்களுக்கு மூச்சே நின்றுவிட்டது.விநாயகம் உலைத்  துருத்தி போல் மூச்சு விட ஆரம்பித்தான்.அவளது சிவந்த தொடைகள் நடுவே ஒரு கறுப்புப் பூ போல் அவள் பெண்மையைப் பார்த்தேன்.அவள் மறுபடி திரும்பி சுதாவிடம் ஏதோ கேட்க அவள் தலையசைக்க அடுத்த காரியத்தை செய்தாள் ரூபி.


அங்கிருந்து அப்படியே அதுவரை யாரும் இறங்கியிராத அந்த ஆழக் கிணற்றுக்குள் ஒரு டால்பின் பாய்வது போல் பாய்ந்தாள் .

Monday, October 11, 2010

மலர்களுடன் பேசுபவள்

அவளைச்
சந்திக்கச் சென்றபோது
மலர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள்
மனிதர்கள்
அவள் பேசுவதை
புரிந்து கொள்வதில்லை எனறாள்..
பவளமல்லிகள்
பகலில்கூட
அவள் தொட்டால்
பூக்கத் தயாராய் இருந்தன
அவள் பேசும்
ஒவ்வொரு சொல்லுக்கும்
பாரிஜாதம்
ஒரு பூ
கொடுத்துக்கொண்டே  இருந்தது
அவள்
சொல்லாத
ஒவ்வொரு சொல்லுக்கும் ஏங்கி
மரமல்லி
உதிர்ந்து கொண்டே இருந்தது
அவளது ஒவ்வொரு
விழிநீர்த் துளியும்
நிலம் தொட்டதும்
நீலப் பூவாய் முளைத்தன
செம்பருத்திகளின் உதிரமே
அவள் அதரங்களில்
ஓடிக் கொண்டிருந்தது
அவள்
பச்சைவிரல் தொட்டதும்
மண்ணெல்லாம் மலராய் துளிர்ப்பதை 
நேரில் பார்த்தேன்
நான் என் பெயர் சொன்னதும்
விழிமலர்ந்து  கரம் தந்தாள்
விரல் தீண்டியதும்
மெய் பூத்து
நானே
ஒரு மலர்மரமாய் மாறி
அவளருகே நின்றேன்

Sunday, October 10, 2010

உடல் தத்துவம் 10

எச்சரிக்கை! முதிர்ந்த வாசகருக்கு மட்டும்!

நேற்று அதி காலையிலேயே எழுந்து டாக்டர் வீட்டுக்குப் போய்விட்டேன்.அவர் சுத்தமாக மயிர் அற்ற வெறும் மார்புடன் பூஜைக்கு நந்தியாவட்டை பறித்துக் கொண்டிருந்தார்.மழையில் போர்டிகோ முழுக்க நனைந்திருக்க வாசலில் இருந்த பிரம்புச் சேரில் காத்திருந்தேன்.என்னைப் பார்த்ததும் புருவம் உயர்த்தி சற்று ஆச்சயமாய்ப் பார்த்தார்''என்னாச்சு''என்றார்.''ராத்திரி முழுக்க தூக்கமே இல்லை''என்றேன்.''மறுபடி உள்ளே குரல்கள்''
அவர் ''மாத்திரை சாப்பிட்டீங்களா''
''சாப்பிட்டேன்.கேட்கலை.நடுராத்திரில  முடியாம இன்னொன்னு சாப்பிட்டும் முடியலை''
''அப்படில்லாம் நீங்களே டோசெஜ் கூட்டக் கூடாது ''என்றார் சற்று கோபமாய்.
'ரொம்ப முடியலை.அதான்.ராத்திரி முழுக்க அவ குரல் என்கிட்டே பேசிட்டே இருந்தது''
''யார்''
'மேகி.மேகி அத்தை''
''ஒ.''என்றார்..''இருங்க.பூஜை முடிச்சுட்டு வந்துறேன்''என்று போனார்.
வீட்டு வேலைக்காரி வெளிவந்து கிழிந்த ரவிக்கை வழி கொஞ்சூண்டு மார்பு தெரிய டீ கொடுத்துப் போக அவள் மீதிமார்பு எப்படி இருக்கும் என்று யோசித்தேன்.ச்சே...
டீ குடித்ததும் சட்டென்று தளர்ந்தேன்.ஏனோ கண்ணீர் வந்தது.டாக்டரிடம் வந்தாகிவிட்டது.இனி அவர் பார்த்துக் கொள்வார்.
ஆனாலும் என்ன ஒரு கொடுமையான இரவு!இரவு முழுதும் மேகியின் நினைவுகள் என்னைக் குத்திக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தன.அவள் எனது இடது காதில் 'ஆத்துமமே.என் முழு உள்ளமே'என்று பாடிக் கொண்டே இருந்தாள்.அவளது முலைவாசனையைக் கூட  உணர்ந்தேன்.டாக்டரிடம் சொல்லவேண்டும்.முதலில் மேகியிடம் இருந்து என்னிடம் விடுவிக்கச் சொல்லி.ஹோமியோவில் 'நோய் திரும்புதல்'என்று ஒன்று உண்டு என லீலா  தோமஸ் சொல்வாள்.அதாவது இன்று உள்ள ஒரு நோயைக் குணப்படுத்த முனைகையில் அது மெல்ல மெல்ல அது கடந்து வந்த அறிகுறிகளை திரும்பக் கொண்டுவரும்.நோய் மெல்லத் திசைமாறி அதன் பழைய படிக் கட்டுகளில் இறங்கிச் செல்லும்.கடைசியில் அதன் முதல் வரை போய் மெல்ல இல்லாமல் ஆகும்.உண்மைதான் எனத் தோன்றுகிறது..மேகியின் முடிச்சை அவிழ்க்காமல் லீலாவை புரிந்து கொள்வது சாத்தியமே இல்லை.

மேகி அத்தை க்வார்டர்சில் ஒரு புதிய அலையையே கொண்டுவந்தாள்.அவள் உடைகள் கவனிக்கப்பட்டன.அங்கிருந்த பெண்கள் உடுத்தும் சேலைகளை அவள் உடுத்தவில்லை.அவை அவள் சருமம் போல் மென்மையாய் அவள் உடம்புக்கே பிறந்தவை போல் அவள் உடலிலிருந்தே முளைத்தவை போல் இருந்தன.அவை எல்லாம் அன்றைய சினிமாக்களில் வருபவை என்று ஒருநாள் அம்மா சொன்னாள்.அம்மா சினிமா பார்ப்பாள் என்பதே அன்றுதான் எனக்குத் தெரிந்தது.அவள் அட்டைக் கருப்போ ஆபாசச் சிவப்போ இல்லை.சற்றே இளகிய சாக்லேட் நிறம்.அவளது ஜாக்கெட்டுகள் கச்சிதமாய்த் தைக்கப்பட்டவை.தைப்பது அவளேதான்.ஒரு சிங்கர் தையல்மெசின் ஒன்று ஊரில் இருப்பதாய்ச் சொன்னாள்.க்வார்ட்டர்சில் இருந்த நிறைய பெண்கள் அவள் ஊருக்குப் போகும்போதெல்லாம் அவளிடம் சொல்லிவைத்து ஜாக்கட் தைத்துக் கொண்டனர்.அவள் தைத்துக் கொடுத்த ஜாக்கட்டை அணிந்தபிறகே அஞ்சுவின் அக்காவுக்கு மார்புகள் உண்டென்ற விசயமே ஊருக்குத் தெரிந்தது.அவள் போடும் கொண்டைகளும் பிரசித்தமானவை.அதற்கு அவள் மாட்டும் வலைகள்.கொண்டை ஒசிகள்.பட்டாம்பூச்சிகள் துடிக்கும் ப்ரூச்ச்சுகள்.எப்போதும் கையில் ஒரு வண்ணக் குடை வைத்திருப்பாள்.ஆனால் அதை அவள் விரித்து பார்த்ததே இல்லை.பெண்களுக்கென்று தயாரிக்கப் பட்ட நளினமான செருப்புகளை அவள்தான் அந்த ஊருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.ஆனால் அது மற்றவர்களுக்குப் பொருந்தவில்லை.விநாயகத்தின் அம்மா அதை முயற்சித்துப் பார்த்து தண்ணீர் தூக்கையில் தடேர் என்று விழுந்து ஒருமாதம் ஆஸ்பத்திரியில் இருந்தாள்.பெண்கள் ஒரேசமயம் அவள் மீது விருப்பும் பொறாமையும் கொண்டார்கள்.ஆனால் அவளிடம் நேரடியாக எதையும் காண்பிக்கமாட்டார்கள்.

அவளிடம் எதைச் செய்தாலும் ஒரு நளினம் இருந்தது.எதையும் நிதானமாகவே செய்வாள்.வீட்டுக்குள் நுழையும் போது செருப்புகளைக் கழற்றிப் போடும் செய்கையைக் கூட மிகுந்த நுண் உணர்வுடன் கவனம் கொடுத்துச் செய்வாள்.அவள் வீடு எப்போதும் சுத்தமாக மட்டுமல்ல.அழகாகவும் இருந்தது.அவளிடம் எப்போதுமே ஒரு குளிர்ச்சி இருந்தது.அவள் கைகள் எப்போதுமே சிலீர் என்றுதான் இருக்கும்.அவள் சிரிக்கும்போது உங்களால் பதிலுக்கு சிரிக்காமல் இருக்கவே முடியாது.அது ஒரு குளிர் அலை போல் பரவி உங்களை நோக்கி வருவதை உணரமுடியும்.அவள் கண்களுக்கு மை இடுவது இல்லை.ஆனால் எப்போதுமே அப்போது தூங்கி எழுந்தாற்போல் ஒரு சாய்வு,மயக்கம் இருக்கும்.அவளிடம் பிரத்தியேகமான ஒரு வாசனை இருந்தது.அவள் பாவித்த சிலோன் லக்ஸ் ,கோகுல் சந்தனப் பவுடர் தாண்டி அவளுக்கேயான தனிவாசனை.கொஞ்சம் குழந்தை வாசனை போலவும் கொஞ்சம் வைக்கோல் வாசனை போலவும் இருக்கும்.அவள் நினைவு எழும் போதெல்லாம் என்னைச் சுற்றி இந்த வாசனை எழுகிறது.குறிப்பாக பாத்ரூமில் அவள் வாசனை திணற அடிக்கும் வலிவுடன் இருக்கும்.அவள் பாத்ரூம் போய் வந்த உடனே  நானும் போய் அந்த வாசனையில் கிறங்கி நிற்பேன்.ஒருவேளை அது அவளின் சிறுநீர் வாசனையாகக் கூட இருக்கலாம்.கூந்தல் மட்டுமல்ல சில பெண்களின் சிறுநீர் கூட வாசனையாக இருக்கும்.[அவர்கள் நாபிக் கமலத்திலிருந்து வருகிறது.அல்லவா.என்றார் டாக்டர்]சில பெண்கள் நேர் எதிர்.[காதுகளில் எம்.வி .வெங்கட்ராம் இப்படி ஒரு பெண் பற்றி சொல்ல்கிறார்]


''சிறு வயதில் உங்கள் புலன்கள் எல்லாம் சுத்தமாக வலிவாக இருக்கின்றன.பதின்மத்துகுப் பிறகு அவை மெல்ல மெல்ல தளர்கின்றன''என்றார் டாக்டர் இதற்குப் பதிலாக.''அதாவது இப்போது உங்கள் மூக்குக்கு வயசாகிவிட்டது.ஆனால் நினைவுக்கு அத்தனை வயசாக வில்லை.அது இன்னமும் எலாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறது.உங்கள் பிரச்சினையே இதுதான்.உங்கள் மனம் மறத்தல் என்ற செய்கையை சரியாக கற்றுக் கொள்ளவில்லை.ஒருவன் மனநிலை பிறழாமல் இருக்க இந்த செய்கை முக்கியம்.உடலுக்கு உறக்கம் போல்.நாங்கள் கொடுக்கும் மாத்திரைகள் எல்லாம் உங்களை தூங்கவும் மறக்க்கவுமே வைக்கின்றன.''

ஆரம்பத்திலிருந்தே மேகி அத்தைக்கு துணையாக நான் அவள் வீட்டில் இரவு படுத்துக் கொள்வேன்.முதலில் சில நாட்கள் சுதாதான் படுத்துக் கொன்டிருந்தாள்.ஆனால் திடீர் என்று மாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.நடு இரவுகளில் அத்தை அழுவதாகவும் அது தன்னைப் பயமுறுத்துவதாகவும் சொன்னதை யாரும் நம்பவில்லை.''உனக்கு மேகி அத்தை மேல் பொறாமை''என்றதற்கு கோபமடைந்து ''போடா.பன்னி''எனறாள்.எதனாலோ சுஜா சுதா இரண்டு பேருக்குமே அவளைப் பிடிக்கவில்லை.''அவளும் அவ கொண்டையும்''என்று முகத்தை சுளித்தார்கள்.ஆனால் எங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.விநாயகம் கூட அவனது ஆரம்ப வெறுப்பை விட்டுவிட்டு அவளிடம் பழகுவது பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

அத்தைக்கு ஏசுவின்  மேல் மிகப் பெரிய காதல் இருந்தது.நான் ஏசுவின் தோழி என்று ஒருநாள் சொன்னாள்.முதல்நாள் அவள் வீட்டில் படுத்துக் கொள்ள நான் ஐந்து தலை பாம்புக்காய்ப் பயந்த போது ஏசுவின் படத்தைக் காட்டி ''எல்லா பாம்பும் இவரைக் கண்டா பயப்படும்'' எனறாள்.பாலைவனத்தில் வானோக்கி ஏசு பிரார்த்தனை செய்யும் படம்.எனக்கு நம்பிக்கை வரவில்லை.இவரா என்பது போல் பார்த்தேன்.ரொம்ப சோகமாகவும் சோகையாயும் இருந்தார்.அவள் புரிந்து கொண்டு 'பலம் என்பது உடம்பினால் வருவதல்ல.ஒழுக்கத்தினால்  வருவது''எனறாள்.எனக்கு இப்போதும் நம்பிக்கை இல்லை.கிளாசில் பாண்டியன் என்று ஒரு தேவமார்ப் பையன் எனக்கு எதிரியாக இருந்தான்.ஆள் திண்டு கணக்காய் இருப்பான்.அவனுக்கு ஒழுக்கம் என்ற வார்த்தையே தெரியாது.ஆனால் ஒவ்வொருதடவையும் சண்டையில் அவனே ஜெயிப்பான்.
 ஒவ்வொரு வெள்ளிக்  கிழமையும் அவள் வீட்டில் ஒரு பிரார்த்தனைக் கூட்டம் நடக்கும்.எல்லா  சிறுவர்களும் அங்கு வருவார்கள்.விவிலியத்திலிருந்து ஏதாவது ஒரு கதை சொல்வாள்.பிறகு பிரார்த்தனைக்கு அப்புறம் எல்லோருக்கும் கேக் தருவாள்.அந்த கேக் பொருட்டுதான் பெரும்பாலும் போவோம்.விநாயகம் கூட வந்தான்.ஆனால் கேக்கிற்கு முன்னால்அவள்  சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் கேக்கைத் தாமதப் படுத்தும் முயற்சியாகவே அவன் கண்டான்.'முதல்லியே கேக்கைக் கொடுத்தா நல்லா இருக்குமே''என்று அவன் சொன்ன யோசனையை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை.அவனை விட்டிருந்தால் பரமபிதாவுக்கான பிரார்த்தனையில் சில மாற்றங்கள் செய்திருப்பான்.'அன்றன்றைய அப்பத்தை அன்றே  தாரும்'என்பதில் 'உடனே' என்று ஒரு வார்த்தை சேர்க்க அவன் மிக விரும்பினான்.

அவளிடம் சித்திரத்தில் எழுதிய விவிலியம் ஒன்று இருந்தது.அதை எனக்குப் பரிசாய்த் தந்தாள்.பெரும்பாலும் அதிலிருந்து கதைகளை நான்தான் அவர்களுக்கு உரக்க வாசித்துக் காண்பிப்பேன்.அதைப்படிக்கப் படிக்க எனக்கு அதில் சந்தேகங்கள் முளைத்துக் கொண்டே இருந்தன.இந்த சந்தேகங்கள் அவளுக்கு முதலில் சந்தோசம் கொடுத்தாலும் பிறகு பெருத்த சங்கடத்தையே அளித்தன.''ஆண்டவரை பரிசோதிக்கக் கூடாது பையா''என்பாள்.

விவிலியத்தின் முதலிலிருந்தே சந்தேகம் எனக்கு ஆரம்பித்துவிட்டது.சர்ப்பம் வந்தபிறகுதான் ஆதமும் ஏவாளும் தாங்கள் ஆடை இல்லாமல் இருப்பதை உணர்கிறார்கள்.தவிர சர்ப்பம் அப்படி என்ன தப்பாய்  சொல்லிவிட்டது.நீங்களும் கடவுள் மாதிரி ஆகலாம் என்றுதானே.அதற்குப் போய் இவ்வளவு பெரிய தண்டனையா..அப்படியானால் கடவுள் நாமெல்லாம் ட்ரெஸ் இல்லாமல் திரிவதைத்தான் விரும்புகிறாரா..

அடுத்த சந்தேகம் வேசியை ''உங்களில் தப்பு செயாதவர்கள் மட்டும் கல்லெறியுங்கள் என்று சொன்ன கர்த்தர் கல் எறிந்திருக்கலாமே.அப்படியானால்..

இதைவிட அடுத்ததாய் நான் கேட்டக் கேள்விதான் அவளை ரொம்பப் பயமுறுத்திவிட்டது.திடீரென்று படுக்கையில் இருந்து எழுந்து ''அத்தே..விபச்சாரம்னா என்ன''என்றேன்.

அவள் உண்மையிலேயே கலங்கி கண்ணெல்லாம் நீர்த்து  விட்டது.என் தலை மேல் கைவைத்து கண்மூடி ''இந்த சிறுவனின் மனதை சாத்தானுக்கு கொடுத்துவிடாதீரும் கர்த்தரே''என்று உருகிப் பிரார்த்தனை செய்தாள்.

மெல்ல மெல்ல எனக்கு கர்த்தரைவிட சாத்தானின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.அவன் கர்த்தரைப் போல் இல்லாமால் ஒரு சுவராஸ்யமான கேரக்டர்.கர்த்தர் ஒரு தோத்தான்குளி என்பது போல் ஒரு பிம்பமே உருவாயிற்று..ஆனாலும் சாத்தானை நம்பமுடியாது.அவன் வழி கெடுப்பவன் எனறாள் அத்தை.ஆசை காட்டி உன்னை குழியில் தள்ளுபவன் என்றாள்.சாத்தான் மலை மீதிருந்து ஏசுவுக்கே ராஜ்யங்களைத் தருவேன் என்று ஆசை காட்டியவன் எனறாள்.

எனக்கு இப்போது பயம் வந்துவிட்டது.''என் மனதில் சாத்தான் புகுந்துவிட்டானா அத்தே''என்று கண்ணீருடன் கேட்டேன்.அவள் என்னை அனைத்துக் கொண்டாள்.''பயப்படாதே.இது தேவனின் வீடு.ஒரு போதும் சாத்தான் இங்கு வரமுடியாது''என்றாள்.

ஆனால் அவ்விதம்  நடக்கவில்லை.சாத்தான் அந்த வீட்டுக்குள் வந்தான்.ஆனால் என் மூலமாக அல்ல.உண்மையில் சாத்தானின் குறி நானே அல்ல என்பது பிறகுதான் தெரிந்தது.

Saturday, October 9, 2010

கேப்சூல் கவிதைகள் 4

1.ஆற்றைவிட்டு
அகன்றறியா
மீன் சொன்னது
'ஆறு ஒரே நாற்றம்!'

2.வீடு கட்ட
இறக்கிய மரச்சட்டங்களில்
ஒன்று
உயிர்பெற்று பேசியது
'நீ
உன் நண்பர்களுடன்
என் நிழலில்
விளையாட வருவாய் அல்லவா?'

3.வெயிலின்
ஒற்றைக் கண்ணை
ஆயிரம் கால் கொண்டு
மறைத்தது மழை

4.நான்
தொலைபேசி வருவதற்குள்
மேஜையை விட்டு
இறங்கிப் போயிருந்தது
கவிதை.

5.எல்லாம்
கறுப்பாய்க் காணும்
குருட்டுப்பெண்
நல்லநிறமாய் இருந்தாள்.

Friday, October 8, 2010

காமத்தின் வழி அது ...

தூக்கத்தின் நடுவில்
புகுந்தது ஒரு விரல்
பதறி எழுந்து பார்க்க
அவனேதான் 
'உன்
போர்வைக்குள்
எனக்கு ஒரு இடம் கொடு'
என்றான்
'அங்கே ரொம்ப குளிர்கிறது '
பிடிக்கவில்லை.வந்துவிட்டேன்
மேலும் அங்கு
நீ வேறு இல்லையே'என்றான்

'இன்னும் கொஞ்சம் சூடு ..
கொஞ்சம் உஷ்ணம்
இருந்தாலே போதும்
எல்லாம் சரி ஆகிவிடும் 
தருவாயா' என்றான் இறைஞ்சலாய்
கண் உருகி
கன்னத்தில் வழிய
'என் உயிரே
என் உதிரம் முழுதும் உனக்கே
உறிஞ்சிக் கொள்'
என்று இதழ் கொடுத்தாள்
கிண்ணத்தில் விழுந்த
முதல் துளி
பெருகிப் பெருகி
நுரைத்தது
அலை வீசிப் படர்ந்தது
ஆசை அமிலம் சுரந்து
ஆடைகளை எரித்தது 
கொடிமரமெங்கும்
அமுதம் ஏறி
கேணியில் பாய்ந்தது
தசைச் சுருள்கள் எல்லாம்
விடுபட்டு இளகியது
கதறலுடன் கண்விழிக்க
எல்லாம் மறைந்தது
ஈர உள்துணிகள் தவிர
எதுவும் மாறி இருக்கவில்லை
அவன் இன்னும்
இறந்தே இருந்தான்
அவள் தனியேதான் இருந்தாள் ....

Thursday, October 7, 2010

அவநம்பிக்கையாளன்

நான் நம்பிக்கையாளன்
என்றே
சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஆனால்
சொல்லும்போதே
அதில்
அவநம்பிக்கை கொள்கிறேன்
கரையான்கள்
அரித்துத் தின்ற
என் நேற்றுகளில்
நம்பிக்கை கொள்ள
எதுவும் மிச்சமிருக்கவில்லை
ஆனாலும்
விழுந்தவன் எழவே வேண்டும்
என்ற விதியை
மீற முடியாது
மீண்டும் எழுகிறேன்
மீண்டும் விழுகிறேன்
ஒரு
அபத்த நாடகத்தின்
காட்சி போல
திரும்பத் திரும்ப
இதுவே நிகழ்கிறது
தப்பிக்க செய்யும்
ஒவ்வொரு முயற்சிக்கும்
தண்டனை உயர்கிறது
இருத்தலின் இசைத்தட்டில்
என்றோ முறிந்த கீறலில்
உணர்வின் முள்
முட்டி முட்டி திரும்புகிறது
ஸ்வரத்தின் முதலுக்கே

சட்டென்று
என் நிரலில்
என்ன பிழை என்று
கண்டு திருத்தும்
ஒருவர் வருவாரென்று
ஏங்குகிறேன்
ஆனால் அதுவும்
என் நிரலில் உள்ளதே 
என்று அறியாது மயங்குகிறேன்..

இறுகிக் கிடக்கும்
சிறையின் கம்பிகளூடே
மிதந்து வரும்
எப்போதோ
யாரோ அனுப்பும்
பட்டாம் பூச்சிக்காய்க்
காத்திருப்பதேயாய்
ஆயிற்று வாழ்க்கை....

Wednesday, October 6, 2010

மழை நாளில் தொலைந்தவள்

காலை
எழும்போதே
காதில்
மழை வெடிக்கும்
சத்தத்துடன்தான் விழித்தேன்.
விடிந்தபிறகும்
தீராது
வீழ்ந்து கொண்டிருந்தது மழை.
முதல் குவளை
தேநீருடன்
ஒருதுளி
மழைத் தேனும் கலந்தது.
போர்வைக் கண்ணிகள்
அத்தனையும்
உடைத்துவிட்டு
உள் புகுந்து
எலும்புகளின் தாழ்கள்
அத்தனையும்
குளிரால் திறந்தது

வானிலிருந்து வீழும்
மது போல
எல்லார் கோப்பைகளையும்
நிரப்பிக் கொண்டிருந்த
மழைக்கு
தமிழில்
இன்னுமொரு
நல்ல பெயர் தேடி
இன்னுமொரு முறை
உறக்க உலகில் நுழைந்தேன்
வெறும் கையுடன்
மீண்டு வந்த போதும்
வீதியை
அலம்பிக் கொண்டிருந்தது மழை
ஒரு வேளை
அருகில்
நீ இருந்திருந்தால்
சொல்லி இருக்கக் கூடும்
தலையணையை கரைக்கும்
கண்ணீர்த் துளிகளுடன்
நடுங்கும் விரல்களுடன்
அலை பேசியில்
உன்னைத் தேடினேன் 

நகங்கள் கூட
அதன் உறைகளில்
கனக்கும்
கோழிக் குஞ்சுகள் கூட
கூடு சூடு தேடி
ஒடுங்கும்
இந்நாளில்
எதற்கும் பதில்தராது
எங்கோ
போய்த் தொலைந்திருந்தாய்  நீ...

Monday, October 4, 2010

விஷ விருட்சம்

சட்டென்று
ஓர் இரவில்
வீட்டின் மையத்தில்
முளைத்துவிட்ட
மரம் போல
மனதில் நுழைந்துவிட்ட
இந்த பிரியத்தை
அச்சத்துடன் பார்க்கிறேன்.
அது
என் அஸ்திவாரங்களை எல்லாம்
அசைப்பதை
செய்வதறியாது வெறிக்கிறேன்
வெட்ட வெட்ட
அதன் கிளைகள்
என் மனமெங்கும்
பரவுவதை உணர்கிறேன்

எல்லா எண்ணங்களும்
ஏதோ ஒரு கணத்தில்
அதன்  திசையே
திரும்புவது கண்டு
திடுக்கிடுகிறேன்

எங்கேயும்
பரவிய நிழலாய்
அது எனக்காய்
காத்து
நிற்பதை உணர்கிறேன்

அதனுடன்
பேசாக் காலமெல்லாம்
 பெருவெளியில் 
சுமையாகிக்
கனப்பதைக் காண்கிறேன்.

தன்னைத் தின்று
தான் வாழும்
வினோத மிருகமாய்
 என் நினைவே
எனக்கு நஞ்சாய்
இறந்து வாழ்கிறேன்

கைக்கிளையின்
நீலம் பாரித்த விரல்களுடன்
மீண்டுவந்து
இக்கவிதையை எழுதுகிறேன்.

Sunday, October 3, 2010

கண்ணி 2 18+

வயது வந்தவர்க்கு மட்டும்!

 ''என்ன பொண்ணும்மா நீ''என்றான் சண்முகம் அவளிடம் திரும்பி.''அவ்வளவு தூரம் தனியாவா  வந்தே?''
''ஆமாண்ணே''
''இப்படி வரலாமா.ஒரு வயசுப்பொண்ணு நடுராத்திரில பசார்ல தனியா இருக்கலாமா.இன்னும் கொஞ்ச நேரத்தில இந்த ஆள் நடமாட்டம் கூட இருக்காது.பிறவு தெரு நாய்ங்க எலாம் கூட்டமா சேந்து திரியும்.யாராச்சும் மாட்டுனா கடிச்சே கொன்னுடும்.தெரியுமா''என்றான்.அந்தப் பெண்ணின் விழிகள் அச்சத்தில் விரிவது பார்த்து''போன மாசம் கூட ஒரு பிச்சைக்காரிய குதறிடுச்சுங்க.என்னடே''என்றான்.
''இப்படி ஒத்தையா நிக்கறீயே.செரி.எதுவும் சாப்பிட்டியா''
''..........''
அவள் பேசவில்லை.கண்கள் லேசாக துளிர்த்தன.தலையெல்லாம் புழுதியாய் இருந்தது.ரொம்ப அலைந்திருப்பாள் போல...''
''செரி.அழுவாத.தோ மாடிரூம் எங்களுதுதான்.இன்னிக்கு இங்கே தங்கிக்க.காலையிலே பஸ் ஏத்தி விடுறோம்.என்னா''
அவள் தயங்க''எல்லாம் கூடப் பிறந்தாப்பிலதான்.மேலே போய் இரு என்ன.நாங்க போய் ஏதும் உனக்கு திங்க வாங்கிட்டு வாரோம்.ஏலே சாவியக் கொடு''
அவன் என்னிடம் இருந்து சாவியை ஏறக் குறையப் பிடுங்கிக் கொடுங்க அவள் பிருஷ்டம் அசைய மேலே போன பின்பு ''ஏலே சவத்து மூதி.என்னலே பண்றே.ராத்திரி ஒரு பொட்டைய மாடிக்கு ஏத்தறான் பையன்னு தெரிஞ்சா வகுந்துடுவான் எங்கப்பன்.''
''தெரிஞ்சாத்தானடே.எல்லாம் நான் பாத்துக்கறேன்''
அவன் சைக்கிளைத் தள்ளி ''ஏறு.அய்யர்கடைல எதுவும் கிடைக்கா பார்ப்போம்.''என நான் பலவீனமாய் ''தப்பில்லையாடே''என்றேன்.
'போலே.கிழங்கா.என்ன ஒரு சான்ஸ்.காலம் முழுக்க பிட்டுப் படம் பாத்து மூலையில உக்காந்து கையடிச்சுட்டே காலத்தைக் கழிக்கப் போறியா.ஆண்டவனாப் பாத்து பசிச்ச வேளைல கடிச்சுக்கோன்னு அனுப்பி வச்சிருக்கான்.ஒண்னு ராமனா இருக்கணும்.இல்லா ராவணனா இருக்கணும்.நடுவாந்திரமா இருந்தா சந்தோசமே கிடையாது பாத்துக்க.அதுக்கு இன்னைக்கே செத்துப் போய்டலாம்.ஒண்னு சண்டைல சாவனும்.இல்லைன்னா ..........ல சாவனும்டே''

வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருந்த அய்யரை எழுப்பி ''அய்யரே.நாலு இட்லி கொடு''என்றோம்.
அய்யர் கட்கத்தைச் சொரிந்து கொண்டே ''சட்னி இல்லை.பரவாயில்லையா''என்றதற்கு ''எளவு.இட்டலியா இருந்தாப் போதும்''என்று சண்முகம் ஏன் சிரிக்கிறான் என அவருக்குப் புரியவில்லை.பக்கத்திலேயே டீக்கடையில் ''அண்ணே.ஒரு கூஜாவில பால் கொடுண்ணே.கூஜா காலைல தாரேன்.''
''எதுக்குடே பால்.''
'இருடே''என்று குரு மெடிகல் கதவைத் தட்டி''அண்ணே.தூக்கமே வர மாட்டிங்குது.ஒரு மாத்திர கொடு''
அவன் கண் கூசி''அதெல்லாம் சீட்டில்லாம தரப்படாது''என்று''யாரு.பேப்பர்க்காரர் மவனா''
நான் சுருங்கிப் பின்வாங்க ''ஒரு மாத்திரைன்னே.அதுலயா சாவப் போறேன்''என்றான் சண்முகம்.

விசிலடித்த படியே திரும்ப வந்த போது  பெண் கதவு திறந்து உள்ளறையில் சுருண்டு படுத்திருக்க எங்களைக் கண்டதும் விலுக்கென்று எழுந்தது .
''தூங்கிட்டியா.இந்தா இதச் சாப்பிடு முதல்ல''என்றான் சண்முகம்.''தண்ணீ அங்க இருக்கு பாரு''
அவள் முதலில் தயங்கிப் பின்னால் பார்சல் பிரித்து சாப்பிடத் தொடங்க அப்போதுதான் அவளைச் சரியாக கவனித்தேன்.சற்று குட்டையாய் இருந்தாலும் வடிவாய் இருந்தாள்.காபி நிறம்.ஓவல் முகம்.பெரிய கண்கள்.பெரிய கீழ் உதடு.பச்சைத் தாவணி உடன் பூப்போட்ட பாவாடை.இருபது வயதுக்கு மேல் இருக்காது.பச்சை ஜாக்கட்டின் அடியில் வெள்ளை பாடி வரி வடிவாய்த் தெரிய ஒரு கருக மணிமாலை அதன் மேல் கிடந்தது.
''வெளிய இருக்கோம் என்னா''
வெளியே வந்ததும் சண்முகம் பாலில் மாத்திரையைக் கரைதான்.''போதுமாடே.''என்றேன்.''முழுக்கத் தூங்கிட்டா இன்ன பண்றது.அதுக்கு பிணத்தைக் கட்டிக்கலாம்.ரொம்ப சத்தம் போடக் கூடாதில்லே அதுக்கு''
அவன் அந்தப் பாலை உள்ளே போய் கொடுத்து விட்டு வந்தான்.''இந்த விடி விளக்கு மட்டும் இருக்கட்டும் என்ன''

கதவை அரை இன்ச் மட்டும் திறந்து வைத்துக் கொண்டு அவள் படுத்துக் கொள்வதைப் பார்த்தோம்.நாள் முழுஅ அலைந்ததில் அலுப்பும் உணவின் கனமும்மாத்திரையும் சேர்ந்து  அவள் அரை மயக்கத்துக்குப் போகும்போது ''இப்ப வாடா''என்று உள்ளே போனான்.

எங்களைப் பார்த்ததும் அவள் எழுந்து சுவரோரம் அண்டி அமர்ந்தாள்.
''உக்காருடா''என்று சண்முகம் அவள் அருகில் சப்பணமிட்டு அமர்ந்தான்.''அப்புறம்?''என்றான்.
''உன் பேர் என்ன''
''கண்ணம்மா அண்ணே''
'நல்ல பேருதான்.கண்ணும் பெரிசாத்தான் இருக்கு.அது சரி 'ஊர்ல இருந்து எதுக்கு ஓடி வந்தே''
''..........''
''சொல்லு.லவ் மேட்டரா''
''கூட வந்த ஆள் எங்க''
அவள் விசும்பி அழ ஆரம்பிக்க ''சரி.சரி.விடு.இப்ப அழுது என்ன...அது எங்களுக்கு எதுக்கு..போகட்டும்.....தா இவனுக்கு ஒரு ஆசை.இப்பதான் சொல்றான்''என்றான் மெதுவாய்.
அவள் திரும்பி என்னைப் பார்க்க நான் பரிதாபமாய் சண்முகத்தைப் பார்த்தேன்.
''ஒண்ணுமில்லே.சினிமாலாம் பாப்பியா''
அவள் இல்லைஎன்று தலை அசைக்க ''நாங்க பார்ப்போம்.நிறைய.அதில புதுசா ஒரு பொண்ணு ஆக்ட் கொடுக்குது.பேர் என்னடா...ஆங் ..யா அவன்னா இவனுக்கு உசிரு.லெட்டர் கூட எழுதியிருக்கான்.அதில பாரு அவ அச்சு அசலா உன்ன மாறியே இருப்பா .அதுனால இவன் என்ன ஆசப் படறான்னா இன்னைக்கு  ஒரே ஒரு தடவை உன்ன முழுசாப் பாக்கனும்னு. என்ன சொல்றே''
பெண் மலங்க மலங்க விழிக்க ''பார்க்க்கறதுன்னா ...துணிவேண்டாம்.எத்தனை அழகு நீ .இத்தனை துணி போட்டு மறச்சிருக்கே. அட அழுவாத.ஒன்னும் தப்பில்ல.மண் திங்கற உடம்புதானே..பார்த்துட்டு விட்டிருவோம்.விரல் முனை மேல படாது.''
அவள் கண்கள் மெல்ல நிரம்புவதைப் பார்த்தேன். ''கூடப் பொறந்தாப்புலன்னு சொன்னியே அண்ணே''
''அதெல்லாம் சொல்றதுதான்.இந்நேரம் வேற யார்கிட்டயாவது மாட்டிக் கிட்டா என்னா ஆயிருக்கும் தெரியுமா.கெடுத்துக் கொன்னு வாய்க்கா முள்ளுல வீசிட்டுப் போயிருப்பாங்க.நாங்களாப் போக பேசிட்டிருக்கோம்.அட.நேரமாச்சு.காலைல ஊருக்குப் போ வேணாம்?எங்களுக்கும் வேலை இருக்கு இல்லே.சீக்கிரம் கழட்டு.இல்ல நான் வேணா ஹெல்ப் செய்யவா''
அவள் பதறி பின் நகர்ந்து ''பார்த்திட்டு விட்டுருவீங்களா''
''சத்தியம்''
அவள் அப்படியே நின்று கொண்டு ''அண்ணே.நீயாவது சொல்லு அண்ணே ''என
சண்முகம் சட்டென்று சீறினான்.''ஏய்..டிராமா போடறியா..இதே இடத்தில கொன்னுப் புதைச்சிருவோம்.கழட்டுடி''
அவள்  பீதி அடைந்து மெதுவாய்த் தாவணியை மட்டும் உருவிப் பக்கத்தில் வைத்தாள்.
''ம்ம்.அடுத்து'..'
ஜாக்கட்டையும் அவள் கழற்ற நான் இற்றுவிடுவது போல் உணர்ந்தேன்.அரை நடுவே வெள்ளை உள்பாவாடையும் பாடிசுமாய் நின்றிருந்தாள்.ஆனால் அதற்கு மேல் மறுத்தாள்.''அண்ணே.போதுண்ணே''எனறாள் கண்ணீர் மல்க.
''அட உன்ன மதிச்சுப் பேசினது தப்பு.பார்த்தியா''சண்முகம் ஆவேசமாய் அவளை நெருங்கி அவள் பாடிசின் எலாஸ்டிக் கொக்கியை விடுவிக்க அவள் அதைக் காப்பாற்ற முனைகையில் அவள் பாவாடை நாடாவைப் பிடித்து சட்டென்று இழுத்தான். அது வட்டமாய் அவள் கால்களைச் சுற்றி விழுந்தது.நான் திக்கித்து அப்படியே நின்றுவிட்டேன்.மாடத் தெரு பெண் போல இல்லை இவள்.பிசைந்து வைத்த கருப்பட்டி போல் கட்டி மார்புகள்.கிஸ்மிஸ் பழம் போன்று திரண்டு மேல் எழுந்த முலைகள்.கீறல் தொப்புள்.கருத்த தேனடை போன்ற அல்குல்!
சண்முகம் நெருங்கி அவள் மேல் கைவைக்க அவள் பலவீனமாய் அலறினாள்.''தொட மாட்டேன்னு சொன்னியே''
''அதெல்லாம் சொல்றதுதான்.லே இவ காலைப் பிடிலே''
''சண்முகம்.வேண்டாம்.''என்றேன் நான் வராத குரலில்.அவன் கேட்கும் நிலையில் இல்லை.நான் வெளியே ஓடி வந்து விட்டேன்.என் வேட்டி நனைந்திருப்பதை உணர்ந்தேன்.நெஞ்சு வெடி போல் அதிர ஒரு சிகரட் பற்ற வைத்துக் கொள்ள முயன்று தோற்றேன்.உள்ளே அவள் விசும்புவதும் சண்முகம் அவளை அதட்டுவதும் மெலிதாய்க் கேட்டுக் கொண்டிருக்க ஒரே நேரத்தில் உள்ளே போகவேண்டும் என்றும் அந்த இடத்தை விட்டே ஓடிவிடவேண்டும் என்றும் விரும்பினேன்.காலம் அப்படியே உறைந்து நின்றிருக்க சுவர்ப்பல்லி ஒன்று சினை வயிற்றுடன் இரைக்குக் காத்திருப்பதையே அபத்தமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்.சற்று நேரத்தில் எல்லா ஒலிகளும் நின்றன. சண்முகம் கலைந்த தலையுடன் வெளியே வந்தான்.

''நீ போகலே.?''என்றான்.

''இல்லே''என்றேன் தயக்கமாய்.''என்னால முடியாது''
''போலே.சவத்து மூதி.போ''என்று உள்ளே கண்காட்டினான்.''அடங்கிடுச்சு.இனிமே சத்தம் போடாது.''

நான் மௌனமாய் இருக்க கிட்ட வந்து ''புத்தம் புதிசுடா.!போ.கட்டினாக் கூட இந்த சுகம் கிடைக்கவே கிடைக்காது ''என்றான்.இன்னும் நெருங்கி வந்து .''ஒரே ரத்தம் பார்த்துக்க''என்றான்.

Friday, October 1, 2010

சில பூக்கள் சில கவிதைகள் ....

1.அசப்பில்
உன் நிறத்த்திலேயே
புதிய மலர் ஒன்று
வனத்தில்
நேற்று பார்த்தேன்.
காப்புரிமை மீறல்
என்று சொன்னேன்.
அதற்கு புரியவில்லை.

2.கவிதை செய்யும்
இயந்திரம் ஒன்று
கண்காட்சியில் நேற்று
கண்டேன்.
யார் என்ன பொருள்
கொடுத்தாலும்
அழகான கவிதை
செய்து கொடுத்துக் கொண்டிருந்தது.
வியப்புடன் ஒன்று
வாங்கி
வீட்டுக்கு கொண்டுவந்தேன்.
முதல் முதலாய்
உன் மேல் ஒரு கவிதை
கேட்டேன்.
என்னவோ தெரியவில்லை
'பூ'
என்ற
ஒற்றை வார்த்தையை மட்டுமே
திரும்பத் திரும்ப
அடித்துக் கொண்டிருக்கிறது ...

3.யாரும் காணாத
மலர்கள் ஆயிரம்
உண்டு உலகில்
உன்னையும் என்னையும் தவிர
யாரும்
காணக் கூடாத
மலர்களும்
சில உண்டு
உன்னில்...

LinkWithin

Related Posts with Thumbnails