Wednesday, November 17, 2010

அவன் இவன் ஆண்டவன்

அவனைப் படைத்தவன்
அவன் எனறார்கள் அவர்கள்
அவன் பெரியவன் எனறார்கள் மேலும்
அவன் எலும்பிலிருந்து
உருவி
அவளைப் படைத்தவனும்
அவன்தான் எனறார்கள்
அவன் என்றால்
அவன் எனில்
அவனுக்கு ஆண்குறி உண்டா
என்றதற்கு பின்வாங்கி
அவர்கள் அனுப்பிய இடத்தில்
அது எனறார்கள்.
அவர்கெளெல்லாம் பிரம்மவாதிகள் 
என அறிந்தேன் 


அது என்றால் எது
அது என்பது அக்றிணை அல்லவா
என்றால் குழப்பமாய்
அது எதுவும் இல்லை என்கிற
சூநியவாதிகளிடம் அனுப்பிவைத்தார்கள்
அவர்களிடம் எதுவும் இல்லாதது
எதையும் படைத்திருக்க முடியததல்லவா
என்றால் ஏதும் பேசாது மௌனித்திருந்தார்கள்
திருப்தியற்று வெளியேவந்து நடந்தேன்
வெளியெங்கும்
ஆண்குறிகள் கொட்டிக் கொடந்தன
பெண்குறிகள் அவற்றைத் தொழுது கிடந்தன
நெற்றியில் மூன்றாம் விழி அணிந்த
தாந்த்ரீகன் ஒருவன்
தெருமுனையில் என்னை அணுகி
கேரளத்திலிருந்து
கன்னித்திரை கிழியாதது
வேண்டுமா என விசாரித்தான் 
விடாத தத்துவ விசாரணையில் 
என் தலை மறைகளெல்லாம் 
விட்டுப் போயிருந்தன 
சரி என்று 
சக்கரப்  படி ஏறி போனேன் 
அவள் கன்னி எல்லாம் இல்லை 
எத்தனையோ ஏர்கள் உழுத தரை 
சோடசம் எல்லாம் முடிந்து
அவளது
யோனிச் சகதியில்
வீரியம் பீறிடும் வேளையில்
எனக்கு சட்டென்று
ஒரு சட்டோரி வெட்டியது
ஆ அத்வைதம் என்று
அவள் இடுப்பை இறுக்கிக் கொண்டு அலறினேன்
அவள்
ஐயோ
நீ உறை போடவில்லையா
என்று கத்தினாள்

1 comment:

  1. fantastic!
    கடைசி பத்து வரிகள் அருமை இந்த முறை. விழுந்து சிரிக்க வைத்த வேதாந்தம்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails