Thursday, October 7, 2010

அவநம்பிக்கையாளன்

நான் நம்பிக்கையாளன்
என்றே
சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஆனால்
சொல்லும்போதே
அதில்
அவநம்பிக்கை கொள்கிறேன்
கரையான்கள்
அரித்துத் தின்ற
என் நேற்றுகளில்
நம்பிக்கை கொள்ள
எதுவும் மிச்சமிருக்கவில்லை
ஆனாலும்
விழுந்தவன் எழவே வேண்டும்
என்ற விதியை
மீற முடியாது
மீண்டும் எழுகிறேன்
மீண்டும் விழுகிறேன்
ஒரு
அபத்த நாடகத்தின்
காட்சி போல
திரும்பத் திரும்ப
இதுவே நிகழ்கிறது
தப்பிக்க செய்யும்
ஒவ்வொரு முயற்சிக்கும்
தண்டனை உயர்கிறது
இருத்தலின் இசைத்தட்டில்
என்றோ முறிந்த கீறலில்
உணர்வின் முள்
முட்டி முட்டி திரும்புகிறது
ஸ்வரத்தின் முதலுக்கே

சட்டென்று
என் நிரலில்
என்ன பிழை என்று
கண்டு திருத்தும்
ஒருவர் வருவாரென்று
ஏங்குகிறேன்
ஆனால் அதுவும்
என் நிரலில் உள்ளதே 
என்று அறியாது மயங்குகிறேன்..

இறுகிக் கிடக்கும்
சிறையின் கம்பிகளூடே
மிதந்து வரும்
எப்போதோ
யாரோ அனுப்பும்
பட்டாம் பூச்சிக்காய்க்
காத்திருப்பதேயாய்
ஆயிற்று வாழ்க்கை....

2 comments:

  1. என் மனவோட்டத்தை பிரதிபலிப்பது போலவே ....
    நானும் எழுதினால் இப்படி வருமோ?தெரில

    ReplyDelete
  2. யாரோ அனுப்பும் பட்டாம்ப்பூச்சி... நல்ல ஆளுமை.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails