1.ஆற்றைவிட்டு
அகன்றறியா
மீன் சொன்னது
'ஆறு ஒரே நாற்றம்!'
2.வீடு கட்ட
இறக்கிய மரச்சட்டங்களில்
ஒன்று
உயிர்பெற்று பேசியது
'நீ
உன் நண்பர்களுடன்
என் நிழலில்
விளையாட வருவாய் அல்லவா?'
3.வெயிலின்
ஒற்றைக் கண்ணை
ஆயிரம் கால் கொண்டு
மறைத்தது மழை
4.நான்
தொலைபேசி வருவதற்குள்
மேஜையை விட்டு
இறங்கிப் போயிருந்தது
கவிதை.
5.எல்லாம்
கறுப்பாய்க் காணும்
குருட்டுப்பெண்
நல்லநிறமாய் இருந்தாள்.
வாசித்தேன் ரசித்தேன்
ReplyDeletesuper.
ReplyDeleteரொம்ப அருமை ...
ReplyDeleteநீ நண்பர்களுடன் விளையாட வருவாய் ..
சம்மட்டி அடி
ஆயிரம் கால் மழை
இனிக்கும் கற்பனை
மேசை விட்டகன்ற கவிதை - நயம்.
ReplyDelete