Wednesday, October 13, 2010

உடல் தத்துவம் 11

எச்சரிக்கை!வயது முதிர்ந்தவர்க்கு மட்டும்!
டாக்டர் பூஜை அறையில் மணி அடித்து பூஜை பண்ணுவதும் மெலிதான குரலில் பாடுவதும் கேட்டது.
'கிளியே கிளைஞர் மனத்து கிளரும் ஒளியே'
அவர் சந்தனம் மணக்க வெளியே வந்து ''அபிராமி அந்தாதி''என்றார்.நான் தெரியும் என்றேன்.அது எப்படி தெரியும் என்று அவர் கேட்கவில்லை.கேட்டுவிடுவாரோ என்று நான் பயந்தேன்.''அது இப்போது இல்லை.இப்போது  இல்லை''என்று என் பின் மண்டையில் ஒரு குரல் பதறியது.இப்போதைக்கு மேகி.மேகி மட்டுமே என்று அலறியது.அவ்வளவுதான் இப்போதைக்கு என்னால் தாங்க  முடியும் என்று எச்சரித்தது.
''உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அல்லவா''என்றார் டாக்டர்.''ஆனால் தெரியுமா..உங்கள் கதை முழுக்க கடவுள் ஒரு மறைமுகப் பாத்திரம்  போல வந்து கொண்டே இருக்கிறார்''
நான் பேசாதிருந்தேன்.இரவெல்லாம் தூங்காத  கண்கள் எரிந்தன.
''அது அப்படித்தான் ஆகும்.நாம் எப்போதும் நமது எதிர்நிலைகளை எப்போதும் நம் கூடவே வைத்திருக்கிறோம்.கடவுளை சாத்தான் சோதித்துப் பார்ப்பது போல கடவுளும் சாத்தானின் நினைவாகவே எப்போதும் இருக்கிறார்..ராமன் பிறக்கும் போதே ராவணனும் பிறந்துவிடுகிறான்.உண்மையில் ஒரு ராவணன் இல்லாமல் ராமனோ ராமன் இல்லாமல் ராவணனோ முழுமை அடைவதில்லை.இருவரும் சந்தித்துக் கொள்வது தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது.நடுவில் சீதை என்ற விஷயம் ஒரு சாக்குதான்.''என்றபடி சேரில் சாய்ந்து கொண்டார் .அவர் கண்கள் சிந்தனையில் தேய்ந்து மங்கியது.''சிலப்பதிகாரம் கூட அப்படித்தான்.உண்மையில் அது கண்ணகிக்கும் மாதவிக்கும் நிகழும் போராட்டமே.கோவலன்,பாண்டியன் போன்றவர்கள் எல்லாம் அங்கு நிழல் பாத்திரங்களே.''

நான் அவர் பேசுவது மேற்கத்திய அல்லது செமிடிக் சித்தாந்தம் மட்டுமே என்று சொல்ல மிக விரும்பினேன்.எல்லாவற்றையும் இரட்டை நிலைகளாக காண்பது.இந்திய சிந்தனையில் அதற்கு மேல் சாத்தானையும் கடவுளையும் ஒரே நபராக காணும் தரிசனம் உள்ளது என்பது அவருக்குத் தெரிந்திருக்கலாம்.தெரியாவிட்டால் என் கதையின் முடிவில் அவரே தெரிந்து  கொள்ளலாம்.ஆனால் அன்று நான் அதைஎல்ல்லாம் அவருடன் விவாதிக்கும் நிலையில் இல்லை.எனக்கு நன்றாய்த் தெரியும்.அவராலோ அவரது பிராய்டிய உளவியலாலோ என்னை குணப்படுத்த முடியாது எனக்கு  அப்போதைக்கு சற்று தீவிரம் கூடிய தூக்க மருந்து தேவைப் பட்டது.அது அவரின் சீட்டு இல்லாமல் தரமாட்டார்கள்

மேகி அத்தையின் கணவர் பற்றி எங்களுக்கு கடைசிவரை ஒன்றுமே சொல்லப் படவில்லை.கேட்டாலும் அவள் சரியாக பதில் சொல்லுவதில்லை.அவர் உயிரோடுதான் எங்கோ இருக்கிறார் என்பது யூகமாகத்  தெரிந்தது.அவர் வெளிநாட்டுல இருக்கார் என்றான் விநாயகம்.அங்கிருந்துதான் அவள் தரும் சாக்லேட்டுகள் முதல் அவள் உடுத்தும் சேலைகள் வரை வருவதாக அவன் கண்டுபிடித்தான்.'இல்லே.அவங்க இரண்டு பேருக்கும் சண்டை''எனறாள் சுதா.


அத்தைக்கு ரூபி  என்று பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் ஒருத்தி இருந்தாள்..பள்ளி விடுமுறை தினங்களில் அத்தை ஊருக்குப்  போய் அவளைக் கூட்டி வருவாள்.அத்துணை சிகப்பான ஒரு பெண்ணை நான் அதுவரை நாங்கள் பார்த்ததில்லை.ஒருவேளை அவள் அப்பா சாயலாக இருக்கலாம்.வட்டக் கன்னத்தில் எறும்பு கடித்தது போல எழும்பி  இருக்கும் பருக்கள் அவளை மேலும் சிகப்பாய்க் காட்டும்.அவளுக்கு தன் அம்ம்மாவை சுத்தமாய்ப் பிடிக்காது என்று முதலிலேயே தெரிந்துவிட்டது.அவளுக்கு எங்களையும் பிடிக்கவில்லை.வந்த இரண்டாம்  நாளே என்னைஅழைத்து ''எங்க அம்மாகிட்டே ஜாக்கிரதையா இரு.என்ன.அவ ஒரு மோகினி.''எனறாள்.
நான் 'மோகினின்னா என்ன?''
''மோகினின்னா என்னன்னே தெரியாதா'.உன்கூட பேசறதே வேஸ்ட்''என்று போய்விட்டாள்
நான் சில காலம் மோகினி என்றால் என்னவென்று எல்லோரையும் கேட்டுக் கொண்டு திரிந்தேன்.கடைசியில் வினாயகத்திடம் கேட்க அவன்தான்  மேலும் சில பேரிடம் விசாரித்து ஒரு திடுக்கிடும் தகவலுடன் வந்தான்.மோகினி என்பது ஒரு பெண் பேய் என்பதே அது.அதுவும் நடுரத்திரிகளில் தனியாக வரும் ஆண்களைப் பிடித்துக் கொன்று உதிரம் குடித்து தின்று அவர்கள் நகங்கள் முடி இவற்றை மட்டும் போட்டுவிட்டுப் போய்விடும் ஒரு பேய்.'
' நான் அப்படியே உறைந்து போய்விட்டேன்.என்றாவது ஒருநாள் காலையில் என் படுக்கையில் வெறும் நகங்கள் மட்டுமே நானாய்க் கிடக்கும் ஒரு காட்சி எனக்குள் வந்தது.அன்று நான் அத்தை வீட்டுக்குப் போக மறுத்துவிட்டேன்.ஏன் என்று அவள் திரும்பத் திரும்பக் கேட்டும் நான் சொல்லவில்லை.ஆனால் மறுநாள் விநாயகம் சொல்லிவிட்டான் போலிருக்கிறது.ரூபியை அவள் ரொம்பக் கடிந்து கொண்டதாகவும் ஆனால் பதிலுக்கு அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்ததாகவும் விநாயகம் வந்து சொன்னான்.அன்று மாலையே  ரூபி என்னை வழி மறித்து ''சார்.அன்னைக்கு சொன்னதெல்லாம் ரொம்பத் தப்பு.அதனாலே தயவு செஞ்சு இன்னைக்கு எங்க அம்மாவோட படுக்கறதுக்கு வந்துடுங்க.இல்லேன்னா அவ உத்திரத்துல தொங்கிடுவா போலிருக்கே''என்று சிரித்தாள்.


எனக்கு அவளைப் பிடிக்கவே இல்லை.புரியவும் இல்லை.உடலில் மட்டுமல்ல குணத்திலும் அவள் அத்தைக்கு எதிராகவே இருந்தாள்.அவளிடமும் அவள் அப்பாவைப் பற்றிக் கேட்டால் சரியான பதில் சொல்வதே இல்லை.ஒவ்வொரு நாளும் ஒரு கதை சொல்வாள்.அவள் அப்பா பைலட் ஆக  இருப்பதாக ஒருநாள் சொன்னாள்.ஒரு நாள் மாலுமி.இன்னொரு நாள் சிவாஜி கணேசன்தான் தனது அப்பா என்று கூட சொன்னாள்.


அவளுக்கு என்னையும் என் குழுவையும் பிடிக்கவில்லை தவிர சுஜாவையும் சுதாவையும் ரொம்பப் பிடித்திருந்தது.அவர்களுக்கும் அத்தையைப் பிடிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.அவர்கள் எப்போதும் ஒருமித்து அலைந்தார்கள்.எங்களுக்குத் தெரியாத விசயங்களைக் கிசுகிசுவென்று பேசிச் சிரித்தார்கள்.


அவளை எனக்குப் பிடிக்காமால் போவதற்கு இன்னொரு சம்பவமும் காரணமாக அமைந்தது.பத்தாம் வகுப்பு படித்தாலும் அவள் தாவணி போடுவதில்லை,சற்று அளவுக்கு மீறிய வளர்ச்சி வேறு அவள்.தினமும் தாவணி போடும்படி அத்தை வற்புறுத்திக் கொண்டே இருந்தாள்.ஆனால் அவள் அத்தனை வற்புறுத்தாமல் இருந்தால் அவள் அதைச் செய்திருக்கக் கூடும்.எப்போதும் சட்டையும் ஸ்கர்ட் மட்டுமே அணிந்து திரிந்தாள்.அது எப்போதுமே காற்றில் பறக்கத் தயாராக இருந்தது.ஒரு நாள் மதியம் விநாயகமும் அஞ்சுவும் வந்து என்னை அவசரமாக அழைத்தார்கள்.க்வார்ட்டர்சின் பின்னால் ஒரு பெரிய ஆழ்துளைக் கிணறு இருந்தது.அங்கு ரூபியும் அவள் கூட்டமும் என்னவோ செய்கிறது என்று சொல்லப் பட்டது.நாங்கள் மூவரும் அவசரமாய் ரகசியமாய் அங்கு போய் மறைந்திருந்து கவனித்தோம்.பம்புசெட்டின் மறுபுறம் நின்று என்னவென்று பார்த்தோம்..


அங்கு பெரிய விவாதமே நடந்து கொண்டிருந்தது.உன்னால் முடியாது என்று சுதா எதுவோ சொல்ல ரூபி என்ன பெட் என்ன பெட் என்று கேட்டுக் கொன்டிருந்தாள்.முடிவில் அவள் அப்படி செய்தால் சுதா மொட்டை அடித்துக் கொள்வேன் என்று சொல்ல ரூபி அதைச் செய்யத் தயார் ஆனாள்.அவள் என்ன செய்யப் போகிறாள் என்று நாங்கள் எங்களுக்குள்ளேயே யூகித்து சண்டை போட்டுக் கொண்டோம்.ஆனாள் அவள் செய்தது நாங்கள் யாரும் எதிர் பார்க்காததாக இருந்தது.


அந்தக் கிணறு குறைந்தது அறுபதடி ஆழம் உள்ள கிணறு.அதைச் சுற்றிக் கட்டப் பட்டிருந்த வளையச் சுவரில் ரூபி ஏறி நின்றாள்.அவளது ஆரஞ்சு ஸ்கர்ட் ஒரு சிறகு போல் காற்றில் எழுந்து பறந்து எழுந்து பறந்து அடங்கியது.சுஜா மெலிய குரலில் ''டீ.வேண்டாமடி''என சுதா ''சும்மா இரு.அவ சும்மா படம் காட்றா''என்றாள்.ரூபி ஒரு சிரிப்புடன் தன் வளையல்களைக் கழற்றி சுஜாவின் கையில் கொடுத்தாள்.பிறகு காதணிகள்.
''கிணத்தில குதிக்கப் போறா''என்றான் விநாயகம் கிசுகிசுப்பாய்.அஞ்சு லேசாய் நடுங்க ஆரம்பித்தாள்.ஆனாள் அந்த விஷயம் எங்கள் புத்தியில் தைப்பதற்குள் அவள் அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தாள்.தன் சட்டையைக் கழற்றி விட்டாள்!பின்னர் அதன் கீழ் மெலிதாய் இருந்த வெள்ளை பாடிசையும் கழற்ற மாலை மஞ்சள் வெயிலில் அவளது மார்புக் குமிழ்கள் இரண்டும் தங்கக் கலசங்கள் போல மினுங்கின.இப்போது சுஜா சுதா இருவருமே பைத்தியம் பிடித்தது போல சிரிக்க ஆரம்பிக்க ரூபி ஒரு அலட்சியச் சிரிப்புடன் தனது ஸ்கர்ட்டையும் கழற்றிவிட்டு நீல பேண்டிசுடன் நின்றாள்.இப்போது சுஜாவுக்கு கூட கொஞ்சம் பயம் வந்துவிட ''போதுமடி''என்று கெஞ்ச  ஆரம்பிக்க சுதா மட்டுமே மவுனமாய் இருந்தாள்.''நீ மொட்டை அடிச்சுப்பியா''என்று ரூபி கேட்டதற்கு 'அதெப்படி.நாம பேசினது என்ன''என்று முனக ''அவ்வளவுதானே''என்று ரூபி அவளது மிச்ச ஆடையும் கழற்றி விட்டு முழுதாய் நின்றாள்.எங்களுக்கு மூச்சே நின்றுவிட்டது.விநாயகம் உலைத்  துருத்தி போல் மூச்சு விட ஆரம்பித்தான்.அவளது சிவந்த தொடைகள் நடுவே ஒரு கறுப்புப் பூ போல் அவள் பெண்மையைப் பார்த்தேன்.அவள் மறுபடி திரும்பி சுதாவிடம் ஏதோ கேட்க அவள் தலையசைக்க அடுத்த காரியத்தை செய்தாள் ரூபி.


அங்கிருந்து அப்படியே அதுவரை யாரும் இறங்கியிராத அந்த ஆழக் கிணற்றுக்குள் ஒரு டால்பின் பாய்வது போல் பாய்ந்தாள் .

2 comments:

  1. நல்லாயிருக்கு

    ReplyDelete
  2. ஆர்வத்துடன் தொடர்கிறேன்..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails