Friday, October 1, 2010

சில பூக்கள் சில கவிதைகள் ....

1.அசப்பில்
உன் நிறத்த்திலேயே
புதிய மலர் ஒன்று
வனத்தில்
நேற்று பார்த்தேன்.
காப்புரிமை மீறல்
என்று சொன்னேன்.
அதற்கு புரியவில்லை.

2.கவிதை செய்யும்
இயந்திரம் ஒன்று
கண்காட்சியில் நேற்று
கண்டேன்.
யார் என்ன பொருள்
கொடுத்தாலும்
அழகான கவிதை
செய்து கொடுத்துக் கொண்டிருந்தது.
வியப்புடன் ஒன்று
வாங்கி
வீட்டுக்கு கொண்டுவந்தேன்.
முதல் முதலாய்
உன் மேல் ஒரு கவிதை
கேட்டேன்.
என்னவோ தெரியவில்லை
'பூ'
என்ற
ஒற்றை வார்த்தையை மட்டுமே
திரும்பத் திரும்ப
அடித்துக் கொண்டிருக்கிறது ...

3.யாரும் காணாத
மலர்கள் ஆயிரம்
உண்டு உலகில்
உன்னையும் என்னையும் தவிர
யாரும்
காணக் கூடாத
மலர்களும்
சில உண்டு
உன்னில்...

5 comments:

  1. எனக்கும் மூன்றாவதுதான் பிடித்த கவிதை.இது போல் நிறைய எழுத முடியும். ஆனால் மக்கள் ஏற்கனவே ரொம்ப செக்ஸ் எழுதறேன்னு சொல்றாங்க..

    ReplyDelete
  2. மலர்களில் மணம்

    ReplyDelete
  3. மூணாவது கவிதை செக்ஸா... ?

    மத்தவங்க என்ன சொன்னா என்னங்க.. சொல்லிட்டு போவ அவங்களுக்கு உரிமை இருக்குறாப்புல எழுதுறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு - திறமையும் இருக்குதே..?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails