1.பசித்துவரும்
பிள்ளைகளுக்காய்
கைப்பிடியளவு நிலவைக்
கண்ணீரில்
கரைத்துவைத்தேன் ...
2.ஒரு துண்டு
சர்க்கரை கூடுதல்
உன் இதழ் என்றவனிடம்
ஒரு துண்டு தீ
அதிகம்
உன் இதழ் எனறாள்...
3.இந்தப் பாதை
எங்கு முடிகிறது
என்றவருக்கு
இன்னொரு பாதையில்
முடிகிற
இன்னொரு பாதையில் என்றால்
ஏன் புரியவில்லை?
4.மழை பொழிந்ததில் 
இலை விழுந்ததில் 
அலை எழுந்ததில் 
மரம் வீழ்ந்ததில் 
மழை நின்றதில் 
வெயில் எரிந்ததில் 
மீண்டும் 
இலை விழுந்தது...
5.உடனே வருகிறேன் 
என்றவன் 
எவளுடனோ வந்தான்...
 
 
கடைசி ஓன்று கொஞ்சம் உறுத்தலா இருக்கே...
ReplyDeleteஅது காமிக் ரிலீப் ...
ReplyDelete