Wednesday, December 29, 2010

புணர்ச்சி விதி

நீ
தொட்ட இடமெல்லாம் தீ
எழும்பிப் பரவுது என்றேன்
அவள்
நீ தொட்ட இடமெல்லாம்
தீம்புனல்
பெருகி வழியுது எனறாள்
உடனே வெட்கி
ச்சீ காமம் பேசாதே எனறாள்
காமம் பேசல்
பெண்களுக்குப் பிடிக்கும் என்றாரே
என்றதற்கு
காமம் பின் பேசல் பிடிக்கும்
என்று விளக்கினாள்
பிறகு யோசித்து
காமத்தின் முன் பேசலும் எனறாள்
இன்னும் ஆழக் கண்புதைய  யோசித்து
பேசல் பிடிக்கும் பெண்களுக்கு
எனறாள் பெருமூச்சுடன்
வேறு எதன் பொருட்டு
நீங்கள் எங்களைப் பேச அனுமதிக்கிறீர்கள்
என்றதற்கு
என்னிடம் இல்லை
எந்தப் பதிலும்

7 comments:

  1. அனுபவமில்லை... வெறும் கேள்வி ஞானமே..

    ReplyDelete
  2. அண்ணே உடல்தத்துவம் அடுத்த பாகம் எப்போ வரும்..
    ரொம்ப ஆவலா காத்திருக்கோம் நானும் நண்பர்களும்..

    ReplyDelete
  3. எப்போதுமே பெண் பேசிக்கொண்டுதானே இருக்கிறாள் ?

    ReplyDelete
  4. நிறைய அவங்க பேசி தானே நாம கேக்கறோம். ஒருக்கால் இந்த ஒரு இடத்தில மட்டுமா? ;-)

    ReplyDelete
  5. இதைக் கவனிக்கவில்லை இத்தனை நாள்; நன்றாக எழுதியிருக்கிறீர்கள். முன்பேசல் பின்பேசல் முதலில் குழப்பிவிட்டது; இரண்டு மூன்று முறை படித்ததும் புரிந்தது. குழப்பம் பிடித்தது.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails