Monday, December 6, 2010

மீண்டும் சில கேப்சூல் கவிதைகள்

1.வெயில் அடிக்கிறது
  மழை பொழிகிறது
  இலை விழுகிறது
 அலை எழுகிறது 
 நான் இருக்கிறேன்
 அல்லது
 இருக்கிறேனா?

2.மின்சாரத்தில் உயிர்விட்ட
  காக்கையின் உறவினர்கள்
  இன்னும் வரவில்லை
  காத்திருக்கிறேன்

3.இந்தக் கவிதை ஒருபோதும்
   கவிதை என்ற பேரில்
   அழைக்கப் படவில்லை

4.இந்த வீடுதான் என்று
  அடையாளம் காட்டிய
  அழகிய கண் பெண்ணுக்கு
  எந்த வீடு?

5.கடிகாரத்தைக் கொன்றுவிட்டேன்
  இன்று காலையில்
  இனி எனக்கு இறப்பில்லை
  ஆனால் கொன்ற நேரம் எது?
  என்று அத்தாட்சி கேட்கிறார்கள்  
  எப்படி அறிவேன்?

1 comment:

  1. எல்லாமே அருமை! மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்!

    சில நேரங்களில், சில சூழ்நிலையில் நான் இருந்தபோது, நான் அங்குதான் இருக்கிறேனா என்று என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டதுண்டு. மனது ஒட்டாத இடங்களில் நான் இருந்த நேரங்களில் எல்லாம், நான் ஏன், எதற்காக இங்கு இருக்கிறேன், நான் இங்குதான் இருக்கிறேனா என்றெல்லாம் என்னை நானே பல முறை கேட்டுக் கொண்டதும் உண்டு. உங்கள் முதல் கவிதை என்னை மிகவும் பாதித்தது.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails