வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி என்னுடைய ஐந்து புத்தகங்களை மடமைப் பதிப்பகம் வெளியிடுகிறது
இடம் -சொறி படையார் வகை திருமண அரங்கம்
வாயில்லா நாயினார் தெரு
பாளையம்கோட்டை
1.தாகம்-பாட்டிலின் எண்ணற்ற ரகசியங்களை ஓப்பனர் இல்லாமலே திறந்து நமக்கு ஊற்றும் காவியம்.குடி எப்படி வயிற்றில் போய் புரட்சியாக உருமாறி வாய்வழியே கலகமாக வெளிவருகிறது என்பது பற்றி இந்நூல விரிவாகப் பேசுகிறது.
2.குடித்துத் திரிபவனின் குடலியல்-முப்பது ஆண்டுகளாக இலக்கியக் கூட்டங்களில் உள்ளும் வெளியிலும் புத்தக வெளியீட்டுக்கு முன்பும் பின்பும் பாரின் சரக்கை யூரின் சந்துகளில் குடித்துத் திரிந்தவனின் முப்பது வருட குடி அனுபவங்கள்.
3.ஜாக்கி ஜட்டியும் ஜனதாயிசமும் -ஒரு துண்டு கோவணத்திலிருந்து முழுநீள லங்கோடு வரை மிக விரிவாக இந்நூல் 'அலசுகிறது'.ஒரு முன் நவீனத்துவ புடைப்பு ...சாரி...படைப்பு.
4.ஸ்டார்ட் காமிரா -திரை மறைவில் சுவாமி நிக்கியானந்தா பக்தைக்கு அருளியதை மறைந்திருந்து பார்த்த அவரது பிரதான சீடர் ஒருவரின் கண் வழியே இக்கதை விரிகிறது.ஒரு கண்ணின் கதை.நிக்கிலீக்ஸ்.Nikki leaks என்றும் வாசிக்கலாம்.
5.மோச லீலா என்ற ஸ்கலித புராணம் -ஒரு நவீனக் கதையாடல் உத்தி ..இதில் வரும் எல்லோருக்கும் இரண்டு ஆண்குறிகள் உள்ளன.ஒன்று குறியீட்டுக் குறி.இன்னொன்று குறி ஈட்டும் குறி.
விழா சரியாக உச்சி வெயில் நச்சென்று தலையில் இறங்கும் நேரத்தில் தொடங்கப் படும்.முந்தி வரும் முப்பது பேருக்கு மட்டும் டீயும் பொறையும் போடப் படும்.ஆனால் அதற்கு காலை ஆறு மணிக்கே வந்து டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும்.
புத்தகங்களை மடமைப் பதிப்பக உரிமையாளர் தேவ குமாரன் புனித ஆவி பறக்க வெளியிட 'கலாச் சாரம் அது மின்சாரம்'படத்தில் நடித்த புரட்சி நடிகை மப்பு வாங்கிக் கொள்வார்.அவர் வராவிட்டால் பல்லி பப்புசாமி பெட்டியார் [பைபாஸில் பெட்டிக் கடை வைத்து அந்தரங்கம்,,ஆன்டி விகடன் போன்ற அரிய இலக்கியங்களை மறைத்து வைத்து கொடுத்து என் போன்ற வளரும் இலக்கியவாதிகளுக்கு சேவை செய்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.ஒரு தலை முறைக்கே பெண்களின் உடற் கூறியல் பற்றி இந்தப் புத்தகங்கள் தான் கற்றுதத் தந்தன என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும் ]மேலும் கவிஞர்கள் [என்று நம்பப்படும் நம்பும்படி வற்புறுத்தப் படும்]பனிவிழி.தெலுங்கி ,மற்றும் அடிக்கடி பூனைகளுடன் பேசுபவரும் பூனைகள் எருமைகள்.குதிரைகள் எதுவும் கிடைக்காத தருணங்களில் மேடைகளில் பேசுபவருமான எனது சக எழுத்தாளர் ராசா பேசுவார்.சிறப்பு விருந்தினராக எனது முதல் பட இயக்குனரும் [அந்தப் படத்தில் கடைசிக் காட்சியில் இடது மூலையில் முப்பத்தி ஏழாவது நபராக நின்று கைத் தட்டுபவன் நான்தான்]சமீபத்தில் வந்து வெற்றிகரமாக தியேட்டரை விட்டு ஓடிக் கொண்டிருக்கும் 'லாலாக் கடை அல்வா' வின் இயக்குனருமான பம்ப்கின் பேசுவார்.[முன் எச்சரிக்கையாக அவருக்கு என் நூல்களைப் பற்றிய சகஸ்ர நாம துதி ஒரு பிரதி கொடுக்கப் பட்டிருக்கிறது.அதை மீறியும் அவர் தான் எப்படி அல்வா கிண்டினார் என்பதைப் பற்றியே பேச ஆரம்பித்தால்..அவரது அல்வாவில் என்னென்ன ஒரிஜினல் பொருட்கள் கலந்திருக்கிறது என்ற ரகசியம் பதிவு பதிவாக வரும் என்று எச்சரிக்கப் பட்டிருக்கிறார்]அது போக முன்னாள் எழுத்தாளர் எழுத்துப் புத்தர் குண்டலினி குமாரனும் கலந்து கொண்டு மணமக்களை மன்னிக்க... தற்காலத் தமிழ் இலக்கியத்தையும் அவர் எழுதும் கற்காலத் தமிழ் இலக்கியத்தையும் ஆசிர்வதித்து அருளுவார்...
பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எனது சிறிய சிலாமூர்த்தி அரங்கின் வெளியே வைக்கப் படிருக்கிறது.பீராலோ பாலாலோ அபிசேகம் செய்யலாம்.ஆனால் பக்கத்திலேயே தற்காலிகமாகத் திறக்கப் பட்டிருக்கும் தேவசம் போர்டிடம் அபிசேகச் சீட்டு வாங்கிக் கொண்டு முறையாகச் செய்யவும்.நெய் விளக்கும் ஏற்றலாம்.சரஸ்வதி கடாச்சம் கிட்டும்.ரோக மோகனின் நூல்களைப் படிப்பதால் ஏற்படும் தீராத பிரம தத்தி தோஷம் நீங்கும்.
அனுமதி எல்லோருக்கும் இலவசம்.ஆனால் உள்ளே நுழைந்தவர்கள் அனைவரும் நூல்களை வாங்கிய பிறகே வெளியேற அனுமதிக்கப் படுவார் என்று வருத்தத்துடன் தெரிவிக்கப் படுகிறது.ஒரு இலக்கியவாதியாக நான் இந்த சமூகத்தில் நீடித்திருப்பதற்கு மிகுந்த செலவாகிறது என்பதால் இது கட்டாயம் ஆகிறது.
ஆகவே விழாவிற்கு நீங்கள் அனைவரும் அலை கடலென கடல் மணலென குடல் புழுவெனச் சாடி வந்து .சிறப்பித்து தமிழ் இலக்கியத்தை மரணப் படுக்கையில் இருந்து காப்பாற்றவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்
பி.கு-லேட்டஸ்ட்டாக ஒரு செய்தி.த்ரீ இடியட்சில் நானும் ஒரு இடியட்டாக நடிக்க புக் செய்யப் பட்டிருக்கிறேன் என்பதை சந்தோசத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மற்ற இரண்டு இடியட்சைப் பற்றி நீங்கள் நினைப்பது சரிதான்.அவர்களேதான்..
போகன் சார்! இப்பத்தான் படித்தேன்.. கலாயல்.. அடிச்சு தூள் பரத்திட்டீங்க.. ;-)
ReplyDeleteசப்புனு ஆக்கிட்டீகளே!
ReplyDeleteசிரிச்சு மாளலை :)
ReplyDelete