1.கொஞ்சம்
நகருங்கள்
என் கவிதை மீது
நிற்கிறீர்கள்..
2.மாடியில் இருந்து
இறங்கினால்
மீண்டும்
மாடியே வருகிறது
கனவு.
3.பழைய தோழியைத் தேடி
வீட்டுக்குப் போனேன்
சுவரில் தொங்கிய
புகைப்படத்தைக் காண்பித்தார்கள்
அவளில்லை இது
என்றேன்
அவள் அணிந்த உடைகள்
பாவித்த காலணிகள்
அவள் ஓட்டிய சைக்கிள்
வாசித்த புத்தகங்கள்
வாங்கிய பட்டங்கள்
அவளை எரித்த சாம்பல்
எல்லாம் எல்லாம் காண்பித்தார்கள்
எதுவும் அவளில்லை என்றேன்
அவள் அறையில் தோண்டி
அவள் எழுதிய
கவிதைகளை எடுத்து
இதோ அவள்
என்று சொன்னேன்...
.
nice nice
ReplyDeleteபிரமாதம் ////
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க....
ReplyDelete