கவிதை செய்தலின்
பாதியில்
எட்டிப் பார்த்தாள் தோழி
பெரு ஆகாசத்தில்
எழும்பிப்
பறத்தலை
பாதியில்
நிறுத்திவிட்ட பறவை போல்
விசும்பிலிருந்து வீழாது
வெளியில்
உறைந்துவிட்ட மழைத்துளி போல்
பதறி நின்றது கவிதை
உடை மாற்றும் போது
ஒளிந்திருந்து பார்க்கப் படுவது போல்
கலவியின் உச்சத்தில்
தடை செய்யப் படுவது போல்
முலை சுரந்து
சிசுவுக்கூட்டுகையில்
வெறிக்கப் படுவது போல்
வலிக்கிறது என்று சொன்னேன்
புரிந்தும் புரியாமலும் விலகினாள்..
ஒருவேளை என்னை
அதீத அகங்காரன் என்று
நினைத்திருக்கக் கூடும்
திரும்பி வந்து பார்த்தேன்
மேசையில்
கவிதையின்
முறிந்த சிறகு
ஒன்று மட்டுமே
மிச்சமாய்க் கிடந்தது...
எல்லா வரிகளுமே அழகு..!! மிகவும் ரசித்தேன்..!!
ReplyDeleteநல்லா இருக்கு...
ReplyDeleteஅழகு.. கவிதையும் வரிகளும்..
ReplyDeleteநல்லா இருக்கு. மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteவலி வார்த்தைகளில் எங்கும் பரவிக் கிடக்கிறது . கவிதை நிதர்சனம் . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅழகான கவி வரிகள்
ReplyDeleteஎன்னால் தவிர்க்கவே முடியாத ஒரு கவிதை இது.
ReplyDelete