அழகற்ற பெண்ணாய்
இருப்பதில்
நிறைய சவுகர்யங்கள் உள்ளன
எந்த ஒப்பனையும்
சீர்ப்படுத்தாது
எந்த உடையும் பொருந்தாது
என்பதால்
உடுத்தும் நேரமும்
ஒப்பனை செலவும் மிச்சம்
ஆடையை அடிக்கடி
இழுத்துவிடத் தேவை இல்லை
மார்ச்சேலை விலகல்
பற்றிக் கவலையின்றி
வாய்பிளந்து
ரயிலில் தூங்கலாம்
காதல் கடிதங்களோடு
யாரும் துரத்த மாட்டார்கள்
காதலித்து மயக்கி
பம்பாயில் கொண்டு விடமாட்டார்கள்
பாத்ரூமில் யாரும்
எட்டிப் பார்க்கமாட்டார்கள்
மொபைலில் படமெடுத்து
வலையில் ஏற்ற மாட்டார்கள்
பேருந்து நெரிசலில்
புட்டத்தில் முட்டமாட்டார்கள்
புகார் கொடுக்கப் போகையில்
போலிசார் வன்புணரும்
அபாயம் இல்லவே இல்லை
இப்படி எத்தனையோ
சவுகர்யங்கள்...
ஒரே ஒரு அசவுகர்யம்தான்
எந்த இடத்திலும்
உங்களை
ஒரு மனுஷியாய்ப்
பார்க்க மாட்டார்கள்...
அதனாலென்ன?
இருப்பதில்
நிறைய சவுகர்யங்கள் உள்ளன
எந்த ஒப்பனையும்
சீர்ப்படுத்தாது
எந்த உடையும் பொருந்தாது
என்பதால்
உடுத்தும் நேரமும்
ஒப்பனை செலவும் மிச்சம்
ஆடையை அடிக்கடி
இழுத்துவிடத் தேவை இல்லை
மார்ச்சேலை விலகல்
பற்றிக் கவலையின்றி
வாய்பிளந்து
ரயிலில் தூங்கலாம்
காதல் கடிதங்களோடு
யாரும் துரத்த மாட்டார்கள்
காதலித்து மயக்கி
பம்பாயில் கொண்டு விடமாட்டார்கள்
பாத்ரூமில் யாரும்
எட்டிப் பார்க்கமாட்டார்கள்
மொபைலில் படமெடுத்து
வலையில் ஏற்ற மாட்டார்கள்
பேருந்து நெரிசலில்
புட்டத்தில் முட்டமாட்டார்கள்
புகார் கொடுக்கப் போகையில்
போலிசார் வன்புணரும்
அபாயம் இல்லவே இல்லை
இப்படி எத்தனையோ
சவுகர்யங்கள்...
ஒரே ஒரு அசவுகர்யம்தான்
எந்த இடத்திலும்
உங்களை
ஒரு மனுஷியாய்ப்
பார்க்க மாட்டார்கள்...
அதனாலென்ன?
Liked it boss. Thanks
ReplyDeletearumai..
ReplyDeleteஒரு புள்ளியை நோக்கி நகர்த்தப்படும் கவிதைகளுக்கேயுண்டான முன்கூட்டியே யூகிக்கப்படும் பாதகம் இந்தக் கவிதையில் இருந்தாலும் இறுதி வரி ஒரு சவுக்கின் சுழற்றல் போகன்.
ReplyDeleteவித்யாசமான கோணம்....கவிதை அருமை!!!!!
ReplyDelete////மார்ச்சேலை விலகல்
பற்றிக் கவலையின்றி
வாய்பிளந்து
ரயிலில் தூங்கலாம் /// இது மட்டும் சாத்தியமா தெரியவில்லை...
வாவ்! அட்டகாசம்! ;-)
ReplyDelete//..கொற்றவை said.
ReplyDeleteஇது மட்டும் சாத்தியமா தெரியவில்லை... //
தப்பு...தான்...
லவ்வர் /வைப் வெளிகூட்டிட்டு போகும்போது எல்லரும் பார்பங்க ..அழகா இருக்கனும்னு நினைப்பங்க்...
மற்றபடி... சும்ம ஒரச... ஒதுங்க...
அழகு வேண்டியதில்லை... பொம்பளையா இருந்தா போதும்..
கோழி குருடா இருந்தா என்ன குழம்பு ருசியா இருக்கான்னு தான் பார்பாங்க...
//...மார்ச்சேலை விலகல்
பற்றிக் கவலையின்றி
வாய்பிளந்து
ரயிலில் தூங்கலாம் ...//
தூங்கலாம் என்ன முழிச்சு பார்க்கும்போது கற்பு மட்டும் இருக்காது..
4 வருசம் முன்னால் ஓடும் ரயிலில் பள்ளி மாணவியை கற்பழிச்சு கொண்ணு கழிவறையில் பாடியை போட்டுபோனாங்க ஞாபகம் இருக்கா...
அந்த மாணவி போட்டொ பார்த்து அப்புரம் சொல்லுங்க... உங்க கருத்து சரியான்னு...
//ஒரே ஒரு அசவுகர்யம்தான்
ReplyDeleteஎந்த இடத்திலும்
உங்களை
ஒரு மனுஷியாய்ப்
பார்க்க மாட்டார்கள்... //
உண்மை தான் குறிப்பாக பெண்கள்..தான் அதிகம் அப்படி செய்வாங்க...
//அதனாலென்ன?//
ReplyDeleteகேள்வி சிம்பிளாக தெரிந்தாலும் "நச்" கேள்வி.
அருமை..
ReplyDeleteஅதே சமயம் என் கவனம் அறிவை வளர்ப்பதிலேயே செல்லும் என சொல்லலாம்..
புரிகிறது ஆனால் புரியவில்லை. அழகற்ற மனிதரை நான் சந்தித்ததே இல்லை.
ReplyDeleteஅழகான பெண்ணாய் இருப்பதிலும் பல சௌகர்யங்கள் உண்டு
ReplyDeleteஒப்பனை செய்தேயாகும் அவசியமில்லை
எல்லா உடையும் பொருந்தி விடுவதால்
பொருந்தும் உடைதேடி அலையும் நேரம் மிச்சம்
அறிவை வருத்தும் அவசியமின்றி மார்ச்சேலை விலகல்
காரியம் சாதித்து விடும்.
கண்ணை லேசாய் சிமிட்டினால் போதும்
உடனடி நட்பு
உடனடி காதல்
கல்யாண சந்தையில்
உடனடி வியாபாரம்
பம்பாய், மொபைல், இணையம்
பேருந்து, புட்டம் , போலீஸ்
என சிறு சிறு தொந்தரவுகள் இருந்தாலும்
அவையும் அழகின் பெருமையாய் ஆறுதல் கொள்ளலாம்
இரண்டே இரண்டு அசௌகர்யம் தான்
அறிவும், மனமும்
இருக்கிறதென
நம்புவதற்கு/பார்ப்பதற்கு கூட ஆளேயில்லை.
ம்ம்.... அதனாலென்ன ??
:))) ச்சும்மா !!! போகன் !!
உங்களளவுக்கு நச்சென்று எழுத வரவில்லையென நினைக்கிறேன்.
அவரவர் கஷ்டம் அவரவர்க்கு, அவரவர் லாபமும் அவரவர்க்கே !!
ReplyDeleteநம்மை நாம் நேசித்தால் போதும், நிம்மதியாய் வாழலாம்.
ReplyDelete