அயர்வாய் அழுக்காய்
அலுவலகம் தீர்ந்து
அடைசல் பேருந்தில்
அடித்துப் பிதுங்கி
கழிந்த மயிர போல்
விடுபட்டு உதிர்ந்து
விசைகரைந்த பொம்மையாய்
வீதியில் ஊர்கையில்..
யாரென்று தெரியவில்லை
திரும்பிப் பார்த்தபடியேபோனார்கள்
தற்செயல் என உதறி
நடக்கையில்
இன்னுமொருவர் ..
விழி விரியப் பார்த்தார் ..
அப்புறம்
கண்களைச் சந்திக்க
முயலும் மற்றொருவர் .
என்னாயிற்று இவர்களுக்கென .
கூடு வந்ததும்
ஓடிச் சென்று
கண்ணாடியில் பார்த்தேன்
முகத்தில்
குங்குமக் கரைசலோ
கரித்தீற்றலோ இருக்கிறதோ என
இல்லையென அறிந்ததும்
தளர்ந்தேன்
விபரம் கேட்ட
அம்மாவிடம்
ஒன்றுமில்லை
இன்னமும் என்னை
மனிதர்கள் கவனிக்கிறார்கள் அம்மா என்றேன்
மெல்ல விரியும் புன்னகையுடன்
அவளுக்குப் புரியவில்லை
அலுவலகம் தீர்ந்து
அடைசல் பேருந்தில்
அடித்துப் பிதுங்கி
கழிந்த மயிர போல்
விடுபட்டு உதிர்ந்து
விசைகரைந்த பொம்மையாய்
வீதியில் ஊர்கையில்..
யாரென்று தெரியவில்லை
திரும்பிப் பார்த்தபடியேபோனார்கள்
தற்செயல் என உதறி
நடக்கையில்
இன்னுமொருவர் ..
விழி விரியப் பார்த்தார் ..
அப்புறம்
கண்களைச் சந்திக்க
முயலும் மற்றொருவர் .
என்னாயிற்று இவர்களுக்கென .
கூடு வந்ததும்
ஓடிச் சென்று
கண்ணாடியில் பார்த்தேன்
முகத்தில்
குங்குமக் கரைசலோ
கரித்தீற்றலோ இருக்கிறதோ என
இல்லையென அறிந்ததும்
தளர்ந்தேன்
விபரம் கேட்ட
அம்மாவிடம்
ஒன்றுமில்லை
இன்னமும் என்னை
மனிதர்கள் கவனிக்கிறார்கள் அம்மா என்றேன்
மெல்ல விரியும் புன்னகையுடன்
அவளுக்குப் புரியவில்லை
எனக்கும் புரியவில்லை.
ReplyDeleteகவனித்தல்களும் , அறிதல்களும் நிற்பதேயில்லை. தொலைந்ததாய் நாம் நினைத்தாலும், அறிந்ததாய் அவர்கள் நினைத்தாலும்.
ReplyDeleteஇது ஒரு முதிர்ந்த கன்னியின் தாபமா?!
ReplyDeleteகன்னியோ, காளையோ 'கவனிக்கப் படுவதில்' சந்தோஷங்களும் இருக்கின்றன..சங்கடங்களும் இருக்கின்றன!
ReplyDeleteபுரிந்தது.
ReplyDeleteஇந்தக்காலத்தில்..