Tuesday, March 29, 2011

இருந்த காலம்

கொஞ்ச நாட்களாக
அப்பாவுடன் அதிகம்
பேசிக் கொண்டிருக்கிறேன்
அப்பா இறந்து
வருடங்களாயிற்று
மனைவி கவனித்து
மருத்துவரிடம் போகலாமா
என்கிறாள் கவலையுடன்

உயிரோடிருந்த போது
அப்பாவும் நானும்
ஒருவருடம் முழுக்க
ஒரே வீட்டில் இருந்து கொண்டு
பேசாமல் இருந்தோம்
இப்போது நானும்
என் மகனும்
இருப்பது போல ....

ஏதோ ஒரு
அற்ப காரணம்தான்..
ஆனால் தோழர்களே
அற்ப உயிர்களின்
காரணங்கள்
வேறெப்படி இருக்கும்?


மருத்துவரிடம் எதற்கு
நான்
என் கடனை
திருப்பிச்
செலுத்திக்
கொண்டிருக்கிறேன்
என்றேன்



அகண்டப் பெருவெளியில்
எங்கேனும் அலைந்து கொண்டிருந்தால்
அப்பாவுக்கும் இருக்கக் கூடும்
என்னிடம் சொல்ல
சில வார்த்தைகளேனும் ...
சொல்லிச் சிரிக்க
சில பழங்கதைகள்...

அவர் அப்பாவாகவும்
நான் மகனாகவும்
இருந்த
காலத்தில் நடந்த கதைகள்..
அவர் இறந்தவராகவும்
நான் இருப்பவனாகவும்
இல்லாத
அந்தக் காலத்தில்

Sunday, March 27, 2011

கண்ணி 5





கவனம்-முதிர் வாசகருக்கானது 




உச்சிப் பொழுதில் ஒரு ஆரெம்கேவி பையில் சுற்றி அப்பா 'சாமானைக் 'கொண்டு வந்தார்.எஸ் ஐ அதை மூன்று தடவை எண்ணிப் பார்த்துவிட்டு ''அவனை வெளியே விடுலே''என்றார்.சில வெள்ளைக் காகிதங்களில் கையெழுத்து வாங்கிவிட்டு அரைமணி நேரம் அப்பாவுக்கும் எனக்கும் கீதோபதேசம் செய்தார்.;;கொஞ்ச நாள் வெளியூரு எதுக்காம் அனுப்பி வையும் ..கேட்டீரா...சேர்க்கை சரியில்லை போல தெரியுது ..''என்றார். 

எல்லோருக்கும் தெரியப் போக வேண்டாமென்று அப்பா வள்ளியின் காரைக் கொண்டு வந்தார்.நான் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டேன்.வள்ளி திரும்பி ''ஏலே சின்னப் பொண்ணு சாமானைக் கிழிச்சிட்டியாமே அப்படியா''என்று சிரித்தான்.சித்தப்பா மகன் அதற்குள் வண்டியில் வந்து ஏறிக் கொண்டு 'வண்டி ஓட்ட வந்தா ஓன் சோலிய மட்டும் பார்க்கணும் கேட்டியா  ''

டவுனை அதுவரை ஒரு காரின் உள்ளிருந்து உச்சிப் பொழுதில் பார்த்ததே இல்லை.வேறு உலகம் மாதிரி இருந்தது.கடை பூட்டிக்  கிடந்தது.இரண்டு நாளாய்ப் பேப்பர் போடவில்லை என்று சித்தப்பா மகன் சொன்னான்.நான் அவனிடம் திரும்பி ''உன் பேர் என்ன''என்று கேட்டதற்கு நம்ப முடியாதவன் போல பார்த்தான்.முன் சீட்டில் இருந்த அப்பா பேசவே இல்லை.அவரது கழுத்துத் தசைகள்  இறுகி நரம்பு புடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.ஏனோ இவை எல்ல்லாவற்றிற்கும் அவர்தான் காரணம் என்பது போல ஒரு வெறுப்பு எழுதந்தது.பாப்புலரில் படம் மாற்றி இருந்தான்.''தியேட்டரை மூடப் போறான்''என்றான் வள்ளி சிவசக்தியில் ரதி நிர்வேதம்  மறுபடி போட்டிருந்தான்.நானும் சண்முகமும் அந்தப் படம் எங்கு போட்டாலும் துரத்தித் துரத்திப் பார்த்திருக்கிறோம்.ஜெய பாரதியின் வாளிப்பான மலையாள முலைகள்  மீது எங்களுக்கு வெறியே ஏற்பட்டிருந்தது..''ஏம்லே அவளுங்களுக்கு மட்டும் இப்படி விளைஞ்சு  இருக்கு ..நம்ம மூதிங்க  சாமானை பாரு செப்புச் சாமான்  மாதிரி'..தொட்டாக் கரஞ்சுரும்  போல எழவு ''என்பான் சண்முகம்.''எல்லாம் சாப்பாடுதான் கேட்டியா.கால சாப்பாட்டுக்கே அவிங்க மாடு திங்கிறாங்க ...நம்ம ஆளுங்க தோசை மிளகாப் பொடின்னு ..பிறகு எங்கடே மஸ்து ஏறும் ''

கொஞ்ச நாட்கள் பெண்களின் மார்புகளின் வடிவ வித்தியாசங்களைப் பற்றி நாங்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தோம்.கருப்பட்டி போல, காம்பசில் வரைந்தது போல சரியான வட்ட மார்புகள்.மதுக் கோப்பைகள் போல அரை வட்ட மார்புகள்.ஒரு கண்ணீர்த் துளி போல தேங்கி நிற்கும் மார்புகள்.முனையில் சிறுத்து பின்னர் பெருகிவரும் முலாம் பழ மார்புகள்.எனக்கு கருப்பட்டிகளே  பிடிக்கும்.அவனுக்கு முலாம் பழங்கள்..கடை மாடியில்  நின்றுகொண்டு இவளுக்கு ஆப்பிள் அவளுக்கு கருப்பட்டி என்று யூகித்துக் கொண்டிருந்தோம்.
சண்முகத்தை நினைத்ததும் அவனது அழகான மனைவி நினைவு வந்தது.அவளுக்கு கருப்பட்டியா முலாம் பழமா?என்று நினைத்தேன்.சிறையில் இருந்தபோது அவன் ஒரு தடவை கூட பார்க்க வரவில்லை என உணர்ந்து ''சண்முகம் ஊரில இருக்கானாடே''என்றேன்.அப்பா சட்டென்று திரும்பி ''அவனைப் பத்திப் பேசுனாக் கூட உன்ன வெட்டிக் கூறு போட்டுடுவேம்ல ''என்றார்,நான் மௌனமாக இருந்தேன்.

தெருவில் இறங்கும் போது பக்கத்து வீடுகளில் பெண்கள் சிறு சிறு கூட்டங்களாக  நின்று கொண்டிருப்பதைக் கவனித்தேன்.அம்மாவைக் காணோம்.அடுப்பாங்கரையில்  இருக்கக் கூடும்.அம்மாவின் இரண்டாவது தங்கைசித்தி வந்து ''ஏலே வந்தியா ''என்றால் என் அருகே வந்ததும் ''பின்னால போய்க் குளிச்சிட்டு வந்திர்ரியா அய்யா''என்றாள்.நான் கிணற்றடிக்குச் சென்று மொண்டு மொண்டு குளித்தேன் அந்த உடைகளை அப்படியே தூர  எறிந்து விட்டு உள்ளே வந்து ஒரு பருத்தி வேட்டியைக் கட்டிக் கொண்டு ஈயச் சொம்பிலிருந்து திருநீறு எடுத்து பூசிக் கொண்டேன்.பழனி சித்தனாதன் ஜவ்வாது விபூதி.அப்பாவுக்கு திருச்செந்தூர் விபூதி பிடிக்காது .அம்மாவைப் பார்க்கப் போனேன் அம்மா உள்ளே கட்டிலில் படுத்திருந்தாள்.என்னைக் கண்டதும் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.சித்தி காபி தம்ளருடன் உள்ளே வந்து என்னிடம் கொடுத்துவிட்டு  'எக்கா யாரு வந்திருக்கா பாரு''என்றால்.அம்மாவின் கழுத்தின் தசை  மணி ஏறி ஏறி இறங்குவதைப் பார்த்தேன்.அவள் கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.நான் உடைந்து அழ ஆரம்பித்தேன்..

அந்தி மயங்கும்வரை நான் மச்சில் தூங்கிக் கிடந்தேன் .எழுகையில் வியர்த்து உடம்பெல்லாம் கசகசத்தது..மேலெல்லாம் குமட்டுவது போல ஒரு நாற்றமடித்தது..வியர்வை நாற்றமாக இருக்குமோ...ஆனால் இதற்கு முன்பு இந்த நாற்றத்தை நான் உணர்ந்ததில்லை.இன்னுமொரு தடவை குளிக்க வேண்டும் எனத் தோன்றியது.குளித்து முடித்து மீண்டும் உடை மாற்றி திருநீறு  பூசிய பிறகும் அந்த நாற்றம் லேசாக இருப்பது போல தோன்றியது..சித்தியிடம் சென்று காபி கேட்டேன்.''மக்கா ஒரு துண்டு  தோசை சாப்பிட்டுட்டு குடிக்கியா மத்தியானம் எழுப்பி எழுப்பிப் பார்த்தேன் நல்லாத் தூங்கிட்டே''
நான் சரி என்று அமர்ந்தேன்.
அவள் தோசை வார்த்து வந்தாள்.முதல் துண்டை எடுத்து வாயில் வைக்கும் போது மீண்டும் அந்த நாற்றம் எழும்பி வந்தது.
''சித்தி எதுவும் எலி கிலி செத்துக் கிடக்கா இங்கே?''
அவள் தோசையுடன் வந்து ''இல்லியே ..தோசை ஸ்டவ்ல சுட்டேன்.மண் எண்ணெய் வாசம் அடிக்கோவ் ? '''
''இல்லே இது வேற ''
தோசையை எடுத்து வாயில் வைக்கும் போதுதான் எனக்கு சட்டென்று அந்த நாற்றம் பிடிப்பட்டது.சிறுநீர் நாற்றம்.சித்தனின் சிறுநீர்.சீழ் கலந்த அவனது சிறுநீர் நாற்றமே அது 
நான் ஒங்கரித்துக் கொண்டே எழுந்து ஓடினேன்.பின்னால் போய் ஒவ் ஒவ் என்று குடலே வெளியே வந்து விடுவது போல வாந்தி எடுத்தேன்.சித்தி பின்னாலேயே ஒரு தண்ணீர்ச் சொம்புடன் ஓடி வந்தாள்.நான் எடுத்து முடிந்ததும் கிணற்றுத் திண்டைப் பிடித்தவாறே அப்படியே நின்றிருந்தேன்.காற்றில் மாமரம் சலசலத்துக் கொண்டிருக்க பறவைகள் கடைசி சம்பாசனைகளை கூச்சலாய் நிகழ்த்திக் கொண்டிருந்தன.ஒரு கணத்தில் மந்திரம் சொன்னாற் போல எல்லா பறவைகளும் அதை நிறுத்தி ஒரு பெரிய அமைதி சட்டென்று ஒரு போர்வை போல அங்கு விழுந்து விட்டது..பௌர்ணமி அருகில் இருக்கக் கூடும்.நிலா வெகு சோம்பலாய் நகர்ந்து கொண்டிருந்தது.

எனக்கு மெல்ல மெல்ல எல்லாம் தெளிவானது.இனி நான் என்ன செய்யவேண்டும் என உணர்ந்தேன்.வீட்டுக்குள் திரும்பி வந்தேன் சித்தியிடம் ஒரு காப்பி மட்டும் கொடு என்றேன் .மச்சில் ஏறி எரவாணத்தில் சொருகி வைத்திருந்த சிறிய அரிவாளை எடுத்து வைத்து வேட்டியில் மறைத்து வைத்துக் கொண்டேன்.ஒவ்வொரு வருடமும் வயல் அறுப்புக்கு முதல் கதிர் அறுக்க வாங்கிப் போவார்கள் இப்போது அதன் தேவை இல்லை.அந்த வயலைத்தான் விற்றாகி விட்டதே.அதன் மீது சட்டை அணிந்தேன் .அப்பாவின் ஈசி சேரில் அமர்ந்து எந்த வரிசையில் கொல்வது என்று யோசித்தேன்.அது சற்றுக் குழம்பிப் பின்பு தெளிவாயிற்று.முதலில் அந்த பிச்சைக் காரன்.அவனைக் கொன்றால்தான் என் மீது கிடக்கும் இந்த நாற்றம் போகும்.அவன் இளித்துக் கொண்டே என் மீது தன் குறியைத் தூக்கியது நினைவு வந்தது.''தாயோளி தாயோளி''என்று கத்தினேன்.முதலில் அவனைக் கழுத்தை அறுத்துக் கொல்லவேண்டும்.பிறகு அந்த ரைட்டர்.பிறகு சண்முகத்தின் மனைவி.அதன் பிறகு சண்முகம்.

இந்த வரிசையில் சண்முகத்தின் மனைவியை ஏன் சேர்த்தேன் என்பது எனக்கேப்  பிடிபடவில்லை.ஆனால் அது அவசியம் என்று ஏனோ தோன்றிக் கொண்டே இருந்தது.


காப்பியைக் குடித்துவிட்டு வானொலியில் உழவர் உலகம் தொடங்கும் நேரத்தில் வயிற்றில் மறைத்த அரிவாள் சில்லென்று உறுத்த நான் தெருவில் இறங்கி நடந்தேன்.



Saturday, March 26, 2011

சிறுகதைகள் முடியும்...

பேருந்தில் ஏறியதுமே 
அறிந்து விட்டேன் 
அவள்தான்...
எத்தனையோ வருடங்கள் போயிருந்தாலும் 
முன்போலவே மார்பில் தொங்கும் 
மயில் சங்கிலியை 
மேலுதட்டில் உரசிக் கொண்டு 
கைப்பையை பொக்கிஷம் போல 
மடியோடு அழுத்திக் கொண்டு 
ஜன்னலுக்கு வெளியே 
சாய்ந்த பார்வையுடன் 
அவளேதான்.

சட்டென்று அணுகி 
தோள்தட்டி 
பையினுள் இன்னமும் 
மாவடு சாதம்தான் இருக்கிறதா 
என்று கேட்க நினைத்தேன் 
இல்லை இல்லை 
இறங்கும் போது 
பின்னிருந்து அழைத்து 
ஆச்சர்யமூட்டி 
காபிக்ளப் அழைத்துப் போய் ...
இன்னும் ஏராளம் கேட்கவேண்டும் 
அவள் இப்போதும் 
பாலகுமாரன் படிக்கிறாளா என்று..
பாசந்தி விரும்புகிறாளா என்று.
பாக்யராஜை விட்டுவிட்டாளா என்று..
பவள மல்லிதான் 
இன்னமும் 
பிடித்த பூவா என்று..
இளைய ராஜா பாட்டுக்கு 
இப்போதும் கண் கசிகிறாளா என்று..
கிணற்றடியில் பின்னிரவில் 
நிலவோடு மௌனமாய் நிற்கிறாளா என்று..
அபத்தக் கவிதைகள் எழுதுகிறாளா 
அடுத்த வீட்டுக் குழந்தையை 
அறியாமல் கிள்ளி அழப் பண்ணுகிறாளா என்று 
என்று என்று ...
இன்னும் இன்னும் ..
கேட்ட பிறகு 
இப்போதும் எப்போதாவது 
என்னை நினைத்துக் கொள்கிறாளா 
என்றெல்லாம் கேட்கவேண்டும் என நினைத்தேன் 

அருகில் நெருங்கி 
ஹலோ என்றேன் 
அவளும் நிமிர்ந்து ஹலோ 
என்றாள் 

பிறகு சரியாகத் 
தன் நிறுத்தம் வந்ததும் 
ஒற்றைப் புன்னகையுடன் 
விரைந்திறங்கிப் போனாள் 

நான் 
என் நிறுத்தத்தை எப்போதோ 
தவறவிட்டிருந்தேன்

Friday, March 25, 2011

துளி வெளிச்சம்

அயர்வாய் அழுக்காய்
அலுவலகம் தீர்ந்து
அடைசல் பேருந்தில்
அடித்துப் பிதுங்கி
கழிந்த மயிர போல்
விடுபட்டு உதிர்ந்து
விசைகரைந்த பொம்மையாய்
வீதியில் ஊர்கையில்..

யாரென்று தெரியவில்லை
திரும்பிப் பார்த்தபடியேபோனார்கள்
தற்செயல் என உதறி
நடக்கையில்
இன்னுமொருவர் ..
விழி விரியப் பார்த்தார் ..
அப்புறம்
கண்களைச் சந்திக்க
முயலும் மற்றொருவர் .

என்னாயிற்று இவர்களுக்கென .
கூடு வந்ததும்
ஓடிச் சென்று
கண்ணாடியில் பார்த்தேன்
முகத்தில்
குங்குமக் கரைசலோ
கரித்தீற்றலோ இருக்கிறதோ என
இல்லையென அறிந்ததும்
தளர்ந்தேன்
விபரம் கேட்ட
அம்மாவிடம்
ஒன்றுமில்லை
இன்னமும் என்னை
மனிதர்கள் கவனிக்கிறார்கள் அம்மா என்றேன்
மெல்ல விரியும் புன்னகையுடன்

அவளுக்குப் புரியவில்லை

Tuesday, March 22, 2011

விடிந்தது

பாய்லரிலிருது கிளம்பும்
புகை போல
கசிந்து கசிந்து வந்தது
முதல் வெளிச்சம்
அன்றைய கச்சேரிக்குப் பயிற்சியாய்
பறவைகள்
குரல்களைத் தீட்டிப் பார்த்தன
அணில்குஞ்சுகள்
முன்னங்கால்களைத்
தேய்த்துப் புதிதாக்கின
பட்டாம்பூச்சிகள்
சோம்பல் முறிப்பதை
முதன்முறையாக பார்த்தேன்
ஒரு இசைக் கோர்வை போல
மலர்கள் வரிசையாக விரிந்தன
காற்றின் நீண்ட பெருமூச்சில் விடுபட்ட
நேற்றைய இலைகள்
தங்கத் துளிகள் போல
தவழ்ந்து தவழ்ந்திறங்கின
ஒரு பெரிய
மிருகத்தின் மேல்சருமம்போல்
நீர்ப் பரப்பு
சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது
சர்க்கரைச் சமுத்திரத்தில்
ஒரு ஸ்பூன் போல
கிடந்தது
மொத்தப் பிரபஞ்சமும்

Monday, March 21, 2011

வாழ்வின் கடைசி நாள்

நம்பமுடியாத ஒரு அதிசயமாய்
இன்று
கரிச்சான்கள் கூவும் காலையிலேயே
விழித்துவிட்டேன்
குடிப்பதற்கும் படிப்பதற்கும்
முன்னிரவில் எதுவும் இல்லை
என்பது காரணமாகஇருக்கலாம்
இணையத்தில் வழிந்த
எல்லா நீலப படங்களிலும்
கொட்டிய உடல்கள் எல்லாம்
பார்த்தவையே என்பதால் இருக்கலாம்
கை போட்டுத் தூங்க மனைவியோ
கால் போட்டு உறங்க
மகளோ இல்லாததால் இருக்கலாம்
கள்ளத்தில் புணர்பவள்
திடீரென்று திருந்தி
கண்ணகியாய்
மாறி விட்டதால் இருக்கலாம்
இருந்த ஒரே வேலையைக் கூட
இழந்து விட்டதால் இருக்கலாம்
கல்லும் கடவுளும் கருத்தில்
எப்போதோ
ஒன்றாய்க் கலந்துவிட்டதால் இருக்கலாம்
இரவில் எதுவும்
சாப்பிடாததால்
இரையும் வயிறாய்க் கூட இருக்கலாம்
அல்லது
இன்று நான் தற்கொலை
செய்வதாய் இருப்பது கூட
காரணமாக இருக்கலாம்

Sunday, March 20, 2011

சோற்றுக் கணக்கு

ஒருநாள் காலை நடையில்
எங்கிருந்தோ
பின்னாலேயே வந்துவிட்டது அது
வெள்ளையும் பழுப்புமாய் ..
மிதக்கும் பெரிய கண்ணுமாய்
குட்டி வாலை
சக்கரம் போல்
சதா சுற்றிக் கொண்டு
ஒரு நாட்டு நாய்க்குட்டி ..

என் மகன் அதை
வளர்க்க மிக விரும்பினான்
மகளோ வெகுவாகப்பயந்தாள்
மனைவிக்குக் கருத்தேதுமிலை
நான் யோசித்தேன்
நாய்க்கு ஆகாரச் செலவு
ஆரோக்கியச் செலவு
கடிக்கும் அபாயம்
எல்லாவற்றையும் கணக்கிட்டு நிராகரித்தேன்
நிராகரிப்பை அறியாத
நாய்க் குட்டி இன்னமும்
மூடிய கேட்டின் வெளியே
வெயிலில் காத்திருந்தது
நான் வெளியே வரும்போதெல்லாம்
வாலாட்டி விண்ணப்பித்தது
நான் அதன் கண்களை
சந்திக்க மறுத்தேன்
சாப்பாடு போடப் போன
மனைவியைத் தடுத்தேன்

நாய்க்குட்டி
அலுவலகம் போகையிலும்
என் பின்னால் வந்தது
அளவில் பெரிய தெரு நாய்கள்
துரத்திவந்த போது
அது என் கால்களோடு
ஒடுங்கிப் பதுங்கிக் கொண்டது
நான் அது என் நாயல்ல
என்று அந்த மற்ற நாய்களிடம்
உடல் மொழியால் தெரிவித்தேன்
அவை அவற்றை ஆக்ரோஷமாய்ச்
சூழ்ந்து கொண்டன
மாலை திரும்புகையில்
அது போயிருக்கும் என நினைத்தேன்
ஆனால் அது வீட்டுக்கு வெளியே
இன்னமும் வாட்டமாய்க் கிடந்தது
அதன் பச்சை உடலில்
கசிந்துகொண்டிருந்த காயங்களை
நக்கிக் கொண்டிருந்தது
நான் கேட்டைக் கவனமாய்
அதன் மீது சாத்தினேன்
மகளும் மனைவியும்
இப்போது அதை வளர்க்கலாமே என்றார்கள்
நான் உறுதியாய் மறுத்தேன்
வாழ்க்கை உணர்வுகளால் மட்டும் ஆனதல்ல
என்று அவர்களுக்குச் சொன்னேன்
வாழ்வு கணக்குகளாலும் ஆனது
என்றதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை

இரவு முழுவதும்
அது தன் சிறிய குரலால்
என்னை அழைத்துக் கொண்டே இருந்தது
ஏதோ ஒரு நொடியில்
அதன் குரல் கம்மி நின்றது
அப்புறம் அது கேட்கவேயில்லை.

எல்லோரும் எழுந்து
ஜன்னல் வழி பார்த்தார்கள்
போய் விட்டது என்றான்
மகன் பாதி அழுகையாய்
மனைவி முகத்தில் கசப்பிருந்தது
மகள் விசும்பிக் கொண்டிருந்தாள்
நான் திரும்பிப் படுத்துக் கொண்டேன்
நான் சீக்கிரமே உறங்கவேண்டும்
நாளை எனக்கு
நிறைய வேலை இருக்கிறது

Saturday, March 19, 2011

நான் அழகி அல்ல

அழகற்ற பெண்ணாய்
இருப்பதில்
நிறைய சவுகர்யங்கள் உள்ளன
எந்த ஒப்பனையும்
சீர்ப்படுத்தாது
எந்த உடையும் பொருந்தாது
என்பதால்
உடுத்தும் நேரமும்
ஒப்பனை செலவும் மிச்சம்
ஆடையை அடிக்கடி
இழுத்துவிடத் தேவை இல்லை
மார்ச்சேலை விலகல்
பற்றிக் கவலையின்றி
வாய்பிளந்து
ரயிலில் தூங்கலாம்
காதல் கடிதங்களோடு
யாரும் துரத்த மாட்டார்கள்
காதலித்து மயக்கி
பம்பாயில் கொண்டு விடமாட்டார்கள்
பாத்ரூமில் யாரும்
எட்டிப் பார்க்கமாட்டார்கள்
மொபைலில் படமெடுத்து
வலையில் ஏற்ற மாட்டார்கள்
பேருந்து நெரிசலில்
புட்டத்தில் முட்டமாட்டார்கள்
புகார் கொடுக்கப் போகையில்
போலிசார் வன்புணரும்
அபாயம் இல்லவே இல்லை
இப்படி எத்தனையோ
சவுகர்யங்கள்...


ஒரே ஒரு அசவுகர்யம்தான்
எந்த இடத்திலும்
உங்களை
ஒரு மனுஷியாய்ப்
பார்க்க மாட்டார்கள்...

அதனாலென்ன?

Thursday, March 17, 2011

இடப் பெயர்ச்சி

எரிவெயில் தகிக்க
ஒதுங்கிய
நகரவாசியின் வீட்டிலிருந்து
வேகமாய் ஒருவன் வெளிவந்து
என்ன வேண்டும் உனக்கு
ஏனிங்கு நிற்கிறாய் என்றான்
எரிச்சலுடன்

கொஞ்சம் குளிர் வேண்டும்
என்றேன் அவனிடம்
பிறகு கொஞ்சம் நிழல்
குளிர் தடவிய காற்று
கொஞ்சமே கொஞ்சம் மழை
இந்த இடத்தில்
இன்று நிற்கும்
உன் வீட்டிற்காய்
நேற்று நீ வெட்டியெறிந்த
மரம் தந்தவற்றில்
கொஞ்சமே கொஞ்சம் என்றேன்

Wednesday, March 16, 2011

யாரும் பார்க்காத நட்சத்திரம்

பழைய நூலகத்தில்
பல்லிகள் மட்டுமே உலவும்
பாழிருள் மூலையில்
கவனத்திலிருந்து
முற்றிலும் கைவிடப்பட்ட
அரியதோர் புத்தகம் போல
கேட்பாரற்றுக்
கிடந்தாள் அவள்

தற்செயலாய்
அவளைக் கண்டுபிடித்தவனும்
வேறாரும் அவளை
வாசித்துவிடக் கூடாதென
யாரும் அறியாத
இன்னுமொரு
இருட்டு முடுக்கில்
எடுத்துச் சென்று
ஒளித்துவைத்தான்

Tuesday, March 15, 2011

மண்புழுப் பறவை

வியர்த்தமாய் இறக்கிற
ஒவ்வொரு நாள் மாலையும்
அன்றைய நாளின்
காயங்களை
நக்கிக் கொண்டிருக்கையில்
காதோரம் யாராவது

தவறாது சொல்லிச் சொல்கிறார்கள்
நீ பறவையல்ல
நினைவுகொள்...
பறக்க நினைக்கும்
ஒரு மண்புழு தான் நீ என்று..

ஆனாலும் அவர்களுக்கு
நான் சொல்வேன்
மண் புழுக்களுக்குப் பறப்பது
ஒருவேளை தடுக்கப் பட்டிருக்கலாம்
ஆனால்
கனவு காண்பது
அனுமதிக்கப் பட்டே இருக்கிறதென

Sunday, March 13, 2011

மற்றும் சில கவிதைகள்






1.கதவு திறந்ததும்
கண்ணதிரக் கிடந்தது
கூடம் நிறைய
வெள்ளி துளிரும்
வெளிச்ச விரிப்பு

போகும்போது பத்திரமாகப்
பூட்டிவைத்துப் போன
இருட்டை
களவாடிப் போன
கயவன் எவனென
கூரை மீதேறிப் பார்த்தேன்
திடுக்கிட்டு நகர்ந்தது
திருட்டு நிலா


2.ஒரு சீழ்க் கட்டி போல
ஆபாசமாய்ப்
பழுத்தொழுகிக் கொண்டிருக்கிறது
இந்த நிலா

திரட்டுப் பால்க் கிண்ணம்
போல
முன்பு
தோன்றிய
அதே நிலா

பழைய சிறகைக்
களையும்
பறவையாய்
நீ என்னை
களைந்தோடும் முன்பு..
தோன்றியது அது



3..எழுத்தின்
நாவினால்
உன்னைத் தொடுகிறேன்
முத்தத்தில்
இது ஒரு வகை



4.முள்ளோடு
கலந்தது
முளரி
கள்ளோடு
இறங்கிற்று
கலயம்
கலயத்தில்
புரண்ட
கரு நாவல் துண்டுகள்
உண்ண உண்ணத் தீரா
உயிர்ச்சோறு



5.பெருவழிப் பாதையில்
உறங்கும் சிறு முயல்
கடிக்கும் புதுத் தளிர்
பசித்த வயிற்றுக்குப்
பச்சை ரத்தம்
கொதிக்கும் உலையில்
குதித்துருகும் பறவை


6.இந்தக் குகை
எங்கு முடிகிறது
என்றவனிடம்
உன்னால்
எதுவரை
போக முடிகிறதோ
அங்கு என்றாள்

Friday, March 11, 2011

முத்தம் செய்

முத்தம் செய்வதெப்படி
எனக் கேட்ட
முதிரா முலைப் பெண்ணே..

முத்தத்தைப்
பலவகைகளில் செய்யலாம்

தெய்வத்தைத் தொழுவதைப் போல
பக்தியுடன்
சிலர் செய்வார்
பழம் சாப்பிடுவது போல
பசியுடன் சிலர் செய்வார்
பட்டாம்பூச்சி
பிடிப்பது போல்
பயத்துடன் சிலர் செய்வார்
முள்கரண்டியில்
இறைச்சியைக்
குத்துவது போல
இன்னும் சிலர் செய்வார்
நான் எப்போதும்
முத்தத்தை
யுத்தத்தைப் போலதான்
செய்வேன்

Monday, March 7, 2011

பதினெட்டுக்கு மேல் ஒரு வயது ...

இருந்தால் மட்டுமே 
படிக்கச் சொல்வேன் 
இக்கவிதைகளை....

1 இந்த உதட்டாலா
என்று கேட்டேன்
இந்த உதட்டால்
என்று சொன்னாள்
உதடுகள் பன்மை
என்று
அவளைத் தின்ற பிறகே
தெரிந்தது
வானில்
ஏறிப் பறக்கிறேன்
என்றவனிடம்
நதியில்
இறங்கிக் கரை
என்றாள்
இரண்டும்
ஒன்றெனத் தெளிந்து
மயிர்க் காட்டில்
இறகாய் விழுந்து
தொலைந்தேன்


2.கங்கை
பெருகி
கரையை அசைத்தது
விழுந்த
மரத்தில்
ஏறிக் கடந்தேன் 

நதியின் சுழலை
கடந்தவன் 

தொட்டவுடன் 
கரைந்தே போயிற்று
என்றாள்
கரைத்த விரலைக்
கழுவிக்
கரையில் வைத்தேன்



3.அவள் 
இடுப்பில் 
புதைத்திருக்கும் 
அடுக்குச் செம்பருத்திகளை 
தொடுக்கும்போது
துளிர்த்த ரத்தம்
துறக்கத்தின்
சுனைநீர் என்றேன் 

நீர் மாந்தி 
நீறாகு என்றாள்

Sunday, March 6, 2011

வெயிலென வாழ்ந்து..

இலவங்காய் 
உடைந்து  சிதறுவது போல 
சாம்பல்க் காய்ச்  சூரியன் 
வெடித்துச் சிதறி 
வெளியெங்கும் பறந்தது 
வெயில் தூசு.. 

மஞ்சள்த் தூமை 
திரண்டுருவான
அரக்கன் போலே 
மண்ணிறங்கி வந்தது வெயில் 

பிறந்ததும்  
அப்பனற்ற 
அசுரச் சிசு போல 
பூமியின் 
ஆழத்தில் உறைந்த 
உயிர்நீர் அத்தனையும் 
முலை சப்பிக் குடித்தது 
குடித்தோங்கி 
பிடரி மயிர் பறக்க 
ஒரு பெருங்  காட்டுக் குதிரை போலவே  
வளர்ந்தது
பச்சைப் பெண்மை 
கண்ட இடமெல்லாம் 
 கதறக் கதற 
கால் பாவிக்  கற்புண்டது
ககனத்தின் சாலைகளெங்கும் 
ஆதிமனிதன் போலவே 
எந்நேரமும் எழும்பிய 
ஊர்த்துவ லிங்கத்துடன் 
அடங்காது 
அணையாது 
அலைந்து திரிந்தது 
யவனத்தின்
பித்தேறி 
கருத்த தொடைகளுடன்
கனத்து  வந்த 
காளி வாய்க் காலத்துடன்  
புணரப் பொருதி
கதிர் சிதற 
உதிரம் பெருகி   
இறந்து போனது 

வீழ்ந்த 
கதிர்விந்தின் துளிகளை எல்லாம் 
காளிப் பெண் காலம் 
அள்ளி அள்ளி 
முகில் முலைகள் தொங்கும் 
கருநீல  
வானமெங்கும் 
விதைச் சோறாய் 
வீசி எறிந்தது
அவை யாவும் 
விண்மீன்களாய் முளைத்து அசைய 
கண்மூடி 
அக ஒளிகேட்ட 
எல்லா அறிவர்க்கும் 
வெயிலென வாழ்ந்து 
வெயிலென வீழ் 
என்று 
மந்திரம் சொல்லி 
மறைந்து போனது 

Friday, March 4, 2011

கண்ணி 4


கண்ணி 3 இங்கே 

எச்சரிக்கை -முதிர் வாசகருக்கானது 


மார்கட் ஸ்டேசனுக்கு கையை ஒரு குற்றாலத் துண்டால் முறுக்கி என்னை அழைத்துப் போனார்கள்.அது கூடத் தேவை  இல்லை.நீ போய் ஸ்டேசன்ல உட்கார்ந்திரு நாங்க வரோம்னு சொல்லி இருந்தால் நானே போய்க் காத்துக் கொண்டிருந்திருப்பேன்.இரவாய் விட்டதால் அதிகம் பேர் கவனிக்க வில்லை.அந்தப் பெண்ணை யாரோ மனகாவலம் பிள்ளை ஆச்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.கணேஷ் பவனுக்குள் அப்பா இது எதுவும் அறியாது சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு அடுத்த பலகாரத்திற்காய் எச்சில் கையைத் தொங்கவிட்டுக் கொண்டு காத்திருப்பதைப் பார்த்தேன்.கூப்பிடத் தோன்றவில்லை.வேறொரு உலகத்தில் நடந்தது போல போனேன்.அந்தப் பெண் பிழைத்துக் கொள்வாளா என்று யோசித்தேன்.எல்லாமே நீருக்குள் நடப்பது போல அல்லது போதையில் இருப்பது போல மிக மெதுவாக நடப்பது போல இருந்தது.சண்முகம் மீனாக்ஷி ஜ்வேல்லரியில் தன புது மனைவியுடன் பாயில் காலை மடித்து அமர்ந்து வளையல் பார்த்துக் கொண்டிருந்தான்.புஸ்சென்று சீறிய பெட்ரோமேக்ஸ் வெளிச்சத்தில் பருத்திப் பால் சாப்பிட்டுக் கொண்டிருந்த கும்பலில் இருந்து ஒருவன் தெரிந்தவன் போல கையசைத்தான்.சட்டென்று அடையாளம் தெரியவில்லை.யாரோ ஒருத்தர் 'இது ஆறுமுகம் பிள்ளை மவனுலா' என்று சொன்னது கேட்டுத் திரும்பி 'அவர் கணேஷ் ஹோட்டல்ல போண்டா சாப்பிடுறாரு என்றேன் சம்பந்தமில்லாமல்.

சரேலென்று சூடாய் அருவி போல சிறுநீர் பெய்து கொண்டிருந்த வண்டி மாடுகளைத் தாண்டி சரித்து வைத்திருந்த கூண்டு வண்டிகளை கத்தி கரண்டி எல்லாம் பரப்பியிருந்த  கடைகளைத் தாண்டி சிகப்பு வெள்ளை பெய்ன்ட் அடித்த ஸ்டேசனுக்குள்  போனபோது மின்சாரம் இல்லை.ரைட்டர் மட்டும் சட்டையில்லாமல் முழுக் கை பனியனோடு சிம்னி விளக்கில் காலாட்டிக் கொண்டு பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டு அமர்ந்திருந்தார்.
எங்களைப் பார்த்து விசிறலை நிறுத்தாமலே  ''ஏலே என்னா''
கூட வந்தவர்கள் மூச்சிரைக்க ''ஒரு சின்னப் பெண்ணுகிட்ட தப்பா நடந்துகிட்டாரு''என்றார்கள்.

''அப்படியா பொண்ணு என்னாச்சு சம்பவம் எங்கே''

''மாதா கோயில் தெரு''
அவர் யோசித்து ''அது நம்ம எல்லைக்குள்ள வருமா தெரிலையே''என்றார்.''இருங்க எஸ் ஐ மினிஸ்டர் காவலுக்குப் போயிருக்கார்.ஏட்டு வந்துடுவாரு விஞ்சை விலாஸ்ல நன்னாரி பால் சாப்பிடப் போயிருக்காரு.எழவு கரண்டு வேற இல்லை இருங்க ''


நான் அங்கிருந்த பெஞ்சில் அமர முயல ''ம்ம்ம் ''என்று கண்களை உருட்டி உறுமினார்.''கீழே இருலே அக்ய்யூச்டு நீதானே '

கூட வந்தவர்கள் குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தார்கள்.கொஞ்ச நேரத்தில் ஏட்டு வந்தார்.கையில் கூஜாவுடன் ''எளவு கடைக்குள்ளேயே போக முடில பார்வதி ல படம் முடிஞ்சவநேல்லாம் எறிக் கிடக்கான் உள்ளே.''என்றவர் என்னைப் பார்த்தார்.''ஏலே என்னா''
அவர் அப்பாவின் நண்பர்.''மாமா வணக்கம்''
''வணக்கமிருக்கட்டும்..நீ என்னாலே இங்கே குத்த வைச்சிருக்கே''
கூட வந்தவர்கள் உற்சாகம் பெற்று நான் ஒரு அப்பாவி சின்னப் பெண்ணைக் கெடுக்க முயற்சித்த கதையை மீண்டும் சொன்னார்கள்.அவர் முகம் கருத்தது.அருகில் வந்து சட்டென்று என் முகத்தில் அடித்தார்.''சவத்து மூதி அப்பன் பேரைக் கெடுத்திட்டியே''
நன் முகத்தை மூடி குனிந்து உட்கார்ந்திருந்தேன்.ஏனோ சிரிப்பாய் வந்தது.கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டேன்.அவர் அதைப் பார்த்து ''ஏலே தண்ணி கிண்ணி போட்டிருக்கியா''

ஏட்டுரைட்டரிடம் பொய் ''நம்ம கூட்டாளி மொவன்''
அவர் ''அதுக்கு?''என்றார் 
''கேஸ் எதுவும் எழுதவேண்டாம்.நான் எஸ் ஐ கிட்டே பேசறேன்''
அவர் சற்று நேரம் மௌனமாக இருந்தார் 
''என்னமும் பண்ணித் தொலையும்''என்றார் பிறகு. 
ஏட்டு வெளியே வந்து கும்பலிடம் ''யார் பொண்ணுடே ''என்று விசாரிக்க ஆரம்பித்தார்.பிறகு சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே போனார்.கொஞ்ச நேரத்தில் பருத்திப் பால் கடையில் பார்த்த ஆள் அப்பாவுடன் வந்தான்.அப்போதுதான் அவன் எனது சித்தப்பா மகன் என்று நினைவு வந்தது.ரொம்ப நெருங்கிய உறவுதான்.ஆனால் ஏன் நினைவு வரவில்லை  என்று ஆச்சர்யமாக இருந்தது.அப்பாவின் கைகள் நடுங்கிக் கொண்டே இருந்தன.''ஏலே ஏலே ''என்று என்னைப் பார்த்து பிதற்றிக் கொண்டே இருந்தார்.ரைட்டரிடம் நெருங்கி கைகூப்பி கரைந்தார்..

ரைட்டர் ''என்கிட்டே பேசிப் ப்ரசொனம் இல்லே எஸ் ஐட்ட பேசணும்''என்றார்.பிறகு ''வல்லனாட்டுக் காரன்.ஏறுக்கு மாறா பேசுவான் பார்த்துப் பேசணும் இல்லைன்னா கோமனத்த உருவிடுவான்''

அப்பா ''இங்க உள்ள ஏட்டு என் சேக்காளி''
''சொன்னான் உம்ம விஷயத்துக்காகத்தான் ஆஸ்பத்திரிக்குப் போய்இருக்கான் எல்லாம் அந்தப் பொண்ணு பொசிசனைப் பொறுத்து இருக்கு உயிருக்கு ஒன்னும் சேதம் இல்லையே''
அப்பாவுக்குத் தெரியவில்லை ''தெரியலியே தெரியலியே ''என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரத்தில் எஸ் ஐ ஜீப்பில் வந்திறங்கினார்.அவர் உடுப்பெல்லாம் ஈரமாய் இருக்க முரட்டு மீசையுடன் கருப்பாய் இருந்தார்.ஒற்றைக் கண் மட்டும் யாரோ அடித்தது போல மிகச் சிகப்பாய் இருக்க.கூட்டத்தைப் பார்த்து கடுப்பாகி ''ஏலே கரண்டு என்னாச்சு ''என்று கத்தினார்.

ரைட்டர் ''போஸ்ட்ல எதோ பிரச்சினை லைன் மேன்வந்திட்டுருக்கான்''என்றார் 
''இவனுங்க எல்லாம் யாரு''
ரைட்டர் அவர் காதோரம் எழுந்து நின்று பேசினார்.எஸ் ஐ கேட்டுவிட்டு என்னருகே சட்டைக் கழற்றிக் கொண்டே வந்தார்.அவரது மேல் நெஞ்சின்  குறுக்கே பளீரென்று யாரோ வெட்டினார் போல ஒரு நீண்ட தழும்பைப் பார்த்தேன்.குனிந்து என் கண்களை உற்றுப் பார்த்தார்.அப்பா மூச்சடங்கி நிற்பதைப் பார்த்தேன்.ஏனோ சுசீந்திரத்தில் நிற்கும் ஆஞ்சநேயேர் நினைவு வந்தது.
அவர் வாயில் சிகரட் நாற்றம் அடித்தது ''சுன்னியை வைச்சுட்டு சும்மா இருக்க முடியலே இல்லையா மயிரே''என்றார் 
'வா இன்னைக்கு உனக்கு ஆபரேசன் பண்ணி விடறேன்.பிறகு வாழ்க்கை முழுக்க அது பத்தி கவலயே வேண்டாம்.சரியா என்று என் தலை முடியை இறுகப் பிடித்து மேல்நோக்கி இழுத்தார்.நான் ஆவென்று அலறினேன்.
அப்பா நெருங்கி எதோ சொல்ல வர ''நீ தள்ளிப் போ மயிரே..பிள்ளையா வளத்திருக்கேறு ஒம்ம மவனுக்கு ரொம்ப அரிச்சுதுன்னா ஒம்ம மவ மேல ஏறிக் கிடக்கச் சொல்லுவே . ஊர் மேல விழுந்து எங்க உயிரை ஏம்லே வாங்கறீங்க''

அதற்குள் ஏட்டு மாமா வந்துவிட்டார்.எஸ் ஐ அவரைப் பார்த்து ''என்னவே உங்க ஆளுங்க அழிச்சாட்டியம் தாங்கலியே..உங்க வெள்ளாளக் குசும்பைக் காட்டுதியளோ என்ன... தொலைச்சுப் பிடுவேன்.''
ஏட்டு நெருங்கிப் போய் அவரிடம் எதோ கூற சற்று தணிந்து என் முடியைவிட்டு விட்டு  அப்பாவைப் பார்த்து ''அந்தப் பொண்ணு யாரு''
''எதோ வீட்டு வேலை செய்யற பொண்ணு ''
''எங்கே உள்ளது''
''எங்கயோ நான்குநேரி பக்கம்'னு சொன்னாங்க''
''என்ன ஆளுவே அதைச் சொல்லு''
அப்பாவுக்குத் தெரியவில்லை 
ஏட்டு மறுபடியும் ஏதோ நெருங்கிச் சொல்ல ''தப்பிச்சீறு ''என்றார்.பிறகு யோசித்து ''கொஞ்சம் வழிபாடு செய்யணும் .இல்லைன்னா ரொம்ப சங்கடம் ''என்றார்,''''புரியுதா அதுக்கான ஐவேசு உண்டுமா'''
அப்பா புரியாமல் ஏட்டைப் பார்த்தார்.ஏட்டு அவரிடம் நெருங்கி கிசுகிசுத்தார் அப்பாவின் கண்கள் அகல விரிந்தன 
''அத்தனை முடியாதுவே;
''இல்லைன்னா குறைஞ்சது ஏழு வருஷம் உள்ள உம்ம புள்ள... மனசில வாங்கிக்கிரும்.ரேப் கூட இல்லை கொலை முயற்சி ஒம்ம மவன் கழுத்தைப் பிடிச்சு நெரிச்சிருக்கான் .உசிருக்கு ஆபத்தில்லை ஆனா பொண்ணு பேச முடியுமான்னு தெரிலன்னு டாக்டர் சொல்றார் ''

அப்பா பிரமை பிடித்தது போல அங்கேயே நின்றிருக்க எஸ் ஐ கண்களாலேயே ஏட்டுவிடம் என்ன என்றார்.அப்பா துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டு ''கொஞ்சம் பொரட்டனும் இரண்டு நாளாவும் ''
எஸ் ஐ ''அது வரை அவன் இங்கே இருப்பான்''என்றார் ''சீக்கிரம் வந்திடும் ரொம்ப நாள் எழுதாம வைச்சுக்க முடியாது .எஸ் பி யாராவது வந்தாம்னா என் தொப்பியைக் கழட்டிடுவான்'

அப்பா தளர்வாய் நடந்து வெளியே போவதைப் பார்த்தேன்.சைக்கிளை சித்தப்பா மகன் ஓட்ட பின்னால் ஏறிப் போகும் போது என்னைப் பார்க்கவே இல்லை 
எஸ் ஐ ''யோவ் டாக்டர்கிட்டே சொல்லிட்டீரா அவன் ஏதும் எழுதிரப் போராம்''


தரையில் உட்கார்ந்திருப்பது எனக்கு சிரமமாக இருக்க அது பற்றி சொல்ல எழுந்த பொது இன்னுமொரு ஆளைக் கொண்டு வந்தார்கள்.கருப்பு வேட்டியும் அழுக்கு வெள்ளைச் சட்டையுமாய் மேல் பாக்கட்டில் பல்வேறு நிறங்களில் துண்டுத் துணிக்களுமாய் இருந்தான்.அடர்ந்து வளர்ந்திருந்த தாடி மீசை எங்கும் சளியும் எச்சிலும் ஒழுகி காய்ந்திருந்தது ''ஏலே இவன் மெண்டல் மாதிரிலா இருக்கான் ''என்றார் ரைட்டர் 
'நெல்லையப்பர் கோயில் வாசலில் பிச்சை போடக் குனிந்த சேட்டுப்பெண்ணின் முலையைப் பிடித்துவிட்டான் என்று சொன்னார்கள் 
''ஒக்காளி இன்னைக்கு முழுசா இதுதான் கேசு போல''என்று எஸ் ஐ உரத்துச் 
 சிரித்தார் .
''எந்தூருக்காரன் எலேய் உம்பேரு என்னா''என்றதற்கு 
அவன் ''man is my name.my name is man''
எஸ் ஐ 'அட இங்கிலீசு ''என்றார் ''படிச்ச பய.அது சரி சேட்டச்சி முலைய ஏன் பிடிச்சே''
அவன் மேலே பார்த்துக் கொண்டு ''களபக் கவி முலை ''என்றான்.பிறகு என்னைப் பார்த்துச் சிரித்து ''எத்தனை பேர் தொட்ட முலை!''
எஸ் ஐ அசந்துவிட்டார் என்று தெரிந்தது ''ஏலே என்ன சொல்றான்''
ஏட்டு மாமா சற்று தீவிரமான குரலில் ''சித்தர் பாடல் சார்.ஒருவேளை எதுவும் சித்தரா இருக்கப் போகுது''
எஸ் ஐ அவனை மேலும் கீழுமாய் பார்த்தார் பிறகு சற்று இகழ்ச்சியான குரலில் ''இந்த சாமியார்ப் பையனுங்கதான் இப்ப இந்த வேலையெல்லாம் செய்யறாங்க.கேட்டா தஸ்ஸு புஸ்ஸுன்னு பேசறாங்க இரண்டு பேரையும் உள்ளே அடைச்சி வை நாளைக்கு வந்து பார்க்கறேன்.ரொம்ப டயர்டா இருக்கு உன் ஆளு நாளைக்கு சாமானோட வருவானா''
''வருவாரு சார் குறிச்சி பக்கம் கொஞ்சம் நிலம் இருக்கு அவனுக்கு ''
''.அப்பன் ரத்தத்தை பையன்மாருஎப்படி எல்லாம் செலவழிக்கான் பார்த்தீரா'''என்றவரே வெளியிலிருந்த புல்லட்டில் கிளம்பிப் போனார். 

நானும் அந்த ஆளும் உள்ளிருந்த செல்லில் அடைக்கப் பட்டோம் உள்ளே வேறு ஆள் இல்லை.இருட்டாகவும் தூசியாகவும் இருந்தது இருட்டில் என மீது ஏதோ கிறீச்சிட்டு ஏறி ஓடியது ஏட்டு மாமா சாப்பிட இட்லி வாங்கி வந்தார் என்னால் சாப்பிட முடியவில்லை பக்கத்தில் இருந்தவனிடம் கொடுத்துவிட்டேன்..அவன் இரண்டு கைகளாலும் அள்ளிச் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.சாப்பிட்டுவிட்டு அவன் பீடி இருக்கா என்றான்.நான் இல்லை என்ற பிறகு தளர்ந்து அமர்ந்தான்.என்னை உற்றுப் பார்த்து சிரித்தான்''ரொம்ப நாளா கண் முன்னால ஆட்டிட்டே இருந்தா இன்னைக்குத் தாங்கலே பிடிச்சுட்டேன்''என்றான் ''நல்ல விளைஞ்ச  பேரிக்காய் மாதிரி பெருசு''

நான் பேசவில்லை அலுப்பாக இருந்தது .அப்படியே சரிந்து படுத்துவிட்டேன்.விழித்தபோது மின்சாரம் வந்திருந்தது மேலே நேர் எதிரே ஒளிர்ந்த மஞ்சள் பல்பின் மீது விழித்து கண் கூசி எழுந்து உட்கார்ந்தேன்.கூட இருந்தவனைக் காணவில்லை.அவன் கம்பிகள் அருகே போய் உலுக்கிக் கொண்டிருந்தான்.ரைட்டர் மட்டுமே ஸ்டேசன் உள்ளே இருந்தார் .சத்தம் கேட்டு எழுந்து வந்தார் ''எலேய் என்னா ''அவன் ''ஒண்ணுக்குப் போனும் ஒன்னுக்கு போனும் ''என்றான் 
உள்ளே கழிப்பறை எதுவும் இல்லை அவர் சற்று நேரம் யோசித்து போய் வெளியே நின்றிருந்த காவலாளியுடன் வந்தார்.அவன் கதவு திறந்து ''வா ''என நான் விழித்திருப்பது கண்டு ''இரு ''என்று கையமர்த்தினார்.கதவு திறந்து கொண்டு என் அருகில் வந்து குனிந்து பார்த்தார் ''அய்யா சவுகர்யமா இருக்கீங்களா.தூக்கம் வரலியா '''

''கொசு கிசு கடிச்சா சொல்லுங்க சரியா ''என்றார் 
நான் சரி என்றேன் 
''அய்யா சரியா சாப்பிடவே இல்லை போலயே.. உடம்பு முக்கியமில்லையா.பிறகு எப்படி நாளைக்கு இன்னொரு பொட்டச்சி மேல ஏற முடியும்?''
அவர் கண்கள் மினுமினுத்தன.மூச்சு சிதறுவதை கேட்டேன்.அவர் பனியனில் இருந்து வந்த வேர்வை வீச்சத்தை நன்கு உணர முடிந்தது.பிறகு பணம் இருந்தா என்ன வேணா பண்ணலாம் இல்லைடே?''என்றார்.
நான் பேசாமல் இருந்தேன் .என் கைகள் நடுங்குவதைப் பார்த்தேன்.இதற்கிடையில் சித்தன் எங்கள் அருகில் வந்து ''அய்யா ஒன்னுக்கு''என்றதைப் புறக்கணித்து 
''உனக்கொரு அடையாளம் வைக்கணுமே இல்லைன்னா ஊர் முழுக்க ஏறுவே நீ ''
''அய்யா ஒன்னுக்கு''
'ஏறிட்டு பின்னாலேயே சரி பண்றதுக்கு உங்கப்பன் காசோட வருவான்.இல்லே?.இங்கே உள்ள கூதியுள்ளவைகளும் அதை வாங்கிட்டு போ இன்னும் பாவப் பட்டப் பொண்ணுங்க பூனாவைக் கிழிச்சுக்கோன்னு விட்டுடுவாய்ங்க இல்லே ?''

நான் சுவரோட சாய்ந்து நெருங்கி ஒடுங்கி உட்கார்ந்தேன் அவர் கண்களைத்  தவிர்த்தேன்.அவரது உடல் உஷ்ணத்தைக் கூட இப்போது உணர முடிந்தது  

அதற்குள் சித்தன் இன்னும் நெருங்கி ''அய்யா ஒன்னுக்கு ''
அவர் என்னை நெருங்கி லத்தியால் கழுத்தில் அழுத்தி  ''வாயத் திறடா '' என்றார்.
''அய்யா ஒன்னுக்கு ரொம்ப வருது''
நான் திறக்க மறுக்க ''சட்டென்று என் கொட்டையில் மிதித்தார் ''திறலே''
நான் வலியில் ஆ என்று கத்தினேன் 
'அய்யா ஒன்னுக்கு''
அவர் வேகமாகப் பின்னால் திரும்பி ஒன்னுக்குதானே போடா இதுலே.இந்த நாய் வாயிலேயே போடா தாயோளி ''

அவன் ஒரு கணம் திகைத்துப் பின்னர் இளித்தான்.அவனது கருப்பு வேட்டியைத் தூக்கியபோதுதான் கவனித்தேன்.அவனுக்கு விரைவீக்கம் வந்து ஒரு பொதி போல தொங்கிக் கொண்டிருந்தது தீயால் சுட்டது போல கருத்து தோலெல்லாம் ரணமாகி ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்க அவன் என்னை நெருங்கி இளித்துக் கொண்டே அவனது சீழ்ப் பிடித்த குறியைத் தூக்கி என் மீது மூத்திரம் பெய்ய ஆரம்பித்தான் 

Wednesday, March 2, 2011

பறவையுடன் பறத்தல்

நான் 
பெரும்பாலும் 
பறவைகளுடன் பேசுவதில்லை
முயற்சி செய்த 
ஒவ்வொரு தடவையும் 
அது வியர்த்தமாகவே முடிந்தது 
தனக்குப் பறக்கத் தெரியும் 
என்பதை 
பறவைகள் எப்போதும் மறப்பதில்லை 
நமக்குப் பறக்கத் தெரியாது என்பதையும்...

 கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் 
நமக்கு இல்லாத சிறகுகள் பற்றி 
 அவை நினைவூட்டத் தவறுவதுமில்லை 


ஒரு பிச்சைக்காரனிடம் 
கிரெடிட் கார்டுகளை விசிறும் 
பணக்காரன் போல 
சில நேரங்களில் 
அவை மிக 
ஆபாசமாக நடந்து கொள்கின்றன 

நேற்று மதியம் 
தவிர்க்க இயலாதவாறு 
ஒரு பறவையிடம் பேச நேர்ந்தது 
நீ கவிதை எழுதுகிறவனாமே
எனக்கொரு கவிதை சொல் என்றது 
தோள் மீதமர்ந்து ...

சொல்கிறேன் 
ஆனால் அசையாமல் கேட்பாயா
என்று கேட்டுக் கொண்டு 
அதன் தவிட்டுக் கண்களை 
உற்றுப் பார்த்துவிட்டு 
சற்று அவ நம்பிக்கையுடனே தான் 
கவிதை சொல்ல ஆரம்பித்தேன் 
ஆனால் ஆரம்பித்த பத்தாவது வினாடியே 
அது எழும்பிப் 
பழைய படி 
பறக்க ஆரம்பித்து விட்டது 
காற்றில் அலையும் 
ஒரு ஓலைக் காற்றாடி போல 
கண்ணுக்குத் தெரியாத 
தூரிகையின் தீற்றல் போல 
ஒரு பாலே ஆட்டம் போல 
அறையெங்கும் 
பறந்து திரிந்தது
நான் எரிச்சலுற்று நிறுத்திவிட்டேன் 

அது ஏன் நிறுத்திவிட்டாய் 
உன் கவிதை என்னைப் பறக்கத் தூண்டுகிறது என்றது 
இதை எப்படி 
நிலத்தில் கால் பாவி நின்று எழுதுகிறாய் 
ஒவ்வொரு சொல்லும் 
என்னை விண்ணில் ஏற்றுகிறது
என வியந்தது 
பின் சிந்தனையாய் 
இப்போது புரிகிறது எனக்கு 
எங்களுக்குப் பறத்தல் போல 
உங்களுக்குக் கவிதை இல்லையா என்றது  

சரிதானே
எனக்குப் பறக்கத் தெரியாதுதான்
ஆனால் அது 
பறவைக்குக் கவிதை தெரியாதது  போலவேதான் 
இப்போதெல்லாம் 
பறவைகள் முன்பு 
நான் 
தாழ்வுணர்ச்சி கொள்வதில்லை...

LinkWithin

Related Posts with Thumbnails