
டவுன் முனிசிபாலிட்டி மருத்துவமனையில் முடை நாற்ற படுக்கையில் மூட்டைப் பூச்சிகளின் நடுவில் பத்துநாட்கள் இருந்தேன்.பக்கத்தில் ஒருபாய்சன் கேஸ் மூன்றுநாட்கள் எல்லோர் உயிரையும் வாங்கிச் செத்துப் போனான்.மனைவி வேறு யாருடனோ தொடர்பு வைத்திருந்ததை நேரில் பார்த்து விஷம் குடித்துவிட்டான் என்று சொன்னார்கள்.இரண்டு நாட்கள் உணர்வின்றி கிடந்தேன்..அந்த இரண்டு நாட்களும் நிறைய பினாத்தினேன் என்று சண்முகம் வந்து சொன்னான்.''ஏலே..பயந்தாங்குளி ..நீயே உளறிக் காட்டிக் கொடுத்துடுவே போல் இருக்கே'.ஆம்பிலதானலே நீ.இல்ல அலியா.'''
நான் ''பயமெல்லாம் இல்லை.''என்றேன்.பிறகு தயக்கமாக ''அந்தப் பொண்ணு ஊரில இருந்து யாரையும் கூட்டி வந்துடுச்சுன்னா''என்றேன்
''அதெல்லாம் வராது.வந்தா இந்நேரம் வந்திருக்கும்.வந்தாலும் என்ன...நான்தானே பண்ணேன்''
''நான் கூட இருந்தேனே''என்றேன் பலவீனமாய்.'நான் நினைச்சா தடுத்திருக்கலாம்''
''நல்லவேளை நீ தடுக்கலே'என்றான் சண்முகம்.அவன் கண்கள் சட்டென்று உறைந்து நிலைத்தன.''அப்படி பண்ணி இருந்தா அன்னிக்கு நிலைக்கு அங்கியே உன்னைக் கொன்னிருப்பேன்''
வீட்டுக்குத் திரும்பினாலும் நான் உள்ளுக்குள் சரியாகவில்லை என்பதை உணர்ந்தேன்.பகல்களில் பிரச்சினை இல்லை.இரவுகள்தான் நரகமாக இருந்தன.இப்போது பெண்களைப் பற்றிய எனது நினைவுகள் மிகவும் மாறியிருந்தன.எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பதற ஆரம்பித்தேன்.அவர்கள் மீது ஆழமான ஒரு வெறுப்பு கலந்த இரட்டை உணர்வு ஏற்பட்டது.யார் பேச வந்தாலும் அஞ்சி விலக ஆரம்பித்தேன்.ஆனால் இரவுகள் வேறுவகை.இரவுகளில் அவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.சில நாட்கள் அவர்களை வெவ்வேறு கொடூரமான வழிகளில் துன்புறுத்தி ரத்தம் சொட்ட சொட்ட வன்கலவி செய்தேன்..சில நாட்கள் அவ்வாறு செய்துகொண்டிருந்த சண்முகத்தை அடித்து வீழ்த்தி அவர்களைக் காப்பாற்றினேன்.அதன் விளைவாக அவர்கள் எனைக் காதலிக்க முன்வர ஊத்தைப் புனல்குழி நாற்றப் பிறவாசல் என்று தத்துவம் பேசி துறவறம் போனேன்.
ஒருநாள் காலையில் மாடியிலிருந்த என் ரூமிலிருந்து ஜன்னல் வழி தற்செயலாய்க் கீழே பார்க்க அடுத்த சந்து வீட்டின் மேல் கூரை அற்ற பாத்ரூமில் ஒரு பெண் குளிப்பதர்காய்ப பாவாடையைத் தலைமேல் கழற்றி மாற்றும் போது சட்டென்று ஒருகணம் இறகுரித்த கோழி போல் அவள் உடல் சிவப்பாய்த் தெரிந்தது.கைகால்கள் பதறி வாயில் கசப்பு சுரந்து வாந்தி எடுத்தேன்.எல்லாப் பெண்களையும் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட வேண்டுமென்ற வெறி எழுந்தது.''தேவடியாளுங்க தேவடியளுங்க''என்று திட்டிக் கொண்டே இருந்தேன்.அப்போதுதான் தோன்றியது.கடந்த மூன்று மாதங்களாக என் குறி எழும்பவே இல்லை.எனக்குள் ஒரு அச்ச அலை பரவ பீரோவிலிருந்து ஏனோ அந்த தங்கத் திருக்கை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்று அதைப் பார்த்தவனமே கரமைதுனம் செய்ய முயற்சித்தேன்.கண் மூடி அவள் நடு அறையில் நிர்வாணமாக திகைத்து நிற்பதைக் கற்பனிக்க முயன்றேன்..ஆனால் குறி எழும்பவே இல்லை.அது சுருங்கி ஒரு கருகிய பறவை போல் உயிரற்று கிடந்தது.''ஐயோ நான் பேடியாகி விட்டேன்!இயலாமையில் கண்ணீர் பெருகி கன்னத்தில் வழிய கையில் குறியைப் பிடித்துக் கொண்டே பாத்ரூம் சுவரில் சாய்ந்து அழ ஆரம்பித்தேன்.
மதியம் சண்முகம் வீட்டுக்கு வந்தான்.அவனுக்கு கல்யாணமாம்.செய்துங்கநல்லூர் பொண்ணுடே.என்று சொன்னான்.பெண் போட்டோவைக் காண்பித்தான்.பெரிய கண்களும் குழந்தைக் கன்னங்களுமாய் மிக அழகாக இருந்தாள்.அடி வயிற்றிலிருந்து ஒரு பொறாமை கனல் எழுந்தது.சண்முகம் சந்தோசமா இருந்தான்.ஆள் வேறு சதை போட்டு வசீகரமாக இருந்தான்.அந்த இரவுக்குப் பிறகு அவன் தினம் தினம் அழகாகிக் கொண்டே போகிறான் என்று தோன்றியது.அவன் பேசப் பேச அவன் மேல் வெறுப்பு கூடிக் கொண்டே இருந்தது.எப்போது போகப் போகிறான் என்று இருந்தது.
அன்று மாலையில் குளித்து பவுடரெல்லாம் பூசிக் கொண்டு மேட்டுத் தெருவில் அப்பா சொன்னாரென்று கடன் கொடுத்திருந்த வீடு ஒன்றிற்குப் போனேன்.இன்றைக்கு எல்லாம் தந்துறதா சொன்னான்.போய் வாங்கிட்டு வந்துடு என்றார்.போன போது அவர் இல்லை.ஒரு கிழவன் பீழைக் கண்களுடன் சொக்கலால் பீடி பிடித்துக் கொண்டு திண்ணையில் குந்தி அமர்ந்திருந்தான்.''கோயிலுக்குப் போய் இருக்காக ஆச்சியும் ஐயரும் வருவாக .இருங்க.''என்றான்.அடுக்களை இருட்டிலிருந்து யாரோ எட்டிப் பார்த்தார்கள்.பாவாடை தாவணியில் ....அவள்!
ஒரு கணம் நெஞ்சதிர கண்களில் உயிர் பிதுங்கப் பார்த்தேன்.அவள் இல்லை.வீட்டு வேலை செய்யும் சிறுமியாக இருக்கவேண்டும்.அல்லது அவர்களின் பெண்ணா தெரியவில்லை.பாவாடையின் பின் பக்கம் கிழிசல் வழி பளீரென்று ஒரு வெட்டில் தொடை தெரிந்து மறந்தது. பெரிய கண்களும் மாவடு நிறமுமாக அவளைப் போலவேதான் இருந்தாள்..கிழவன் இன்னமும் பீடி குடித்துக் கொண்டிருந்தான்.அவனிடம் ''எப்ப வருவாக''என்றேன்.
''இப்பதான் கிளம்பிப் போனாக அரைமணி ஆவும்.இன்னு பிரதோஷம் இல்லே.நீங்க வருவீங்கன்னு இநேரம்வரை இருந்தாங்க. ''.
நான் போய்விட்டு காலை வருகிறேன் என்று சொல்ல நினைத்தேன்.பெரும்பாலான பிள்ளைமார் வீட்டில் ஆறுமணிக்கு அப்புறம் லட்சுமி வெளியே போயிடுவாள் என்று பணம் தர மாட்டார்கள்.ஆனால் அப்போது விதி போல் சரியாக அந்தப் பெண் வெளியே வந்து ''காப்பி சாப்பிடுங்க''என்று ஒரு கடுத்த திரவத்தை செம்பு டம்ளரில் கொடுத்துவிட்டு மரக்கதவோரம் மார்பை அழுத்திக் கொண்டு நின்றது.காபியை உயர்த்திக் குடிக்கும் போதுதான் அந்தப் பெண்ணின் அக்குள் பகுதியிலும் சட்டை கிழிந்து இருப்பதைப் பார்த்தேன்.கருத்த விரல்களில் அடர் சிகப்பில் மருதாணி இட்டிருக்க டம்ளரை வாங்கிக் கொண்டு பிருஷ்டம் அசைய அடுக்களை இருட்டுக்குள் போனது.நான் வாசலைப் பார்த்தேன்.கிழவனைக் காணோம்.பீடி வாங்கப் போய் இருப்பான்.உடம்புக்குள் ஒரு பாம்பு புகுந்தது போல் அதிர்ந்து கொண்டே இருக்க மெல்ல எழுந்து உள்ளே போனேன்.உள்ளே அங்கனக் குழியில் அது குத்தவைத்து டம்ளரைக் கழுவிக் கொண்டிருக்க சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்து ''தண்ணி வேணுமாண்ணே''என்று எழும்போது சட்டென்றி தாவி அணைத்தேன்.அவள் அதிர்ந்து கண்கள் விரிய ''அண்ணே விட்டிருன்னே''என்றபோது என்னுள் ஏதோ உடைய ''ஒழிஞ்சு போங்க தேவடிய்யளுங்களா''என்று அவள் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தேன்.'
ஒரு புதுச்சொல் கற்றேன்.
ReplyDeleteகதையின் போக்கு புரிகிற மாதிரி இருக்கிறது.
கண்களைப் பார்க்கக் கூடாது என்று நானும் படித்திருக்கிறேன்.. உணர்ந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த ஒரு பெண் எத்தனை நெருக்கத்திலும் கண்களைப் பார்க்க மாட்டார்; இணைப்பே ஏற்படாதது போல் போலிருக்கும் எனக்கு. கண்கள் எதற்கு வாசல் என்பது சரியாகப் புரியுமுன் நிறைய அந்த வாசல் வழி ஓடியிருக்கின்றன.
ReplyDelete'சீரியல்' கதையைத் தொடருங்கள்.