Friday, May 27, 2011

யட்சி


இன்னமும் இருட்டு
பிசுபிசுக்கும்
விடிகாலைக் கருக்கலில்
சுனை நீரில் நாகம் போலே
சத்தமின்றி
தெருக்களில் நழுவி
ஆற்றுக்குப் போனேன்

குளிரில் நடுங்கும்
வடக்கு நட்சத்திரத்தையும்
வழுக்கும் படிகளையும்
தவிர அங்கு
யாருமில்லை
கால்நுனியைத் தின்னப் பார்க்கும்
கருத்த மீன்களை விலக்கி
நீராலான சுவர் போல
தூங்கிக் கிடந்த நதியினுள்
ஆழத் தோண்டும்
ஆராய்ச்சியாளன் போல
குனிந்தபோதே
அவளைப் பார்த்தேன்

இன்னுமொரு சருமம் போல
போர்த்தியிருந்து
வெள்ளைத் துண்டைதவிரக்
அவளது கருத்த முலைக் குன்றுகள் மேல்
எதுவும் அணிந்திருக்கவில்லை
முலை வடிந்திறங்கிய
அந்த இடத்தில்
குழிந்த சுழலில் இருந்து
அவள் மதனம்
காட்டருவி போல்
பெருகி பெருகிவந்து
நதியோடு கலந்து கொண்டே இருந்தது
நதி முழுக்க
நசுங்கிய மல்லிப் பூக்களைப் போல்
அது மணத்தது
விடி வெள்ளிக்கு முன்பே
தினமும்
பாலை மரத்திலிருந்து
இறங்கிக் குளிக்கும்
மனிதர்கள் பார்க்கக் கூடாத
யட்சி அவள் என்று அறிந்தேன் நான்
அச்சத்தின் குளிரையும் மீறி
காமத்தின் வெம்மை
என்னுள் தணலாய் எழுந்தது
என்னையும் மீறி
ஒரு கூரிய அம்பு போல்
என் குறி எழுந்து
அவளை நோக்கி
நீந்திச் சென்றது

காமத்தின் தொடுகை
அறிந்து திரும்பினாள் அவள்
அரத்தால் அறுத்துக் கட்டியது
போன்ற கண்கள்
புதிதாய் திறந்த
புண் போன்ற செவ்விதழ்கள்
அடியில் மினுங்கும்
வாள்போன்ற பற்கள்...

அவள் என் காமம் கண்டு
புகையும் எரிகாட்டில் அலையும்
கூகையைப் போன்று
எட்டுத் திக்கும்
எதிரொலிக்க நகைத்தாள்

''ஓராயிரம் சலிப்பான
நாட்களும் இரவுகளும்,
உக்கிரமாய் உடலின்
கடைசி அணு  வரை
வாழும் ஒரு இரவும்...
எது வேண்டும்
நீயே தேர்ந்தெடு ''என்று உத்தரவிட்டாள்

நான் யோசிக்கும் போதே
அவளது ஒற்றை ஆடையையும்
அலை பிடித்திழுத்துப்
பசியுடன் தின்றது

கருத்த வெண்ணை போலே
நிலவொளியில் மினுங்கும் அவள் உடல்,
கல்லுரளி போன்று
முரணும் அவள் முலைகள்,
கருஞ்சுழியாய்க் காலத்துக்குள்
கரைந்து கரைந்து போகும்
அவள் யோனி
எல்லாவற்றையும்
நான் பார்த்து பார்த்து
ஒரு யுகம் போலே நின்றேன்
பிறகு நீண்டதொரு
பெருமூச்சுடன்
''ஓர் இரவு''என்றேன்

19 comments:

  1. போகன்,
    எனது தேர்வும்கூட, 'ஓர் இரவு' தான்....!

    ReplyDelete
  2. பெண் இத்தனை அழகா? இத்தனை உணர்ச்சிகளை ஊட்டுபவளா ?
    ஆணாய் பிறந்திருக்கலாமோ ????
    -பிறந்திருந்தால் எனது தேர்வும் ஓரிரவே !!

    ReplyDelete
  3. oor iravu maaya endru vidintha pothu therinthu vidum

    ReplyDelete
  4. மிகவும் அருமை! வார்த்தை தேர்வுகளும், உவமைகளும் கொள்ளை அழகு. சுனை நீரில் நாகம் போல் சத்தமின்றி நழுவி செல்வது......... ஆரம்பமே பிரமாதம்.
    அரத்தால் அறுத்து கட்டியது போன்ற கண்கள், புதிதாய் திறந்த புண் போன்ற செவ்விதழ்கள், அவள் சிரிப்புக்கு புகையும் எரிகாட்டில் அலையும் கூகை..... கற்பனை செய்து கூட பார்க்க முடியாத கற்பனை. எனினும் ரசிக்க முடிந்தது. ஒரு பெண்ணை இது போல வர்ணித்ததை நான் இது வரை படித்ததில்லை.
    //அவளது ஒற்றை ஆடையையும் அலை பிடித்திழுத்துப் பசியுடன் தின்றது// :)
    மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  5. yaathae yaathae yaathae ....

    ReplyDelete
  6. அட்டகாசமான பின்னூட்டம் Nanum!

    ReplyDelete
  7. நான் ஒரு கருத்தில் பின்னூட்டம் எழுத எண்ணியிருந்தேன் - எழுதவில்லை. பார்த்தால் உங்கள் பின்னூட்டம்! போகனின் கருத்தும் வெளிப்பாடும் படிப்பவர்களை பாதிப்பது பற்றி எண்ணத்துடன் பின்னூட்டமிட நினைக்கையில், 'ஆணாகப் பிறந்திருக்கலாமோ?' என்ற உங்கள் பின்னூட்டக் கேள்வி-பதிலின் பின்னே புதைந்திருப்பதாக எனக்குத் தோன்றிய blunt humorஐ மிகவும் ரசித்தேன்.

    'பெண்ணாகப் பிறந்து போகனிடம், 'என்னைப் பற்றி ஒரு பாட்டு பாடும் புலவரே' என்று கேட்கத் தோணுதே?' என்பதே நான் எழுத நினைத்தப் பின்னூட்டம் :)

    ReplyDelete
  8. அதே அதே அதே !!! :) :) :) .....எனக்கும் கூட அப்படி கேட்கத்தான் ஆசை, அப்பாதுரை. ஆனால், போகன் பஸ் ஏறி கிளம்பி வந்து விட்டால் என்ன செய்வதென்று, அடக்கி வாசித்தேன். By the way .....Bogan doesn't even have time to answer this. இதற்குத்தான் நேரம் இருக்கப் போகிறதா ?

    ReplyDelete
  9. நேரமில்லை என்பதில்லை என்பதெல்லாம் இல்லை நானும் கடவுள்..நான் எழுதி முடித்தவுடனே அதிலிருந்து தற்காலிகமான ஒரு மன விலகலையும் சில நேரங்களில் ஒரு வெறுப்பைக் கூட அடைகிறேன்.ஒரு விதத்தில் இது ஒரு ஆண் உணர்வு.கூடலுக்குப் பிறகு அதன் மேல் ஏற்படும் தற்காலிக வெறுப்பைப் போன்றது அது.தவிர பாராட்டுகளை ஏற்றுக் கொள்வதில் இயல்பான ஒரு கூச்ச உணர்வும் தான் காரணம்.சிலருக்கு கொடுப்பதில் பிரச்சினை இருக்கும் சிலருக்குப் பெறுவதில்.some people dont know how to accept love also..மற்ற படி தொடர்ச்சியாக படித்து தங்கள் நேரத்தை செலவிட்டு பின்னூட்டமிடும் நீங்கள் அப்பாதுரை, பத்மா ,மீனாட்சி ,சமீப காலமாக யோகி இன்னும் பலரை விட நான் நேரமற்றவன் என்ற பாவனையில் இல்லை ..இது ஏற்கனவே பலர் சுட்டிக் காட்டிய குறையே ..என்ன செய்வது சற்றே சோம்பேறியான சிறுத்தை சட்டென்று தன் புள்ளிகளை மாற்றிக் கொள்ள மறுக்கிறது

    ReplyDelete
  10. சோம்பேறி சிறுத்தைக்கு, புன்னகைகள் பல !! உங்கள் பதிலுக்கு நன்றி. மற்றபடி உங்களின் எண்ணவோட்டம் புரியாமலில்லை. புரிந்ததாலேயே இதுவரை தொந்தரவு செய்யவுமில்லை, அவமரியாதையாய் எண்ணி விலகவுமில்லை. தொடர்ந்து துரத்துகிறோமே :). ஆணின் உணர்வாக நீங்கள் குறிப்பிட்ட அந்த உணர்வும் , கூச்சமும் பெண்ணுக்கும் உண்டானதே. ஆகவே அதை பொதுவிலேயே வைப்போம். எனக்கும் கூட பெற்றுக் கொள்வதில் பெரும் தயக்கம் உண்டு. உங்கள் புள்ளிகள் அப்படியே இருக்கட்டும். சில சமயங்களில், மாறாத புள்ளிகள் அதிசயமும், ஆச்சரியமும், கம்பீரமும் நிறைந்தவையாகவும் இருக்கக் கூடும். ( சும்மா டீஸ் செய்யத்தான் அந்த பின்னூட்டம் )

    ReplyDelete
  11. ஆனாலும், உங்களை பேசவைத்துவிட்ட சந்தோசமும் இல்லாமலில்லை. :௦ )

    ReplyDelete
  12. பேசா மடந்தையாய் இருப்பதால் நான் தவ முனியும் அல்ல.. அதிகம் பேசுவதால் நீங்கள் சாதாரண மனிதரும் அல்ல!

    ReplyDelete
  13. பதினைந்து வருடங்கள் இருக்கும்.. பெரிய கோர்பரேட் வேலையில் இருந்தபோது ஒரு வெள்ளிக்கிழமை மாலை என் அலுவலகத்துக்கு வந்த 'டேவிட்' என்பவர், வரும் திங்கட்கிழமையிலிருந்து தான் 'டயேன்' ஆகப்போவதாகச் சொல்லிப் போனதும் எல்லாரும் திடுக்கிட்டுப் போய் திங்கட்கிழமை டயேனை எப்படி வரவேற்பது என்று HR consultantகளைக் கொண்டு வாரம் முழுதும் விரட்டியது நினைவுக்கு வந்தது. david went all the way to become diane! போகனைத் தெரிந்திருந்தால் ஒரு transformation கவியெழுதச் சொல்லியிருக்கலாம்! (just kidding, bogan :-)

    போகன் பஸ்ஸைப் பிடித்து வந்துவிடப்போகிறார்! சிரித்து ரசித்தேன். உணர்வுகளைப் பொதுவில் வைத்தது சரியே, Nanum.

    போகன், நீங்கள் தவமுனி அல்ல என்பதைப் புரிந்து கொண்டேன்; Nanum சாதாரண மனிதர் அல்ல என்பதையும் அறிந்து கொண்டேன் (முடிந்தால் நசிகேத வெண்பா பக்கம் வந்து பாருங்கள்)

    ReplyDelete
  14. Do you mean David went a......ll the way?)))

    ReplyDelete
  15. yes, inside out transformation. பெண்மையின் முழு உணர்வையும் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தார். மாதச்சிக்கல்கள் தவிர மற்ற எல்லாவற்றையும் சிகிச்சை வழியாகப் பெற முடிந்தது. முழுமையான மாற்றத்துக்கு சில ஆண்டுகள் ஆயின. இப்போது யூரப்பில் எங்கேயோ யாருடனோ பெண்மையின் உணர்வுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்வி :)

    சொத்தை இப்படிச் செல்வழித்தாரே என்று அப்போது நினைத்தேன். உங்கள் கவிதையைப் படித்ததும் சில motivationகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. really.

    ReplyDelete
  16. கவிதை படித்து,ரசித்து மீள்கையில் பின்னுட்டங்களைத் தாண்டி வெறுமே பயணிக்க இயலாமல் அவற்றிலும் மூழ்க வேண்டியதாகிறது...அருமை!

    ReplyDelete
  17. போகன் கவிதைகளில் நான் மிகவும் ரசித்த கவிதை இது. சிறந்த கவிதையும் கூட. 'தென்றல் சரவணன்' உங்களால் நான் இந்த கவிதையை மீண்டும் ஒரு முறை அல்ல, சில முறை படித்தேன். ஒவ்வொரு முறையும் ரசித்தேன்.

    Bogan, this is a fabulous poem.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails