ஒரு தனித்த இரவாய்ப்
போயிற்று இது
மூடிக் கிடக்கும்
பெரிய வீட்டில்
ஒற்றையாய் அலையும்
பூனை போல திரிகிறேன்
கடிகாரம் உதிர்க்கும்
மணித் துளிகள்
பெருகிப் பெருகி
வெறுமையை நிரப்புவதைப் பார்த்துக் கொண்டு..
காட்டின் வாசனை
இன்னமும் வீசும்
புத்தகங்களை மேய்கிறேன்
உலகப் பெருங்கவிகள்
உதிரம் கொண்டு எழுதியவை அவை ..
உயிர் கொடுத்திசைத்த
இசைத் தட்டுகளை வருடுகிறேன்
கந்தர்வர்களின் மூச்சுக் காற்று
அவையெல்லாம்
என அறிவேன்
ஆனாலும் எதிலும்
ருசியற்று
சலித்தது மன நாக்கு..
உறை பனி மேல்
விழும்
தீத் துளிகள் போல
அவை யாவும்
கடுங்குளிரில் அவிந்தன
கரை நனைத்தோடும்
பெருவாற்றில்
கைகள் அற்றவன் தாகத்துக்குத்
தண்ணீர் இல்லை
யாராலும் கொடுக்கமுடியவில்லை
இறந்தவனுக்கு
போயிற்று இது
மூடிக் கிடக்கும்
பெரிய வீட்டில்
ஒற்றையாய் அலையும்
பூனை போல திரிகிறேன்
கடிகாரம் உதிர்க்கும்
மணித் துளிகள்
பெருகிப் பெருகி
வெறுமையை நிரப்புவதைப் பார்த்துக் கொண்டு..
காட்டின் வாசனை
இன்னமும் வீசும்
புத்தகங்களை மேய்கிறேன்
உலகப் பெருங்கவிகள்
உதிரம் கொண்டு எழுதியவை அவை ..
உயிர் கொடுத்திசைத்த
இசைத் தட்டுகளை வருடுகிறேன்
கந்தர்வர்களின் மூச்சுக் காற்று
அவையெல்லாம்
என அறிவேன்
ஆனாலும் எதிலும்
ருசியற்று
சலித்தது மன நாக்கு..
உறை பனி மேல்
விழும்
தீத் துளிகள் போல
அவை யாவும்
கடுங்குளிரில் அவிந்தன
கரை நனைத்தோடும்
பெருவாற்றில்
கைகள் அற்றவன் தாகத்துக்குத்
தண்ணீர் இல்லை
யாராலும் கொடுக்கமுடியவில்லை
இறந்தவனுக்கு
வாழ்வின் வெப்பத்தை..
fantastic:)
ReplyDeleteகொடுக்கவும் முடியாது.
ReplyDeleteதனிமையின் சொட்டுக்கள் கவிதை பூராவும்.
அருமை.
ஒற்றையாய் அலையும் பூனை - fantastic.. கவிதைக்குள் கவிதை.
ReplyDeleteபுரிய மறுக்கும் பிற வரிகள்.
(ரெண்டு நாளா உங்க ப்லாக் பாதி இறங்கி நின்னுட்டிருந்துச்சு.. கவிதையாட்டம்:-)
பிரமாதம்! மிகவும் இறுக்கமான கவிதை. பலமுறை படித்தேன். கடைசி வரிகள் இன்னமும் மனதில் உழன்று கொண்டிருக்கிறது.
ReplyDelete///யாராலும் கொடுக்கமுடியவில்லை
ReplyDeleteஇறந்தவனுக்கு
வாழ்வின் வெப்பத்தை..////
வெப்பத்தை இழந்த சோகம் மனதை அறுக்கிறது.
அந்த இறந்தவனை தேடிப்பிடித்து வாழ்வின் ருசியை அளித்துவிடும் கருணை பெருகுகிறது.
எங்கே தேடுவது ?
--