Tuesday, April 17, 2012

இலக்கியம் பேசுதல்

சிக்கலான உடைகளிலிருந்து 
அவள் இன்னமும் 
தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறாள் 
பழம் கடிகாரத்தில் 
பனிரெண்டு மணிக்கு 
முன்னிமிடத்தில் 
துடிக்கும் முள் போல 
என் குறி துடித்துக் கொண்டிருக்கிறது.
மேசை மீது 
பாதி குடித்த காபி 
ஆவி விட்டுக் கொண்டிருக்கிறது 
சிகரெட் புகைந்து கொண்டிருக்கிறது 
அவசரமாக நிறுத்தப் பட்ட 
சதுரங்க விளையாட்டு 
காத்திருக்கிறது 
விவாதிக்க விரும்பிக் கொண்டுவந்த புத்தகங்கள் 
பிரிக்கப் படாமலே கிடக்கின்றன 
அவள் கணவன் எப்போது வருவான் 
என்று மீண்டுமொரு தடவை
நான் பதற்றமாய்க் கேட்டுக் கொள்கிறேன் 

இவ்வளவு சீக்கிரம் 
இந்த முனைக்கு வருவோம் 
என எதிர்பார்க்கவில்லை 
பார்த்திருந்தால் 
நான் இன்னும் சற்று முன்னதாகவே 
பத்திரமான நேரத்துக்கு அங்கு போயிருப்பேன் 
அவளும் இன்னும் 
இலகுவான ஆடை ஒன்றை அணிந்திருக்கக் கூடும்

4 comments:

  1. அன்பு போகன்,

    நல்ல கவிதை இது... இந்த முனைக்கு இத்தனை சீக்கிரமாய் வந்துவிடுவது தான் நேர்கிறது அனேக நேரங்களில்... பத்திரமான நேரம் என்று எதுவுமில்லை தானே போகன்?

    பழம் கடிகாரத்தில் பன்னிரெண்டு மணி எதைச் சொல்கிறது என்று யோசிக்கையில் நிறைய மடிப்புகள் திறக்கிறது...

    பாதி குடித்த காபி, புகையும் சிகரெட், அவசரமாய் நிறுத்திய சதுரங்க விளையாட்டு... என்று எல்லாம் பாதியில் தொங்கும் போது, புத்தகங்கள் மட்டும் இன்னும் பிரிக்கப்படாமலே...

    நல்லாயிருக்கு போகன்...

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails