Sunday, April 29, 2012

கால இயந்திரத்தில் ஜாலி ஜம்பர்

ரானா பிரதாப் சிங் 
கடிவாளத்தை இழுத்து 
சேத்தக்கை நிறுத்தினார் 
''மீண்டும் வழி தப்பிவிட்டது''
என்றார் அலுப்பாக.
''அடுத்த முறை ஒரு ஜி பி எஸ் வைத்துக் கொள்ள வேண்டும் ''

ஜாலி ஜம்பர் 
முதுகை உதறிக் கொண்டது 
வலது முன்னங்காலை தூக்கி முகர்ந்து பரிசோதித்தது 
''ஷிட் ''என்று சபித்தது 
''அதுவும் மனித ஷிட்''

அதற்குள் மேலே உட்கார்ந்து கொண்டே தூங்கிவிட்ட 
நெப்போலியனை 
உலுக்கி எழுப்பியது 
அலெக்சாண்டர் விழித்துக் கொண்டு 
''கருப்பழகி 
எங்கிருக்கிறோம்?"'
என்றான் 

அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது 
''இள மழை ''என்றான் 
பாக்சர் குனிந்து 
''இளம் புல்''எனும்போது 
செங்கிஸ்கான் 
தோல் காலணிகளால்
இடுப்பில் உதைத்து 
''இளம்பெண்''என்றான்

ஜிஞ்சர் சுதாரித்து 
''இப்போது கற்பழிக்கலாமா 
என்று தெரியவில்லையே?''
சார்ல்மேகன் குழம்பி 
''எல்லா காலங்களிலும் 
அரசர்கள் கற்பழிக்கலாம்''

''இது எந்தக் காலம்?""
என்று ப்ரு ப்ரு கேட்டது 
ராஜ ராஜன் 
பானையில் தண்ணீர் தூக்கி வந்த பெண்ணை நெருங்கிப பார்த்து 
''தேவை இல்லை 
இவள் பெண்ணே அல்ல
ஜீன்ஸ் அணிந்திருக்கிறாள்''என்றான் 

அவர்கள் குழம்பி நின்ற போது 
வானத்திலிருந்து ஒரு குரல் 
''பவுலே பவுலே 
ஏன் என்னைத் துரத்துகிறாய்?"'என்றது 
கிங் ஆர்தர் தலை உயர்த்திப் பார்த்து 
''இதப் பார்ரா ''என்றான் 
வானத்தில் புகை போல ஒரு பெரிய சிலுவை தோன்றியது 
''நாம் அந்தத் திசை போவோம் ''
என்று சொன்ன கஜினியை 
''நம்பாதே 
அது காபிர்களின் கடவுள் 
அந்த பக்கம் கடல்தான் இருக்கிறது 
தவிர''என்று கூர்ந்து பார்த்து 
''ஒரு அணு உலை வேறு இருப்பது போலத் தெரிகிறது''
மக்னோலியா தடுத்தது 


இவற்றை எல்லாம் 
மரத்தில் இருந்து கவனித்த இரு குருவிகளில் ஒன்று 
''விக்கிரமாத்தித்த ராஜா வும் பட்டியும்''என்றது 
மற்ற குருவி 
''பட்டி என்றால் நாய் அல்லவா?'
இது குதிரை போல் தெரிகிறதே?'' என 
''ஸ்க்ரிப்டில் இல்லாததை  எல்லாம் பேசுகிறாய்
இந்தக் காலக் குருவிகளுக்கு ஒழுக்கமே இல்லை''
என்று முதல் குருவி  கடிந்து கொண்டது 

கேட்டுக் கொண்டிருந்த சார்ல்மேகன் சோர்ந்து 
''குதிரையே நீ இதற்கு முன்பு 
கற்பழித்திருக்கிறாயா""என்று கேட்டான் 
அது திடுக்கிட்டு 
''இல்லை.
ஆனால் ஏன்?''என்று யோசித்தது 

நீண்ட மௌனத்துக்கு பின்பு 
லக்கி  லூக்
குதிரையிடம் ''மன்னிக்கவும் குதிரை மாறிவிட்டது''என்றான் 
ஜாலி சம்பரும் ''ஆம்.
ஆளும் மாறிவிட்டது என்றே தோன்றுகிறது 
காலமும் .
சாரி''
இருவரும் பிரிந்து நடந்தார்கள் 

லக்கி லூக் மவுத் ஆர்கனில் 
கீழ்கண்ட பாடலை இசைத்த படியே போனான் 


''தனிமையே எனது துணைவன் 
தனிமையே எனது இசை...''


ஜாலி ஜம்பர் 
எதிரே வந்த ஒரு பெண் குதிரையைப் பார்த்தது 

சார்ல் மேகனின் கேள்வி நினைவுக்கு வந்து 
''TO DO OR NOT TO DO?"'
என்று யோசித்தபடி அங்கேயே யுகாந்திரமாய் நின்றுகொண்டிருக்கிறது 

4 comments:

 1. hilarious.
  தலைப்பைக் கொஞ்சம் சூட்சுமப் படுத்தியிருக்கலாமோ?
  ஒரு அணு உலை இருப்பது போலத் தெரிகிறது - மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 2. அது கிடக்கட்டு அப்பாத்துரை சார்..நீங்க எதனால எழுத்து சந்நியாசம் போறீங்க ?

  ReplyDelete
 3. சொல்ல நினைச்சதை சரியாச் சொல்லாத வினை.. எல்லாருக்கும் புரியும் நெனச்சது ஒரு சிலருக்கு மட்டும் புரிஞ்ச வினை.. இரண்டுல ஒண்ணு.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails