Monday, February 28, 2011

கூடு

யாரும் வாசிக்கவே இல்லை 
என்றால் கூட 
விழி எரித்து 
சுடும் கவிதைகள் 
எழுதிக் கொண்டேதானிருக்கிறேன் 
யாரும் கேட்கவேயில்லை 
எனினும் கூட 
மனம் மறுகி மறுகிப் 
பேசிக் கொண்டேதான் இருக்கிறேன் 
கடிந்து மறுத்தால் கூட 
காட்டருவி போல் 
காதலைக் கொட்டிக் கொண்டேதான் இருக்கிறேன் 
என்ன செய்வது 
இடிந்து இடிந்து விழுந்தாலும் 
இறுதிவரை 
இந்தச் சுவற்றை 
என்னைச் சுற்றி 
எழுப்பிக் கொண்டேதான் 
இருக்கவேண்டி இருக்கிறது 

உச்சிக் கிளையில் 
காற்று 
கலைக்க கலைக்க 
தினமும் 
கட்டிக் கொண்டேதானிருக்கிறது 
குருவி 
தனக்கான கூட்டை...

3 comments:

  1. அதும் இதும் ஒண்ணா?

    ReplyDelete
  2. தினமும் எட்டிப் பார்த்தாலும் .... இன்று நான் எட்டிப் பார்ப்பதற்குள்
    புதியதாய் முளைத்து விட்டது இந்த கவிதை. :)

    வாசிப்பதற்காக மட்டுமே கவிதைகள் உருவாவதில்லை
    நேசத்திற்காக மட்டுமே இதயங்கள் வாழ்வதுமில்லை.
    எல்லாம் அதனதன் போக்கில் ....

    ReplyDelete
  3. beautiful! பலமுறை படித்தேன்.

    //வாசிப்பதற்காக மட்டுமே கவிதைகள் உருவாவதில்லை
    நேசத்திற்காக மட்டுமே இதயங்கள் வாழ்வதுமில்லை.
    எல்லாம் அதனதன் போக்கில் ....//

    superb!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails