Thursday, February 10, 2011

துளிவனம்

அடர் வனத்தின்
சிறுதுளியே என
ஐம்புலன்களையும்
அடக்கிக் குறுக்கிய
ரிஷியென
என் உள்ளங்கை
மேல்
ஒரு புத்தனென
உலகடக்கி
உட்கார்ந்திருக்கிறது
இந்தப் போன்சாய் மரம்
அறிவாயோ நீ
இம்மரம் போலதான்
உன்னிடத்தில் நான்...

5 comments:

  1. தலைப்பும், கவிதையும். படமும் மிகவும் பிரமாதம்.
    //ஐம்புலன்களையும்
    அடக்கிக் குறுக்கிய
    ரிஷியென//
    நல்ல உவமானம்.

    ReplyDelete
  2. ஆலம் விதையில் அடங்கியிருக்கும் அட்டகாசம் போல, இந்த குறுக்கிய உருவம் கண்ணில் மறைந்து அதன் இயல்பான பிர்மாண்டம் தான் மனதில் தைக்கிறது.

    ReplyDelete
  3. 'மரம் போலதான் உன்னிடத்தில்' ரசித்தேன்..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails