Saturday, November 5, 2011

உடல் தத்துவம் 19



எச்சரிக்கை-வயது முதிர்ந்தவருக்கான மொழி,உள்ளடக்கம் கொண்டது.

 செல்வியைச் சந்தித்தது போலவே மேகி அத்தை பெண் ரூபியையும் மீண்டும் சந்தித்தேன்.கேரளாவில் பேயோட்டுதலுக்கு  புகழ்பெற்ற ஒரு பகவதிக் கோயிலில் சந்தித்தேன்.எனக்கும்  பேய் பிடித்திருக்கலாம் என்று சிலர் சந்தேகித்தாலும்  எனக்கே அந்த சந்தேகம் இருந்ததாலும் அந்தக் கோயிலில் நானாவிதப் பிசாசுகளும் முனிகளும் பூதங்களும் உத்திரவாதத்துடன் விரட்டப் படும் என்று சொல்லப் பட்டதாலும் அதையும் தான் செய்து பார்ப்போமே என்று போனேன்.யார் கண்டது எனக்குள் சிலநேரம் ஒலிக்கும் குரல்கள் என்னுடையது போலவே இல்லை.

நான் போன அன்று நிறைய கூட்டம்.இரவில் நடக்கும் பூஜை அது.கோயிலில் மற்ற பூஜைகள் எல்லாம்  முடிந்து மெல்ல கோயிலின் பின்னால் பெரிய எட்டி மரத்தடியில் குருதி பூஜை நடக்கும் கோயிலுக்கு கூட்டம் சேரத் தொடங்கியது எட்டி மரத்தின் தொடை முழுவதும் பெரிய ஆணிகளில் சிதைந்த முகங்களுடன் பொம்மைகள் அடிக்கப் பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன.ஆணிகளைத் தொடக் கூடாது என்று சொன்னார்கள்.சில ஆணிகளின் முனைகளில் கருஞ்சிவப்பாய் இருந்தது ரத்தக் கறை என்றார்கள் பேய் பிடித்தவர்களில் சிலர் தலையாலேயே அடித்து மரத்தில் இறக்குவார்கள் என்று சொன்னபோது லேசாக வயிறு புரண்டது விடுதியில் எனக்குப் பக்கத்து அறையில் இருந்தவர் தனது மனைவியுடன் திருநெல்வேலியில் இருந்து வந்திருந்தார்.அவர் மனைவிக்காக என்று சொன்ன பொழுது என்னால் நம்பவே முடியவில்லை.அவர் அத்தனை அழகாக அமைதியாக என்னைப் பார்த்துப் புன்னகைத்தார் .அங்கு பேயோட்ட வந்திருந்தவர்களில் பெரும்பாலும் தமிழர்களே இருப்பதைக் கவனித்தேன்.அதுவும் பெண்களே அதிகம் எதனால்  பேய்கள் தமிழ்ப் பெண்களையே  குறிவைத்துத் தாக்குகின்றன?நீங்கள் யாருக்காக வந்திருக்கிறீகள் என்று அவர் கேட்டபோது  எனக்காக என்று சொல்லாமல் மழுப்பினேன்.


கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் அதிகமாகி  நெரிசல் ஆகிவிட்டது.நான் பகவதியின் நேர் எதிரில் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டேன்.அது  பெரிய தவறு என்று பின்னால்தான் தெரிந்தது.என் பக்கத்தில் அந்த தமிழ்த் தம்பதியர்.பூஜைக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன.பெரிய பித்தளைக் கொட்டிலில் நீர் கொட்டி பூக்கள் இடப் பட்டு குங்குமம் கரைக்கப்  பட்டு ரத்தம் போல் ஆக்கப் பட்டது அதுவே குருதி பிரசாதம் என்று கடைசியில் தரப் படும் என்று சொன்னார்கள் .முன்பொருகாலத்தில் உண்மையான ரத்தமே பிரசாதமாக தரப் படும் என்றதை நம்பலாம் போலதான் இருந்தது

ஒரு ஹோமகுண்டம் அமைக்கப் பட்டு அக்னி வளர்க்கப் பட்டு மந்திரங்கள் சொல்லப் பட்டன.கழுத்தில் மற்றும் இடுப்பில் துணியால் இறுகமாட்டிய செண்டை மேளங்களுடன் சிலர் வந்து நின்றனர். நான் பக்கத்தில் இருந்த தம்பதியரிடம்  சிரித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.என்னைப் போலவே அவர்களும் பாதி நம்பிக்கையில்தான் வந்திருந்தார்கள்  அங்கு வந்திருந்த ஒவ்வொருவர் முகமாய்ப் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.எந்தெந்த பெண்கள் பேய் பிடித்தவர்கள் என்று யூகிக்க முயன்று கொண்டிருந்தேன்.ஆனால் எந்தப் பெண்ணிடம்  எந்தப் பேய் இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்?எனக்கு நேர் முன்னால் இறுக்கமாக சல்வார்  அணிந்து உட்கார்ந்திருந்த பெண்ணின் கழுத்திலிருந்து மெலிய வியர்வை வழிந்து அவள் உடைக்குள் இறங்குவதைக் கவனித்தேன் அவள் போட்டிருந்த சென்ட் தாண்டி அங்கிருந்த கலவையான வாசனைகள் தாண்டி ஒரு துர் நாற்றம் அவளிடமிருந்து எழுந்து வந்தது.

சட்டென்று ஒரு வெடிப்புப் போல செண்டை துடிக்க ஆரம்பித்தது.அவ்வளவுதான்.கூட்டத்தில் நுட்பமான ஒரு மாற்றம் ஒரு அலை போலப் பரவியதை உணர்ந்தேன்.  குறிப்பாக பெண்களிடம் .என்னுடன் அமர்ந்திருந்த தம்பதியர் சட்டென்று இருக்கமாகிவிட்டனர் எதிர் மூலையில் சட்டென்று ஒரு கூச்சல் எழுந்தது ஒரு இளம்பெண் எழுந்து நின்று ஐயோ வேணாம் வேணாம்'என்று கத்த ஆரம்பித்தாள். அவள் கட்டியிருந்த சேலை விலகி முலைகள் இரண்டும் மின்சாரத் தாக்குதல் அடைந்தவை போல துடித்துக் கொண்டிருந்தன. அவள் ''புலையாடி மோனே  புலையாடி  மோனே 'என்று கத்திய படி ஆட ஆரம்பித்தாள்.அவள் கண்கள் பெரிய அகல் விளக்குகள் போல விரிந்து கனன்றன.இப்போது ஒரு சமிக்கை போல நிறைய பெண்கள் எழுந்து ஆட ஆரம்பித்துவிட்டனர் கத்தியபடியே எழுந்து கோயிலைச் சுற்றி சுற்றி ஓடி வந்தார்கள் சிலரைப் பின்தொடர்ந்து அவர்களது உறவினர்கள் ஓடினார்கள். ஒரு பெண் நங் நங்கென்று தலையை மாறி மாறி எட்டி மர ஆணியில் அறைவது கேட்டது ஒருவர் ஆறடிக் கல் சுவரில் எந்தப் பிடிமானம்  இல்லாமல் சரசரவென்று பல்லிபோல ஏறினார்.

செண்டை இன்னமும் சன்னதம் கொண்டு துடிக்க ஆரம்பித்துவிட்டது. இப்போது என் பக்கத்திலிருந்த பெண் எழுந்து ஓவென்று கத்திக் கொண்டே ஒரே உதறலில் தன் புடவையை உருவி எரிந்து விட்டு வெள்ளைப் பாவாடையோடு  நின்றார்.அவரது தொப்புள் ஆழமாய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம் போல அழகாய் இருந்தது .அவர் பகவதியை நோக்கிக் கையை நீட்டிக் கொண்டு 'தீய சக்தி அழியணும் தீய சக்தி அழியணும் 'என்று உரத்த குரலில்  தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டே ஆட ஆரம்பித்தார்.கணவர் பலவீனமான குரலில் ''சாந்தி சாந்தி இங்க பாரு''என்று சொல்லி அணைக்க முயல அவர் ''என்னைத் தொடாதேடா நாயே ''என்று உதறியதில் கீழே விழுந்து விட்டார்.அவர் மறுபடி முயல ''நாயே நாயே நாயே கிட்ட வராதடா நாயே..நாயே...வந்து என்ன பண்ண முடியும் உன்னால நாயே நாயே ..வா வந்து ..புண்டா மவனே வந்து என் புண்டையை நக்குடா தேவடியா மவனே வா வாவந்து நக்கு நாயே..அதான் உன்னால முடியும் நாயே ''என்று  பாவாடையைத் தூக்க முயல சிலர் அவரது கைகளைக் கட்டியாய் பிடித்துக் கொண்டனர் .கணவர் மீண்டும் எழுந்து அவரை அணைக்க முயல யாரும் எதிர் பாரா விதமாய்  காறி அவர் முகத்தில் துப்பிவிட்டார்.அவர் முகம் முழுக்க வழியும் எச்சிலோடு தேம்பித் தேம்பி அழ ''அழுடா நாயே அழுடா நாயே .அதான் உன்னால முடியும் நாயே.''என்றவர் கத்திக் கொண்டே இருந்தார்.இப்போது எனது  முன்னால்  இருந்த பெண்மணியும் எழுந்து ''ஹூய்''என்று தலையை விரித்தவாறே ஆட ஆரம்பிக்க நான் இடுக்கியில் அகப்பட்டவன் போல ஆகிவிட்டேன். கூட்டத்திலிருந்து விலக முடியாதபடி வெகுவாக சிக்கிக் கொண்டிருந்தேன்.மேள சத்தம்  வேறு என்னை ஏதோ செய்தது. ஒருவேளை நானும் இவர்கள் போல ஆகிவிடுவேனோ என்றொரு பயம் வந்துவிட்டிருந்தது ஒருவேளை எனக்குள் இருக்கும் பிசாசு வெளியே வர முயல்கிறதோ ...தலை சுற்றி வாந்தி வருவது போலிருந்தது 

நான் தள்ளிவிடப் பட்டவன் போல கூட்டத்திலிருந்து வெளியே ஓடிவந்தேன், அருகிலிருந்த பாத்ரூமுக்குள் போய் வாந்தி எடுத்தேன்.மூச்சு சிதற  முகம் கழுவிக் கொண்டு சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்ட பிறகே  வெளியே வந்து பூஜையைக் கவனித்தேன். மேளம் பெரிதாகி உச்சத்தில் துடித்துக் கொண்டிருக்க  இப்போது அந்த தமிழ்ப் பெண் தனது ஜாக்கட்டைக் கிழித்தெறிய முயன்று கொண்டிருந்தாள் .இரண்டு பேய் பிடித்த பெண்கள் கட்டிப் பிடித்து சண்டை இட்டுக் கொண்டிருந்தார்கள்.ஒரு சிறு பெண்ணை நெற்றியிலிருந்து ரத்தம் வழிய ஒருவர் தூக்கிக் கொண்டு ஓடிப் போவதைப பார்த்தேன்.சிலர் கை கூப்பி அழுது கொண்டிருந்தார்கள்.நான் அந்த இடத்தை விட்டு ஓடிப் போக மிக விரும்பினேன். விலகி நடக்க முயன்ற போதுதான் அவளைக் கவனித்தேன் என்னைப் போலவே அந்தக் கூட்டத்தை விலகியிருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.கேரளப் பெண்கள் அணியும் சந்தன நேரியல் சேலையில் மரூன் ஜாக்கெட்டில் பெரிய பொட்டுடன் காதில் பெரிய தொங்கட்டனுடன் ...

நான் பார்த்த அதே சமயம் அவளும் என்னைத் திரும்பிப்  பார்த்தாள்.
 மேளம் ஓங்கி ஒருமுறைக் கதறி நின்றது .
அவள் ரூபி. மேகி அத்தையின் பெண்.
                                 *******************************

ரூபி எர்ணா குளத்தில் இருந்தாள்.அங்கிருந்து காரை அவளே ஒட்டிக் கொண்டு ஒவ்வொரு மாதமும் ஒடுக்கு வெள்ளிக் கிழமைக்கு அங்கு வருவதாக சொன்னாள்.எதோ ஒருவிதத்தில் அது தன்னை விடுவிக்கிறது என்று சொன்னாள்.என்னை அவள் வீட்டுக்கு அழைத்தாள் 
சற்றுயோசித்துவிடுதிஅறையைக்காலிபண்ணிககொண்டுஅவளுடன்புறப்பட்டேன்.எனக்கு அவளிடம் சில விசயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டி இருந்தது.அவள் மஞ்சள் நிற அல்டோ வைத்திருந்தாள். அனாயசமாக ஓட்டினாள்.பசிக்கிறது என்றேன். ''வீட்டுக்குப் போய் விடலாம் .நான் நன்றாக சமைப்பேன்.நீ மது அருந்துவாய் அல்லவா?'

சற்று பெருத்திருந்தாள்.சந்தன இடுப்பில் மடிப்புகள் தெரிந்தன.சிவந்த முகத்தில் அதே பிங்க் நிற  பருக்கள்.உண்மையில் அதைவைத்தே அவளைக் கண்டுகொண்டேன் அவள் முற்றிலும்  ஆடையின்றி கிணற்றுள் ஒரு ஷட்டில்காக் போல குதித்த காட்சி நினைவுக்கு வந்தது 

நான் அத்தையை, அவள் வெள்ளிக் கிழமை பிரார்த்தனைக் கூட்டங்களை எல்லாம் நினைவு கூர்ந்து''என்னாயிற்று இந்தக் கோயிலில் ..மதம் மாறி விட்டாயா என்ன?''

அவள் சிரித்து ''ஒன்னு தெரியுமோ ..இந்த அம்மனுக்கு நமக்கு வருவது போலவே மாதா
மாதம் மாதவிலக்கு வரும்''என்றாள்.
எனக்குப் புரியவில்லை என உணர்ந்து ''ஒருவேளை குழந்தை பெற்ற பிறகும் கன்னியாய் நீடித்திருக்கும் தெய்வங்களை விட மாதா மாதம் வீட்டுக்கு விலக்காகும் தெய்வங்களை எனக்கு அணுக்கமாய் உணர முடிகிறது என்பதால் இருக்கலாம்''

டேஷ் போர்டைத் திறந்து ஒரு சிகரெட்டை எடுத்து ''பற்ற வை.ப்ளீஸ்''

ஆழ இழுத்துக் கொண்டு ''வினோதம்.உன்னை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன் ஆனால் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை .எப்படி இருக்கிறாய்?என்ன பண்ணுகிறாய்?''

நான் சுருக்கமாய் என்னைப் பற்றிச் சொன்னேன் 


''நீ என்ன பண்ணுகிறாய்?கல்யாணம்?குழந்தைகள்?''
''கல்யாணம் ஆகி விவாகரத்தும் ஆகிவிட்டது ஒரு பெண் -கடவுளுக்கு நன்றி-ஆம் பெண் -கோடைக் கானலில் படிக்கிறாள்''என்றாள்.

பிறகு என்னைத் திரும்பிப் பார்த்து ''நான் இங்கு தங்கிக் கொண்டு சில படங்களில்  நடிப்பதன்  மூலம் என் உணவை சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்''என்றாள்.
''அப்படியா ..நீ நடிகையா என்ன?நான் அறியாதது ஆச்சயமாய் இருக்கிறது.நான் நிறைய படம் பார்ப்பவன்.மலையாளப் படங்கள்?""
அவள் வாய்விட்டு சிரித்து ''மொழியே இல்லாத படங்கள்.மொழி தேவைப் படாத படங்கள் என்றாள்.
''''நீலப் படங்கள்.''

http://ezhuththuppizhai.blogspot.com/2011/08/18.html




















4 comments:

  1. அதே மனதை ஈர்க்கும் எழுத்து! ஏற்கனவே பல முறை சொன்னது போல, பெண்மை ஒரு கானகம் போல ஆழமும் அடர்த்தியும் கொண்டது. நம் சமூகத்தின் குறிப்பாக- பெண்கள் தொடர்பான- ஒழுக்க முலாம் பூச்சுக்கள் எல்லாம் வெகு அபத்தமானவை.இதன் தொடர்பில், இன்று நான் வாசிக்க நேர்ந்த 'வல்லினம்' இதழில் வெளியாகியுள்ள (முக நூலிலும்) நண்பரும் கவியுமான, செல்மா பிரிய தர்ஷனின் பெண்மை குறித்த கட்டுரையைப் பரிந்துரைக்கிறேன்.

    ReplyDelete
  2. போகன்!
    எழுத்தில் ஆளை அடித்துவிடுகிறீர்கள். :-)

    WoW! Stunning narration!! I really loved it!! :-)

    ReplyDelete
  3. pervasive நகைச்சுவை - ரசிக்க முடிகிறது.
    அது என்ன? பேய் பிடித்ததும் புடவையை உருவி விடுகிறார்களே? நினைத்துப் பார்த்தால் காமெடியாகத் தோன்றுகிறது போகன்!

    ReplyDelete
  4. ஏன் தமிழ் பெண்களுக்கு பேய் பிடிக்கின்றது. நிறைய எதிர் பார்ப்பதாலா?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails