பிஞ்சும் அல்லாது
பூவும் அல்லது
ஒரு சிறு பெண் ....
சிகப்பும் அல்லாது
கருப்பும் அல்லாது
உள்ளிருந்து ஒளிரும் ஒரு நிறம்
யாரும் எதிர்பாராதபோது
அவள் பளீரென்று எறிந்த சிரிப்பு
கண்டு
பக்கத்தில் இருந்த
எல்லா மலர்களும்
பதறுவது கண்டேன்
நடக்கும்போது
அசைந்த கொலுசு
கடந்த பின்பும்
நிறுத்தவே இல்லை
அசைவதை வெளியில்....
நீர்ச் சருகுபோல
வெளிச்சத்தில் கரையும் ஒரு சட்டையில்
கொய்யாப் பிஞ்சு போல
மேடிட்ட முலைகள் ..
அவள் சுவாசிக்கும்போதேல்லாம்
சிறிய குருவிகள்
போல்
எழுந்து எழுந்து அமர்ந்தன
பாலாடை போன்று
கசிந்து கசிந்து
இறங்கிய பாவாடையில்
இளம் வாழைதொடைகள்
முயங்கி முயங்கிக் கிறங்கின
இரு கிளைகள் நடுவே
ததும்பும்
ஒரு தேன்கூடு போல...
பயிர் நடுவே நாகம்போல்
சத்தமின்றி நழுவி
சட்டென்று மனதுள் புகுந்துவிட்டது காமம்
நள்ளிரவில்
சுவர்களின் தனிமையில்
ஆடை அவிழ்த்து அம்மணமாய் எழுந்து
என் குரல்வளையை நெரித்தது..
நான் தலைவெட்டுப்பட்ட
ஆடு போல வெளியே
தெறித்து ஓடினேன்
தூக்கமற்றவனாய் ...
தூங்க அஞ்சியவனாய்
கடலோரம் கூதலில்
கால்மணல் நொறுங்க நடந்தேன்
காது நுனிகள்
குளிரில் மரத்து உதிரும்வரை
அலையோடு மணலாய்
கலந்து கிடந்தேன்
அடிவயிற்றில் சொருகப் பட்ட
ஒரு வாள் போல
காமம் என் கூடவே இருந்தது
உயிர்மூலத்தில் இறங்கிய
கொடுங்கூர்வாள்..
நான்
எப்படியாவாது
இவ்வாதையை என்னைவிட்டு விலக்கும்
கர்த்தாவே என்று வானோக்கிக் கதறினேன்
விண்மீன்கள் அதிர்ந்து வீழ்ந்தன
அலைகள் உறைந்து போயின
விடிகாலை உடையும் நேரத்தில்
ஒரு பதில் போல்
தூரத்தில் துடித்த
மணியோசை கேட்டு
எழுந்து ஓடினேன்
ஈராயிரம் ஆண்டுகளாய்
நிற்கும் கோயிலினுள்
மூக்கினில் ஒளிரும்
ஒற்றை அணியே
சுடராய் வெளிச்சமாய்
அதே சிரிப்புடன்
அரையில் நெளியாடையுடன்
நின்றிருந்தாள் அவள்...
பிஞ்சும் அல்லாது
பூவும் அல்லாது
ஒரு சிறு பெண்..
பூவும் அல்லது
ஒரு சிறு பெண் ....
சிகப்பும் அல்லாது
கருப்பும் அல்லாது
உள்ளிருந்து ஒளிரும் ஒரு நிறம்
யாரும் எதிர்பாராதபோது
அவள் பளீரென்று எறிந்த சிரிப்பு
கண்டு
பக்கத்தில் இருந்த
எல்லா மலர்களும்
பதறுவது கண்டேன்
நடக்கும்போது
அசைந்த கொலுசு
கடந்த பின்பும்
நிறுத்தவே இல்லை
அசைவதை வெளியில்....
நீர்ச் சருகுபோல
வெளிச்சத்தில் கரையும் ஒரு சட்டையில்
கொய்யாப் பிஞ்சு போல
மேடிட்ட முலைகள் ..
அவள் சுவாசிக்கும்போதேல்லாம்
சிறிய குருவிகள்
போல்
எழுந்து எழுந்து அமர்ந்தன
பாலாடை போன்று
கசிந்து கசிந்து
இறங்கிய பாவாடையில்
இளம் வாழைதொடைகள்
முயங்கி முயங்கிக் கிறங்கின
இரு கிளைகள் நடுவே
ததும்பும்
ஒரு தேன்கூடு போல...
பயிர் நடுவே நாகம்போல்
சத்தமின்றி நழுவி
சட்டென்று மனதுள் புகுந்துவிட்டது காமம்
நள்ளிரவில்
சுவர்களின் தனிமையில்
ஆடை அவிழ்த்து அம்மணமாய் எழுந்து
என் குரல்வளையை நெரித்தது..
நான் தலைவெட்டுப்பட்ட
ஆடு போல வெளியே
தெறித்து ஓடினேன்
தூக்கமற்றவனாய் ...
தூங்க அஞ்சியவனாய்
கடலோரம் கூதலில்
கால்மணல் நொறுங்க நடந்தேன்
காது நுனிகள்
குளிரில் மரத்து உதிரும்வரை
அலையோடு மணலாய்
கலந்து கிடந்தேன்
அடிவயிற்றில் சொருகப் பட்ட
ஒரு வாள் போல
காமம் என் கூடவே இருந்தது
உயிர்மூலத்தில் இறங்கிய
கொடுங்கூர்வாள்..
நான்
எப்படியாவாது
இவ்வாதையை என்னைவிட்டு விலக்கும்
கர்த்தாவே என்று வானோக்கிக் கதறினேன்
விண்மீன்கள் அதிர்ந்து வீழ்ந்தன
அலைகள் உறைந்து போயின
விடிகாலை உடையும் நேரத்தில்
ஒரு பதில் போல்
தூரத்தில் துடித்த
மணியோசை கேட்டு
எழுந்து ஓடினேன்
ஈராயிரம் ஆண்டுகளாய்
நிற்கும் கோயிலினுள்
மூக்கினில் ஒளிரும்
ஒற்றை அணியே
சுடராய் வெளிச்சமாய்
அதே சிரிப்புடன்
அரையில் நெளியாடையுடன்
நின்றிருந்தாள் அவள்...
பிஞ்சும் அல்லாது
பூவும் அல்லாது
ஒரு சிறு பெண்..
அன்பு நண்பருக்கு,
ReplyDeleteவலைப்பூ உலகிற்கு புது வரவு நான்.
அண்மையில் தான் உங்களின் வலைப்பக்கம் அறிமுகமாகி உங்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு
உங்களது வாசகனாகி விட்டேன்.
எனக்குள் ஒரு கேள்வி இருந்து கொண்டிருந்தது.
பெண்மையின் பேராண்மையை அதன் முழு ஆகிருதியுடன் உணர்ந்தவர்கள் யாரேனும் உண்டா என்று.
நீங்கள் அதனை உணரும் பேறு பெற்றவர் என்பதற்கு உங்களின் இந்த கவிதையே சாட்சி.
அற்புதமான சொற்களும், நடையும் கூடி முயங்கி இக்கவிதையை நிலைபேறடையச் செய்திருக்கின்றன.
வாழ்த்துக்கள்!
பிரமாதம். truly brilliant!
ReplyDeleteSuperb!
ReplyDeletethose who go around publishing magazines and writing books calling themselves poets must read your blog
ReplyDeleteor you must publish what you write in these pages
///பெண்மையின் பேராண்மையை அதன் முழு ஆகிருதியுடன் உணர்ந்தவர்கள் யாரேனும் உண்டா என்று.
ReplyDeleteநீங்கள் அதனை உணரும் பேறு பெற்றவர் என்பதற்கு உங்களின் இந்த கவிதையே சாட்சி.////
I agree. What a poem !!
பாலாம்பிகையை கண் முன்னே கொண்டு வந்து விட்டது உங்களின் கவிதை. நன்றிகள் பல
ReplyDelete