சந்தான லட்சுமிக்கு
இரட்டைக் குழந்தைகளாம்
படிக்கும் போதில்
அவளது
ஒவ்வொரு அசைவையும்
படித்திருக்கிறேன்
கல்யாண விநாயகர் கோயிலில்
அவள் மீது
அர்ச்சனை கூட
பண்ணியிருக்கிறேன்
அர்த்த ராத்திரிகளில்
ஆபாயில் கவிதைகள்....
பிரிவுப் புத்தகத்தில்
கண்ணீர் வசனங்கள்..
எல்லா காதலர்களின்
எல்லா மடத்தனங்களையும்
பண்ணி இருக்கிறேன்
அவள் கல்யாணப் பத்திரிக்கை
கொடுத்த அன்று
முதன் முதலாய்க் குடித்தேன்
பத்து வருடத்துக்குப் பிறகு
நேற்று சந்தித்தேன் மீண்டும்
சந்திக்காமலே இருந்திருக்கலாம்
எனத் தோன்றுகிறது
நல்லவேளையாக
என் காதல் வெற்றி பெறவில்லை
வாய் ஓயாது பேசும்
இந்த சவுக்கபூதம்
நான் மையல் உற்ற பெண் அல்ல
வேறு யாரோ
தப்பித்தீர்கள்! கவிதை அருமை!
ReplyDeleteha ha
ReplyDeletehahahaahahahahahahah
ReplyDeleteஏதையுமே ரசிக்கனும்.... அதுதானே காதல்!
ReplyDeleteஎனக்கும் இதில் உடன் பாடு இல்லை
ReplyDelete..அப்போ காதல் வந்தது santhana லக்ஷ்மியின் உடல் மீது தான் ..அது காதல் இல்லை
i go with karunakarasu sir
tops!
ReplyDelete