Monday, November 14, 2011

இவை கூட...

1.சற்றே சரிந்த
பிள்ளையார் கண்
என்றாலும் அழகுதான்
இரண்டில் ஒரு மார்பு சிறியது
எனினும்
இரண்டுமே அழகுதான்

மூக்கில் அமர்ந்த
ரத்தினத்தின்
நிழல் காட்டிய
சிகப்பு உதடுகள்
கண்ணாடித் துளிகள்
மினுங்கும் சேலையுள்
பொதிந்து உறங்கும்
தொப்புள்...

யூகித்துத் தீராத பெண்...






2.வரிகளை
தேய்த்துக் கொண்டு
நாற்காலியில்
மர்ந்திருக்கிறது புலி
பசிக்கென
பையில்
சில பழங்களை
வைத்திருக்கிறது
அலுவல் முடித்து
வீடு போய்
ஆசார உணவு
படுக்கும் முன்பு
ஒரு தம்ளர் பால்
வேட்டையின் கனவுகள்
வந்துவிடாமலிருக்க
தூக்க மாத்திரைகள்
என்று நன்றாகத்தானிருக்கிறது புலி
யாராவது
காடு என்று உச்சரிக்கும்போது மட்டும்
முகம் வலியில் கோணுகிறது
மற்றபடி
சுகமாய்த்தானிருக்கிறது
புலியாய் இருப்பது எப்படி
என்று மறந்த புலி ...


3.கரிந்துபோன 
தென்னை மரத்தின் 
உச்சியில் 
வந்தமர்ந்தது 
விலாவில் 
பச்சை தடவிய 
அப்புவின் கைப்பிடி அளவே இருந்த 
பூங்குருவி .
காய்ந்த மட்டைகளைக் 
கிலுக்கிப் பார்த்து 
''வீண் ..வீண்... ''
என்று கத்தியது 
அப்பா ஆசையாய் 
வைத்துப் போன தென்னை அது ..
நான் எதிர்வாதம் புரியாது 
மௌனமாய் இருந்தேன் 
உண்மைதான் .
எல்லாம் வீண்... வீண் ...


Saturday, November 5, 2011

உடல் தத்துவம் 19



எச்சரிக்கை-வயது முதிர்ந்தவருக்கான மொழி,உள்ளடக்கம் கொண்டது.

 செல்வியைச் சந்தித்தது போலவே மேகி அத்தை பெண் ரூபியையும் மீண்டும் சந்தித்தேன்.கேரளாவில் பேயோட்டுதலுக்கு  புகழ்பெற்ற ஒரு பகவதிக் கோயிலில் சந்தித்தேன்.எனக்கும்  பேய் பிடித்திருக்கலாம் என்று சிலர் சந்தேகித்தாலும்  எனக்கே அந்த சந்தேகம் இருந்ததாலும் அந்தக் கோயிலில் நானாவிதப் பிசாசுகளும் முனிகளும் பூதங்களும் உத்திரவாதத்துடன் விரட்டப் படும் என்று சொல்லப் பட்டதாலும் அதையும் தான் செய்து பார்ப்போமே என்று போனேன்.யார் கண்டது எனக்குள் சிலநேரம் ஒலிக்கும் குரல்கள் என்னுடையது போலவே இல்லை.

நான் போன அன்று நிறைய கூட்டம்.இரவில் நடக்கும் பூஜை அது.கோயிலில் மற்ற பூஜைகள் எல்லாம்  முடிந்து மெல்ல கோயிலின் பின்னால் பெரிய எட்டி மரத்தடியில் குருதி பூஜை நடக்கும் கோயிலுக்கு கூட்டம் சேரத் தொடங்கியது எட்டி மரத்தின் தொடை முழுவதும் பெரிய ஆணிகளில் சிதைந்த முகங்களுடன் பொம்மைகள் அடிக்கப் பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன.ஆணிகளைத் தொடக் கூடாது என்று சொன்னார்கள்.சில ஆணிகளின் முனைகளில் கருஞ்சிவப்பாய் இருந்தது ரத்தக் கறை என்றார்கள் பேய் பிடித்தவர்களில் சிலர் தலையாலேயே அடித்து மரத்தில் இறக்குவார்கள் என்று சொன்னபோது லேசாக வயிறு புரண்டது விடுதியில் எனக்குப் பக்கத்து அறையில் இருந்தவர் தனது மனைவியுடன் திருநெல்வேலியில் இருந்து வந்திருந்தார்.அவர் மனைவிக்காக என்று சொன்ன பொழுது என்னால் நம்பவே முடியவில்லை.அவர் அத்தனை அழகாக அமைதியாக என்னைப் பார்த்துப் புன்னகைத்தார் .அங்கு பேயோட்ட வந்திருந்தவர்களில் பெரும்பாலும் தமிழர்களே இருப்பதைக் கவனித்தேன்.அதுவும் பெண்களே அதிகம் எதனால்  பேய்கள் தமிழ்ப் பெண்களையே  குறிவைத்துத் தாக்குகின்றன?நீங்கள் யாருக்காக வந்திருக்கிறீகள் என்று அவர் கேட்டபோது  எனக்காக என்று சொல்லாமல் மழுப்பினேன்.


கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் அதிகமாகி  நெரிசல் ஆகிவிட்டது.நான் பகவதியின் நேர் எதிரில் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டேன்.அது  பெரிய தவறு என்று பின்னால்தான் தெரிந்தது.என் பக்கத்தில் அந்த தமிழ்த் தம்பதியர்.பூஜைக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன.பெரிய பித்தளைக் கொட்டிலில் நீர் கொட்டி பூக்கள் இடப் பட்டு குங்குமம் கரைக்கப்  பட்டு ரத்தம் போல் ஆக்கப் பட்டது அதுவே குருதி பிரசாதம் என்று கடைசியில் தரப் படும் என்று சொன்னார்கள் .முன்பொருகாலத்தில் உண்மையான ரத்தமே பிரசாதமாக தரப் படும் என்றதை நம்பலாம் போலதான் இருந்தது

ஒரு ஹோமகுண்டம் அமைக்கப் பட்டு அக்னி வளர்க்கப் பட்டு மந்திரங்கள் சொல்லப் பட்டன.கழுத்தில் மற்றும் இடுப்பில் துணியால் இறுகமாட்டிய செண்டை மேளங்களுடன் சிலர் வந்து நின்றனர். நான் பக்கத்தில் இருந்த தம்பதியரிடம்  சிரித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.என்னைப் போலவே அவர்களும் பாதி நம்பிக்கையில்தான் வந்திருந்தார்கள்  அங்கு வந்திருந்த ஒவ்வொருவர் முகமாய்ப் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.எந்தெந்த பெண்கள் பேய் பிடித்தவர்கள் என்று யூகிக்க முயன்று கொண்டிருந்தேன்.ஆனால் எந்தப் பெண்ணிடம்  எந்தப் பேய் இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்?எனக்கு நேர் முன்னால் இறுக்கமாக சல்வார்  அணிந்து உட்கார்ந்திருந்த பெண்ணின் கழுத்திலிருந்து மெலிய வியர்வை வழிந்து அவள் உடைக்குள் இறங்குவதைக் கவனித்தேன் அவள் போட்டிருந்த சென்ட் தாண்டி அங்கிருந்த கலவையான வாசனைகள் தாண்டி ஒரு துர் நாற்றம் அவளிடமிருந்து எழுந்து வந்தது.

சட்டென்று ஒரு வெடிப்புப் போல செண்டை துடிக்க ஆரம்பித்தது.அவ்வளவுதான்.கூட்டத்தில் நுட்பமான ஒரு மாற்றம் ஒரு அலை போலப் பரவியதை உணர்ந்தேன்.  குறிப்பாக பெண்களிடம் .என்னுடன் அமர்ந்திருந்த தம்பதியர் சட்டென்று இருக்கமாகிவிட்டனர் எதிர் மூலையில் சட்டென்று ஒரு கூச்சல் எழுந்தது ஒரு இளம்பெண் எழுந்து நின்று ஐயோ வேணாம் வேணாம்'என்று கத்த ஆரம்பித்தாள். அவள் கட்டியிருந்த சேலை விலகி முலைகள் இரண்டும் மின்சாரத் தாக்குதல் அடைந்தவை போல துடித்துக் கொண்டிருந்தன. அவள் ''புலையாடி மோனே  புலையாடி  மோனே 'என்று கத்திய படி ஆட ஆரம்பித்தாள்.அவள் கண்கள் பெரிய அகல் விளக்குகள் போல விரிந்து கனன்றன.இப்போது ஒரு சமிக்கை போல நிறைய பெண்கள் எழுந்து ஆட ஆரம்பித்துவிட்டனர் கத்தியபடியே எழுந்து கோயிலைச் சுற்றி சுற்றி ஓடி வந்தார்கள் சிலரைப் பின்தொடர்ந்து அவர்களது உறவினர்கள் ஓடினார்கள். ஒரு பெண் நங் நங்கென்று தலையை மாறி மாறி எட்டி மர ஆணியில் அறைவது கேட்டது ஒருவர் ஆறடிக் கல் சுவரில் எந்தப் பிடிமானம்  இல்லாமல் சரசரவென்று பல்லிபோல ஏறினார்.

செண்டை இன்னமும் சன்னதம் கொண்டு துடிக்க ஆரம்பித்துவிட்டது. இப்போது என் பக்கத்திலிருந்த பெண் எழுந்து ஓவென்று கத்திக் கொண்டே ஒரே உதறலில் தன் புடவையை உருவி எரிந்து விட்டு வெள்ளைப் பாவாடையோடு  நின்றார்.அவரது தொப்புள் ஆழமாய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம் போல அழகாய் இருந்தது .அவர் பகவதியை நோக்கிக் கையை நீட்டிக் கொண்டு 'தீய சக்தி அழியணும் தீய சக்தி அழியணும் 'என்று உரத்த குரலில்  தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டே ஆட ஆரம்பித்தார்.கணவர் பலவீனமான குரலில் ''சாந்தி சாந்தி இங்க பாரு''என்று சொல்லி அணைக்க முயல அவர் ''என்னைத் தொடாதேடா நாயே ''என்று உதறியதில் கீழே விழுந்து விட்டார்.அவர் மறுபடி முயல ''நாயே நாயே நாயே கிட்ட வராதடா நாயே..நாயே...வந்து என்ன பண்ண முடியும் உன்னால நாயே நாயே ..வா வந்து ..புண்டா மவனே வந்து என் புண்டையை நக்குடா தேவடியா மவனே வா வாவந்து நக்கு நாயே..அதான் உன்னால முடியும் நாயே ''என்று  பாவாடையைத் தூக்க முயல சிலர் அவரது கைகளைக் கட்டியாய் பிடித்துக் கொண்டனர் .கணவர் மீண்டும் எழுந்து அவரை அணைக்க முயல யாரும் எதிர் பாரா விதமாய்  காறி அவர் முகத்தில் துப்பிவிட்டார்.அவர் முகம் முழுக்க வழியும் எச்சிலோடு தேம்பித் தேம்பி அழ ''அழுடா நாயே அழுடா நாயே .அதான் உன்னால முடியும் நாயே.''என்றவர் கத்திக் கொண்டே இருந்தார்.இப்போது எனது  முன்னால்  இருந்த பெண்மணியும் எழுந்து ''ஹூய்''என்று தலையை விரித்தவாறே ஆட ஆரம்பிக்க நான் இடுக்கியில் அகப்பட்டவன் போல ஆகிவிட்டேன். கூட்டத்திலிருந்து விலக முடியாதபடி வெகுவாக சிக்கிக் கொண்டிருந்தேன்.மேள சத்தம்  வேறு என்னை ஏதோ செய்தது. ஒருவேளை நானும் இவர்கள் போல ஆகிவிடுவேனோ என்றொரு பயம் வந்துவிட்டிருந்தது ஒருவேளை எனக்குள் இருக்கும் பிசாசு வெளியே வர முயல்கிறதோ ...தலை சுற்றி வாந்தி வருவது போலிருந்தது 

நான் தள்ளிவிடப் பட்டவன் போல கூட்டத்திலிருந்து வெளியே ஓடிவந்தேன், அருகிலிருந்த பாத்ரூமுக்குள் போய் வாந்தி எடுத்தேன்.மூச்சு சிதற  முகம் கழுவிக் கொண்டு சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்ட பிறகே  வெளியே வந்து பூஜையைக் கவனித்தேன். மேளம் பெரிதாகி உச்சத்தில் துடித்துக் கொண்டிருக்க  இப்போது அந்த தமிழ்ப் பெண் தனது ஜாக்கட்டைக் கிழித்தெறிய முயன்று கொண்டிருந்தாள் .இரண்டு பேய் பிடித்த பெண்கள் கட்டிப் பிடித்து சண்டை இட்டுக் கொண்டிருந்தார்கள்.ஒரு சிறு பெண்ணை நெற்றியிலிருந்து ரத்தம் வழிய ஒருவர் தூக்கிக் கொண்டு ஓடிப் போவதைப பார்த்தேன்.சிலர் கை கூப்பி அழுது கொண்டிருந்தார்கள்.நான் அந்த இடத்தை விட்டு ஓடிப் போக மிக விரும்பினேன். விலகி நடக்க முயன்ற போதுதான் அவளைக் கவனித்தேன் என்னைப் போலவே அந்தக் கூட்டத்தை விலகியிருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.கேரளப் பெண்கள் அணியும் சந்தன நேரியல் சேலையில் மரூன் ஜாக்கெட்டில் பெரிய பொட்டுடன் காதில் பெரிய தொங்கட்டனுடன் ...

நான் பார்த்த அதே சமயம் அவளும் என்னைத் திரும்பிப்  பார்த்தாள்.
 மேளம் ஓங்கி ஒருமுறைக் கதறி நின்றது .
அவள் ரூபி. மேகி அத்தையின் பெண்.
                                 *******************************

ரூபி எர்ணா குளத்தில் இருந்தாள்.அங்கிருந்து காரை அவளே ஒட்டிக் கொண்டு ஒவ்வொரு மாதமும் ஒடுக்கு வெள்ளிக் கிழமைக்கு அங்கு வருவதாக சொன்னாள்.எதோ ஒருவிதத்தில் அது தன்னை விடுவிக்கிறது என்று சொன்னாள்.என்னை அவள் வீட்டுக்கு அழைத்தாள் 
சற்றுயோசித்துவிடுதிஅறையைக்காலிபண்ணிககொண்டுஅவளுடன்புறப்பட்டேன்.எனக்கு அவளிடம் சில விசயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டி இருந்தது.அவள் மஞ்சள் நிற அல்டோ வைத்திருந்தாள். அனாயசமாக ஓட்டினாள்.பசிக்கிறது என்றேன். ''வீட்டுக்குப் போய் விடலாம் .நான் நன்றாக சமைப்பேன்.நீ மது அருந்துவாய் அல்லவா?'

சற்று பெருத்திருந்தாள்.சந்தன இடுப்பில் மடிப்புகள் தெரிந்தன.சிவந்த முகத்தில் அதே பிங்க் நிற  பருக்கள்.உண்மையில் அதைவைத்தே அவளைக் கண்டுகொண்டேன் அவள் முற்றிலும்  ஆடையின்றி கிணற்றுள் ஒரு ஷட்டில்காக் போல குதித்த காட்சி நினைவுக்கு வந்தது 

நான் அத்தையை, அவள் வெள்ளிக் கிழமை பிரார்த்தனைக் கூட்டங்களை எல்லாம் நினைவு கூர்ந்து''என்னாயிற்று இந்தக் கோயிலில் ..மதம் மாறி விட்டாயா என்ன?''

அவள் சிரித்து ''ஒன்னு தெரியுமோ ..இந்த அம்மனுக்கு நமக்கு வருவது போலவே மாதா
மாதம் மாதவிலக்கு வரும்''என்றாள்.
எனக்குப் புரியவில்லை என உணர்ந்து ''ஒருவேளை குழந்தை பெற்ற பிறகும் கன்னியாய் நீடித்திருக்கும் தெய்வங்களை விட மாதா மாதம் வீட்டுக்கு விலக்காகும் தெய்வங்களை எனக்கு அணுக்கமாய் உணர முடிகிறது என்பதால் இருக்கலாம்''

டேஷ் போர்டைத் திறந்து ஒரு சிகரெட்டை எடுத்து ''பற்ற வை.ப்ளீஸ்''

ஆழ இழுத்துக் கொண்டு ''வினோதம்.உன்னை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன் ஆனால் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை .எப்படி இருக்கிறாய்?என்ன பண்ணுகிறாய்?''

நான் சுருக்கமாய் என்னைப் பற்றிச் சொன்னேன் 


''நீ என்ன பண்ணுகிறாய்?கல்யாணம்?குழந்தைகள்?''
''கல்யாணம் ஆகி விவாகரத்தும் ஆகிவிட்டது ஒரு பெண் -கடவுளுக்கு நன்றி-ஆம் பெண் -கோடைக் கானலில் படிக்கிறாள்''என்றாள்.

பிறகு என்னைத் திரும்பிப் பார்த்து ''நான் இங்கு தங்கிக் கொண்டு சில படங்களில்  நடிப்பதன்  மூலம் என் உணவை சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்''என்றாள்.
''அப்படியா ..நீ நடிகையா என்ன?நான் அறியாதது ஆச்சயமாய் இருக்கிறது.நான் நிறைய படம் பார்ப்பவன்.மலையாளப் படங்கள்?""
அவள் வாய்விட்டு சிரித்து ''மொழியே இல்லாத படங்கள்.மொழி தேவைப் படாத படங்கள் என்றாள்.
''''நீலப் படங்கள்.''

http://ezhuththuppizhai.blogspot.com/2011/08/18.html




















Tuesday, November 1, 2011

ஜெயமோகனின் இலக்கியப் பார்வை ?



இவை ஜெயமோகன் என்ற எழுத்தாளரின் மீது ஒரு அரைகுறை இலக்கியவாதி வைக்கும் விமர்சனங்கள் வேறிடத்தில் விவாதிக்கப் பட்டதின் சுருங்கிய வடிவம்.தீர்ப்பல்ல.அவதானம்.அவ்வளவே.


ஜெமோ இயல்பிலேயே ஒரு லட்சியவாத எழுத்தாளர்.(விக்கிரமாத்யன் ஏறக்குறைய இதேபோல்  ஒரு கருத்தை ஒரு பேட்டியில் சொன்னார்]இலக்கியம் சமூகம் பண்பாடு அரசியல் எல்லாவற்றிலும் ஒரு லட்சியவாத நோக்கு அவரிடம் இருக்கிறது.அவரது இந்த  லட்சியவாதம் மரபு சார்ந்தது.தனிமனிதனின் வீழ்ச்சி அலது மரபின் வீழ்ச்சி மற்றும் எழுச்சி இதுதான் அவரது பெரும்பாலான படைப்புகளின் ஆதார சுருதி.எல்லா படைப்புகளிலும் அவருக்கு ஒரு அறம் இருக்கவேண்டும்.இதனால் சொல்லப் படும் நீதி என்று இறுதியில் சொல்லப் படும் பாட்டிக் கதைகளில் 'சொல்லப்படும் நீதியை' சாமர்த்தியமாக மறைத்துக் கொள்வதே கலை என இவர் நம்புகிறார் .கிருத்திகாவின் வாசவேச்வரம் பற்றிய விவாதத்தில் ''வெறும் காமம் குரோதம் உலோபமாய் உலகம் இருக்கிறது.அதற்கு மேல் என்ன சொல்லு'' என்று அவரே சொல்வது குறிப்பிடத் தக்கது.யதார்த்தவாத சித்தரிப்பு மட்டுமல்ல கலை என்று அவர் நினைக்கிறார்.அதாவது மார்க்சிய இலக்கியவாதிகளைப் போலவே கலையை ஒரு இலக்கை நோக்கிச் 'செலுத்த' 'நினைக்கிறார்.திசை வேறு என்பது மட்டும்தான் வித்தியாசம்.அவர் அடிக்கடி சொல்லும் உள்ளொளி தரிசனம் என்பது அடிப்படையில் அவரது அற தரிசனமே அன்றி வேறல்ல.டால்ஸ்டாயை அவர் விதந்தோதுவதும் காந்தியை மீள்கண்டுபிடிப்பு  செய்ததும் இந்த வழியிலேயே.இதற்கு எதிர்ப் பார்வை கொண்ட படைப்புகளை (லோலிடா ,சதத் மண்டோ ,ஹென்றி மில்லர் )இவர் கடுமையாக நிராகரிப்பதும் இந்தக் காரணத்தால்தான்.


இந்த அற தரிசனத்தை உக்கிரமாக (அவர் அடிக்கடி பயன்படுத்தும் தேய்வழக்குகள்)காட்டுவதற்காக அவர் நாடகீய தருணங்களை வலிந்து உருவாக்குகிறார்.பழங்கதைகளில் சொல்லப் படுவது போலவே கதை தொடக்கம் நடு முடிவு என்று பழைய வரைபட உத்தி அவருடையது.முடிவு பெரும்பாலும் உக்கிரமாக இருக்கும் இந்த முடிவை நோக்கியே செல்வதே ஒட்டுமொத்த கதையும் வடிவமைக்கப் பட்டிருக்கும்.முடிவில் கவித்துவமாய் அவரது அற தரிசனம் ஒளித்து வைக்கப் பட்டிருக்கும் .இது சொல்லிப் புளித்துப் போன ஒரு பாணி.வணிக எழுத்தாளர்களைத்  தவிர இன்று இதைச் செய்யும் ஒரே இலக்கிய எழுத்தாளர் இவரே.


மிகுந்த உட்சிடுக்குகள் உடையதே கலை என்ற பார்வை இவருடையது.எளிய கதைகளை இவர் எழுதுவதில்லை குழந்தைகளுக்காக பனிமனிதனில் கூட தத்துவ விவாதம் செய்தால் என்ன சொல்வது?இவரால் எளிய கதைகளை எழுதவே முடியாது.அசோகமித்திரனின் மீதான இவரது ஈர்ப்புக்கு இதுவே ஒரு காரணமாக இருக்கக் கூடும் (எப்படி நம்மால் முடியாததை இவர் செய்கிறார்?)

நவீன இலக்கியத்துடன் யுத்திகளுடன் இவருக்கு இருக்கும் வெறுப்பு தெளிவாகவே இவர் ஆக்கங்களில் வெளிப்படுகிறது இவருடைய இலக்கிய சமூக அரசியல் பண்பாட்டுப் பொன்னுலகம் என்றோ மடிந்து போன இறந்த காலத்தில் இருக்கிறது.அவர் எப்போதும் நேற்றை திருப்பிப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.அதை மீண்டும் மீண்டும் பார்த்து ஏங்கி இன்றைக்கு கொண்டுவர முயலுகிறார்.விளைவாக இன்றைய தலைமுறையுடன் அவரால் உரையாட முடிவதே இல்லை.அவர்களில் பழமைவாதப் புத்தி உடையவர்களைத் தவிர மற்றவர்கள் அவரை வாசிக்காது புறக்கணிக்கிறார்கள் அவர்களுடன் உரையாடும் ஒரு ஆக்கத்தை அவர் இனிதான் எழுதவேண்டும் எழுதமுடியுமா என்பது சந்தேகமே )))))



இன்றைய உலகின் மனச் சிதறல் ஆன்மாவை சரியாக வெளிக் கொண்டுவருவது transgressive எழுத்து என்று சொல்லப்படும் வகை எழுத்துதான் மரபோடு முற்றிலுமாக தன்னை துண்டித்துக் கொண்ட மன நிலையிலிருந்து வரும் எழுத்து அது.ஜெமோ இயல்பிலேயே ஒரு செவ்வியல் கலைக் காரர் .முற்றிலும் இதற்கு எதிரான மன அமைப்பு கொண்டவர்.மரபின் மீது காதல் கொண்டவர்


மீறல் இலக்கியம் அல்லது எதிர்ப்பு இலக்கியத்தை உங்கள் ரசனைப்படி நீட்ஷேவிலிருந்தோ மார்கஸ் டி சாத்தில் இருந்தோ ஆரம்பிக்கலாம் நான் ஜான் க்ளிலேண்டில் (fanny hill)இருந்து ஆரம்பிப்பேன்.அதை வடிவம், பேசுபொருள் ஆகியவற்றை வைத்து மேலும் பகுத்துக் கொள்ளலாம்.வடிவத்தை வைத்து ஒட்டு இலக்கியம் ,செய்தி இலக்கியம் (truman captoe}போன்ற பல புதிய வடிவ உத்திகள்.இவை எல்லாவற்றையும் ஜெமோ வெறும் பரிசோதனை முயற்சிகள் என்று ஒதுக்குகிறார் என்பதைக் கவனிக்க .இந்த வகை எழுத்துகளின் எல்லைகள் ரொம்ப நெகிழ்வானவை.ஜெமோவின் உன்னதத்தை கச்சிதத்தை நாடும் காவிய மனதுக்கு இது உவப்பாக இல்லை.சினிமாவிலும் மணி கவுல் போன்ற இயக்குனர்களை கூட இந்த அளவுகோலின்படியே நிராகரிக்கிறார் என்பதைக் கவனிக்கவும்.

மீறல் இலக்கியம் என்பது கட்டற்ற பாலியல் மட்டுமில்லை.வன்முறையின் அழகியல்,விளிம்பு அரசியல்,அந்நியமாதல் ,போதை மருந்துகளின் உளச் சிக்கல்கள்,மனநோய்க் கூறுகள் பற்றிய சித்திரங்கள்,குற்ற உளவியல் போன்ற நவயுகத்தின் பிரச்சினைகள் அனைத்தையும் பேசுகிறவை.ஜெமோவின் அறத்திற்கு எதிரான 'எதிர் அறம்'பேசுகிறவை.நசிவு இலக்கியம் என்று உங்கள் நிலைப்பாட்டில் இருந்து அவற்றை நீங்கள் கண்டிக்கலாம்.ஆனால் உலக இலக்கிய அரங்கில் இது போன்ற எழுத்துகள் மென்மேலும் பெருகி வருகின்றன என்பதையும் அவையும் இலக்கியமே என்று பேசப் படுவதையும் நீங்கள் காணலாம்.இவை அதன் காலகட்டத்தைப் பிரதிபலிக்கின்றன என்பதோடு மட்டுமில்லாமல் எல்லா காலங்களுக்குமான விழுமியங்களைப் பேசுவதே இலக்கியம் என்ற கருத்தையும்கேள்விக்குள்ளாக்குகின்றன.இன்று இப்போது என்று அல்டஸ் ஹக்ஸ்லி சொல்வதைப் போல் எல்லாவற்றையும் ஏன் மரபிலிருந்து தொடங்கவேண்டும் என்ற பார்வையை முன்வைப்பவை இவை.
 ஹென்றி மில்லர் ,நார்மன் மெய்லர் ,ஜாக் கேராக் (the dharma bums)ஜான் லே கேரி,கதி ஆக்கர்,எரிக்க யுங் ,வில்லியம் பர்ரோஸ்,சில்வியா பிளாத் போன்றவர்களின் செலவாணி ரகசியம் இதுதான்.இவர்களைப் பிரதி செய்து தமிழில் எழுதும் முட்டை பாகைகள் வெற்றி பெரும் ரகசியமும் இதுவே .இந்த செலவானிகள் முற்றிலும் உருவாக்கப் படுகிறவை என்பது பாதி உண்மைதான்.நவயுவர்களின் சிதறல் மனங்களின் ஏதோ ஒரு நரம்பை இவை தொடுகின்றன.அறம் பேசும் செவ்வியல் படைப்புகளைவிட அவர்களுக்கு இது நெருக்கமாக இருக்கிறது .இது ஒரு அலை.இந்த அலையை ஜெமோ திருப்ப  முயல்கிறார்.அவர்களால் சனாதனவாதி என்று வசை பாடப் படுகிறார்.ஆனால் இந்த அலையை திருப்ப முற்றிலும் மரபு சார்ந்த ஒரு பார்வையில் இருந்து கொண்டு முடியாது.இதை அந்தரங்கத்தில்  ஜெமோ உணர்ந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன் ஏழாம் உலகம்.அனல் காற்று,உலோகம் போன்ற படைப்புகளில் அவர் தனது செவ்வியல் பார்வையை கொஞ்சம் உடைக்க முயன்றார் .ஆனால் அது முழுதாக நிகழவில்லை என்பதே எனது கருத்து.அவரைப் பொறுத்தவரை கழற்றி மாட்டிக் கொள்ள மரபு கண்ணாடி போன்றதல்ல.கண் போன்றது.அந்தப் பார்வையை அவரால் முழுக்க பின்வலித்துக் கொள்ளவே முடியாது.இதை அவர் அறிவியல் கதைகளில் காணலாம்.அந்தக் கதைகளிலும் அவர் கடந்த காலத்தை நோக்கி மரபை நோக்கியே பயணிக்கிறார் என்பது கவனிக்கத் தக்கது 

சற்று கவித்துவமாக சொல்லப் போனால் அவரால்அவரை நோக்கி சிரித்தபடி வரும் ஒரு குழந்தையை அதன் மொத்தப் பரம்பரையையும் நினைத்துக் கொள்ளாமல் பார்க்கமுடியாது )))



இதில்தான் அவர் பலம் பலவீனம் இரண்டுமே அடங்கியிருகிறது என்று நினைக்கிறேன் .அவர் எல்லாவற்றையும் மரபின் தொடர்ச்சியாகவே பார்க்கிறார்.கிரிதரனும் குருசும் ஊமைச் செந்நாய் வெள்ளையனும் தனி ஆட்கள் அல்ல அவர்கள் அவர்கள் வகையின் பிரதிநிதிகள் கூட என்று அவர் நினைக்கிறார் .புனைவில் மட்டுமல்ல நேர் வாழ்விலும் அவரின் இந்த வகைப் படுத்தும் மனம் கூர்மையாக செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது .ஆகவே தான் இயல்பாகவே அவர் புனைவோடு நின்றுவிடாமல் இலக்கிய விமர்சனத்துக்குள்ளும் நுழைகிறார்.அவருக்கு யார் யார் எங்கு எதன் தொடர்ச்சியாக நிற்கிறார் என்று வகுத்துக் கொள்வது முக்கியம்.அதுவே அவரது வாழ்க்கைப் பார்வை.அதனாலேயே அவர் சாதியத்தை எதிர்த்தாலும் அவை பண்பாட்டுக் குறியீடுகள் என்று சொல்லவும் செய்கிறார்.எழுத்தில் அவற்றைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை.அவை ஒரு மனிதன் எதன் கண்ணியாக இருக்கிறான் என்பதற்கான சமிக்கைகளை அவருக்கு அளிக்கின்றன.அவரைப் பொறுத்த வரை போகனும் அநீயும் ஜடாயுவும் அ மார்க்சும் அஜயன் பாலாவும் தனி மனிதர்கள் அல்ல அவர்கள் பின்னால் ஒரு பெரிய சங்கிலி இருக்கிறது அ நீயின் பின்னால் அவரது ஹிந்துத்துவ சங்கிலி மார்க்சின் பின்னால் அவரது இந்திய எதிர்ப்பு சங்கிலி ,இவ்வாறு எல்லாவற்றையும் தொகுதிப் படுத்திப் புரிந்துகொள்வது அடிப்படையில் ஒரு மார்க்சிய கண்ணோட்டமே.மார்க்சியத்தை எதிர்த்தாலும் அவர்களது கருவிகளைத்தான் கூர்மையாக அவர்கள் மீதே ஜெமோ பயன்படுத்துகிறார்.ஒரு மனிதனின் உடற்குறைகள் அல்லது நோய்கள் அவன் எழுத்தைப் பாதிக்கின்றன என்று அவர் சொல்லத் துணிவதும் இந்த வகைப் படுத்தும் மனப் பான்மையிலேயே.அது தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டு வசை பாடப் படுவது இயல்பானதே.கான்ட் டிற்கு கடுமையான அஜீரணம் இருந்ததால்தான் அவர் அப்படியொரு நம்பிக்கையற்ற உலகைப் படைத்தார் என்று சொன்ன விமர்சனங்களைப் படித்திருக்கிறேன் 

இந்த தொகுதியாய் எல்லாவற்றையும் பார்க்கும் பார்வை பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.புதுமைப் பித்தன் கதைகளைப் படிக்கும் போது அவற்றில் ஒரு பொறுமையின்மை எனக்குத் தெரியும்.ஜெமோ அது அவருக்கிருந்த காச நோய்க்கே உரிய பதற்றம் என்று சரியாகவே கணிக்கிறார்.ஆனால் இது பிழையாகும் தருணங்களும் உண்டு.மரபிலிருந்து சூழலிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக் கொள்வோர் உண்டு.மரபின் சங்கிலியாய் நிற்பவரே அதிலிருந்து விலகி நிற்கும் தருணங்கள் உண்டு.அஜயன் பாலாவை கிறித்துவர் என்று பிழைபடப் புரிந்துகொண்டதை இந்தப் பார்வையின் தவறுகளாகவே கருதுகிறேன் 

படைப்புலகிலும் இவ்விதம் தன்னை மரபிலிருந்து துண்டித்துக் கொண்டு நிற்பவர் உண்டு.அவர்கள் புதிய மரபின் தொடக்கமாக அமையக் கூடும் ஜான் ஆபிராமை அவர் உள்ளீடற்றவர் என்று மறுத்தது அவர் மரபற்றவர் என்று அவர் கருதியதாலேயே என்பதாகவே நான் கருதுகிறேன் 

இன்றைய  உலகம் மேலும் மேலும் மரபிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனிமனித வாதத்தை நோக்கி நகர்கிறது நான் எதனின் தொடர்ச்சியும் அல்ல என்பதே அதன் கூவல்.அது சாத்தியமா என்பது வேறு விஷயம் .அந்தக் குரலில் பேசும் கலைகளையே  அது  தனது வெளிப்பாடாக கருதுகிறது.தன்னைத் தொகுதிப்படுத்தும் எந்த முயற்சியையும் அது வன்மையாக எதிர்க்கிறது .ஜெமோ போன்றவர்கள் நியாயமாக அவர்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியை சுட்டிக் காட்டும்போது கூட வன்மையாக மறுக்கிறது .இதன் எதிர்விளைவாக பழமைவாதமும் மரபுக் குரல்களும் கூட உரத்த குரலில் பேச ஆரம்பிக்கின்றன.இந்த இரு அலைகளின் ஒரு அலையின் முகப்பில் உச்சியில் ஜெமோ நிற்கிறார் என்று நினைக்கிறேன் ஆனால் இது ஒரு எழுத்தாளனுக்கு ஒரு அபாயகரமான இடம் என்றே எனக்குத் தோன்றுகிறது சில நேரங்களில் அது அவனை அவன் விரும்பாத இடங்களில் அவன் சுயத்தை மீறிக் கொண்டு எறிந்து விடலாம் 

நாம் தனியல்ல .அது ஒரு நீண்ட பிரவாகத்தின் ஒரு சிறு துளி அதன் தொடர்ச்சி ,கண்ணி மட்டுமே என்று நம்புவது ஒரு போக்கு..ஆகவே இயல்பாகவே அது தனது இறந்த காலத்தை நோக்கி தொன்மங்களை நோக்கிப் போகிறது .இதை இன்னும் விளக்கப் போனால் பௌத்தம் இந்து ஞான மரபு செமிடிக் ஜே கிருஷ்ண மூர்த்தி என்று தத்துவ விசாரத்துக்குள் புக நேர்ந்துவிடும் .சென் பௌத்தம் சூன்யவாதம் போன்றவை எல்லா மரபுகளையும் நிராகரிக்கிறது என்பதையும் நாம் நேற்றின் தொடர்ச்சி அல்ல .ஒவ்வொரு கணமும் அதிலேயே பிறந்தது .அதைத் தாங்கிப் பிடிக்க மரபின் சங்கிலி தேவை இல்லை என்று வலியுறுத்துகிறது என்பதையும் நினைவு கொள்க.அங்கு ஏன் நிகழ்கிறது என்பது இல்லை .நிகழ்கிறது.அவ்வளவுதான்.நவயுக மனதிற்கும் அறிவியலுக்கும் இந்த கருத்து உவப்பாக இருப்பது புரிந்துகொள்ளத் தக்கதே.பீட்னிக் தலைமுறை இலக்கியத்தில் பௌத்தத்தின் செல்வாக்கு அதிகம் உண்டு என்பதை சற்று வாசித்தாலே காணலாம். அது தற்செயலானதில்லை.அங்கு அறம் என்பதோ மானுடத்தின் குரல் என்பதோ எல்லாம் இல்லவே இல்லை.அவை வாழ்வின் மீது நாம் சுமத்தும் நமது கற்பிதங்கள் மட்டுமே .


வாழ்வின் அடிப்படையில் ஒரு அறம் இருக்கிறது என்ற நம்பிக்கைவாதம் அவருடையது .அந்த அறம் மரபிலிருந்தே வருகிறது அங்கிருந்தே அதைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் நம்புவதுதான் பிரச்சினை,டாகின்சின் கடவுள் பிரமை புத்தகத்தில் இதை அவர் விரிவாக மறுத்துள்ளார்.குறிப்பாக the good book and the changing moral zeitgeist அத்தியாயத்தை வாசிக்கவும் அதிலிருந்து ஒரு வரி..there seems to be a steadily shifting standard of what is morally acceptable..it has shifted in all of us.and the shift has nothing to do with religion..if anything it happens in spite of religion not because of it....இங்கு மதம் என்று அவர் சொல்கிற இடங்களில் நீங்கள் மரபு என்பதை பிரதி செய்து கொண்டால் அவ்வளவு பொருத்தமற்றதாக இருக்காது 

 எல்லா காலங்களுக்குமான விழுமியங்கள் என்று ஒன்றும் இல்லை எல்லா மனிதர்களுக்குமான விழுமியங்கள் என்றும் ஒன்றுமில்லை.ஆனால் அவ்வாறு  நீடித்திருக்கும் அறம் என்று ஒன்ரிருப்பதான தொனியில்தான் எல்லா மதங்களும் மதநூல்களும் இசங்களும் பேச ஆரம்பிக்கின்றன அது பெரும்பாலும் கடும் வன்முறையில் முடிவடைகிறது அது லட்சியவாதம் மட்டுமே.என்று நம்பும் தரப்பு இருக்கிறது மெல்ல அந்த தரப்பு பெருகி வருகிறது  "அந்த நாளைக் கைப்பற்று'என்பதுதான் அதன் வாழ்வின் சூட்சுமம் .நீடித்திருக்கும் அறங்கள் என்ற கருத்தாக்கமே அதற்கு புரியாது 

எழுதப் பட்ட காலத்தில் மரபுக்கு எதிராக செல்வதாக கண்டிக்கப் பட்ட பல இன்று க்லாசிக்குகளாக மாறிவிட்டன.டாஸ்டவஸ்கி ,டி எச் லாரன்ஸ்,ஜேம்ஸ் ஜாய்ஸ் உதாரணங்கள் .இந்த புத்தகங்கள் கடுமையாக எதிர்க்கவும் ஏன் தடை செய்யப் படவும் பட்டன.லேடி சட்டர்லியின் காதலர்கள் புத்தகத்தை பலவருடங்கள் பதிக்கவே விடவில்லை.நீண்ட வாழக்குகள் அதற்கு எதிராக நடை பெற்றன .அப்போது செய்யப் பட்ட மரபுவாதிகளின் வாதங்களுக்கும் இப்போது அதன் சார்பாக செய்யப்படும் வாதங்களுக்கும் அதிக வேறுபாடு இல்லை. 

நம் அறங்கள் எவ்வளவு வேகமாக மாறுகின்றன என்பதற்கு இவை சாட்சி.இன்றைய மீறல் எழுத்துகளும் அவ்விதம் நாளை ஆகலாம் .அறிவியலிலும் இலக்கியத்திலும் சமூக தளத்திலும் மரபை எதிர்த்தே இன்றைக்கு நாம் அனுபவிக்கும் நிறைய நல்ல விசயங்கள் கொண்டுவரப் பட்டிருக்கின்றன .நாடக மரபின் தொடர்ச்சியை உதறும்வரை நல்ல சினிமா வரவில்லை.தளையை உதறிதான் புதுக் கவிதை வர முடிந்தது.மரபுக் கவிஞர்கள் அதை கடுமையாக எதிர்த்தார்கள் சிறுகதை என்ற மரபே கிடையாது நாவல் என்றால் என்னவென்றே தெரியாது..மரப் பசுவிலும் மோகமுள்ளிலும் 'அற தரிசனம்'கிடையாது.இதனாலேயே அவை முழுமையடையா நாவல்கள் என்று ஜெமோ சொல்கிறார் என்பது கவனிக்கத் தக்கது இதே போல்தான் கிருத்திகா வண்ண தாசன் வண்ண நிலவன் போன்றோரையும் அணுகுகிறார்.ஆமா மனிதன் காமம் குரோதாதி தான் அதற்கு மேல் சொல்லு?என்று அவர் சொல்கையில் அவர் ஒரு முடிவை தீர்ப்பை இதனால் சொல்லப் படும் நீதி என்று எழுத்தாளரிடம் ஒரு தரிசனத்தை அவர் எதிர்பார்க்கிறார்.இந்த நீதி சொல்லல் பல நேரங்களில் அபாயகரமாக முடிந்துவிடக் கூடும்.அறங்கள் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் காலங்களில் அந்தக் கால கட்டத்தை பதிவு செய்து தீர்ப்பை வாசிப்பவனின் மன நிலைக்கும் அவன் வசிக்கும் காலகட்டத்திற்கும் விட்டுவிடுவதே சரியாக இருக்கும். 

Wednesday, October 5, 2011

சாலைத் தெரு


உருசுக் குட்டியின்
கூர் தீட்டிய முலைகளிடமிருந்து
விடைபெற்று
ல சா ரா
சாலைத் தெரு
ஆ மாதவனிடம் போனார்
அங்கிருந்து இருவரும்
நகுலனிடம் சென்றார்கள்
நகுலனும் அவர் நாயும்
ஒரே வீட்டில்
தனித்தனியாக இருந்தார்கள்
சுசீலா எங்கே இருக்கிறாள்
என்றதற்கு
''சுசீலாவும் செத்துக் கிடக்கிறாள்''என்றார் நகுலன்
ஜகன்மித்யை
என்று கசிந்தார் லா சா ரா
துரும்பைத் துரத்திப் போகும் துரும்பும்
என்றார் மாதவன்
நிணக் கச்சோடம்
நிணக் கச்சோடம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
நகுலனின் நாய்
அவர்களை முறைத்துக் கொண்டிருந்தது
''அவனுக்கு இறைச்சி நாள் இன்று ''
என்றார் நகுலன்
''நேரம் போகப் போக
நாம் எல்லாரும்
அவனுக்கு இறைச்சிப் பொதிகளாய் மாறிக் கொண்டிருக்கிறோம் ''
என்றார் எச்சரிக்கையாக,
லா ச ரா கால்களை
இழுத்துக் கொண்டார்
ஒருக்கால் ..ஒரு கால்
என்று எழுதிக் கொண்டது அவர் மனம்
பிஜாய்ஸ் குப்பியைத் திறந்ததும்
பட்டு உத்தரியம் தொங்க
கம்பனும்
ஈசுவர மூலியுடன்
மீசை தளரா பாரதியும் வந்து சேர்ந்துகொண்டார்கள்
இரண்டாம் கோப்பைக்கு மேல்
ஜாய்சும் ஹென்றி ஜேம்சும் வில்லியம் பாக்னரும்....
ஹோமரும் ஷேக்ஸ்பியரும் .
.இன்னும் இன்னும் பலரும்


நான் போய்ச சேர்ந்த போது
மது தீர்ந்து போயிருந்தது
அவர்கள் போயிருந்தார்கள்

Tuesday, October 4, 2011

துணை

இருள்மூடிக் கிடக்கிறது
அவள் முகம்
உதிரம் கசியத்
தோண்டித் தோண்டி
வெளியே வீசுகிறேன்
கொஞ்சம் கொஞ்சமாக
அவள் வெளியேறுகிறாள்
நினைவின் கல்லறையிலிருந்து
மீண்டவள்
ஓவென்று அலறி
என் கழுத்து நரம்பைத் தேடி வந்தாள்
நிணம் உருகும்
கைகளால் என்னை இழுத்து
அணைத்துக் கொள்கிறாள்
வேள்வியில் ஆகுதிஎன ஆகிறது என் உயிர்
கோர்த்துக் கொண்ட
அவள் குளிர் விரல்களில்
என் வெப்பம் ஏறுகிறது
இன்னும் கொஞ்ச நேரம் தான்
என்று தேற்றுகிறாள் என்னை
அதன்பிறகு இருவருமே அமரர்கள்
என்றதை நான் நம்ப மிக விரும்புகிறேன்
மூங்கில் படலின்
வெளியே நிற்கிறது
கோச்சுவண்டி
கால் மாற்றி கால் மாற்றி
நிற்கும் குதிரை கனைக்கிறது

இருள் சூழ்ந்த இரவில்
வானத்தில்
ஒரு ஒளித்திரள் போவதை
நீங்கள் கண்டால்
அது நாங்களாகவே இருக்கலாம்

Monday, October 3, 2011

உயிர்த்தெழல்


1.திரும்பவும்
ஏசு பிறக்க
திரும்பவும் காட்டிக் கொடுக்க
யூதாசுக்கு
திரும்பவும்
முப்பது வெள்ளிக் காசுகள்
கொடுக்கப் பட்டது
அவன் அதை வீசி எறிந்துவிட்டு
''ஆட்டோ காசுக்குக் கூட போதாது
விலைவாசி ரொம்ப ஏறிவிட்டது
ஏசுவின விலையும்...''என்றான்
''தவிரவும் அவர் இப்போது
உலகின் மிகப்பெரிய
பணக்காரர்... ''


2.குகைக்குள்
தனிமையாயிருக்கிறது
என்று
உயிர்த்தெழுந்து வந்தவர்
வாசலில்
நெருக்கிக் கொண்டிருந்த
டிவிக் காரர்களைக் கண்டு
இங்கு ரொம்ப கூட்டமாக இருக்கிறது
என்று கூறி
திரும்ப மரித்துப் போனார்



3.விலாத் தழும்பைக் காட்டி
இப்போது நம்புகிறாயா
என்றவர் முன்
தலைகுப்புற விழுந்து
சந்தேகத் தோமா
''மெய்யாகவே
உங்களது பிளாஸ்டிக் சர்ஜன்
தேவகிருபை பெற்றவர் ''
என்றார்


4.அங்கியல்ல
வானத்திலிருந்து ஒலித்த
பிதாவின் குரல்
சந்தேகத்துக்கு இடமின்றி
ஸ்கர்ட் தான் அணிந்திருந்தது !

ஏறெடுத்து பார்த்தவனை
''அந்தக் கோணத்தில் இருந்து
பார்க்காதே இழவெடுத்தவனே''
என்று அதட்டியது

Thursday, September 8, 2011

ஸ்ட்ரைக்கர் 1

ஒற்றைச் செருப்பு எங்கே என்ற தமிழ்வாணனின் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா?மணி மொழி என்னை மறந்துவிடு?கருநாகம்?பேய் பேய்தான்?இவை எல்லாவற்றையும் டவுன் மார்க்கட் நடுவில் இருந்த முனிசிபாலிட்டி நூலகத்தில்தான் நான் படித்தேன்.சந்தையின் தினசரி இரைச்சல் நடுவே நானும் பரமு அக்காவும் வேடிக்கை பார்த்துக் கொண்டே மார்க்கட்டுக்கு எதிரே இருந்த கடைகளில் இஞ்சி சேர்த்த கரும்புச் சாறும் குடித்துவிட்டு போய் புத்தகம் எடுத்துக் கொண்டு வருவோம்.தமிழ்வாணன் மட்டுமல்ல லட்சுமி ஹேமா அனந்த தீர்த்தன்,பி வி ஆர். போனவர்களும் படித்தேன்.ஆனால் தமிழ்வாணன் தான் முதல்.

பரமு அக்காவின் முழுப் பெயர் பரமசிவம்.ஆண் பிள்ளைப் பெயர்தான்.ஆனால் பிள்ளைமார் வீடுகளில் பெண்களுக்கும் வைப்பார்கள்.ஆறுமுகம் என்று கூட வைப்பார்கள்.அதே போல் ஆண்களுக்கு கோமதி பார்வதி என்று பெண் பெயர்களும் வைப்பதுண்டு.பரமு அக்காவின் அப்பா மார்க்கட்டில் வாழை மண்டிக் கமிசன் வைத்திருந்தார்.விடி காலையிலேயே எழுந்து போனார் எனில் நடுராத்திரிதான் வீட்டுக்கு வருவார்.பத்தரை மணி வாக்கில் நானும் பரமு அக்காவும் அவருக்கு சாப்பாடு தூக்குச் சட்டியில் கொண்டு போவோம்.அதாவது நான் பள்ளி போகாத நாட்களில்.அக்கா சமைந்தவுடன் ஆச்சி பொட்டப்புள்ள இப்படி ஊர்க் காட்டில விரிச்சிகிட்டுப் தனியா போறது நல்லா இல்லைன்னு சொல்லித் தடுத்துவிட்டாள்..அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் இருந்தேன்.இரண்டுங்கெட்டான் பருவம்.ஒருநாள் அக்கா என் தொடையைத் தடவி இனிமே நீ வேஷ்டி அல்லது பேண்ட் போட்டுட்டு வா என்றதும் வெட்கப் பட்டு ஒருவாரம் அவள் வீட்டுக்குப் போகாமல் இருந்தேன்.


அக்கா அழகு.அதுவரை நான் பார்த்த பெண்களிலேயே என்று சொல்லவேண்டுமோ.மாநிறம்தான்.ஆனால் மாநிறப் பெண்கள் அழகாக இருந்தால் மிக அழகாக அமைந்துவிடுகிறார்கள்.நான் பார்த்த பிள்ளைமார்ப் பெண்களுக்கெல்லாம் முன்பல் இரண்டும் வாய்க்கு வெளியே தேங்காய்த் துருவி போல நீட்டிக் கொண்டிருக்கும்.அவ்வாறு இல்லாவிடில் அவர்கள் வழி சுத்தமான பிள்ளைமார் அல்ல என்று எனது ஆச்சி சொல்லக் கேட்டிருக்கிறேன்.அவ்விதம் பரமு அக்காவுக்கு இல்லாததே எனக்குப் பெரிய அழகாக தெரிந்தது.அவளுக்கு அரிசி மாதிரி பல்.ஆனால் அதைப் பார்க்க அதிகம் வாய்ப்பு கிடைப்பதில்லை.சிரிக்கும்போது உதடைக் கடித்துக் கொண்டுதான் சிரிப்பாள்.உதட்டுக்கு வரும் முன்பே அது கண்ணுக்கு வந்துவிடும்.அங்கிருந்து காட்டில் நெருப்பு பரவுவது போல அவள் கன்னத்தை முழுவதும் சிகப்பாக்கி நிதானமாகத்தான் உதடுகளை வந்தடையும் அப்போது உங்களுக்கு அவளைக் கட்டிப் பிடித்துக் கொள்ளவேண்டும் போல இருக்கும்.ஒருதடவை சொல்லியே விட்டேன்.அவள் ''அடி''என்று செல்லமாக சிரித்தாள்.''உங்க அம்மைகிட்ட சொல்லி உனக்கு சீக்கிரம் ஒரு பொண்ணு கட்டிக்க''

.அப்படி கட்டினால் நான் உன்னைத்தான் கட்டுவேன் என்று வாய்வரை வந்துவிட்டது.ஒரு மாதிரி கன்றுக் குட்டிக் காதல்.நான் ரொம்பக் கிட்டத்தில் பார்த்த முதல் பெண் அவள் என்ற காரணமாய் இருக்கக் கூடும் என்றாலும்..இன்று நான் நினைக்கையிலும் என் நினைவில் அவள் அழகு தேய்ந்துவிடவில்லை.நாங்கள் இருவருமே நகராட்சிப் பெண்கள் பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தோம்.அங்கு ஐந்தாம் வகுப்புவரை பையன்களுக்கும் அனுமதி உண்டு.அதன் பிறகு நான் சாப்டர் ஸ்கூலுக்குப் போய்விட்டேன்.ஒன்தாம் வகுப்பில் அக்கா சமைந்தாள் .பேட்டைக்குப் போகிற சாலை வளைவில் இருந்த நயினார் வகை மண்டபத்தில்  வைத்து பெரிய அளவில் சடங்கு செய்தார்கள்.அன்றுதான் முதன் முதலாக பாயாசத்தில் பூந்தி கலந்து சாப்பிடுவதைப் பார்த்தேன்.அதன்பிறகு அவள் பள்ளிக்குப் போவதை நிறுத்தி விட்டார்கள்..அதன் பிறகு ஒரு வருடம் கிட்ட அவளை நான் வீட்டுக்கு வெளியே பார்க்கவே இல்லை.ஒரு நாள் அம்மா ''ஆச்சியிடம் உரைக்கு மோர்வாங்கி வா என்று அனுப்பியபோதுதான் மீண்டும் நான் அவளைப் பார்த்தேன்.அழி போட்ட முதல் அறையில் இருந்து ஆச்சி ஆச்சி என்று நான் கத்திக் கொண்டிருக்க அக்கா உள்ளிருந்து வந்தாள்.''ஏன் இப்படி கத்துதே.என்ன வேணும் ஆச்சிக்கு உடம்பு சரியில்லை.தூங்குதா 'என்ற படி வெளியே வந்தாள்.நான் ஒரு கணம் அப்படியே கல்லால் அடித்தது போல நின்றுவிட்டேன்.அக்காவா இது?சிகப்புப் பாவாடை தாவணியில் வேறு ஆள் போல இருந்தாள்.முகத்தில் லேசாய் மஞ்சள் பூசி இருக்க காதோரம் பூனை மயிர் இரங்கி கை வைத்த ஜாக்கட் வைத்து இடுப்பில் புதிய வளைவுகள் வந்து கொலுசு எல்லாம் அணிந்து அசையும்போதேல்லாம் அது சிதற....

''ஏலே ஏன்னா?இப்படிப் பார்க்க..என்ன வேணும்?""
நான் தடுமாறி ''மோரு..அம்மா கேட்டாங்க''
''ஆமா மோரு கேட்கற லட்சணத்தைப் பாரு''
அவள் மோர் எடுத்துக் கொடுக்கும்போது ''பரமுக்கா நீ ஆளே மாறிட்ட''என்றேன் மெதுவாய்.
அவள் வேறெங்கோ பார்த்து ''ம்க்கும்.என்ன மாறிட்டனாம்"'என்றாள்
பிறகு ''அது கிடக்கட்டும்.வீட்டில உட்கார்ந்து உட்கார்ந்து போரடிக்குது...லைப்ரரில இந்தப் புத்தகத்தைக் கொடுத்துட்டு வேற ஏதாவது எடுத்திட்டு வருவியா"'என்றாள்.நான் சரி என்றேன்.

லைப்ரரியன் என்னைக் கண்டதுமே கொதிப்படைந்து ''ஏலே எங்கலே உங்க அக்கா?புத்தகம் எடுத்திட்டுப் போய்ஆறு மாசமாச்சு..ஆபிசரு என் உசிர எடுக்கான்''என்றார்.

''நான் ''அக்கா சமைஞ்சிடுச்சு''சார்.''என்றதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.''சமைஞ்ச புள்ளைக்கு எதுக்குல கதைப் பொஸ்தவம்?பேசமா குப்புற அடிச்சுப் படுத்துக்கச் சொல்லு''என்று அந்த புத்தகத்தையும் பிடுங்கி வைத்துக் கொண்டார்.

நான் திரும்பி போகையில் ஆச்சி முன் அறையில் உட்கார்ந்து கல் அரவையில் எதையோ திரித்துக் கொண்டிருக்க .''பரமு மச்சில இருக்கா போய்ச சொல்லு''என்றாள்.நான் மரப் படிகள் அதிர மச்சு ரூமுக்குப் போனேன்.அங்கு லைப்ரரியன் சொன்னது போலவே அவள் கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டு ராணி படித்துக் கொண்டிருந்தாள்..என்னைப் பார்த்ததும் எழுந்து கொண்டு ''என்னடா பொஸ்தகம் வாங்கிட்டு வந்தியா''என்றாள் ஆவலுடன்.
நான் ''தரமட்டேன்னுட்டான்''என்றதும் ஒருகணம் அவள் முகம் வாடியது.''போறான எழவெடுத்தவன்'என்றவள் ஒரு கணம் யோசித்து ''உனக்கு உடனே போகனுமா''என்றாள்
நான் ''இல்லியே ஏன்''
''கேரம் போர்ட் வெளாடுவோமா''
''கேரம் போர்டா ..எங்க இருக்கு''
''இருக்கே''என்று அறை மூலையில் சாய்த்து வைத்திருத்த கனமான கேரம் போர்டை தூக்கி வந்தாள்.
அப்படித்தான் எங்கள் விளையாட்டு ஆரம்பித்தது.லீவு நாட்களில் முழுக்க அவள் வீட்டில்தான் கிடந்தேன்.வெறி பிடித்தது போல் விளையாடிக் கொண்டே இருந்தோம்.சில நாட்களில் அங்கேயே சாப்பிட்டுக் கொண்டேன்.எப்போதும் அங்கு ஸ்ட்ரைக்கர் போர்டை மோதும் ஒலி டக் டக் என்று கேட்டுக் கொண்டே இருந்தது.அந்த மூன்று நாட்களில் மட்டும் ஆச்சி ''அவளுக்கு உடம்புக்கில்லை.மூணு நாள் கழிச்சு வா''என்றுவிடுவாள்.அந்த நாட்களில் எல்லாம் பித்து பிடித்தது போல இருப்பேன்.''அதென்ன சரியாக உனக்கு மாதத்தில் மூன்று நாட்கள் உடம்பு சரியில்லாமல் போய் விடுகிறது என்று கேட்டதற்கு அவள் முகம் சிவந்து ''அது அப்படித்தான்''என்றாள்.

கேரம்போர்டில் அவளது திறமை ஆச்சர்யமூட்டுவது.ஒரு தடவை கூட அவளை என்னால் ஜெயிக்க முடிந்ததில்லை.சில நேரங்களில் எனது முகவாட்டம் பார்த்து அவளே விட்டுக் கொடுத்து விடுவாள்.சைனிஸ் கட எல்லாம் அடிக்கத் தெரியும் அவளுக்கு.

கேரம்போர்டு தவிர அவளிடம் ஒரு மர்பி ட்ரான்சிஸ்டர் இருந்தது.அது மௌனமாய் இருந்து நான் பார்த்ததே இல்லை.எப்போதும்  சளசளவென்று பேசிக் கொண்டோ பாடிக் கொண்டோ இருக்கும்.''அதுக்கு கட்டை வங்கியே சொத்தெல்லாம் போயிரப் போகுது என்று ஆச்சி சலித்துக் கொள்வாள்

பரமு அக்கா அழகாகிக் கொண்டே போவதை நான் நேரடியாகவே உணர்ந்தேன்.என் கண் முன்னாலேயே அவள் மாபெரும் அழகியாகிக்  கொண்டிருந்தாள்.அது அவளுக்கும் தெரிந்திருந்தது.மார்புகள் விரிந்து மெல்லிய சிவந்த பருக்கள் முகத்தில் எழும்ப...ஒரு நாள் நான் போனபோது ஆச்சி இல்லை .அவள் கீழே பின்கட்டிலிருந்து சிந்தால் சோப்பு வாசனையோடு நெஞ்சோடு ஒட்டிய ஈரப பாவாடையோடு வந்து ''குளிச்சிட்டிருந்தேன்''என்று கடந்து போனாள்..அலமாரியில் இருந்து துவர்த்தை எடுக்கும்போது உயர்ந்த கைகளுக்கிடையே தெரிந்த மெல்லிய ரோமக் கற்றையும் கூடவே எழும்பிய மார்புகளும் மூச்சடைக்கவைத்தன.அடுத்த அறையில் அவள் ஈர உடைகளைக் களையும் ஒலிகளைக் கெட்டுக் கொண்டு தணல மேல் இருப்பது போல் நின்றிருந்தேன்.
ஆடை மாற்றிக் கொண்டு கூந்தலை நீர் சிதற உதறிய படியே வெளியேவந்தவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருக்க 'ஏலே என்னத்தைப் பார்க்கே ?'
''ஒண்ணுமில்லை''
''ஒன்னுமில்லாததையா இப்படி விழுந்து விழுந்து பார்க்கே''என்று சிரித்தாள்.அன்று முழுவதும் எனக்கு ஆட்டத்தில் கவனமே இல்லாமல் மைனஸ் மைனசாகப் போட்டுக் கொண்டிருந்தேன்.


ஏனோ அன்றிரவு எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது.சாதாரணமாய்த் தொடங்கிய காய்ச்சல் எதற்கும் அடைபடாமல் ஒரு மாதம் வரை இழுத்து டைபாய்டு என்று பின்னால் கண்டு பிடித்து டவுன் சர்க்கார் ஆஸ்பத்திரியில் ஊசி மேல் ஊசியாய் போட்டுத் தேற்றி அனுப்பி வைத்தார்கள்..இடையில் ஒரு தடவை அக்கா வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்தாள் ''எலே என்னா எதைக் கண்டு பயந்தே''என்று சிரித்த போது ஏதோ உளறினேன்

திரும்ப அவளைப் பார்க்க சரியாக மூன்று மாதமாகிவிட்டது.

ஆச்சி ''ஏலே நால்லாயிடுச்சா உடம்பு .பரமு மேல இருக்கா போ'''என்றாள்.
பரமு அக்கா என்னைக் கண்டதும் சட்டென்று எழுந்துவந்து என்னை அப்படியே அணைத்துக் கொண்டாள் .அவளது வெப்பமான மூச்சு மார்பின் மீதேறி போவதை நான் என் முகத்தில் உணர்ந்தேன்.அவள் மார்பு நடுவிலிருந்து கோகுல் பவுடரின் வாசனை நாசியை நிறைத்தது.பின்னர் விலக்கி ''ச்சீ''என்று சிரித்தாள்.''அய்யோ நீ இப்ப பெரிய பிள்ளைல்லா...இல்லே?"'.

நான் கேரம்போடு விளையாடுவோமா என்று கேட்டேன்.சரி என்றாள்.ஆனால் முன் போல் அவள் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பதை கவனித்தேன்.தொடர்ச்சியாக மைனஸ் போட்டுக் கொண்டிருந்தாள்.அடிக்கடி தட்டட்டிக்குப் போகும் சிறிய வாசலைப் பார்த்துக் கொண்டால்.அங்கிருந்து பார்க்க அடுத்த வீட்டின் தட்டட்டியும் மச்சு அறையும் தெரியும்.ஏன் இங்கிருந்து தாவி அங்கு போய் விடக் கூட முடியும்.அங்கு யாரைப் பார்க்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை.அந்த வீட்டின் கீழ் தளத்தில் ஒரு வாசிங் பவுடர் கம்பனியின் குடோன் மட்டுமே இருந்தது.மச்சு அறையின் வாசல் எப்போதும் பூட்டியே கிடக்கும்

ஆனால் மறுநாளே அந்த அறை திறந்துகிடப்பதை நான் பார்த்தேன்.அக்காவை ஆச்சி கூப்பிட கீழே போய் இருந்த போது தட்டட்டிக்குப் போக அங்கே அகலக் கண்ணாடி ஸ்டேப் கட்டிங் பெல்பாட்டம் பேண்ட பட்டைப் பெல்ட்டுடன் சரத்பாபு மாதிரி ஒரு ஆள் இங்கேயே பார்த்துக் கொண்டு புகை விட்டுக் கொண்டிருக்க என்னைப் பாத்ததும் திடுக்கிட்டு சட்டென்று வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்.

அதன்பிறகு பரமு அக்கா வேறு மாதிரி ஆகிவிட்டாள்.அவளுக்கு என்னுடன் கேரம் போர்டு விளையாடுவதில் விருப்பமே இல்லது போயிற்று.நான் மாடிஏறிப் போகும்போதெல்லாம் ஏதோ ஒரு கனவிலிருந்து விழித்துக் கொண்டது போல் பதற்றத்துடன் இருந்தாள்.ஒரு நாள் நான் போகும்போது கட்டிலில் படுத்துக் கொண்டே ஏதோ படித்துக் கொண்டிருந்தவள் பதறி எழுந்து அதை மறைத்துக் கொண்டாள்.அது ஏதோ ஒரு கடிதம் போல் இருந்தது. என்னைக் கண்டதும் சிடுசிடுத்து ''எக்சாமுக்குப் படிச்சிட்டியா நீ''என்றாள்
.
ஒரு நாள் மதியம் வாத்தியார் ஒருவர் இறந்துவிட்டாரென்று பள்ளி விட்டுவிட்டார்கள்.நான் ஆச்சி வீட்டுக்குப் போனேன்.ஆச்சி முன் அறையில் சேலையை விரித்து வாய்பிளந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.மேலே இலங்கை வானொலி கரகரத்துக் கொண்டிருந்தது.நான் ஏதோ ஒரு உள்ளுணர்வில் ஒரு பூனையைப் போல சத்தமிடாது படிகளில் ஏறிப் போனேன் ஆனால் உள்ளே முழுவதும் ஏறும் முன்பே நான் அறிந்துகொண்டுவிட்டேன்..சிலோன் ரேடியோவின் மங்கையர் மலரையும் மீறி கசிந்த மூச்சுசிதறல்கள் முனகல்கள் என்னை வந்தடைந்து விட்டன.அக்காவின் கட்டிலுக்கு எதிரே ஒரு கண்ணாடி வைத்த பீரோ இருந்தது.அது வழியாக எல்லாம் தெரிந்துவிட்டது.அக்கா இடுப்பில் மட்டும் ஒரு பச்சைப் பாவாடையோடு நின்று கொண்டிருந்தாள்.சரத்பாபு அவளைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டுக் கொண்டிருக்க அவன் தோளில் அவள் முகம் கண் மூடிக் கிடந்தது. நான் கண்ணீருடன் ஒரு யுகம் போல அந்த கண்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.
ஏதோ ஒரு வினாடியில் அந்தக் கண்கள் திறந்தன.சட்டென்று நேர் எதிரே கண்ணாடியில் தெரிந்த என் கண்களை சந்தித்தன.விரிந்தன.

நான் கீழிறங்கி வந்துவிட்டேன்.








LinkWithin

Related Posts with Thumbnails