Sunday, June 3, 2012

பொருக்கு

நீண்ட நாட்களுக்குப் பிறகு 
மாட்டுத் தாவணி பேருந்து நிறுத்தத்தில் 
பாசந்தி சாப்பிட்டுக் கொண்டிருந்த 
அவளைக் 
கண்டுகொண்டேன் 
கன்னத்தில் 
இறங்கியிருந்த 
மெலிய கோடுகளைத் தவிர 
வயது 
அவளைப் பெரிதாக 
மாற்றியிருக்கவில்லை 
மார் கூட 
இருபது வயதின் 
அதே கூரோடு
இருப்பதாக தோன்றிற்று 

இன்னமும் 
பாசந்தி தானா 
என்று சிரித்தேன் 
நானும் அவளும் 
சாப்பிட்ட 
அத்தனை பாசந்திகளையும் 
நினைவு கூர்ந்து ..

அவள் 
எனது புத்தகக் கனம்
இறக்கிய ஒற்றைத் தோளையும்
அழுக்குச் சட்டையையும் 
வரட்டுத் தாடியையும் 
செருப்புக்குள் பொருந்தாது 
துருத்தி நிற்கும் 
கால் நகங்களையும் 
கவனித்து 
இன்னமும் ஜோல்னாப் பைதானா 
என்று சிரிப்புடன் கேட்டாள்

வர்மப் புள்ளிகளில் 
உளிப்புள்ளி வைத்து 
திருகும் வித்தையை 
அவள் இன்னமும் 
பயிற்சி செய்கிறாள் 
என்று அறிந்து கொண்டேன்..

2 comments:

  1. இன்னமும் பாசந்தி தானா\\

    எனக்கு ஜிகர்தண்டாவை விட பாசந்திதான் இன்னும் பிடிக்கும்.

    இறுதி வரிகள் அருமை.

    நன்றி.

    ReplyDelete
  2. காயத்தில் கத்திமுனை வைத்து லேசாக மிக லேசாகக் கீறுவது சிலருக்கு எப்படியோ பிறவி ஞானமாகவே அமைந்து விடுகிறது. நல்ல வரிகள்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails