Sunday, July 18, 2010

உடல் தத்துவம் 2

எச்சரிக்கை;கண்டிப்பாக வயது வந்தவர் மட்டும் 

ஏறக்குறைய ஒரு டாக்டரின் கிளினிக் போல தான் இருந்தது அவள் வீடு.டோக்கன் மட்டுமே தரவில்லை.உள்ளே இடமில்லாமல் வெளியே சணலால் பின்னிய கட்டிலில் சர்க்கஸ் போல் அமர்ந்து சற்றுதொலைவில் கங்கை வெட்கமில்லாத ஸ்திரீ போல் போடும் சத்தங்களைக் கேட்டுக்கொண்டு மோட்டா கொசுக்களை பொளேர் என்று தொடையில் அறைந்து ரத்தம் வருகிறதா என்று பார்த்துக்கொண்டு தரையில் இரண்டுக்குப் போகிற ஆசனத்தில் தார்பாய்ச்சல் வேட்டியுடன் பூச்சிமருந்து உண்மையில் பயிருக்கு நல்லதா மாட்டுச் சானமா என்று பேசிக்கொண்டிருக்கும் உத்திரப் பிரதேச விவசாயிகள் பிடிக்கும் கடின நெடி சுருட்டுகளை வெறுத்துக் கொண்டு இருக்கையில்தான் அவரைப் பார்த்தேன்.

தொளதொள பைஜாமாவும் டைட்டான குர்த்தாவுமாக ஆனால் இரண்டும் அழுக்காக பளபளக்கிற வெண்ணிறத்தில் பளபளக்கிற வழுக்கையுடன் ...முகமெல்லாம் தினமும் எருமை வெண்ணை கொண்டு தேய்ப்பார் போல டாலடித்தது.சுத்தமாக ஒரு மயிர் கூட முகத்தில் இல்லை.மற்ற இடங்களில் எப்படியோ.புருவத்தைக் கூட பென்சிலில் எம்.ஜி.ஆர் மீசை போல வரைந்திருப்பாரோ என்று சந்தேகம் வரும் அளவில்தான் இருந்தது.எனக்கு எப்பவுமே மயிரில்லாத ஆண் பெண் இருவரையும் பிடிப்பதில்லை.ஆனால் பாருங்கள் நான் காலத்துக்கு எதிராக செல்கிறேன்.இப்போது எல்லாம் அந்தரங்க உறுப்புகளில் கூட ஷேவ் செய்து மழமழவென்று பட்டர்பன் போல வைத்திருக்கிறார்கள்.அதற்கென்று தனி ரேசர்கள் கூட வந்துவிட்டன.வயதுக்கு வந்துவிட்டார்களா என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

சரி.அதெல்லாம் நமக்கென்ன.மயிரே போச்சு.ஆனால் மயிர் போனால் உயிர்விடும் பரம்பரை அல்லவா நாம்?லா.ச.ரா கூட இதுபற்றி [கவரிமான் பற்றி சார்.நான் சொன்ன கன்ட் ரேசர்கள் பற்றி அல்ல]எழுதியிருக்கிறார்.நிற்க.இந்த மருந்துக்கு கூட மயிரில்லாத ஆஜானுபாகு [இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்னவென்று ஒரு பயலுக்கும் தெரியாது என்று சவால் விடுகிறேன்]மனிதர் தன் பையில் இருந்து ஹூக்கா ஒன்று எடுத்து 'சில்லம்?என்றார்.
''இல்லை.பழக்கம் இல்லை''என்றேன் ஹிந்தியில்.
அவர் பற்றவைத்துக் கொண்டு ஆழமாய் இழுத்தார்.''மதராசி?''
''ஆமாம்''
''காசிக்கு எதற்கு வந்திருக்கிறீர்கள்''
நான் அபத்தமாய்''காசியைப் பார்ப்பதற்கு''
அவர் சற்று கோபமாய்''நாங்கள் எல்லாம் பிறகு வேசியை பார்ப்பதற்கா வந்திருக்கிறோம்?''
''ஏன் இருக்க கூடாது.வேறெந்த இடத்தைவிடவும் இங்குதான் வேசிகள் தரமாகவும் சல்லிசாகவும் கிடைக்கிறார்கள்''
அவரை அந்த பதில் ரொம்பவே கவர்ந்துவிட்டது போலும்.''எஸ்.யூ ஆர் ரைட்.''என்றார்.என்னை சற்று ஆழ்ந்து பார்த்தார்.''இல்லை.நீங்கள் இதற்காய் காசிக்கு வரவில்லை.''என்றார்.
நான் சற்று அசவுகர்யமாய் உணர்ந்தேன்.அப்போது நான் ஒரு குழப்பமான காலகட்டத்தில் இருந்தேன்.நான் அந்தரங்கத்தில் நேசித்த ஒரு நபர் தற்கொலை செய்து இறந்திருந்தார்.அவரை அந்நிலைமைக்கு தள்ளியவர்களில் நானும் ஒருவராய் இருக்கக் கூடுமோ என்ற குற்ற உணர்வு என்னை அலைக்கழித்தது.அவர் இறந்தபிறகு அவர் மீது என்னுள் இருந்த காதல் இன்னும் பலமடங்கு ஆக்டோபஸ் போல பெருகி என் கழுத்தை இறுக்கியது.ஊர் ஊராய் அலையவைத்தது.யாரோ காசிக்குப் போகச் சொன்னார்கள்.காசி எல்லா பாவங்களையும் ஜீரணித்துவிடும் எனறார்கள்.நானோ காசிக்கு வந்து புதிய பாவங்கள் செய்வதற்காக க்யூவில் காத்திருக்கிறேன்!
''ஆம்.நான் காசிக்கு வந்தது கொஞ்சம் நிம்மதியும் ஞானமும் தேடி''
அவர் கடகடவென்று சிரித்து''இரண்டும் எதிர் எதிரான விசயமாயிற்றே''என்றார்.''ஞானம்!அதை எப்படி கண்டுகொள்வாய்?அது எப்போதாவது உன்னிடம் இருந்திருக்கிறதா என்ன?''
எனக்கு அந்தக் கேள்வி புரியவில்லை.அறிவிருக்காய்யா உனக்கு என்கிறாரா.
''ஏற்கனவே உங்களுக்கு தெரியாத பரிச்சயம் இல்லாத விஷயத்தை உங்களால் எப்படி தேடமுடியும்..கிடைத்தாலும் கண்டுகொள்ளமுடியும்?''
''மன்னிக்கணும் ஐயா.என்ன சொல்லுகிறீர்கள்''
''நீ ஞானத்தையும் ஒரு அனுபவம் ஆக்கி தேடி அலைகிறாய்.இதோ இந்த வேசியின் புணர்ச்சி அனுபவம் போல.அதற்காக எங்கெங்கோ போகிறாய்.காத்திருக்கிறாய்.ஞானம் ஒரு அனுபவம் அல்ல.அது அடையக் கூடியது அல்ல.'
''பிறகு நாம் என்னதான் செய்வது"
''சும்மா இரு.மாயை என்பது புதைசேறு மாதிரி .வெளியே வர நீ செய்யும் ஒவ்வொரு முயற்சியும் அதிலேயே மூழ்கடிக்கும்''
நான் சற்று சீண்டப்பட்டு''இந்தியாவில் பாதிபேர் சும்மாதான் வேலையற்று டீக்கடை பெஞ்சுகளில் பல் குத்திக்கொண்டு இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாம் ஞானிகளா"'
அவர் சிரித்து''நீ ஞானத்தைத் தேடுகிறாயா.ஞானிகளையா?'
''ஞானிகளிடம் ஞானம் இருக்காதா என்ன''
''இருக்கலாம்.அது அவன் ஞானம்.உனக்கு எவ்விதம் உதவும்''
நான் சட்டென்று வெளிச்சமடைந்து''நீங்கள் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி விசுவாசிதானே''என்றேன்.
''யார் அது.பெரிய பெரிய பெயர்களை என் மேலே எறியாதே.''
அந்த சமயத்தில் உள்ளே போன ஆள் வேட்டியை சரிபண்ணியபடியே வெளிவந்தான்.அடுத்த முறை நான்தான்.எழுந்து உள்ளே போகையில் வாய் நிறைய பான்சிவப்புடன் கிழவி வந்து''குழந்தைக்கு திடீர் என்று ரத்தப் பெருக்கு ஆகிவிட்டது பாபு''என்றாள்

நான் வெறுப்புடன் வெளியே வந்தேன்.ஏறக்குறைய ஆறுமாதங்களாக சேர்த்துவைத்து இருந்த காமம்.''எல்லோரும் போய் கரமைதுனம் செய்யுங்கள்.தேவடியாளுக்கு தீட்டாகிவிட்டதாம்''என்று கத்தினேன்.
விவசாயிகள் ஆசனத்தை உதறி ''கோபம் வேண்டாம்.சாப்.ரம்பா இல்லாவிட்ட்டால் கும்பா இருக்கிறது''என்ற பொருள் வரும்படி ஹிந்தியில் ஒரு பழமொழி சொல்லி சிரித்தார்கள்.
அவர் ''வேசிகளுக்கு எப்ப்போது பெருகும் நிற்கும் என்று பிரம்மனுக்கு கூட தெரியாது''என்றார்.''சரி.பார்க்கலாம்''
நான் சற்று தயங்கி''நானும் உங்களுடன் வரலாமா''
''எதற்கு.என்னிடம் உனக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லை.நானும் உன்னைப் போல ஒரு பிச்சைக் காரன்தான்.இரண்டுபேராய் சேர்ந்து பிச்சை எடுத்தால் இரண்டுபேருக்குமே கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது''என்றார்.பிறகு ஏமாற்றமான என் முகத்தைப் பார்த்து ''சரி.விதி வலியது''
கொஞ்ச நேரம் கங்கைக்கரையில் நடந்து ஒரு பரிசலைப் பிடித்தோம்.எங்கு போகிறோம் என்று கேட்டாலும் பதில் சொல்லவில்லை.பரிசல்காரபாய் பழக்கம் ஆனவன் போல் இருக்கிறது.அவனுக்கு ஒற்றைக்கண் இல்லை.அவனது சொத்தைபல் சிரிப்பு விகாரமாய் இருந்தது.
சந்திநேரம் அது.கரையில் இருந்த மரங்களில் பறவைகள் பெரும் கூச்சலுடன் அடைந்துகொண்டிருந்தன.தூரத்தில் கங்கா ஆரத்தியின் தீபத்துளிகள் தெரிந்தன.ஊறி வெளுத்த  பிணம் ஒன்று குப்புற மிதந்தவாறே பரிசலில் வந்து மோதியது.பாய் அதை 'சல்'என்று துடுப்பால் தள்ளிவிட்டான்.பெண் பிணம்.அதன் முதுகு ஏற்கனவே மீன்களால் குதறப் பட்டு சிவந்த மாமிசம் தெரிய அதன் மார்புகள் நீரில் பலூன்கள் போல அலைந்துகொண்டிருந்தன.கரையில் இருந்தே மோப்பம் பிடித்துவிட்ட நாய்கள் சில தலையை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டு ஆவேசமாய் நீந்திவந்து கொண்டிருந்தன.பெரிய கழுகு ஒன்று மேலே வட்டமாய் மிதந்து கொண்டே இருக்க.அவர் என்னைப் பார்த்து ''கொஞ்சம் மாமிசம் சாப்பிடலாமா.மற்ற எந்த மிருகங்களை விடவும் மனித இறைச்சியைச் சாப்பிட மனிதனுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது ''என்றார்.

5 comments:

  1. .''எல்லோரும் போய் கரமைதுனம் செய்யுங்கள்.தேவடியாளுக்கு தீட்டாகிவிட்டதாம்''என்று கத்தினேன்".

    ultimate, keep it up. Waiting for the next episode...

    ReplyDelete
  2. 'சும்மா இரு.மாயை என்பது புதைசேறு மாதிரி .வெளியே வர நீ செய்யும் ஒவ்வொரு முயற்சியும் அதிலேயே மூழ்கடிக்கும்''
    நான் சற்று சீண்டப்பட்டு''இந்தியாவில் பாதிபேர் சும்மாதான் வேலையற்று டீக்கடை பெஞ்சுகளில் பல் குத்திக்கொண்டு இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாம் ஞானிகளா"'//

    உங்க சீரிஸ் எழுத்துக்களை இப்பொழுதுதான் தோண்ட ஆரம்பித்திருக்கிறேன். எழுத்தின் வீச்சு எனக்குப் பிடித்திருகிறது. போகும் போக்கில் நிறைய விசயங்களை சொல்லிவிட்டு நகர்கிறீர்கள். அருமை!

    ReplyDelete
  3. நன்றி அருள்.தெகா உங்கள் பெயரின் அர்த்தம் நான் புரிந்து கொள்வது தானா ..

    ReplyDelete
  4. தெகா The Mosquito coast எனக்கு பிடித்த படம்.நாவல் இன்னும் நன்றாக இருக்கும்.The mosquito island என்று படம் வந்ததா..

    ReplyDelete
  5. சூப்பரா எழுதறீங்க. படிக்க ஆரம்பிச்சா நிறுத்தமுடியல. சாரு ஜெயமோ எல்லாம் பிச்ச வாங்கனும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails