Friday, February 3, 2012

உடல் தத்துவம் 20

''They were having their orgasms publicly there ''என்றாள் ரூபி.

நான் ''என்ன''என்றேன் புரியாமல்.
''இல்ல கோயிலில் பேய் பிடித்து ஆடிய பெண்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்''
''நீங்கள் எல்லாவற்றையும் sexual frustration என்று குறுக்குவது போலத் தெரிகிறது.சில கிழவிகள் கூட அங்கு ஆடுவதைப் பார்த்தேன்.அவர்களுக்கும் காம எரிச்சல் என்கிறீர்களா என்ன?''
அவள் சிரித்து ''ஏன் கூடாது?உடல் இருக்கும் வரைக்கும் காமம் இருக்கும்''என்றாள் .''நீ என்றே என்னைக் கூப்பிடு''

''நான் சந்தேகிக்கிறேன்''என்றேன்.ஆனால் அந்த சந்தேகத்தை பட தகுதியான ஆள் நான் இல்லை என்றும் தோன்றியது.

''காமம் மட்டும் நான் சொல்லவில்லை.கோபம்.வெறுப்பு.விரக்தி.காமத்தை வெளிப்படுத்த ஒருவருக்கு சுதந்திரம் இருப்பது போலவே ஒருவருக்கு தனது கோபத்தை எரிச்சலை அமைதியின்மையை திருப்தி இன்மையை வெளிப்படுத்தவும் கொஞ்சம்  சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.இங்கு பெண்களுக்கு அந்த விடுதலை இல்லை.I would like to bare my teeth at someone occasionally .sometimes I get orgasm when killing somebody's innocence...breaking someone's heart.''

அவளது வீடு திருப்புநித்துரை என்ற இடத்தில் இருந்தது.பெரிய அபார்ட்மென்ட் கூம்பில் பத்தாவது மாடியில் மாடுலார் கிச்சன் போன்சாய் தோட்டம் சலவைக் கல் பாத் ரூம் நீள பால்கனி என்று இருந்தது.

''ஹைடெக் தனிமை''என்றாள்.''ஊருக்கு உள்ளே நிஜத் தோட்டத்துடன் பெரிய வீடொன்று இருந்தது.கடனில் மூழ்கி விட்டது.அற்புதமான வீடு.மிஸ் இட் வெரிமச் .தவிரவும் சுற்றி இருந்தவருக்கு எனது கற்பின் தன்மை பற்றி நிறைய கவலைகள் வர ஆரம்பித்துவிட்டன''

அவள் உள்ளே நுழைந்ததும் நேராக குளிர்ப் பெட்டிக்குப் போய்த் திறந்து ''பீர் ?''என்றாள்
''நான் அவ்வளவு பெரிய குடி காரன் இல்லை''
''இருந்தாலும் கவலை இல்லை''என்று சிரித்தாள்.''எனது கணவர் மிகப் பெரிய குடி காரர்''என்றவள் ''குடித்தே இறந்து போனார் அவர்''

அவள் உள்ளே சென்று நைட்டிக்கு மாறிக் கொண்டு  வந்தாள்
ஒரு வேஷ்டியைக் கொண்டு வந்து கொடுக்கையில் நான் தயங்க ''நீ இன்னமும்   கன்னிப் பையந்தானா மக்கா''என்றாள்

அவ்வளவு பெரிய வீட்டில் டிவி இல்லை என்பதைக் கவனித்தேன்.மாறாக உட்காருமிடம் சாபாட்டுமேஜை படுக்கை அறைஎங்கும் புத்தகங்கள் நிறைந்திருந்தன.சோபாவில் இருந்த ஒரு புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன்.
ஒரு நூற்றாண்டு கால தனிமை.

''நான் உனக்கு சாப்பிட ஏதாவது செய்கிறேன்''
''இனிதான் செய்ய வேண்டுமா...வெளியே சாப்பிட்டிருக்கலாமே''
''சமைப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.ஒரு வகையில் அது எனது தியானம் .ஏனோ என்னால் தியானம் எல்லாம் செய்ய முடிவதில்லை.சமைப்பது என்னை சமனப் படுத்துகிறது.அந்தக் காலத்தில் கதைகளில் கிழவிகள் எதனால் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டே இருந்தார்கள் என்று இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.பயப்படாதே .நன்றாகவே சமைப்பேன்''

சற்று நேரத்தில் சப்பாத்தியும் உருளைக் கிழங்கு பொறியலும் ஆம்லெட்டும் செய்து விட்டாள்
இருவரும் மௌனமாக சாப்பிட்டோம்.கடிகாரத்தின்சத்தம் மட்டுமே நிறைந்திறந்த அந்த அறையில் பேசுவது ஏனோ தண்ணீருக்குள் நடக்க முயல்வது போல  இருந்தது.

சாப்பிட்ட பிறகு ஒரு சிகரெட் பாக்கட்டை எடுத்து ''வேணுமா?"'

''இல்லை.புகைப்பதில்லை இப்போது''
அவள் உறுத்துப் பார்த்து''இன்னமும் எனது அம்மாவின் பையன் தானா நீ?எதையும் இழக்கவில்லையா?"'
நான் சிரித்து ''இல்லை .இப்போது இழக்க எதுவுமே இல்லை"
கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தோம்.
அவள் புகையை சுவர் நோக்கி ஊதிக் கலைத்தாள்''Go like a smoke ..my life''
''சரி நீ என்ன செய்கிறாய்..நான் அடிக்கடி உன்னைப் பற்றி நினைத்துக் கொள்வதுண்டு.என்னை நிர்வாணமாய் பார்த்த முதல் ஆண் நீயல்லவா"என்றபோது எனது காதுகள் உஷ்ணமாவதை விநோதமாய் உணர்ந்தேன்.
''நீ எப்போதாவது என்னை நினைத்துக் கொள்வாயா?"'

நான் சிரித்து''எப்போதும்.நான் பார்த்த முதல் பெண்ணுடல் அல்லவா?"
அவள் புன்னகைத்து''கிரேட்.உனக்குப் பிடித்திருந்ததா என்ன""
''எது?"
''நீ பார்த்த முதல் உடல்?"
''கிரேட்''என்றேன்.''அதைவிட அற்புதமான உடலை நான் அதன் பிறகு பார்க்கவில்லை''
இருவரும் உரக்க சிரித்தோம்.அவள் கண் சிமிட்டி ''இப்போது அந்த உடலைப் பார்க்க விரும்புகிறாய் என்றால் சொல்''
நான் பதில் சொல்லவில்லை.மீண்டும் ஒரு புகை வளையம் அறையைச் சுற்றி வந்தது.
சட்டென்று அவள் முகம் இறுகியது.


''எப்போதாவது என் அம்மாவைப் பற்றி நினைத்துக் கொள்வதுண்டா?'
நான் மௌனமாய் இருந்தேன்.மேகி அத்தையை எப்போதும் ஒரு முள் போல என் அகத்தில் சுமந்து திரிகிறேன் என்று சொல்ல தயங்கி நின்றேன் 
அவள் புகைப்பதை நிறுத்தி''ஒன்று உன்னிடம் கேட்டால் சொல்வாயா''என்றாள்.
''என் அம்மா தன்னை கொன்று கொள்வதற்கு முந்திய தினம்  என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா..அவள் எதனால் அப்படிச் செய்து கொண்டாள்?''

''உனக்கு என்ன சொல்லப் பட்டது ரூபி?"'
''எனக்கு எதுவுமே சொல்லப் படவில்லை.அதுதான் பிரச்சினை.அவர்கள் ஏதாவது சொல்லி இருக்கலாம்.ஏதாவது ஒரு அபத்தமான பொய்யையாவது.அதை பிடித்துக் கொண்டு நான் அதைவிட்டு வெளியேறி இருப்பேன்.அவர்கள் எதையுமே சொல்லவில்லை.அதுதான் என் உயிரை அறுக்கிறது.அவளது அந்த முடிவுக்கு நானும் ஒரு காரணம் என்று ஒரு குற்ற போதம் கடுத்துக் கொண்டே இருக்கிறது.அதிலும் என் கணவரின் மரணத்துக்குப் பிறகு.என் வாழ்வு யார் யார் திரைகளிலோ நீலப் படமாய் ஆனபிறகு அதிகமாக..''
''நீ ஏன் நீலப் படங்களில் நடிக்கிறாய் ரூபி?"
''பொழுது போக்கிற்காக ''என்று கடுகடுத்தாள் அவள்.''அது வேறு கதை.அதற்குள் நான் இப்போது விழ விரும்பவில்லை.நீ என் அம்மாவைப் பற்றி சொல்''

நான் பெருமூச்சுடன் அந்த இரவை மிக தயக்கத்துடன்விவரிக்க ஆரம்பித்தேன்.
எவ்வளவு கொடுமையான இரவு!திரும்பத் திரும்ப என் நினைவுகளிலும் கனவுகளிலும் மீட்டப் பட்ட இரவு!அந்த இரவின் பல்வேறு சாத்தியங்களை நான் திரும்பத் திரும்ப  என் அகத்தில் உருவாக்கிப் பார்த்திருக்கிறேன்.ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த இரவின் வெவ்வேறு காட்சிகள் புதிது புதிதாய் துலக்கம் பெற்று வருவதை வியப்புடன் கவனித்திருக்கிறேன்.ஒரு நாய் தன்னிடம் உள்ள பொருளை முகர்ந்து முகர்ந்து பார்த்து அறிந்து கொள்ள முயல்வது போல நான் திரும்பத் திரும்ப அந்த இரவை என் அத்தனைப் புலன்களாலும் புரிந்து கொள்ள முயன்றேன்.ஒரு காட்சியை பல்வேறு கோணங்களில் பிடிக்கும் காமிரா போல நான் வெவ்வேறு கோணங்களில் அந்த இரவை பார்க்க முயன்றேன்.ஆனால் ஒவ்வொரு தடவையும் நான் பார்க்கத் தவறிய ஒரு கோணம் கிடைத்துக் கொண்டே இருந்தது.


என்னைத் தவிர அந்த இரவின் சாட்சி யாக இருந்த மற்றும் ஒருவரை நான் வெகு நாட்கள் கவனித்த படியே இருந்தேன்.அவருக்குள் அந்த இரவு தங்கி இருக்கிறதா அவர் கண்களில் மேகி அத்தை எப்போதாவது தென்படுகிறாளா என்று கண்காணித்த படியே இருந்தேன்.
அத்தை தனக்குத் தானே கொடுத்துக் கொண்டது போல எதாவது ஒரு விதத்தில் அவரது பாவத்துக்கு தண்டனை கிடைக்கும் என்று ரகசியமாய் எதிர்பார்த்திருந்தேன்.பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்லப் பட்டிருக்கிறதே.ஆனால் பாவத்தின் சம்பளம் வாழ்க்கையே என்ற கருதுகோள் அபோது எனக்குப் பரிச்சயமாக இருக்கவில்லை.
ஆனாலும் அத்தையின் மரணத்துக்கு எஞ்சிநீயர்தான் காரணம் என்று அந்த வயதில் கூட நினைத்துக் கொள்ளவில்லை என்பது ஆச்சர்யம்தான்.அத்தை மரணத்துக்கு  யார் காரணம் என்பதில் எனக்கு அப்போது சந்தேகமே இருக்கவில்லை.ஒரு அடர் மழை நாளில் நள்ளிரவில் வீட்டின் பின்புறம் நான் பார்த்த கண்களை என்னால் எப்படி மறக்க முடியும்?இருண்ட குழி விழுந்த கண்களில் இருந்து மினுங்கிய அந்த விஷ வெளிச்சம் வாழ்நாள் முழுவதும் எனது கனவுகளில் ஒரு பிசாசு நிலவு போல வீசிக் கொண்டிருக்கிறது.

ரூபி எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.அத்தை 'ஐயோ என்னைப் பாரு பிள்ள ...கர்த்தாவே நான் என்ன செஞ்சிட்டேன் ''என்று அரற்றிய இடம் வரும்போது அவள் மெல்லிதாக 'அம்மா அம்மா என் செல்ல அம்மா 'என்று விம்மினாள்.


க்வார்டர்சில் நானும் சித்தப்பாவும் அத்தையை திரும்பப் பார்த்த கதையை சொன்ன போது சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள் .அப்ப்போது அவள் கண்கள் ஒரு வெறி யானையைப் போல சுருங்கி சுருங்கி விரிந்தன,நான் ஒரு சன்னதம் போல எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தேன்.என் மதகுகளை எதுவோ உடைத்திருந்தது.எத்தனையோ மருந்துகளும் மருத்துவர்களும் குணப் படுத்தாத புண்ணை இது ஒருவேளை குணப் படுத்தக் கூடும் என்று தோன்றிற்று.
நன் கடைசியாக அத்ததையின் பின் புலத்தில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்த அந்த உருவத்தைப் பார்த்தேன் என்று சொன்ன பொழுது அவள் எழுந்து நின்றுவிட்டாள்.''வாட் நான்சென்ஸ்!''என்று உரக்க கத்தினாள்
பிறகு ஒரு முறை தன்னை உதறிக் கொண்டு ''ஒய் இட் மேக்ஸ் பெர்பெக்ட் சென்ஸ்!''என்று வியப்புடன் சொல்லிக் கொண்டாள்..கோயிலில் அன்று பார்த்த குருதி பலிக்குப்  பிறகு எங்களுக்கு எதுவுமே சாத்தியம் என்றுதான் தோன்றிற்று

சட்டென்று நாங்கள் அறைக்குள் ஒரு குளிர் பெருமூச்சுடன் ஊடுருவதை போல் உணர்ந்தோம்.எங்கள் இருவரைத் தவிர அறையில் இன்னும் யாரோ ஒருவர் இருப்பது போன்ற ஒரு உணர்வை அடைந்தோம்.அந்தக் குளிர் அந்த முகம் அறியா ஆளுமையிடமிருந்துதான் பெருகி வழிந்து வந்து கொண்டிருந்தது.ஏனோ மரணத்தின் குளிர் என்று அதை நான் நினைத்துக் கொண்டேன் .வாழ்வின் அந்தப் பக்கமிருந்து ஊறி வரும் குளிர்.நான் அச்சத்துடன் ஒருமுறை அறையைச் சுற்றிப் பார்த்தேன்.அறையின் உச்சியில் இருந்து யாரோ என்னை உற்றுப் பார்ப்பது போல உணர்ந்தேன்.அந்தக் கண்களை நான் நன்கு அறிவேன்.அன்று க்வார்டர்சில் நள்ளிரவில் அடர் மழையில் என்னை ஊடுருவிப் பார்த்த அதே கண்கள்தான் அவை.

சாத்தானின் கண்கள்.










8 comments:

  1. த்ரிப்புநித்துரா கொச்சியை கண் முன்னே கொண்டு வந்து விட்டன உங்கள் வரிகள் போகன்

    ReplyDelete
  2. சும்மாயிருக்க மாட்டாமல், உடல் தத்துவத்தின் கடந்த பாகங்களில் சிலவற்றையும் சேர்த்துப் படித்தேன். தொண்டைக்குள் ஏதோ கட்டிக்கொண்டதுபோல் .........I need to get out of this feel. So uncomfortable.

    ReplyDelete
  3. //சும்மாயிருக்க மாட்டாமல், உடல் தத்துவத்தின் கடந்த பாகங்களில் சிலவற்றையும் சேர்த்துப் படித்தேன். தொண்டைக்குள் ஏதோ கட்டிக்கொண்டதுபோல் .........I need to get out of this feel. So uncomfortable. ///

    Santhini :)))

    ReplyDelete
  4. @Santhini : தொண்டைக்குள் ஏதோ கட்டிக்கொண்டதுபோல...உணர்வு இருந்தாலும் தொடர்ந்து போகனின் எழுத்துக்களை படித்து வரும் உறுப்பினர் வட்டத்தில் நீங்களும் இப்பொழுது சேர்ந்து விட்டீர்கள்..

    அறிவிக்கப்படாத வாசகர் வட்டம்.
    தலைவர் (நான்தான்).
    இந்த வட்டத்தில் சேரும் தகுதி, போகனின் எழுத்துக்கள் உங்களுக்கு எரிச்சலோ, ஒரு மாதிரி அசூயை உணர்வையோ தரவேண்டும். அது அப்படி தந்தாலும் அவரின் படைப்புகளை தொடர்ந்து படிக்கவேண்டும்.

    Read it...
    Feel uncomfartable...
    Join the club...

    ReplyDelete
  5. @ Rajagopal and Appadurai .
    Thanks for letting me join the club, Thalaivare ! neengalthaan.

    ReplyDelete
  6. //நான் வெவ்வேறு கோணங்களில் அந்த இரவை பார்க்க முயன்றேன்.ஆனால் ஒவ்வொரு தடவையும் நான் பார்க்கத் தவறிய ஒரு கோணம் கிடைத்துக் கொண்டே இருந்தது.//மனதில் அழுத்தமாகப் பதிந்து விட்ட நிகழ்வுகளுக்கு இப்படி ஒரு தன்மை கூடி விடிவது இயல்பு தான். அதை விவரிக்கும் உங்கள் எழுத்தும் அழுத்தமானது போகன்!

    ReplyDelete
  7. அப்புறம்.......................

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails