Thursday, July 7, 2011

அவள் இவள்

இவளுக்கு
உம்பெர்டோ ஈகோவைத்தெரியாது
ஆல்பர்ட் காம்யூவையும்
அன்னியமாதலையும் தெரியாது
அந்நியன் படம் மட்டுமே
இவளுக்கு தெரிந்திருக்கிறது ..

காரல் மார்கஸ் தெரியாது
சரி
தெரியாதிருப்பதே நல்லது
கெவின வில்பரையும்
லியோ டால்ஸ்டாயையும் விடடுவிடுங்கள்
புதுமைப் பித்தனையும்
கல்கியையும் கூடத் தெரியாது
சலீல் சவுத்ரி
ஒரு இசை அமைப்பாளர் என்று
தெரிந்தால் அல்லவா
அவர் இசையைக் கேட்பதற்கு...
ஹிட்ச்காக் என்பது
போதையேற்றும் ஒரு பானம்
என்பதாக ஒரு கருத்தில் இருக்கிறாள்
நேற்று இவளுக்கு
சுஜாதாவையும் கூடத்
தெரியாது என்ற போது
சற்று திக்கென்றுதான் இருந்தது.

ஆனாலும் இழவு
இவளை
இப்படி
உடலும் உயிரும்
உருகி உருகி
காதலிப்பதை
நிறுத்தவே முடியவில்லை தோழரே
எனக்கு
எதுவும் பிரச்சினையா?

10 comments:

  1. Ungaluku therinjirukrathunala than avangaluku theriyalanu solringa... ella therinjavangana neenga kooda pesa payapaduveenga..... onum theriyatha karanathinala than neenga valachu valachu love panreenga.. :-)

    ReplyDelete
  2. ஊஹும்.. பிரச்சனை எதுவுமில்லை.. திரும்ப அவளுக்கு காதலிக்க தெரிந்திருக்கிறதா? அது போதும்.. ;-))

    ReplyDelete
  3. //ஹிட்ச்காக் என்பது
    போதையேற்றும் ஒரு பானம்
    என்பதாக ஒரு கருத்தில் இருக்கிறாள்//
    :)) மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  4. அவற்றுக்கும், காதலிப்பதற்கும் என்ன தொடர்பு?

    ReplyDelete
  5. இந்த கேள்வியை அவள் தானே கேட்கவேண்டும் ??

    ReplyDelete
  6. ஹீ ஹீ, அதுக்கு இவையெல்லாம் எதற்கு?

    ReplyDelete
  7. ரொம்ப நெருங்கி விட்டது கவிதை. காதலுக்கு கண்ணில்லை என்பதன் அசல் பொருள் இது தானோ?
    ரசித்தேன்.
    'முலையை ருசிக்க வரும் முரடனே
    சற்று என்னுடன்
    மோனேயையும் ரசிக்க வாயேன்' எனும் நாணயத்தின் மறுபக்க வரிகள்???

    ReplyDelete
  8. //'முலையை ருசிக்க வரும் முரடனே
    சற்று என்னுடன்
    மோனேயையும் ரசிக்க வாயேன்'//

    Beautiful!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails