Thursday, June 23, 2011

நமீதா பூச்சி...

என்றைக்கும் இல்லாத திருஇரவாய் எழுபது கிலோ டால்டா டின் போல ''கண்ணா லட்டு தின்ன ஆசையா''என்ற படி நமீதா என்கனவில் ஏறிவெண்கலக் கடைக்குள் ஆனை புகுந்தது போல நெருங்கி வரவும் பயந்து வீரிட்டலறி எழுந்து வேர்த்து தாகமாகி அடுப்பறையில் நீர் குடிக்க விளக்கைப் போட்டதும் இருட்டை மேய்ந்து கொண்டிருந்த ஆயிரம் கரப்பான் பூச்சிகள் கலைந்தோடின.

ஒற்றை பூச்சி மட்டும் ஓடாது நின்று கடுகுக் கண்களால் என்னையே முறைத்தது.நான் பாதி குடித்த தண்ணீரின் மேல் ''என்னா''என்றேன்.அது மீசையை நீவி விட்டுக் கொண்டு ''ஆனை மேல எழுதறே பூனை மேல எழுதறே..எங்களைப் பத்தி ஒன்னு எழுதினியா''என்று கண்ணகி போல் நீதி கேட்டது.நான் கண்கள் சொருக யோசித்து ''ரயில் பூச்சி பற்றி எழுதி இருக்கிறேன்''என்றேன்.
அது அலட்சியமாய் ''ஹ!உலகில் கோடிக கணக்கான பூச்சி இனங்கள் உண்டு அதில் ஒரு பூச்சி பற்றி அரைக் கவிதை!'என்றது''சமூக நீதி வர்க்கச் சமன்பாடு இது பற்றியெல்லாம் அறிவாயா நீ?''
நான் திடுக்கிட்டேன்.இது அறிவு ஜீவி கரப்பான் பூச்சி போலிருக்கிறதே!
''உன் வயிற்றிலேயே ஒரு கோடி பூச்சி உண்டே அறிவாயா நீ''
நான் மேலும் திடுக்கிட்டேன்.என் வயிற்றுக்குள் ஒரு கோடி கரப்பான் பூச்சியா ?பிறகு அது பாக்டீரியாக்கள் என்று தெளிந்தேன்.அவை பூச்சிகளா என்ன?இருக்கலாம்.எங்கள் ஊரில் குழந்தைக்கு உடல் சரியில்லை எனில் டாக்டர் ''பூச்சிக்கு மருந்து சாப்பிட்டாயா;;என்றுதான் முதலில் கேட்பார்.'';'

''உங்களால் தான் எங்களுக்கு எத்தனை தொல்லை..வயிற்றுப் போக்கிலிருந்து வாந்தி பேதி வரை ...உங்களைப் பற்றி நான் ஏன் கவிதை எழுத வேண்டும்?''
''அது நாணயத்தின் ஒரு பக்கம்...நீ நேற்று இரவு சாப்பிட்ட முட்டை பரோட்டாவை ஜீரணிக்க ஒரு கோடி பூச்சிகள் உன் வயிற்றில் இன்னமும் தூங்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றன.அறிவாயா அரை மூளைக் காரனே?''
''மன்னிக்கவும் எனக்கு பூச்சிகளைப் பற்றி அதிகம் தெரியாது.நான் பூச்சியலாளன் அல்லவே?''
''பூனைகளைப் பற்றி எழுதுகிறாய்.நீ என்ன பூனையிலாளனா ?''
நான் இப்போது அதன் வாதத்தின் நீதியை புரிந்து கொண்டேன்.ஒரு துரோகி போல் என்னை உணர்ந்தேன்.வாயில் வெள்ளை நுரை தப்ப புஸ்புஸ் என்று நின்ற பூச்சியிடம் நாளையே எழுதுகிறேன் என்று வாக்களித்துவிட்டு திரும்ப வந்து படுத்தேன்.

படுத்த பத்தாவாது நிமிடம் ''கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா'என்று நமீதா மீண்டும் வந்தார்.இம்முறை அலறி எழுவதற்குள் பட படவென்று சிறகை விரித்து பறந்து வந்து மார் மீது அமர்ந்துவிட்டார். நமீதாவின் கொங்கைகள் துவங்கும் இடத்தில் இரண்டு பெரிய சிறகுகள் ...கரப்பான் பூச்சியின் சிறகுகள்..முலைத்திருந்தன..ச்சே முளைத்திருந்தன....நமீதா தன் புதிய மீசைகளை ஒதுக்கிய படி என்னை முத்தமிட குனிந்த போதுதான் மீண்டும் அலறி விழித்துக் கொண்டேன்.இப்போது விடிந்திருந்தது,அடுப்பறையில் கரப்பான் பூச்சிகளைக் காணவில்லை.எனினும் இரவில் கரப்பான் பூச்சியிடம் கொடுத்த சத்தியம் நினைவு வந்தது.ஆச்சியிடம் கொடுத்தாலும் பூச்சியிடம் கொடுத்தாலும் சத்தியம் காப்பாற்றப் படவேண்டியது.யோசித்து யோசித்து ஒரு பெரிய தட்டியில் இப்படி எழுதி வெளியே வைத்தேன்

இங்கு
ஆனைகள் பற்றியும்
பூனைகள் பற்றியும்
மட்டுமல்ல
பூச்சிகள் பற்றியும்
நயம் சந்தத்துடன்
நவீன கவிதைகள்
செய்து தரப் படும்


எந்தப் பூச்சியும் விலக்கல்ல 

நமீதா பூச்சி தவிர்த்து..

11 comments:

  1. ஆல்பெர் கேமுவின் க்ரஹர் சாம்சா தூங்கி விழிக்கையில் தன்னைக் கரப்பானாகக் கண்டது போது நமீதா கரப்பானது புதுமையே.

    வளச்சுக்கட்டறீங்க போகன்.

    ReplyDelete
  2. நமீதா பூச்சி உட்பட?

    ReplyDelete
  3. நகைச்சுவை உங்கள் பலம்.

    ReplyDelete
  4. அப்பாபா இந்த நமீதா பூச்சி யாரைத் தான் விட்டது?

    ReplyDelete
  5. ஒரு கவிஞனுக்கு இப்படியும் ஒரு சோதனையா?

    ReplyDelete
  6. @சுந்தர்ஜி: நீங்கள் குறிப்பிடும் நாவல் ஆல்பெர் காம்யு எழுதியதல்ல. ஃபிரான்ஸ் காஃப்கா எழுதியது. Metamorphosis

    ReplyDelete
  7. சரியான நியாயவான்தான்.

    ReplyDelete
  8. நமீதாவை பூச்சி என்று விளம்பியதை நான் கண்டிக்கிறேன். அது ஒரு புள்ளப்பூச்சி. ;-))

    ReplyDelete
  9. தல எனக்கு நமீதாவை விட அந்த பூச்சி தான் ரெம்ப புடுச்சு இருக்கு ....

    ReplyDelete
  10. நன்றி யோகி.

    அவசரத்தில் கவனிக்காது எழுதிவிட்டேன். காஃப்காதான் கரப்பான்பூச்சியான மெடமார்ஃபோஸிஸ்.

    மறுபடியும் திருத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  11. அப்படியே நமீதா படம் போட்டு தெளிவுபடுத்தியதற்கு நன்றி

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails