Saturday, January 1, 2011

புதியது கேட்கும்....

புதிய ஆண்டில்
புதிதாய்
ஒரு பரிசு கொடு
என்று கேட்ட
செம்பொன் நிறத் தேறல்
போல
பழகிய
 பழையோளுக்கு...
இன்று காலை
புதிதாய்ப்
பொழிந்த பனியில்
இன்று காலையே
புதிதாய்ச் செய்த
புதிய பூவுடன்
இன்னும்
உதடுகள் விட்டு
இறங்காத உஷ்ணத்துடன்
சுடச் சுட
புத்தம் புதிய பதிப்பாய்
முத்தம் ஒன்று வா.....

6 comments:

  1. beautiful!

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் போகன்!

    ReplyDelete
  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. புத்தாண்டு வாழ்த்துக்கள் போகன்!! ;-)

    ReplyDelete
  4. நன்றி மீனாக்ஷி
    அப்பாதுரை
    ஆர் வி எஸ்
    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails