Thursday, March 17, 2011

இடப் பெயர்ச்சி

எரிவெயில் தகிக்க
ஒதுங்கிய
நகரவாசியின் வீட்டிலிருந்து
வேகமாய் ஒருவன் வெளிவந்து
என்ன வேண்டும் உனக்கு
ஏனிங்கு நிற்கிறாய் என்றான்
எரிச்சலுடன்

கொஞ்சம் குளிர் வேண்டும்
என்றேன் அவனிடம்
பிறகு கொஞ்சம் நிழல்
குளிர் தடவிய காற்று
கொஞ்சமே கொஞ்சம் மழை
இந்த இடத்தில்
இன்று நிற்கும்
உன் வீட்டிற்காய்
நேற்று நீ வெட்டியெறிந்த
மரம் தந்தவற்றில்
கொஞ்சமே கொஞ்சம் என்றேன்

5 comments:

  1. ரொம்ப இயல்பா இருக்குங்க .. :-)
    ரொம்ப பிடிச்சிருக்கு !

    ReplyDelete
  2. கவிதை மனசை அறுக்கிறது .......மரத்தை அறுப்பது போலவே .

    ReplyDelete
  3. இன்னும் ஒரு வரி உண்டோ?

    ReplyDelete
  4. தொலைத்த நிழல் யாரிடம் கிடைக்கும்?

    தேடித் திரிவோம் நகரவாசிகளின் தெருக்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளின் மத்தியிலும்.

    நாளைக்கான நேற்றையக் கவிதை போகன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails