Monday, March 7, 2011

பதினெட்டுக்கு மேல் ஒரு வயது ...

இருந்தால் மட்டுமே 
படிக்கச் சொல்வேன் 
இக்கவிதைகளை....

1 இந்த உதட்டாலா
என்று கேட்டேன்
இந்த உதட்டால்
என்று சொன்னாள்
உதடுகள் பன்மை
என்று
அவளைத் தின்ற பிறகே
தெரிந்தது
வானில்
ஏறிப் பறக்கிறேன்
என்றவனிடம்
நதியில்
இறங்கிக் கரை
என்றாள்
இரண்டும்
ஒன்றெனத் தெளிந்து
மயிர்க் காட்டில்
இறகாய் விழுந்து
தொலைந்தேன்


2.கங்கை
பெருகி
கரையை அசைத்தது
விழுந்த
மரத்தில்
ஏறிக் கடந்தேன் 

நதியின் சுழலை
கடந்தவன் 

தொட்டவுடன் 
கரைந்தே போயிற்று
என்றாள்
கரைத்த விரலைக்
கழுவிக்
கரையில் வைத்தேன்



3.அவள் 
இடுப்பில் 
புதைத்திருக்கும் 
அடுக்குச் செம்பருத்திகளை 
தொடுக்கும்போது
துளிர்த்த ரத்தம்
துறக்கத்தின்
சுனைநீர் என்றேன் 

நீர் மாந்தி 
நீறாகு என்றாள்

4 comments:

  1. ///துறக்கத்தின்
    சுனைநீர் என்றேன்
    நீர் மாந்தி
    நீறாகு என்றாள்////

    துறக்கத்தின் மற்றும் மாந்தி ......அர்த்தம் தெரியவில்லை
    நீறாகு ----புரியவில்லை

    முழுதும் புரிந்திருந்தால் ......பரவாயில்லை.

    ReplyDelete
  2. துறக்கம் என்றால் சொர்க்கம் தூய தமிழ்ச் சொல் பெரும்பாலும் தமிழ் இஸ்லாமியர்கள் இதை உபயோகிக்கிறார்கள்

    ReplyDelete
  3. மாந்தி-பருகி

    ReplyDelete
  4. சுவை - no pun.
    (எனக்கென்னவோ இந்த சூட்சுமமெல்லாம் புரிய முப்பது வயசாகும்னு தோணுது. பத்தொன்பது பேச்சோடு சரி?)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails