Wednesday, March 16, 2011

யாரும் பார்க்காத நட்சத்திரம்

பழைய நூலகத்தில்
பல்லிகள் மட்டுமே உலவும்
பாழிருள் மூலையில்
கவனத்திலிருந்து
முற்றிலும் கைவிடப்பட்ட
அரியதோர் புத்தகம் போல
கேட்பாரற்றுக்
கிடந்தாள் அவள்

தற்செயலாய்
அவளைக் கண்டுபிடித்தவனும்
வேறாரும் அவளை
வாசித்துவிடக் கூடாதென
யாரும் அறியாத
இன்னுமொரு
இருட்டு முடுக்கில்
எடுத்துச் சென்று
ஒளித்துவைத்தான்

10 comments:

  1. மிக மிக சரியே . கவிதைகளின் அறையும் உண்மைகளே ...இந்த வசீகரத்திற்கு காரணமோ?

    ReplyDelete
  2. ஒருவனேனும் படிக்கிறானே, அது போதுமே :)

    ReplyDelete
  3. கவிதைகள், பதில்களை சொல்லிக்கொண்டே இருக்கின்றன. :)))

    ReplyDelete
  4. பெண்ணும் புத்தகமும் ஒன்றா?!

    ReplyDelete
  5. “Full many a gem of purest ray serene
    The dark unfathomed caves of ocean bear:
    Full many a flower is born to blush unseen,
    And waste its sweetness on the desert air.

    மீனாக்ஷி தாமஸ் கிரேயின்கவிதை மேலே...இதைப் படித்ததும் தோன்றிய கவிதை இது

    ReplyDelete
  6. நானும் என் கடவுளும் உங்களை எப்படி விளிக்கவேண்டும்?

    ReplyDelete
  7. It is a surprise, to see answers for my questions. :). Thank you.
    "முதிர்ந்த...." என்றும் அழைக்கலாம் அல்லது "சாந்தினி" என்றும் அழைக்கலாம்.

    ReplyDelete
  8. beautiful! (வேறே subtle படம் போட்டிருக்கலாமோ?)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails