உங்களுக்கு அச்சமாக இல்லையா.. .
உலகத்தில் 99.9999 சதவீத பேருக்கு
நீங்கள் என்ற ஒருவர்
உலகில்
இருப்பதே தெரியாது என்று அறியும்போது?
மீதியுள்ள புள்ளி புள்ளி புள்ளி ஒரு சதவீதத்திலும்
99.9999 விழுக்காட்டிற்கு
உங்கள் இருப்பும் இல்லாமையும்
பொருட்டில்லை என்று தெரியும்போது?
எஞ்சியுள்ள புள்ளி புள்ளி ஒன்றிலும்
பாதி பேர்கள்
நீங்கள் இருப்பதைவிட
இல்லாது போவதையே விரும்புகிறார்கள்
என்று உணரும்போது...
உங்களுக்கு அச்சமாக இல்லையா...?
நல்லாயிருக்கு..
ReplyDeleteஇறத்தலியம்... - ஆகா நல்லா இருக்கு. அந்த 99.9999 புள்ளி விவரம் எப்டிங்க... சரி.. 00.000000000000000001 எனக்கு தெரிஞ்ச ஆள் நீங்க.. அதே உங்களுக்கும்.. இப்ப "இருத்தலியம்"..... என்ன சரியா?
ReplyDelete(இதுக்கு பேர் தான் தீட்டின மரத்திலேயே கூர் பார்ப்பது.. )
புதுமையாக உள்ளது . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅச்சமாக இல்லை, வருத்தமாக இருக்கிறது, இப்படி ஒரு வாழ்வு வாழ்வதை நினைத்து.
ReplyDelete