Saturday, December 18, 2010

உடைந்த கவிதை

கவிதை செய்தலின்
பாதியில்
எட்டிப் பார்த்தாள் தோழி
பெரு ஆகாசத்தில்
எழும்பிப்
பறத்தலை
 பாதியில்
நிறுத்திவிட்ட பறவை போல்
விசும்பிலிருந்து  வீழாது
வெளியில்
உறைந்துவிட்ட மழைத்துளி போல்
பதறி நின்றது கவிதை

உடை மாற்றும் போது
ஒளிந்திருந்து பார்க்கப் படுவது போல்
கலவியின் உச்சத்தில்
தடை செய்யப் படுவது போல்
முலை சுரந்து
சிசுவுக்கூட்டுகையில்
வெறிக்கப் படுவது போல்
வலிக்கிறது என்று சொன்னேன்
புரிந்தும் புரியாமலும் விலகினாள்..
ஒருவேளை என்னை
அதீத அகங்காரன் என்று
நினைத்திருக்கக் கூடும்

திரும்பி வந்து பார்த்தேன்
மேசையில்
கவிதையின்
முறிந்த சிறகு
ஒன்று மட்டுமே
மிச்சமாய்க் கிடந்தது...

7 comments:

  1. எல்லா வரிகளுமே அழகு..!! மிகவும் ரசித்தேன்..!!

    ReplyDelete
  2. நல்லா இருக்கு...

    ReplyDelete
  3. அழகு.. கவிதையும் வரிகளும்..

    ReplyDelete
  4. நல்லா இருக்கு. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  5. வலி வார்த்தைகளில் எங்கும் பரவிக் கிடக்கிறது . கவிதை நிதர்சனம் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. அழகான கவி வரிகள்

    ReplyDelete
  7. என்னால் தவிர்க்கவே முடியாத ஒரு கவிதை இது.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails