பெண்களை அறிதல்
அத்தனை எளிதல்ல
பெண்களை சரியாகப்
புரிந்து கொள்ள
நாம்
இருட்டில் மட்டும் ஒளிரும்
சில நிறங்களைப் பற்றி
அறிந்து கொள்ளவேண்டும்
பார்க்காத பொழுதில்
தசைகளை இழுத்துண்ணும்
சில உடைகளைப் பற்றியும்
கொஞ்சம் அறிவு வேண்டும்
உதிரம் குடிக்கும்
சில மலர்களுடனாவது
அறிமுகம் வேண்டும்
ஒரே நாளில் உயிர்த்து உதிரும்
பட்டாம் பூச்சிகளைப் பற்றியும்
தெரிந்திருக்கவேண்டும்
மலை உச்சியில்
ஒளித்து உறையும்
சில பறவைகள்,
புதைகுழிகளில் கண் ஒளிரும்
சில விலங்குகள் பற்றியும்
தெரிந்திருப்பது நலம்
சருகுகளில் இருந்து
நாவில்
முதிர்ந்த நஞ்சுடன்
சட்டென்று
சீறி எழும்
சர்ப்ப வகைகள் பற்றியும் கூட
அறிய வேண்டும்தான்..
ஆனால்
இவையெல்லாம்
நம்மால் ஆகாது
என்றஞ்சி
விட்டுவிடக் கூடாது
ஏனெனில்
பெண்ணை அறிதலே
ஞானத்தின் ஆரம்பம்
என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்..
ungaluku matum epadi than itha mathiri photos kidaikutho... i lik ur photos attached to tis blogs..... superb.. carry on good wrk :-)
ReplyDeleteசீக்கிரமே ஞானியாகக் கடவது .அறியாதது, தெரியாது, கிட்டாதது தான் ஈர்க்கும் ..
ReplyDeleteஅது சரி :) ! கலக்கலான படம் - நல்ல டேஸ்ட்! No pain! No Gain!!
ReplyDelete//சருகுகளில் இருந்து நாவில் முதிர்ந்த நஞ்சுடன்
ReplyDeleteசட்டென்று
சீறி எழும்
சர்ப்ப வகைகள் பற்றியும் கூட
அறிய வேண்டும்தான்..//
மிக அருமையான வெளிப்பாடு...
holy... picture!
ReplyDeleteஉங்களின் கவிதைகள் அருமை.
ReplyDeleteபல கவிதைகளில் கடைசி வரி(கள்)
எழுதப்படாமல் விட்டு இருந்தால் ,
இன்னும் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது....
சொல்லப்படாமல் தொக்கி நிற்கும் வார்த்தையே
வாசிப்பவரைச் சென்றறியாத ஆழங்களுக்கு இட்டுச் செல்கிறது
என்னுடைய பலமும் பலவீனமும் எனது கடைசி வரிகளே.பெரும்பாலும் கதை கவிதை கட்டுரை எதுவானாலும் கடைசி வரியைதான் முதலில் எழுதுவேன்.அதன் பிறகு எழுதுவது எல்லாம் அந்தக் கடைசி வரியை நோக்கிய பயணமே..
ReplyDeleteஇன்னிக்கு பாத்து இந்தக் கவிதையப் படிப்பேனா? காலையில இருந்தே உடம்பும் மனசும் காம நெருப்புல தகிச்சிட்டு இருக்கு... நீங்க வேற பெட்ரோல ஊத்தி விட்டுட்டிய!
ReplyDelete