Tuesday, September 7, 2010

தசை வணிகம்

எச்சிலைப் பரிமாறி முடித்ததும்
இருவரும்
உதடுகளை
சுத்தமாய்த்
துடைத்துக் கொண்டனர்.

அவன்
ஆணுறை அணிந்திருந்தானா
என அவள்
நிச்சயப் படுத்திக் கொண்டாள்
முன் திறப்பு இரவுடை பார்த்து
அவன்
அவள் பாலூட்டியா
என வினவினான் ஆசையுடன்.
அவள்
அதிக காசு ஆகும் எனறாள்.
பிறகு
அவன்
கம்மலைப் பார்த்துவிட்டு
நீ
பின் நவீனத்துவனா எனறாள்
சந்தேகமாய்.
அதற்கும் அதிக காசு ஆகும் எனறாள்
அவன்
ஆனாலில்
துணை  எழுத்து இல்லாதவன்
என்பதை
அப்புறம் சொல்லிக் கொள்ளலாம்
என நினைத்தான்,
ஏனெனில்
அவன் கையில்
அரைக் காமத்துக்கே
காசு இருந்தது
அவளுக்கோ
சீக்கு  குழந்தையை
டாக்டரிடம்
காண்பிக்க வேண்டியிருந்தது.
பேசி முடிந்ததும்
இருவரும்
மூட்டைப் பூச்சி மெத்தையில்
மூத்திர நெடி அறையில்
புணர்ந்தபோது
எந்த பூவும்
பூக்கவில்லை.
குழல் விளக்கிலிருந்து
சில
பூச்சிகள் உதிர்ந்திருந்தன
அவ்வளவே.

5 comments:

  1. யதார்த்தம் வலிகள் நிறைந்தது. சில வேலைகளில்
    அருவருக்கவும் செய்யும் அதனை எதிர்கொள்கையில்.
    இந்த கவிதை அதையே பிரதிபலிக்கிறது... நன்று நண்பரே.

    ReplyDelete
  2. HellBoy:
    Its Really nice...

    ReplyDelete
  3. நல்லாருக்கு நண்பா

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails