வானிலிருந்து வழியும் மது போல
இரவு முழுதும்
அடித்து
ஊற்றிக் கொண்டிருந்தது மழை.
அவசரமாய்
உள்ளே வரவிரும்பும்
பொறுமையற்ற சிறுவன்போல
கூரையை ஆவேசமாய்த்
தட்டிக் கொண்டே இருந்தது.
சமயங்களில்
ஒரு காமம் முற்றிய ஆண் போல
பூமிப் பெண்ணின்
அத்தனை மறைவிடங்களையும்
தன் விரல்களால்
தேடிக் கண்டுகொண்டே இருந்தது
கணத்த கம்பளிக்குள்
புதைந்திருந்தாலும்
அறைகளின்
எல்லா மூலைகளிலும் இருந்து
ஈரமாய் இருட்டாய்
கைகளை
நீட்டிக்கொண்டே வந்தது.
தூக்கத்தின் திரை விலக்கி
கனவு வரையும் வந்து
எச்சில் செய்தது
மூளையின் இடுக்குகளில்
உறைந்து கிடந்த
பழைய மழைகளின்
முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்த்து
வெளிக் கொண்டுவந்தது
வேறெங்கும் விலகாது
தன்னை மட்டுமே
யோசிக்கக் கோரும்
சிறுபெண் போலவும்
சில சமயம் அடம் பிடித்தது..
விடிகாலை வெயில்வந்து
விரட்டிய பிறகும்
வெகுநேரம்
உள்ளுக்குள்
சடசடத்துக் கொண்டேதான்
இருந்தது
மழை
nice
ReplyDeleteபுது மழையின் ஈரம் அடுத்த மழை வரும் வரை ..
ReplyDeleteமனதிலும் உணர்விலும் ..
சரியான அவதானிப்பு
http://timeforsomelove.blogspot.com/2010/09/blog-post.html
ReplyDeleteநன்றி பிரபு.பத்மா மரப்பசு பற்றி அம்பையின் எதிர்விமர்சனம் மேலே உள்ள சுட்டியில் உள்ளது.நேரம் இருப்பின் படிக்கவும்.
sure ..reading it
ReplyDeletethanks
வித்தியாசமான ஓட்டம்.
ReplyDeleteமழை இங்கே metaphorஆ?