Wednesday, September 8, 2010

பெண் அடையாளம்

இவையெல்லாம்
உன் அடையாளங்கள்
எனறார்கள் அவர்கள்.
இவையெல்லாம்
என் உறுப்புகள்
அடையாளங்கள் அல்ல
என்று எத்தனை முறை
சொல்லியும்
அவர்கள் கேட்கவில்லை.
என் அத்தனை தகுதிகளையும்
அழித்துவிட்டு
நண்பர்களின் கண்களில் கூட
எப்போதும்
என் அடையாளமாய்
நடித்துக் கொண்டிருக்கும்
இந்த முலைகளையும்
யோனியையும்
மறைத்துவைக்கும்
வித்தைக்காய் ஏங்குகிறேன்.
அவ்வை போல.

3 comments:

  1. அருமை... கவிதை அடையாளப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அடையாளத்தின் அடைப்புக்குள் பெண்ணியத்தை
    ஆளும் நண்பருக்கு

    நன்றி
    வளவன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails