Monday, July 26, 2010

உறங்காப் புலியும் அடங்காப் பசியும்

ஒரு
மழைநாளின் மதியம்
மல்லி மாமி வீட்டு
மாடியறையில்
ஆரம்பித்தது அது.

விடியும் முன்பே
உதித்துவிட்ட
சூரியன்போல
முதிராது
சுடர்ந்த தீ
அணையாத
அனல் பூவாய்
உடலெங்கும்
கிளர்ந்து படர்ந்தது.
எழுப்பியவள்
உறங்கிய  பின்னும்
அந்த
ரகசிய விழிப்பின்
ருசி
மன நாவில்
இருந்துகொண்டே இருந்தது

இரவுகளில்
விட்டம் நோக்கி எறிந்த
பெருமூச்சுகளாய்
தலையணை அழுத்தல்களாய்
கால்கள் நடுவில்
கைகளாய்
மஞ்சள் படர்ந்த
புத்தகங்களாய்
நீலம் ஓடும்
பிம்பங்களாய்
மதில் தாண்டிக்
குதிப்பவனாய்
குளியலறைகளில்
ஒளிந்து பார்ப்பவனாய்
அகலிகைகள் தேடும்
இந்திரனாய்
அரை மலர்களை 
உதிர்த்துப் 
புஷ்பிப்பவனாய் 
நிழல் தெருக்களில் 
திரிபவனாய் 
பேருந்துகளில் 
பின்பக்கம் 
உரசுபவனாய் 
வேலைக்காரிகளின் 
உள்ளாடைகளை 
முகர்பவனாய் எல்லாம் 
என்னை 
மாற்றிக்கொண்டே இருந்தது 
அது.


எல்லாப் பெண்களையும் 
கொஞ்சம் மயிரும் 
சதைத் துண்டுமாய் 
மாற்றி விட்ட 
அந்த 
மழைக்கால மதியத்தை 
சபித்தபடியே 
வழியோரம் காத்திருக்கிறேன் 
அடங்காப் பசியோடு 
அலையும் மிருகமாய் ..

3 comments:

  1. ஆகா நீங்களுமா...?

    ReplyDelete
  2. கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.[உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது எனில் கொஞ்சம் மனிதன்]

    ReplyDelete
  3. Nice. Ithu niraiya pergalin anubavamaa?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails