கவிதைகளினால்
என்ன பயன்
என்ற புரட்சியாளனிடம்
குறைந்தபட்சம்
கவிதை படிக்கும் நேரத்தில்
கொல்வதில்லை
வன் புணர்வதில்லை
யாரையும் வீழ்த்த
சதி செய்வதில்லை என்றேன்
ஆனால்
இதெல்லாம்
பிறர் செய்கையில்
மனம் மூடி
கவிதை
படித்துக் கொண்டிருக்கிறீர்களே
என்றதற்கு
பதில் தெரியாது
இன்னொரு
கவிதை
படிக்க ஆரம்பித்தேன்
அய்யோ! கொல்லுறீங்க போங்க.
ReplyDeleteநல்லாருக்குங்க...
ReplyDeleteஅறம் படிக்குறதா சொல்லிடுங்க.
ReplyDeleteநாடகம் பார்த்து மக்கள் கெட்டுப் போகிறார்களே என்று பெனாட்ஷாவைக் கேட்ட்டபோது அந்த சமயமாவது எவனையாவது கெடுக்காம இருக்கானே என்று சொன்ன்னதாய் கேள்வி.அதன் தாக்கத்தில் எழுதியது.
ReplyDeleteகவிதை புரட்சியாய் வாள் சுழற்றுகிறதுங்க.பாராட்டுக்கள்.
ReplyDelete