வெளியில்
சென்றிருந்த நாய்
வீடு
திரும்பி
குட்டிகளைக் காணாது
தவித்தது.
ஊரெல்லாம்
தேடி அலைந்தது
ஊளையிட்டு அழுதது.
படி இறங்கவிடாமல்
என்னிடம்
வாலாட்டி முறையிட்டது.
தூக்கம்
தொலைகிறது என்று
நான்தான்
துணியில் சுற்றி
தூரதேசத்தில்
தொலைத்துவிட்டு வந்தேன்
என்பதை
அதற்கு
சொல்லவில்லை...
நாய் பாவம் உங்களை சும்மா விடாது.
ReplyDeleteகொடுமைக்காரர் நீங்கள் !
ReplyDelete