இன்னும் எனக்குள்
காதல் உண்டோ
என்ற சந்தேகத்தை
பரிசோதிக்கும்
முயற்சியாய்தான்
அவளைக்
காதலிக்க ஆரம்பித்தேன்..
முதல் காதலின்
அத்தனை தீவிரத்துடனும்
பதைபதைத்து
உருகுவதை
நானே
அச்சத்துடன் நோக்கினேன்.
முதல் அறிதலின் பிறகு
எப்போதுமே
விரல்களின் நினைவில்
வீணை இருக்கிறது
என்றான் தோழன்
true true
ReplyDeleteநாக்கை சுட்டுக்கொண்ட பூனை போல இல்லாமல் ,
வீணை கண்ட விரல்களாய் ..
சபாஷ்