Thursday, June 24, 2010

போதவில்லை கவிதை

உன்னை திருப்தியாய்
வர்ணிக்கவே முடியவில்லை

உன் கண்களில் துள்ளும் காதல்
கவிதையில் விழவே இல்லை
உன் குரலில் இழையும் சரசம்
சந்தத்தில் அடைபடவே இல்லை
எல்லா வார்த்தையும்
தாண்டி சிரிக்கிறாய்

கரை மணலெங்கும் பேசுகிறது
உன் காற் சதங்கை ஒலி
வெளேர் என்று
விரித்துக் கொட்டின  கடற்கரையில்
அமர்ந்து உன்னை யோசிக்கிறேன்
பால்வீதிக் கொலுசில்
நட்சத்திரமணிகள்
காற்றில் அசைகின்றன
பெரிய வட்டப் பொன்னிலா
கறுப்புக் கச்சைக்குள் இருந்து
எட்டிப் பார்க்கிறது உன் மார் போல
இன்னொரு நிலா எங்கே
என்று மயங்குகிறேன்
விடியும் வரை விழித்திருந்து
நெய்தாலும்
கிடைக்கவே இல்லை
உன் அத்தனை அழகையும் மூடும் கவிதை

3 comments:

  1. தொடங்கிய விதம் அருமை

    ReplyDelete
  2. >>உன்னை திருப்தியாய்
    வர்ணிக்கவே முடியவில்லை

    ஆகா!

    ReplyDelete
  3. திருப்தி ன்னு நெனச்சா எழுத்தும் நின்னுடும்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails