ஈர ரத்தம்
காயாத துணியில்
பொதிந்து தந்தனர்
83a யில்
மீன் வாங்க வந்தவன்
வெட்டு மணி சந்தியில்
கேரளா பஸ்சில் நசுங்கி..
நம்பவே முடியவில்லை
முன்னிரவு புணர்ந்தது
அடிவயிற்றில்
இன்னும் ஈரமாய் இருக்கிறது
முன்பு புணர்ந்தது
முந்தானையைப் பிடித்துக் கொண்டு
மிட்டாய்க்கு அழுதது
பாடியை நகர்த்த
வார்டுபாய் அம்பது ரூபாய் கேட்டான்
டாக்ஸிக் காரன்
முலை மேல் விழியுடன்
முன்னூறு கேட்டான்
கொஞ்ச நேரம் அழுதவுடனே
பசித்தது
மொத்தமே கையில் நாற்பத்தி மூன்று
சில்லரைதான் இருந்தது
பாவி
செத்தும் சீரழிக்கிறான்
கடைசியில்
தாமசுக்குதான் போன செய்தாள்
தாமஸ்
வீங்கிய மூஞ்சியுடன்
ஆட்டோவில் வந்தது
இவர்தான் போனவாரம்
சந்தையில் வைத்து
அடித்துவிட்டார்.
சந்தேகம்.
தாமஸ் அங்குமிங்கும் அலைந்து
பிணத்தை வாங்கி விட்டது
பாடியை
வண்டியில் ஏற்றிவிட்டு
பக்கத்தில் அமர்ந்து
'ஏதாவது சாப்பிட்டியா புள்ள'
என்ற போதுதான்
எல்லா மதகும் உடைந்தது
கொஞ்ச நேரத்தில்
கண்ணீர்க் குடம் வற்றி
சிரிப்பு கூட வந்தது
'இதன்' முடை மீறி
தாமசின் உடல் வாசனை
கூட தெரிந்தது
வியர்வையும் கோகுல் பவுடருமாய் ..
இதைக் கட்டிக்குமுன்
கடலோரம் புணர்கையில்
இருந்த அதே வாசனை ..
'இது' போல் இல்லை
தாமசுக்கு
மனசு குறி
இரண்டுமே பெரிசு..
நைஸ்..
ReplyDeletemm nice thinging
ReplyDelete//இரண்டுமே பெரிசு.// ஆமாங்க கவிதையாய் கதை. வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லாயிருக்கு.. கவிதையாய் கதை..
ReplyDeleteவெட்டு மணி //////
ReplyDeleteநான் பிறந்து வளர்ந்த ஊர்..
Nice one
ReplyDelete