Wednesday, June 16, 2010

களவு காதல் கற்பு 2

தூர ஆற்றின்
கீழே
விழுந்து உறைந்தது
வீதி விளக்கின்
மஞ்சள் பிரகாசம்
கிழக்கே
 சூலுறும் மௌனத்துடன்
எழும் மேகங்கள்
சாயங்காலம் குளிக்கும்
பெண்களை வருடும் கூதல்
படபடக்கும் ஈரச்சேலையுள்
குளிர்ந்த யோனியுடன்
விரைகின்றனர்
சூடான லிங்கம் தேடி..
குடியும் புகையும்
சுருக்கிய குறிகளால்
நிரப்ப முடியவில்லை
தேவையான வெப்பத்தை
நள்ளிரவு தாண்டியும்
மோட்டை வெறிக்கின்றனர்
பிரியும் பெருமூச்சில்
கூரைகள் நடுங்குகின்றன
பக்கத்துவீட்டு புழக்கடைகளில்
காத்திருக்கும் இந்திரன்களுக்கு
நல்ல சகுனம் அதல்லோ?
விரிந்த குறியோடும்
சிரியோடும்
மதில் தாண்டி
குதிக்கின்றனர்
அணையாத அகலிகை தேடி...
[சிரி-சிரிப்பு மலையாளத்தில் ]

3 comments:

மதுரை சரவணன் said...

//பக்கத்துவீட்டு புழக்கடைகளில்
காத்திருக்கும் இந்திரன்களுக்கு
நல்ல சகுனம் அதல்லோ?//

வரிகள் ரசிக்கச்செய்கின்றனர். வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

சுவையான கற்பனை.
சுருங்கிய இந்திரன்கள் நிதரிசனம்?

பத்மா said...

വളര ഇഷ്ടപട്ടു

LinkWithin

Related Posts with Thumbnails